Tuesday, December 9, 2008

உயிரோசையில் என் கவிதை




  தலைப்பு:         பயணிகள் கவனிக்கவும்





15 comments:

  1. நல்ல இருக்கு கவிதை!

    உயிரோசை கொஞ்சம் மட்டமான பத்திரிக்கை. நிறுவனர் ஹமீது தன்னை பற்றியே அல்லது தான் எழுதியவை ஆகியன நிறைய எழுதுவார்.

    ReplyDelete
  2. கவிதை என்ற அளவில் இது எனக்கு மிகப் பிடித்திருக்கிறது (முதல் வரி தேவையில்லை என்றபோதும்!).

    ReplyDelete
  3. சட்டக்கல்லூரியில் இங்கே அடிக்கிறான், அங்கே அவன் அப்பா சாகிறார் என்று படிக்கலாம், அல்லது இங்கே (போலீஸ்) காப்பாற்றாமல் இருக்கிறார், அவர் அப்பாவையும் அங்கு காப்பாற்ற யாருமிருக்கப்போவதில்லை என வாசிக்கலாம்.. இப்படியாக, இப்படியாக... பன்முக வாசிப்பைச் சாத்தியப்படுத்துகிறது இக்கவிதை.

    ReplyDelete
  4. இதே சட்டக்கல்லூரி பிரச்சனையில் (கொஞ்சம் வேறு மாதிரி) கவிதை எழுதியிருந்தீங்கதானே.. படித்த ஞாபகம்... ஒருவேளை தவறாகவும் இருக்கலாம் :)

    ReplyDelete
  5. ம்ம்.. இந்த இரண்டு பிரச்சனைகளையும் முடிச்சுபோட்டு இப்போது எழுதியிருக்கிறீர்கள்... புத்திசாலித்தனம்தான் :)

    ReplyDelete
  6. வினிதா,
    கவிதைப் பற்றிய கருத்துக்கு நன்றி.

    //உயிரோசை கொஞ்சம் மட்டமான //

    உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை.

    ReplyDelete
  7. ஜ்யோவ்ராம் சுந்தர்,

    கவிதைப் பற்றிய கருத்துக்கு நன்றி.

    எப்படி வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம்.

    ஒரிஜினலாக வைத்த கடைசிவரிகள்:

    ("சதுர நுனியில்" என்று முடியும் இடத்திலிருந்து தொடங்கவும்)

    அவசரமாக இறங்கும் அவர்
    எதிர் திசையில் உள்ளே
    நுழைந்துகொண்டிருக்கும்
    ரயிலின் ஜன்னல் கைகளுக்கு
    கொடுக்க விரைகிறார்
    சமோசா,டீ,தயிர் சாதம்....

    இந்த கவிதை ஏற்கனவே என்னுடைய பதிவில் வந்து விட்டது.

    இதை தவிர மற்றும் இரண்டு கவிதைகள் சட்டக்கல்லுரியைப் பற்றி பதிவிட்டேன்.

    ReplyDelete
  8. உயிரோசை ஓபன் செய்தால் யார் முகம் முதலில் தெரிகிறது?

    நார்சிசிசம் (தனி மனித துதி) மனுஸ்யபுத்திரன் என்று சொல்லிக்கொள்ளும் அவருக்கு இது தேவை இல்லை.

    வேறு யாரவது பத்திரிக்கை ஆட்கள் இதை செய்கிறார்களா?

    இலவசமாக வெளியிட்டாலும், காமன் சென்ஸ் என்று ஒன்று சொல்லும்.

    ReplyDelete
  9. உயிரோசை போன்ற தீவிர இலக்கிய இணையதளங்களிலும் நீங்கள் இயங்கி வருவது குறித்து மகிழ்ச்சி.உங்கள் பதிவுகள் அனைத்தையும் பல முறை வாசித்திருக்கிறேன்.

    உங்கள் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள். தமிழ்மணம் குப்பையில் தனித்துத் தெரியும் மாணிக்கம். ஆனாலும் பல்லாயிரம் வாசகர்கள் வாசிக்கும், உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணம் திரட்டியின் சூடான இடுகைகளில் காணப்படுவதில்லை?

    இதில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக அஞ்சுகிறேன்.

    ReplyDelete
  10. கணேஷ்,

    கருத்துக்கு நன்றி

    //உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணம் திரட்டியின் சூடான இடுகைகளில் காணப்படுவதில்லை?இதில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக அஞ்சுகிறேன்.//

    தமிழ்மணம் என்ன அளவு கோல்
    வைத்துள்ளார்கள் என்றுதெரியாது.நான் எதையும் கண்டுக்கொள்வதில்லை.

    க்ளிக் செய்தால் உங்கள் பதிவு ஏன் வரவில்லை?

    ReplyDelete
  11. ரவி ஆதித்யா,

    மாப்பு சூப்பர்,” எப்படி உனக்கு

    மட்டும் எப்படி எந்த மாதிரி

    சிந்திக்க தோன்றது.”

    எனக்கு தெரிய வேண்டும்.

    ReplyDelete
  12. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. உயிரோசையின் மதிப்பீட்டை விட (அல்லது தனிப்பட்ட எவரின் மதிப்பீட்டை விட) என்னுடையது ஒன்றும் உசந்ததல்ல. இருந்தாலும் என் தனிப்பட்டக் கருத்து.

    உங்கள் இடுகை அருமை. ஒரு காட்சியை அதன் நுண்ணுணர்வுகளை அழகாய் படம் பிடித்துக் காட்டுவது நல்ல கவிதை. அந்த விதத்தில் அருமையான வெற்றி உங்களுக்கு. காட்சியை படம் பிடித்துக் காட்டிய பின், கடைசியில் ஒரு எதிர்பாராத உணர்வை/தாக்கத்தை ஏற்படுத்தினால் கவிதை இன்னும் வெற்றி பெரும். இதிலும் அபார வெற்றி.

    ஒரு கணம் வாசகர்கள் தாங்களை சமோசா விற்பவனாக, டீ விற்பவனாக, காசு வீசியெறிவதை எடுத்து, பதில் சில்லரை அவசரத்திலும் எண்ணிக்கொடுப்பவனாக பரபரப்பாக மாறியெவிடுகின்றோம். மிகுந்த பாராட்டுக்கள்.

    சட்டக்கல்லூரி மாணவனின் அப்பா என்ற முடிவும் சாட்டையில் அடித்தாற் போல் அருமை.

    இப்படியெல்லாம் பாராட்டிய பிறகு, ... இதையும் சொல்கிறேன்.

    கவிதையின் கண்ணோட்டம், நோக்கு, காட்சியைப் படம் பிடித்தல், எதிர்பாராத முத்திரையுடன் கூடிய முடிவைத் தாங்கிய உங்கள் கவிதையில், கவித்துவம் இல்லை. நவினக் கவிதை தான் என்றாலும், (நானும் எதுகை, மோனை நிறைந்தது தான் கவிதை என்று சொல்லும் வகை இல்லை) அழகாய் கோர்க்கபட்டு, வெட்டுபட்டுச் சிதறிய ஒரு பத்தியாகத் தான் என்னால் பார்க்க முடிகிறது. (ஒருவேளை என் புரிதலில் வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம்)

    This I suppose is a harsh reply. I am sorry If Ive wounded u. உங்களின் ஊஞ்சல் கவிதைகள் வாசித்தவள் என்றதனால், அதில் இருந்த கவித்துவம் இதில் இல்லை என்று தான் சொல்வேன்.

    However I thoroughly enjoyed ur post, whether u name is as kavithai or naveena kavithai or otherwise :)

    cheers.

    ReplyDelete
  13. நன்றி ஷக்தி பிரபா உங்கள் நேர்மையான விமர்சனத்திற்கு.

    பொதுவாகவே புது கவிதை உரைநடையை வரிசையாக அடுக்கி வைத்தார் போல் தான் இருக்கும். நானும் அதில் விதி விலக்கல்ல.

    கவித்துவம் இல்லை என்பது அவரவர் சொந்த அனுபவம்.நானும் உங்களோடு ஒத்துப் போகிறேன்.

    முதலில் இந்த கவிதையின் நோக்கம் என்ன தெரியுமா?
    Just to highlight the "multi tasking" capability of this vendor.

    இது உங்களுக்கு பட்டதா?. ஏன் படவில்லை?
    கடைசி வரிகள்.

    ஒரிஜினலாக வைத்த கடைசிவரிகள்:

    ("சதுர நுனியில்" என்று முடியும் இடத்திலிருந்து தொடங்கவும்)

    அவசரமாக இறங்கும் அவர்
    எதிர் திசையில் உள்ளே
    நுழைந்துகொண்டிருக்கும்
    ரயிலின் ஜன்னல் கைகளுக்கு
    கொடுக்க விரைகிறார்
    சமோசா,டீ,தயிர் சாதம்....

    அன்று வீடியோவில் பார்த்த சட்டக் கல்லூரி வன்முறை காட்சி கவிதையின் சாதாரணப் போக்கை திசை மாற்றிவிட்டது.


    எந்த தமிழ் இல்லக்கியம் படித்து கவிதை எழுத வரவில்லை. நானும் சாதாரண மாத வார இதழ்கள் படித்துதான் கவிதை எழுத கற்றுக்கொண்டேன்.

    தயவு செய்து தைரியமாகவிமர்சிக்கலாம்.

    கிழ் உள்ள வலையில் உள்ள "குழந்தை தெய்வம் " கவிதை படிக்கவும். இந்த கவிதையில்
    ஒரு வார்த்தை கவித்துவத்தை குறைக்கிறது.

    அது என்ன? சொல்ல முடியுமா?

    மனதை பாதித்த கவிதை. மற்ற கவிதைகளையும் படிக்கவும். இங்கு கருத்து சொல்லவும்.

    http://manoharggs.blogspot.com/search/label/கவிதைகள்

    அடுத்து முகுந்த் நாக ராஜன் கவிதைகள்..உங்க ஊர் காரர்தான்.

    http://veenaapponavan.blogspot.com/ இவர் கவிதைகள் surrealistic ஆக இருக்கும். ரசிக்கலாம்.

    ReplyDelete
  14. // முதலில் இந்த கவிதையின் நோக்கம் என்ன தெரியுமா?
    Just to highlight the "multi tasking" capability of this vendor.

    இது உங்களுக்கு பட்டதா?. ஏன் படவில்லை? //

    புரிந்தது. அதனால் தான் வாசர்களே ஒரு கணம் அந்த வியாபாரியாக பாவித்துக்கொள்ளும்படி தாக்கம் இருந்தது என்று சொல்லியிருந்தேன்.

    I could understand and the first thing which struck was his multi tasking capability. That is why I said uve WON as an author.


    // நுழைந்துகொண்டிருக்கும்
    ரயிலின் ஜன்னல் கைகளுக்கு
    கொடுக்க விரைகிறார் ///

    இது நன்றாக இருக்கிறது :)

    /// தயவு செய்து தைரியமாகவிமர்சிக்கலாம். ///

    ஹிஹி நானும் சாதா மாத இதழ்களை ஒருகாலத்தில் படித்தவள் மட்டுமே. எனக்குக் கவிதைகள் பிடிக்கும். ஆழமான நறுக் என்று சித்தரிக்கப் பட்ட கவிதைகள் ரசித்துப் படிப்பேன். அதைத் தவிர புதுக்கவிதை என்றோ, ஹைக்கூ என்றோ அதிகம் எனக்குத் தெரியாது. மரபுக் கவிதை இன்னும் ரொம்ப தூரம். மரபை விட புதுக்கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.
    அதிகம் தெரியாததால் தான் உளறிவிடுவேனோ என்று பயம். :)

    //// கிழ் உள்ள வலையில் உள்ள "குழந்தை தெய்வம் " கவிதை படிக்கவும். இந்த கவிதையில்
    ஒரு வார்த்தை கவித்துவத்தை குறைக்கிறது.

    அது என்ன? சொல்ல முடியுமா? ////

    நாளை கொஞ்சம் வேலை இருக்கிறது. முடிந்ததும் நிச்சயம் படித்துவிட்டு தெரிந்தவரையில் கூறுகிறேன் :thumbsup:

    ////
    மனதை பாதித்த கவிதை. மற்ற கவிதைகளையும் படிக்கவும். இங்கு கருத்து சொல்லவும்.

    http://manoharggs.blogspot.com/search/label/கவிதைகள்

    அடுத்து முகுந்த் நாக ராஜன் கவிதைகள்..உங்க ஊர் காரர்தான்.

    ////
    http://veenaapponavan.blogspot.com/ இவர் கவிதைகள் surrealistic ஆக இருக்கும். ரசிக்கலாம்.

    aahaaaaaaaaa வீணாப்போனவன் என்ற பெயரில் எழுதிவந்தக் கவிதைகளை நான் ஒரு குழுமத்தில் படித்திருக்கிறேன். ரொம்ப ரொம்ப பிடித்தது அவரின் ரசனை, கண்ணோட்டம், வித்த்யாசமான அணுகுமுறை. அவர் பெயரெல்லாம் தேரியாது. அவர் வலைப்பதிவின் முகவரி இட்டமைக்கு நன்றி.

    நேரம் கிடைக்கும் போது நிச்சயம் படிக்கவேண்டிய கவிதைகள். இவரின் வலைப்பதிவுகளை பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

    'Veenaponavan' has always made me feel so incomplete. இவர் எழுதுறது எழுத்து. நானெல்லாம்... என்று எனக்கு inferiority complex அதிகம் ஏற்படுத்தியவர் :)))

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!