Wednesday, March 10, 2010

இளையராஜா- மயக்கும் புல்லாங்குழல்

இசைஞானி இளையராஜா,இந்த ஒண்ணரை அல்லது ரெண்டு அடி புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் காற்றுத்துளைகளின் வழியாக மயக்கும் இசைத் துளிகளை தன் பாடல்களில் விதவிதமாக வழிய விடுகிறார் .

மேஸ்ட்ரோவின் இசையில் எப்போதுமே “classical touch" & "classic" இருக்கும்.No artificial flavour.No additives,No preservatives.


மேஸ்ட்ரோ தவிர மற்றவர் 95% பாடல்களில் புல்லாங்குழல் நேரடியாக வாசிக்கப்பட்டு பாடல் அமைந்திருக்கும்.அதாவது மேஸ்ட்ரோ மாதிரி பாடல்களின் குறுக்கும் நெடுக்குமாக புல்லாங்குழல் இசைக்கப்பட்டு ஒப்பனைச் செய்யப்பட்டிருக்காது. சின்ன கண்ணன் அழைக்கிறான் -1977 - கவிக்குயில்

ஆரம்பத்தில் ரீதகெளள ராக நாதம் இனிமை.இதில் நேரடியாக பாடல் முழுவதும் வாசிக்கப்பட்டிருக்கும்.அதிக ஒப்பனைகள் கிடையாது.ஆனால் நாதங்கள் இனிமை.

பொன்மானே கோபம் - 1985 -ஒரு கைதியின் டைரி

”சின்னகண்ணன்” புல்லாங்குழல் இதில் பார்ட்டைம் தான். ”பொன்மானே””கோபம்” “ஏனோ” என்ற வரிகளுக்கு சுட்டித்தனமாக ரெஸ்பான்ஸ் அளித்துவிட்டு மறையும்.உமா ரமணன் கடைசிப் பல்லவியில் இதன் வேலையைப் பறித்துக்கொள்கிறார்.(பொன்மானே!கோபம் எங்கே?)

ராஜாபார்வை வயலின் BGM  - 1981

மெய்சிலிர்க்கும் ஆரம்பம். 0.57ல் வயலினோடு தபலா அழகாக சேர்ந்துக்கொள்ளும்.1.09ல் ஒரு புல்லாங்குழல் மொட்டவிழ்ந்து மலரும்.1.16ல் இன்னொரு புல்லாங்குழல் மலரும்.மெய்சிலிர்க்கும்.

காதல் மயக்கம்  - 1984 - புதுமைப் பெண்

மிகவும் காதல்படுத்தப்பட்ட பாட்டு.இதில் 4.14 - 4.25 புல்லாங்குழல் கானத்தில் கண்ணாமூச்சி விளையாடும்.

தாலாட்டும் பூங்காற்று -1991 - கோபுரவாசலிலே


மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ் புல்லாங்குழல் புல்லரிப்புகள்.

Thalattum poongatru

ஜானகியின் ஹம்மிங் முடிந்து ஜிகு ஜிகு புல்லாங்குழலின் குஷிதான்.

ஹெட் போனில் கேட்கவேண்டும்.”நள்ளிரவில் நான் கண் விழிக்க” இடது காதில் மென்மையான வருடல். “உன் நினைவில் மெய் சிலிர்க்க” வலது காதில் மென்மையான வருடல். வலது இடது புல்லாங்குழலின் ஸ்வரம் மாறும்.இது மாதிரி இரண்டு தடவை.

“எப்பொழுதும் சொப்பனங்கள்” இப்போது முதல் வருடல் வலது.”எப்போழுதும் உன் கற்பனைகள்”பிறகு இடது.

3.00 -3.20 மென்மையான புல்லாங்குழல் உரையாடல்.ஜானகி அட்டகாசம்.


ஆனந்த ராகம் -1981 - பன்னீர் புஷ்பங்கள்

இந்தப் பாட்டைத் தொட்டால்  சில இடங்கள் சுடும்.

ஆரம்ப உக்கிரமான western classical வயலின் /செல்லோ தீற்றல்களுக்கு நடுவே நம்ம ஊர் Indian Classical சிம்மேந்திர மத்யமம் ராக ”கலங்கும்” புல்லாங்குழல் அருமை.அட்டகாசமான வெஸ்டர்ன்+இண்டியன் Fusion."ஆயிரம் ....” “ஆசைகள்” இந்த வரிகளுக்கு ரெஸ்பான்ஸாக கிணற்றுக்குரலில் வித்தியாசமான புல்லாங்குழல்ஆச்சர்யம். பாட்டின்  முடிவிலும் கொசுறாக சூப்பர்.

குறுக்கும் நெடுக்கும் போகும் western classical வயலின் சிக்கலுக்கிடையே நம்ம ஊர் இந்திய ஷெனாயின் கதறலைக் கேளுங்கள்.அம்மாடியோவ்!

Maestro  went full blast! Hats off Maestro!

”தாலாட்டும் பூங்காற்று”ம்  சிம்மேந்திர மத்யமம். அது மென்மை.இது முரடு.எப்படி ராஜா? அதான் ராஜா.

தென்றல் காற்றே  - 1991 - ஈரமான ரோஜாவே

புல்லாங்குழலில் மதுர கானம்தான். சோகம்(ஏக்கம்?) கானம் இசைக்குமா? இதில் சோக கானம் 01.19 -01.30 முக்கியமாக  03.28 -03.30 மற்றொரு வாத்தியங்களுடன் சேர்ந்து சோகம் பாடிவிட்டு மீண்டும் தனியாக 03.31-03.33 சோகம்.

 வா வா அன்பே
அதே படத்தில் இன்னோரு பாடல்.அதே மெட்டு.ஆனால் புல்லாங்குழல் முதலில் கொஞ்சம் சோகம் ஆனால் 01.25-1.52 வரை துடிப்புடன் நிரம்பி வழியும்.வயலினுடன் உரையாடிக்கொண்டே வரும்.


மதுர மரிக்கொழுந்து  - 1987 -எங்க ஊரு பாட்டுக்காரன்

”பச்சரிசி மாவு இடிச்சு..சக்கரையில் பாவு(கு) வச்சு...சுக்கிடிச்சு.மிளகிடிச்சு..
..................அம்மனவ எங்களயும் காக்க வேணும்.....0.27-0.41 மதுர மரிக்கொழுந்து வாசம் வீசும் புல்லாங்குழல் தெய்வீக கானம்.கிராமிய மணம் கமிழும்.Stunning  Maestro!  
"தல..!சின்ன ஹார்மோனியத்துல மெட்டுப்புடிக்கிறீங்க.ஆனா அத அழகுப்படுத்த எத்தன விதமான இசைக்கருவிகள்...!

பூங்கதவே தாழ்  - 1980 -நிழல்கள்

வீணையுடன் புல்லாங்குழல் காதல் 0.33-0.42 அருமை.டால்பின் போல் துள்ளும் துடிப்பான வாசிப்பு 1.44-1.49.புத்திசாலித்தனமான அதே சமயத்தில் பாட்டோடு ஒட்டி வரும் கானம்.


கண்ணா வருவாயா...  - 1987 -மனதில் உறுதி வேண்டும்

மீரா-கண்ணன் சம்பந்தப்பட்ட பாட்டு. 5.31 நிமிட பாட்டில் 1.50-1.57 புல்லாங்குழல் கண்ணில்(காதில்?) காட்டுவார்.5.04-5.05 மருந்துக்கு சிணுங்கிவிட்டுப் போகும். மேஸ்ட்ரோ இது நியாமா? ”சின்ன கண்ணன் அழைக்கிறான” பாட்டுக்கு எல்லாம் வாசிச்சாச்சுப் போல..!

சிறு பொன்மணி அசையும் - 1980 -கல்லுக்குள் ஈரம்

பாரதிராஜாவுக்குன்னு தனி உழைப்பு உண்டு.இந்தப்பாட்டில் 0.15 - 0.24ல் நேரடியாக வரும் கிராமிய புல்லாங்குழல் கானம் 0.25-0.28 ல் வயலினுடன் எப்படி கொஞ்சுகிறது பாருங்கள். தல..! பின்னிட்டீங்க!

பின்னால் வரும் அலைபுரண்டு வரும் கானமும் அருமை.

சின்ன சின்ன - 1986 -மெளனராகம்

0.27-0.39 ,1.04-1.10ட் ஆணி அடிக்கிற மாதிரி புல்லாங்குழல் கானத்தை ஊதி ஊதி அடித்துக்கொண்டே வருவார்.அட்டகாசம்.வித்தியாசமான கானம்

இன்னும் நிறைய இருக்கு.பின்னால் பார்க்கலாம்.

படிக்க:

இளையராஜா The King of Beats

இளையராஜாவின் -நாத உரையாடல்கள்
25 comments:

 1. அட...அட்டகாசமா தொகுத்து இருக்கீங்க..

  ராஜா...ராஜாதான்..

  இன்னமும் என் பயணங்களில் எப்போதும் என்னுடனே வருபவர்

  ReplyDelete
 2. உங்களின் ரசனையான தொகுப்பு மிக நன்றாக உள்ளது  ஒரே தாள வரிசையில் உள்ள பாடல்களின் தொகுப்பை தந்தால் உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 3. பாலாஜி said...

  //உங்களின் ரசனையான தொகுப்பு மிக நன்றாக உள்ளது//

  ராஜாவைக் தீவரமாக கேட்டு கேட்டு ரசனையை வளர்த்துக்கொண்டேன்.

  //ஒரே தாள வரிசையில் உள்ள பாடல்களின் தொகுப்பை தந்தால் உபயோகமாக இருக்கு//

  மன்னிக்கவும்.நான் ரசித்ததைத்தான் எழுதுகிறேன்.அவ்வளவு டீடெயில் என்னிடம் இல்லை.

  நன்றி பாலாஜி.

  ReplyDelete
 4. சூப்பர் தொகுப்பு...இன்னிக்கு (என்னிக்கும்) முழுவதும் இவை தான் கூட ;))

  தாலாட்டும் பூங்காற்று எனக்கு ரொம்ப ரொம்ப (மீதியை நீங்களே போட்டுக்ககோங்க) அதுவும் அந்த தொடக்கத்தில் வரும் இசை அய்யோ..அப்படியே நானும் கூடவே ஓடுவேன் ;)

  மிக்க நன்றி தல ;)

  ReplyDelete
 5. ராஜாபார்வை பிஜிஎம் கேட்டீங்களா?

  நன்றி கோபிநாத்.

  ReplyDelete
 6. ஒரு கலைஞனின் படைப்பு இந்தளவுக்கு ஒரு ரசிகனால் அணு அணுவாக ரசிக்கப்படும்போது, படைப்பின் அழகும் மேன்மையும் மேலும் கூடுகிறது.

  ஆனந்த ராகம்... நானும் ஒவ்வொரு முறையும் கேட்டு மலைக்கும் பாடல்...

  மேலும் மலைக்க நீங்கள் கொடுத்திருக்கும் தொகுப்பு அருமை...

  -
  DREAMER

  ReplyDelete
 7. DREAMER said...

  //ஒரு கலைஞனின் படைப்பு இந்தளவுக்கு ஒரு ரசிகனால் அணு அணுவாக ரசிக்கப்படும்போது, படைப்பின் அழகும் மேன்மையும் மேலும் கூடுகிறது//

  இந்த கலைஞன் தன் படைப்பின் மூலமாகத்தான் ரசிகனிடம் பேசுகிறான்.ரசிக்கிறார்களோ இல்லையோ ராஜா சளைக்காமல் சிரத்தை எடுத்துப்போடுகிறா.

  அவர் இசையமைக்கும் போது எப்படி அணுகி இருப்பாரோ அதே உணர்வுடந்தான் நானும் அணுகுகிறேன்.


  நன்றி டீரிமர்.

  ReplyDelete
 8. கலக்கல் பதிவு தலைவரே...
  எல்லாப் பாடல்களும் அடிக்கடிக் கேட்பவை...’காதல் மயக்கம்’ பாடல் தவிர...இன்றுதான் ரசித்தேன்...

  ஒரு விண்ணப்பம்... ஒரே பதிவில் நிறைய பாடல்கள் கொடுப்பதை விட, நான்கைந்து பாட்ல்களை மட்டும் பிரித்து மேய்ந்தால் , உங்கள் உணர்வினை அப்படியே நாங்கள் அள்ளிக் கொள்ள ஏதுவாயிருக்கும்...

  ‘பக்கத்துவீட்டுப் பெண்கள்’ லுக் கதாநாயகிகள் பதிவு எப்போது வரும்...கூகிள் ரீடரில் முன்னோட்டம் பார்த்து ஆவலாய் இருக்கிறேன்....

  ReplyDelete
 9. பிரமாதமான தொகுப்பு ரவி, அந்த மயக்கும் புல்லாங்குழல் ராஜாவின் இசையில் அவ்வப்போது பாடும் அருண்மொழி வாசிப்பது என்பதையும் சொல்லியிருக்கலாமே? அவர் எங்க மாவட்டம்-மாயவரத்துக்காரர்!

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 10. தமிழ்ப்பறவை said...

  //’காதல் மயக்கம்’ பாடல் தவிர...இன்றுதான் ரசித்தேன்...//

  இதில் 0.13 அல்லது 0.14ல் கோரஸ் வயலின் சேரும் இடம் அருமை.

  // ஒரு விண்ணப்பம்... ஒரே பதிவில் நிறைய பாடல்கள் கொடுப்பதை விட, நான்கைந்து பாட்ல்களை மட்டும் பிரித்து மேய்ந்தால் //

  முயற்சிக்கிறேன்.

  //கூகிள் ரீடரில் முன்னோட்டம் பார்த்து ஆவலாய் இருக்கிறேன்...//

  ட்ராப்டில்தானே இருக்கிறது.எப்படி ரீட்ரில் பார்க்க முடியும்.முடியுமா?

  போட மூட் வர வேண்டும்.

  ReplyDelete
 11. அருமையான பாடல்கள்.

  தாலாட்டும் பூங்காற்றும், சிறு பொன்மணி பாடலும் கேட்கச் சலிக்காதவை.நல்ல தொகுப்பு சார்.

  ReplyDelete
 12. Jawahar said...

  // பிரமாதமான தொகுப்பு ரவி, அந்த மயக்கும் புல்லாங்குழல்//

  நன்றி ஜவஹர்.

  // ராஜாவின் இசையில் அவ்வப்போது பாடும் அருண்மொழி வாசிப்பது என்பதையும் சொல்லியிருக்கலாமே?//

  போன பதிவில்(king of beats) அவரின்ோட்டோவோடுபோட்டேன்.
  இந்த பதிவில் விட்டு விட்டேன். தவறுதான்.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. வித்யா said...

  //அருமையான பாடல்கள்.
  தாலாட்டும் பூங்காற்றும், சிறு பொன்மணி பாடலும் கேட்கச் சலிக்காதவை.நல்ல தொகுப்பு சார்.//

  வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 14. //ட்ராப்டில்தானே இருக்கிறது.எப்படி ரீட்ரில் பார்க்க முடியும்.முடியுமா?//

  ட்ராஃப்டில் இருந்தால் ரீடரில் படிக்க முடியாது என்பது சரி.
  ஆனால் நீங்கள் தப்பித்தவறி பப்ளிஷ் பண்ணிவிட்டுப் பிறகு நீக்கிவிட்டால் கூட , அது ரீடரில் வந்துவிடும் குறைப் பிரசவக் குழந்தையாக....

  ReplyDelete
 15. அருமையான பாடல்கள்,எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் தனித்தும் பின் பாடல்வரிகளுக்கு ஏற்ப பிணைந்து இணைந்தும் கொஞ்சுவது அழகோ அழகு. தனியா இப்படி குறிப்பிட்டு ரசிக்கத் தெரியாம இருந்தது,நல்லா விளக்கமா தொகுத்து எழுதியமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. தமிழ்ப்பறவை said...
  // ஆனால் நீங்கள் தப்பித்தவறி பப்ளிஷ் பண்ணிவிட்டுப் பிறகு நீக்கிவிட்டால் கூட , அது ரீடரில் வந்துவிடும் குறைப் பிரசவக் குழந்தையாக....//

  ஆஹா! பப்ளிஷ் ஆகி இருக்கலாம்.இனிமே நித்தியானந்தா மாதிரி அசிரத்தையா இருக்கக் கூடாது.

  நன்றி.

  ReplyDelete
 17. நன்றி கார்த்திகாவாசுதேவன்!

  ReplyDelete
 18. ரவி உனது இளயராஜா(15)ல் எப்படி பொன்மாலை பொழது (நிழல்கள்) இல்லாமல் போனது. என்னை பொருத்த வரை கடந்த ணூற்ராண்டின் சிறந்த பாடல். (Song of the Last Century) அப்பா! உனது ஆராய்ச்சி உடனடி தேவை. உனது இளயராஜா(15) I Mean you have given about Ilayaraja songs 15 idugaigal. மற்றபடி ”ராஜா” உனக்கல்ல எனக்கல்ல மெல்லிசை உலகத்திற்கே ராஜாதான்.(ஞாணசூன்யம் சாரு நிவேதிதா தவிர)

  ReplyDelete
 19. மிக சிறந்த தொகுப்பு ரவி.அனைத்து பாடல்களுக்கும் இணைப்பும் குடுத்தது இன்னும் அருமை.

  எனது எண்ணத்தில் இவையும் கூட ராஜாவின் வித்யாசமான தாளக்கட்டு கொண்ட பாடல்களில் முக்கிய இடம் பெற கூடியவையே

  ஜானி - " ஆசையை காதுல தூது விட்டு "
  தெய்வ வாக்கு - " வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான் "
  கேப்டன் பிரபாகரன் - "ஆட்டமா தேரோட்டமா "
  நாயகன் - "நிலா அது வானத்து மேலே "
  வாழ்க்கை - "மெல்ல மெல்ல என்னை தொட்டு "
  பரதன் - " புன்னகையில் மின்சாரம் "

  இன்னைக்கு முழுசும் கூட எழுதிட்டே இருக்கலாம்:-) .

  ReplyDelete
 20. Blogger ஸ்ரீமதன் said...

  // மிக சிறந்த தொகுப்பு ரவி.அனைத்து பாடல்களுக்கும் இணைப்பும் குடுத்தது இன்னும் அருமை.//

  வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

  //எனது எண்ணத்தில் இவையும் கூட ராஜாவின் வித்யாசமான தாளக்கட்டு கொண்ட பாடல்களில் முக்கிய இடம் பெற கூடியவையே//

  அருமை.மிகவும் சரி.எவ்வளவுதான் எழுதுவது.இன்னோரு பதிவில் போடலாம்.

  ReplyDelete
 21. வணக்கம், முதல் முறையாக எழுதுகிறேன். ராஜா சாரோட தீவிர ரசிகை நான், அந்த ஈர்ப்பின் தேடல் இங்கே என்னை அழைத்து வந்தது. அருமையான உங்கள் படைப்புக்கள் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  மௌன ராகம் படத்துல வந்த பனி விழும் இரவு,..அந்த ஒப்பனிங் புல்லாங்குழல் இசை, ரொம்ப ரம்மியமாக மனதை வருடி செல்லும்... இனிமையான இசை..

  ReplyDelete
 22. முதல் வருகைக்கு நன்றி அனானி.

  என்னுடைய ராஜாவின் மற்றைய பதிவுகளைப் படித்தீர்களா? இளைய்ராஜா லேபிள் கிழ் இந்த பதிவுகள் இருக்கும்.படித்துவிட்டு கருத்துச் சொல்லவும்.

  க்ருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!