ஒரிஜனல் பாட்டின் பின்னணியில் வரும் வரும் bango drum ரிதம் அருமையாக இருக்கும்.பாட்டின் வரிகளும்,பாடகர்கள் பாடிய விதமும், காட்சி அமைப்பும் படத்தின் ஜீவனை வெளிப்படுத்தும்.
ஆனால் "ஜக்குபாயில்" அதை "ஆஃப் பாயி"லாக்கி, ரீமிக்ஸ் என்று ரிவிட் அடித்து ரேப் செய்துவிட்டார்கள்.
ரீமிக்ஸின் தத்துவம் என்ன?ஒண்ணுமே பிரியல?தல சுத்துது.
காட்சி:(ஒரிஜினலின் வீடியோ கிடைக்கவில்லை)
அதே வைக்கோல் போர் லோகேஷன்தான் ஒரே காஸ்டியூம்தான் பாடல்முழுவதும்.
ஒரு சிங்கள்எக்ஸ் கட்டித்தழுவல்தான்.அதுவும் பிளாக் அண்ட்ஒயிட்டில்.பாவம் ஜமுனா-ஜெய்சஙகர்!அதிர்ஷடம் இல்லாதவர்கள்.
ரீமிக்ஸில் ஏற்பட்ட 45 வருட(2010-1965=45) ரசாயன மாற்றங்கள்:
ஜெய்சங்கரின் அன்புள்ள மான்விழி(யே)
ஜெய்சங்கரின் அன்புள்ள மான்விழி(யே)
ஜக்குபாய லோகஷன் ஹோட்டல்/ஆஸ்திரேலியாவின் பல இடங்கள். ஜட்டி சைசில் உடை அணிந்த நடனமாடும் பெண் (சரத்தின் அன்புள்ள மான்விழி காதலி?) தன் ”பிருஷ்டத்தை” க்ளோசப்பில் செல்லமாக ஆட்டியபடி வருகிறார்.பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம்,விசில்.மேடைக்கு வந்து பறக்கும் முத்தம் கொடுக்கிறார்.அவருக்கு ”காதல் சின்னம்” பொறித்த வாழ்த்து அட்டையை அனுப்பி சரத்குமார் ஆச்சரியமூட்டுகிறார்.அந்த பெண் தன் மான்விழியால் யார் என்று பார்க்க “அன்புள்ள மான்விழியே” என்றுசுப்ரீம் ஸ்டார் சரத் ட்ரம்ஸில் அடித்தபடி செக்சியாகப் பாடுகிறார்.
இதில் XXX கட்டித் தழுவி ஒரு இண்டு இடுக்கு விடாமல் நித்தியானந்தா-ரஞ்சிதா லெவலுக்கு கடிதம்எழுதுகிறார் சரத்.
அன்புள்ள மான்விழியே -ரீமிக்ஸ்-வீடியோ
அன்புள்ள மான்விழியே-ஒரிஜினல்-ஆடியோ
அதுனாலதான் ஆத்தா கண்ணக் குத்திட்டா..,
ReplyDeleteSUREஷ் (பழனியிலிருந்து) said...
ReplyDelete//அதுனாலதான் ஆத்தா கண்ணக் குத்திட்டா..,//
சொன்னாரு.ஆனா “ஆத்தா நான் பாசாயிட்டேன்னும் சொன்னாரு”
நன்றி
"(ஒரிஜினலின் வீடியோ கிடைக்கவில்லை)"
ReplyDeleteஜக்குபாய் முழு படமே இல்ல நெட்ல கிடைக்கும்
நல்ல எழுதி இருக்கீங்க
பாலாஜி said...
ReplyDelete//ஜக்குபாய் முழு படமே இல்ல நெட்ல கிடைக்கும்//
நான் சொன்னது “குழந்தையும் தெய்வமும்”அன்புள்ள மான்விழியே பாட்டு.
//நல்ல எழுதி இருக்கீங்க//
நன்றி.