Sunday, December 7, 2008

சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!


சிறு /பெரிய கதை எழுதும் பதிவர்கள் கவனத்திற்கு.

இப்போது விரல் சொடுக்குவதற்க்குள் (at the drop of the hat) வலையில் சிறு/பெரிய கதைகள் எழுதப்படுகின்றன. சில நல்ல கதைகளும் எழுதப்படுகின்றன. சில நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்..ரொம்ப சின்சியராக எழுதுகிறார்கள்.அவர்களுடைய மொழிசரளம் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. எனக்கு அவ்வளவு இல்லை. நிறையப் படித்ததில் நான்கு அல்லது  ஐந்துக்கு மேல் தேறவில்லை

அதே சமயத்தில் பல அசட்டு அம்மாஞ்சி/கெக்கே பிக்கே பிகரு/டாஸ்மாக் கதைகள் தாங்க முடியவில்லை. காரணம் எல்லையில்லா வலைச் சுதந்திரம். கதையில்லாமல் சொந்த “பிகருஅல்லது  “நொந்த டாஸ்மாக்” கதைகளில் தெரிகிறது. சீரியஸ்னஸ் இல்லை.

இவர்கள் Profile இல் தி.ஜா,சுஜாதா,கி.ரா,பாகுமாரன்,மெளனி,வ.தாசன்,வ.நிலவன்,ஜெயகாந்தன் மற்றும் சிறு கதை மன்னன் புதுமைப் பித்தன் வேறு இருக்கிறார்கள்.ஆனால் கதையில்.......?

சுஜாதாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அவரின் சிறுகதை பார்முலா வலைக்கதைகளில் இல்லை.

கதை எழுதுவதற்க்கு வயது/அனுபவம்/வாசிப்பு/நோக்கும் திறன்/உள் வாங்கி வெளி விடும் திறன் முக்கியம்.

யார் படிக்கிறார்கள்? வழக்கமான  A,B,C,D,E,F,G,H, தான்.படிக்கிறார்களோ இல்லையோ, “me first”  வந்து “கண்ணா மூச்சி ரே..ரே..“தாட்சியை தொட்டு விட்டு செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.எழுதியவர் புல்லரித்து புளாங்கிதம் அடைகிறார். மறுமொழி போடுவதற்கு “Software” வைத்துளளார்கள். என்டெர் தட்டினால் வழ்க்கமான 10 வகையான ம்றுமொழிகள் வந்து விழும்.

உண்மையான விமர்சனம் இல்லை.(ஆனால் நான் உண்மையான விமர்சனம் போடும் வழக்கம் வைத்துள்ளேன்) எழுதியவர்க்கும் “feed back” சரியாக இல்லாமல் அவரும் திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் ,கதைகள் விளையாட்டுத்தனமாக இருக்கிறது. பொழுதுபோக்கு அவ்வளவுதான்.இந்த கதைகள் பத்த்ரிக்கைகளுக்கு அனுப்பினால், திரும்பி வரும் போது  RDX  உடன் வரும்

கதை எழுதுபவர் மற்றவர் எழுதும் எல்லா கதைகளையும் படிக்கிறார? சந்தேகம்தான்....

என் சொந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது..

நானும் மாஞ்சு மாஞ்சு பல  சிறுகதைகள் எழுதினேன்.  நிறைய  கதைகள் திரும்பி வந்தன. சில கதைகள்தான்  பத்திரிக்கைகளில் வந்தது. நொந்து நூலாகி நூல் கண்டின் எல்லையாகி .இருந்த சமயத்தில்.

சுஜாதாவை ஒரு தடவை நேரில் சந்தித்து ஒரு கதையை கொடுத்து படிக்க செய்தேன். "”இது டெண்டர் நோட்டீஸ். கதை  எங்கேஎன்றார் ...காஞ்சு கயிராகி coir board  சேர்மேன் ஆனேன். அதன் பிறகு நிறைய எழுதிப் பார்த்து கூடை கூடையாக அனுபவம் கற்றுக்கொண்டேன். 

தெரிந்தது கொண்டது:-.

சிறு கதை எழுதுவது ஒரு கலை. குறு நாவல்/நாவல் எழுதுவது சுலபம்நெறைய பீலா உடலாம். சிறு கதை கஷ்டம். நான் சொல்லுவது ஒரு வணிகப் பத்திரிக்கை கதைகள்.A  simple short story. சுவாரசியம் மிக மிக முக்கியம்.

இங்கு எழுதப்படும் கதைகளில் என்ன குறைகள்?

சுருக்கமாக இல்லை. வள வள ...

(என் உடன் பணி செய்பவர்கள் சொன்னது. (பெண்கள்/ஆண்கள்-25-30) வலை கதைகளை படிக்கிறார்கள். Scroll  செய்து கதை எவ்வளவு அடி ஆழம் என்று பார்க்கிறார்கள். ரொம்ப ஆழம் போனால் எஸ்கேப்.. அந்த பதிவருக்கு புதிய் வாசகர்கள் காலி. வழக்கமான் A,B,C,D,E,F,G,H, தான்.எழுதுபவர் அலுத்து போய் விடுவார்.) 

பாரா பிரித்து எழுதாமல் புளி முட்டை அடைத்த எழுத்துக்கள் . 

சில சிறு (பெரிய்?) கதைகளை இரண்டு அல்லது மூன்று இன்டெர்வெல் விட்டு படித்தேன் .

கதை, கட்டுரை ,கவிதை மூன்றையும் மிக்சியில் போட்டு அடித்த கதைகள்

எடுப்பு,தொடுப்பு,முடிப்பு இல்லை. 

எடுப்பில் கதா பாத்திரம் அறிமுகம். தொடுப்பில் ஒரு முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை ,கடைசியாக முடிப்பில் முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை அவிழ்ப்பது.

குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள் . கதை கச்சிதமாக, நறுக்குத்தெரித்தாற்போல் இருக்கும்

இயல்பாக  இல்லாமல் கெக்கே பிக்கே தனம்

மிகை படுத்தல்/பிரச்சாரம்/அறிவுரை நெடி (பெண்கள் எழுதும் கதைகளில்)

பிரச்சாரம்/அறிவுரை நெடி/நீதிக்கு அம்புலி மாமா,சம்பக்,wisdom இருக்கிறது.

கதை சொல்பவர் உள்ளே வந்து மைக் பிடித்து "சே! என்ன உலகம் இது " என்கிறார். உள்ளே நடக்கும் சம்பவங்கள் ஊடே மனதை தொடவேண்டும்.

மொழி/மௌன ராகம்/காதல்" போன்ற படங்கள் ஒரு கதைதான்.உள்ளே நடக்கும் சம்பவங்கள் ஊடே மனதை தொடடது படம்.

"நம்மள தப்பாக நினைப்பார்களோ" என்று சில கருக்கள் ழுதபடுவதில்லை.

ஒரே கதையில் நான்கு கதைகள்.சில கட்டுரைகள்.

கதை சொல்லுபவர் கதை நடுவே வந்து self கிண்டலிங் எதற்கு?. Be focussed ஆக இருக்க வேண்டும்.

சுத்தமாக சுவாரஸ்யம் இல்லை. சில வலை பெண்கள் எழுதும் கதைகள்.......?

கதை நடுவே கல்ர் படங்கள் வந்தால் கவனம் திசை திரும்பி கதை நீர்த்துவிடும்.

சில வலைக் கதையாளர்களிடம் அபாரமான திறமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைச்சிதைத்து கோணல் ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள். 

கதையில் நான் தவிர்ப்பது. மிகை ,பிரச்சாரம், அசட்டுத்தனம் ,ஓவர் மெலோடிராமா.

கடைசியாக சுஜாதா சொன்னது:-

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம், காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திறமை. நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்குத் தரப்பட வேண்டும். இதோ பார் வாழ்வின் அபத்தம்  ”இதோ பார் வாழ்வின் சந்தோஷம்கதைக்கு உள்ளே வந்து சொல்லக் கூடாது. வாசகனே உணர வேண்டும்.

இதில்தான் பல சிறு கதைகளின் தரம் போய் விடுகிறது .

நல்ல சிறுகதையில் பிரச்சாரம் போதனை கிடையாது. நம் வாழ்கையில் நல்லவை கெட்டவைகள் இரண்டும் கலந்து உள்ளது. ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கின்றது.

வாசகன் ஒரு நல்ல சிறு கதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளிலேயே மறுபடி வாழ்கிறான்..எல்லோரிடமும் ஆபாசங்களும் உன்னதங்களும் கலந்தே உள்ளது

கடைசியாக வலையில் மனதை தொட்ட சிறுகதை:

தலைப்பு: மறக்க முடியுமா?

எழுதியவர்: நாடோடி இலக்கியன்

    http://naadody.blogspot.com/search/label/சிறுகதை

 

35 comments:

  1. ரவி,

    ஏற்கெனவே எனது பதிவில் உங்களுக்கு பதிலாக கூறியதுதான். தயவுசெய்து சிறுகதைகளுக்கு இலக்கணம் வகுக்காதீர்கள். சுஜாதா சொன்னதெல்லாம் சரி. அவர் செய்ததை விட சிறுகதைகளின் சாத்தியம் மிக மிக அதிகம். லாசரா போன்றோர் சுஜாதாவிற்கு முன்னரே செய்த பரீட்சார்த்த முயற்சிகளை சுஜாதா தொட்டுக் கூட பார்க்கவில்லை. சொல்லப்போனால் எல்லா சிறுகதைகளையும் ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். புதிய உத்திகள் கட்டாயத் தேவை :-).

    ReplyDelete
  2. ரவி,

    //குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..//

    எப்படி வெடிக்க வைக்கணும்?
    குக்கரையா?

    ச்சும்மா:-))))))

    ஆமாம்.வலைப்பெண்கள் கதைகளில் வளவளன்னு எழுதக்கூடாதுன்னு சொல்றீங்களா?

    அது என்னவோங்க.....ஆரம்பிச்சா நிறுத்துவது கஷ்டமா இருக்கு. இந்தப் பின்னூட்டத்தையே பாருங்களேன்.....
    வெடிக்கறதை விசாரிக்க வந்தேன்.

    ஆமாம். கதைக்கு ஃபார்மலா எப்படிங்க? இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா? 4 : 1 அரிசி & உளுந்து போட்டு ஊறவச்சு ஆட்டுன்னு சொல்ல.

    ஒன்னும் புரியலை போங்க.

    ReplyDelete
  3. //அது என்னவோங்க.....ஆரம்பிச்சா நிறுத்துவது கஷ்டமா இருக்கு. இந்தப் பின்னூட்டத்தையே பாருங்களேன்.....
    வெடிக்கறதை விசாரிக்க வந்தேன்.

    ஆமாம். கதைக்கு ஃபார்மலா எப்படிங்க? இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா? 4 : 1 அரிசி & உளுந்து போட்டு ஊறவச்சு ஆட்டுன்னு சொல்ல.

    ஒன்னும் புரியலை போங்க//

    டீச்சர்.... வேணாம். எனக்கு சிரிப்பு வருது. அப்புறம் சிரிச்சுடுவேன் :)))

    ReplyDelete
  4. நாங்களெல்லாம் சின்ன வயசு ஆசைக்காகத்தான் எழுதுறோம்.



    ஒரே விஷயம்தான். படிக்கிறவங்களுக்கு ஏதாவது ஒன்னை ஞாபகப் படுத்தணும் அவ்ளோதான். அது மளிகை கடை ளிஸ்ட் மாதிரிக் கூட இருக்கலாம். அவங்க அவங்க ரசனைக்கு தகுந்த மாதிரி தோனும்.

    அப்புறம் அவங்க ரசனைக்கு தகுந்தமாதிரி மாற்றுவோம்

    ReplyDelete
  5. நாங்கள் எழுதுவது சிறுகதை இல்லை என்றால் வேறு ஏதாவது பேர் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    சிறுகதை, நாவல், புதினம் எல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள் அறிமுகமான பேர்தானே....

    ReplyDelete
  6. ///சுஜாதாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அவரின் சிறுகதை பார்முலா வலைக்கதைகளில் இல்லை.///


    எனக்கு வசந்த மாளிகை பிடிக்கிறது அதுக்காக தண்ணியடிச்சிட்டா சுத்த முடியும்

    ReplyDelete
  7. ///குறு நாவல்/நாவல் எழுதுவது சுலபம்நெறைய பீலா உடலாம்///


    இதுவும் அவர் சொன்னது தானா....

    ReplyDelete
  8. பிரச்சாரம்/அறிவுரை நெடி/நீதிக்கு அம்புலி மாமா,சம்பக்,wisdom இருக்கிறது.
    //


    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள்



    இதெல்லாம் சரிதான்......


    வெடிக்கும்போது இந்த மேட்டர்லாம் நடக்காது......


    இதெல்லாம் நடந்தால் குக்கரில் வடிக்க முடியாது. குக்கர் சாதம் வடிக்கற அளவு போனா சாதம் வைக்க தெரியலன்னு சொல்லிடுவங்க பாஸ்....

    ReplyDelete
  10. ///உண்மையான விமர்சனம் இல்லை.(ஆனால் நான் உண்மையான விமர்சனம் போடும் வழக்கம் வைத்துள்ளேன்) எழுதியவர்க்கும் “feed back” சரியாக இல்லாமல் //


    நானும்தான். கவலைப் படாதீங்க பாஸ். இது சூடான இடுகைப் பகுதிக்கு வந்திடும்

    ReplyDelete
  11. ஸ்ரீதர் நாராயணன்,

    நான் சுருக்கவில்லை. நான் நூறு சதவீதம் புதிய உத்திகளுக்கு திறந்த மனம் உடையவன்.
    இங்கு எழுதப்படும் கதைகள் பற்றித்தான் . என் கருத்து.

    பதிவர்களுக்கு இருக்கும் நல்ல திறமையை ஒழுங்கு படுத்தி சாதாரண சின்ன கதைகளை எழுதி புதிய உத்திகளுக்குமுன்னேற வேண்டும் என்பதுதான் என் அவா. .

    //லாசரா போன்றோர் சுஜாதாவிற்கு //

    இவர் ஒரு சீரியஸ் எழுத்தாளர்"mysticism" இருக்கும்.
    இவர் "வணிக" உத்திகள் செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

    மறுபடியும் சொல்கிறேன் நான் புதிய உத்திகளுக்கு திறந்த மனம் உடையவன்.

    அதனால்தான் "குதிரை வீரன் " என்ற ஒரு பள்ளி கவிதையை ரசித்து என் பதிவில் போட்டேன். நீங்கள் படித்தீர்களா?


    நன்றி.

    ReplyDelete
  12. வாங்க துளசி கோபால்,

    கருத்து சொன்னதற்கு நன்றி.

    சுவராஸ்யம்தாங்க முக்கியம்.

    நீங்க எந்த ஒரு பொருளையும் சுவையாக செய்ய வேண்டுமானால் “இது இவ்வள்வு, அது இவ்வளவு” என்று ஒரு கணக்கு முக்கியம்.இது நம்ம கதைக்கும் பொருந்தும்.

    உதாரணம்:
    ஒரு ஊர் ராஜா. ராஜாவுக்கு ஒரு ராணி.அந்த ராஜாவுக்கு......நான்கு பிள்ளைகள்.................... என்று இப்படியே நான்கு நிமிடம் கதா பாத்திரங்களையே சொல்லிக்கொண்டிருந்தால் குழந்தை “அறுக்குதுப்பா”
    என்று சொல்லுவான்.

    அதனால் “ஒரு நாள் ராத்திரிஎன்னாச்சு”
    என்று இரண்டாவது நிமிட முடிவில் ஒரு திருப்பம் கொண்டு வந்தால் கண்கள் விரிய கேடபான்.

    முதல் இரண்டு நிமிடம் எடுப்பு, அடுத்த நான்கு நிமிடம் தொடுப்பு.
    “ஒரு நாள் ராத்திரிஎன்னாச்சு” என்ற முடிச்சை உங்கள் “கற்பனை அல்லது
    பீலாவால்“சுவராஸ்யமாய் நகர்த்திக்கொண்டுப்போய் ஒன்பது நிமிடத்தில்(நேரம் கதைக்கு தகுந்த மாதிரி மாறும்) முடித்தால்
    “சூப்பர்ப்பா” என்பான்(ள்)

    மேல் சொன்ன கதை ஒரு கணக்கில் வந்துவிடும்.விசில்ஜாஸ்தியாகிவிட்டால் (நான்கு நிமிடம்) “தீஞ்ச வாசன வருதுப்பா” என்பான்.

    ReplyDelete
  13. வெகுஜனப் பத்திரிகைக் கதை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பா இருந்திருக்கணும்னு நினைக்கறேன்.

    சுஜாதாவைவிட்டு வாங்க ரவிஷங்கர். அவர் சும்மா எடுப்பு தொடுப்பு முடிப்புன்னு கடுப்பு அடிப்பார் :) அவர் எழுதியது 99% பத்திரிகைக் கதைகள்; அவ்வளவுதான். அவர் எழுதுவதற்கு அவர் இலக்கணம் வகுத்துக் கொண்டார். நாம் ஏன் அதைப் பொது இலக்கணமாக்க வேண்டும்?

    ReplyDelete
  14. வாங்க சுரேஷ்,

    எட்டு கருத்துக்கு நன்றி.இப்பவெல்லாம்
    சுலபமா வலைல கதைய பப்ளிஷ் பண்ணிடலாம்.அப்போ பத்திரிக்கையில்
    இது மாதிரி முடியாது.என் 54 கதைகள் திரும்பி வந்தது. முதல் குறை வடிவம் இல்லாதது.உப்பு சப்பு இல்லை.பல கதைகளில் ”பஸ் ஸ்டாண்ட்” வரும்.பால குமாரன்/பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி எழுதி அசடு வழிந்தது.

    நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் என் முதல் கதை பப்ளிஷ் ஆயிற்று.

    நான் அந்த அனுபவத்தில்தான் பதிவு எழுதினேன்.

    மீண்டும் நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  15. கட்டாயம் என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இப்பதிவு பாலபாடமாக இருக்கும் .

    முடிந்தவரை இனி என்கதைகளில் இவற்றை முயல்கிறேன் .

    நன்றி ரவி சார் .

    ReplyDelete
  16. \\ குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள் . கதை கச்சிதமாக, நறுக்குத்தெரித்தாற்போல் இருக்கும் \\

    மிக நல்ல உவமை.. உங்கள் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் உவமைகள்தான்.. ரொம்ப இயல்பாக இருக்கிறது சார்.

    ReplyDelete
  17. ரவி

    உங்க ஆதங்கம் புரியுது...
    எங்கள மாதிரி ஆளுங்கள யோசிச்சி பாருங்க.
    தினத்தந்தி குமுதம் இதை விட்ட எங்களுக்கு ஒன்ணும் தெரியாது சின்ன வயசுல....
    அதுக்கு அப்புறம் விகடன் தான்..
    அட இப்போ தான் தமிழ்மணம் அப்புறம் உங்கள மாதிரி பெர்ர்ரிய ஆளுங்க எல்லாரையும் பத்தியும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன்..
    எங்க எல்லாரையும் கொஞ்சம் மன்னித்து விட்டுடுங்களேன்...

    உங்களுக்கு என் பக்கத்துல ஒரு இடம் கொடுத்து இருக்கேன்...வந்து பாருங்க..

    ReplyDelete
  18. சுஜாதா சிறுகதை, திரைக்கதை, கவிதை இதை எல்லாம் இஞ்சனீரிங் செய்தார் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. நான் ஒரு சுஜாதா விசிறி. ஆவர் ஒரு மேதை. அதற்காக அவருடைய பார்முலாவை பின்பற்ற அவசியமில்லை. ஆனால் அவருடைய பார்முலாவிற்கு இருந்த நோக்கம் மிக உண்ணதமானது.

    சில நிமிடங்களுக்கு முன் 'அவசரம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். படித்து விமர்சனம் செய்தால் மிக மகிழ்ச்சியுருவேன்.

    எழுத்து பிழை இருக்க வாய்ப்பு உண்டு, நொந்து விடாதீர்கள் :(

    www.sugumar.com

    ReplyDelete
  19. அன்புள்ள அதிஷா,

    //அவர்களுடைய மொழிசரளம் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது//

    மேல் வரி உங்களை மனதில் வைத்துதான் நான் எழுதினது.அந்த வயதில் எனக்கு அவ்வளவு சரளம் இல்லை...

    " என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இப்பதிவு"

    தயவு செய்து இது போல் சொல்லாதீர்கள். உங்கள் "வாரணம் ஆயிரம்" விமர்சனம் நல்ல இருந்தது.என்னுடைய மறுமொழியில் கூட போட்டிருந்தேன்.

    என்னுடைய வேண்டுகோள்:

    முதலில் நெறைய சாதரண சிறுகதைகளை எழுதி பிறகு "மாயா யதார்த்த வாதம்" போகலாம்.

    நன்றி .

    ReplyDelete
  20. அன்புள்ள பெருமூச்சான்,

    நானும் உங்கள மாதிரித்தான் அண்ணே!என்னோடமறுமொழிஎல்லாம் பாருங்க

    நன்றி

    ReplyDelete
  21. அன்புள்ள சுகுமார்,

    வருகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  22. அன்பு ரவிஆதித்யா..

    வினிதாவின் குறிப்பிலிருந்து இங்கு வந்தேன். தங்களை என் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன். அங்கிருக்கும் சிறுகதைகளைப் படித்து உங்களின் "உண்மையான" விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

    நன்றிகள்.

    http://kaalapayani.blogspot.com

    ReplyDelete
  23. மிக உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்ட பதிவு.

    வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  24. அன்புள்ள ரவிஷங்கர்

    மற்ற பதிவர்கள் மீது அக்கறைக் கொண்ட நல்ல பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ஏற்கனவே சில நண்பர்கள் சொன்னது போல நாம் சுஜாதாவை மட்டுமே சிறுகதைகளுக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. வேண்டுமென்றால் வெகுஜன பத்திரிக்கைகள் சினிமாக்கள் போன்றவற்றில் எழுத சுஜாதா போன்றவர்களை முன்மாதிரியாக கொள்ளலாம்.

    மேலும் என்னை பொறுத்த வரை சுஜாதா கதைகளை விட புதுமைபித்தன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரது சிறுகதைகளை அதிகம் விரும்பி படித்திருக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  25. Maximum India .

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  26. எனது பதிவில் உங்களின் பின்னூட்டத்தின் வழியாக இப்பதிவிற்கு வருகிறேன்.ஆறு மாதத்திற்கு முன் எனது சிறுகதையை பற்றி எழுதியிருக்கிறீர்கள்,ஆனால் இன்றுதான் பார்க்கிறேன்.மிகவும் மகிழ்ச்சி.

    மேலும் சிறுகதை எழுதுவது குறித்து சில கருத்துகள் கூறியிருக்கின்றீர்கள், அது உங்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பை ஒட்டியதாகவே எனக்கு படுகிறது.அதை பொதுவில் எப்படி முன்வைப்பது.எனது கதை உங்களுக்கு பிடித்ததாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் உண்மையைச் சொன்னால் எனக்கு பெரிதாக வாசிப்பனுபவமெல்லாம் கிடையாது,இந்த கதையை இப்படி ஆரம்பித்து இப்படி முடிக்க வேண்டுமென்றெல்லாம் யோசிக்கவில்லை,கதைக்கான நாட் தோன்றியவுடன் விறு விறுவென எழுதிவிட்டேன்.மேலும் இப்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துக்களை பின்பற்றி எழுத முயற்சிக்கிறேன் என வைத்துக் கொண்டால்,அதில் நமது தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் சிரமமும்,கற்பனைக்கு ஒரு எல்லை வகுப்பது போலவும் ஆகிவிடாதா?

    எனது சிறுகதை உங்களுக்கும் பிடித்த விததில் எழுதியிருப்பதை எண்ணி உண்மையிலேயே வியந்தேன்.நன்றி நன்றி.


    இதற்கான ஆரொக்கியமான எதிவினையை எதிர்பார்த்து,
    நட்புடன்,
    நாடோடி இலக்கியன்.

    ReplyDelete
  27. நன்றி.

    //அது உங்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பை ஒட்டியதாகவே //
    இலலை.உங்கள் கதை உதாரணத்தை வைத்து இதை சொல்லுகிறீகள்.

    கிழ் உள்ளலிங்கில் உள்ளகதையையும், என் கமெண்டும் படிக்க.

    http://www.sridharblogs.com/2008/10/blog-post_31.html

    //இந்த கதையை இப்படி ஆரம்பித்து //

    உங்கள் கதையை (மறக்க) உன்னிப்பாக கவனித்தால், நான்
    சொன்ன formatஇல் இருக்கும். ஒரு முடிச்சு விழுந்து(காக்கைக்கு
    ஏன் பயப்படுகிறார்) முடிப்பில் ஒரு positive ஆக அவிழ்கிறது.

    அடுத்து நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்:-

    இதெல்லாம் ப்ளஸ் பாயிண்ட்ஸ்.

    //என்னயுமறியாமல் அனிச்சயாய்//
    //கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதன் முன்னால் தூவினேன்,கழுத்தை சாய்த்து என்னையேப் பார்த்துக் கொண்டிருந்துச்சு. //
    //காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு என் பார்வைக்கும் அப்படிதாங்க தெரிஞ்சது.//

    //என்னை "காக்கா டாக்டரு,காக்கா டாக்டரு"ன்னு நக்கல் //

    //"ஏ சனியனே உன் புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே//

    //அம்மா, இங்கே சீக்கிரமா கொஞ்சம் சாதம் எடுத்துகிட்டு வா//

    கடைசி வரியை பிரசாரம்/மிகை/மெலொட்டிராமா/அசட்டுத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக முடிகிறது. ஏன் பிடித்தது.எனக்கு? சுஜாதா சொன்னதை சொல்கிறேன்.

    //ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.//


    ஆனால் இதனை ரசிப்பதற்கு நிறைய ரசனை வேண்டும்.எனக்கு அது இருக்கிறது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன்.

    அடுத்து எனக்கு இருக்கும் “visual thinking”. சாணித்தட்டுவதிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோ வரை எந்த விஷயம் சொன்னாலும் விஷுவலாக
    உள்ளே நுழைந்து விடுவேன்.




    // இப்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துக்களை பின்பற்றி எழுத முயற்சிக்கிறேன் என வைத்துக் கொண்டால்,அதில் நமது தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் //
    உங்களுக்கு இயற்கையாக வருணனை ஆற்றல் இருக்கிறது.காக்கா கதையில்
    வருணனைகள் எல்லாம் relevant ஆக இருக்கிறது.கதையோடு ஒட்டி வருகிறது. அதுதான் ப்ளஸ்.

    இதெல்லாம் craft. உங்களை அறியாமல் வந்து விட்டது.
    உங்கள் குட்டி கதைகளையும் உன்னிப்பாக கவனித்தால் எடுப்பு,தொடுப்பு, முடிப்பு தெரியும். அதனால்தான்சுவராஸ்ய்ம்.விறுவிறுப்பு ஒரு Target வைத்துக்கொண்டு முடிச்சை அவிழ்க்கிறீகள்.இந்த டார்கெட் அளவு மீறினால் சுவராஸ்ய்ம் போய்விடும்.

    அம்புடுதான் சார்!

    ஒரு வருத்தம்:
    எந்த பதிவருமே “மறக்க” கதையை படிச்சு feedback கொடுக்கல.

    // எனக்கு பெரிதாக வாசிப்பனுபவமெல்லாம் கிடையாது//

    தயவு செய்து வலை கதைகளையாவது படியுங்கள்.

    நன்றி.

    கிழ் உள்ளதை படிக்க:
    http://raviaditya.blogspot.com/search/label/கவிதை

    ReplyDelete
  28. //தயவு செய்து வலை கதைகளையாவது படியுங்கள்.//

    கண்டிப்பா செய்கிறேன் ஸார்.

    //விறுவிறுப்பு ஒரு Target வைத்துக்கொண்டு முடிச்சை அவிழ்க்கிறீகள்//

    மிகச் சரி.

    //கடைசி வரியை பிரசாரம்/மிகை/மெலொட்டிராமா/அசட்டுத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக முடிகிறது. //

    எனக்கும் பிரச்சார நெடி,மிகை படுத்தி எழுதல் பிடிக்காது.ஒரு விஷயத்தை எப்படி நான் உணருகிறேனோ அப்படியே அதன் இயல்பிலேயே வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன்.அந்த விஷயத்தில் நீங்கள் சரியாக கதையின் போக்கை உள்வாங்கி கொண்டுள்ளீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  29. எனக்கு வேண்டியது கெடச்சிப் போச்சி... எனக்கு வேண்டியது கெடச்சிப் போச்சி...

    ---

    தங்களது சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பல கருத்துக்கள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  30. very nice sir! nan ipo than katha eluthi palaguren ana en kathaya family members and friends than padichirukanga nalla iruku nu solirukanga but anupa bayama iruku thirumbi vanthudumonu

    ReplyDelete
  31. சிறுகதைகளின் அறிய தொகுப்பு http://www.valaitamil.com/literature_short-story.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!