வழக்கமான சாதாரண தின, வார, மாதப் பலன்களைக் கடந்து இந்தப் புத்தாண்டு பலன்கள் எல்லா ஊடகங்களிலும் தனித்தன்மையாக வந்து விடுகிறது.மேலை நாடுகள் போல் பலித்தவர்களின் ரிக்கார்டுகளை ஒன்று கூட்டி ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும்.
அதுவும் பக்தி ஊடகங்களில் நிறைய
விளம்பரங்கள்.ராசிக்கல்,பெயர் பலன்,கைரேகை, பெருவிரல் ரேகைப்பலன்,நாடி,ஜாதகம்,வசியம்,எண்ஜோதிடம்,பரிகாரம்,ஹோமம்,கிளி ஜோஸ்யம் பக்தியும் ஜோஸ்யமும் இணைந்துதான் இருக்கிறது.இவர்களுக்கு கூட்டமும் வருகிறது.
சில பேர் ”கன்னத்தில் அறைகிறார்” போல் பிட்டு பிட்டு வைப்பேன் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள்.பயமாக இருக்கிறது. இன்னொரு கன்னத்தையும் காட்டவேண்டுமே.
இவர்களில் நிறைய போலிகள்.மிகக் குறைவான அசல்கள்.பார்த்தாலே சொல்லிவிடலாம்.
ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் (இரவு 12.30) பெயர் ராசி பற்றிய பிரிவில் ஒரு பிரபலத்தைப் பற்றிச் சொல்லி அவர் ஏன் பிரபலமானர் என்று கரும்பலகை வைத்து எழுதி ஒரு மணி நேரம் பேசினார்.
ங்கொய்யால தாங்கமுடியல..!சாதாரண பொது அறிவு இருந்தால்போதும் அவர் ஏன் பிரபலமானர் என்று (கன்னத்தில் அறைகிறார் போல்?)பிட்டு பிட்டு வைக்கலாம்.
மக்களின் சைக்காலஜிதான் இந்த ஊடங்களின் மூலதனம்.
மக்களுக்கும் தெரியும் இதெல்லாம் இன்ச் பை இன்ச் அளந்துப் பார்த்து பலிக்கும் என்று நம்புவது அசட்டுத்தனம் என்று ஒரு பக்கம் ஆனால் என்னாதான் பலன் என்று பார்த்துவிடுவது என்று ஆர்வம் மற்றொரு பக்கம்.நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.
எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.இது ஒரு கணக்கு,விஞ்ஞானம்,கவுண்டர் பாயிண்ட்,
அது, இது, எது என்று எப்படிச் சொன்னாலும் நான் நம்புவதில்லை.நம்புகிறவர்கள் என்னைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அடக் கடவுளே...!
சாஸ்தோத்திரமான அய்யர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடவுள் பக்தி ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மிதான்.கடவுள் பக்தி உண்டு. நேரடியான கடவுள் தொடர்புதான். இடைத்தரகர்கள் கிடையாது.சத்தியமாக Split A/C சாமியார்களும் பின்நவீனத்துவ காஸ்ட்யூம் கார்பரேட் சாமியார்கள் கிடையாது.
சாஸ்திரம் சம்பிராதயம் என்று ரொம்ப போய் அப்பிக்கொள்வதில்லை.ஏதோ ஒரு தலைமுறையில் ஒரு பெரிசு ”சிம்பிள் பக்தி” கான்செப்டை ஜீனில் கலந்து விட்டிருக்கிறது.சின்ன வயதில் சபரிமலைக்கு போக ஆசைப்பட்டு தயாராக “போய் முதல்ல படி” என்று ஒரு பெரிய தாத்தா விரட்டி விட்டார்.
இதைச் சித்தர் வாக்காக பின்னாளில் புரிந்துகொண்டேன்.
பல வருடங்களுக்கு (நான் சிறுவன்) முன் சென்னையில் ஏதோ ஒரு மறைவான இடத்தில் ஒரு யோகி இருப்பதாக கேள்விப்பட்டு போனோம்.பொட்டல் காடு. பயமாக இருந்தது.
பெரியவர்கள்(என் வீட்டார் யாரும் இல்லை) நான்கு நான் மற்றும் மூன்று சிறுவர்கள் நான்கு பேர். அவரைக் கண்டுபிடித்தோம்.
பார்த்தவுடன் கோபம் கொண்டு “கிட்ட வராதே. கிட்ட வராதே...போ போ” என்று விரட்டிவிட்டார் அந்த ஒல்லியான தாடி யோகி.ஓடிவிட்டோம். அவர் வாயால் விரட்டியதே பெரிய பாக்கியமாக நினைத்து பெரிசுகள் முக்தி அடைந்தன.
பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார் என்று.
அடுத்து வந்த தலைமுறைகளும் “நம் பிரச்சனைக்களுக்கு நாம்தான் தீர்வு சொல்லவேண்டும்” என்று கண்டுபிடித்து ஜோஸ்ய/ பக்தி ஏஜெண்டுகளிடம் போவதில்லை.நேரடி ஆன்மீகம்தான். மனசுக்கும் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. வரவு இல்லாவிட்டாலும் இழப்புக்கள் ரொம்ப ரொம்ப கம்மி.
செலவும் கம்மி.
அடுத்து அடுத்தவனுக்கு தொந்திரவு இல்லாத பக்தி ரொம்ப உயர்வானது.
வேலைக்கு ஏதும் போகாமல் தொலைக்காட்சியில் ”சாமி”
பிசினஸ் SSN(சாமி ஷாப்பிங்க் நெட்வொர்க்) செய்யும் போலிச்சாமியார்களைக் கண்டால் கடுப்பாக இருக்கிறது.கடவுள் இருப்பது நமக்கு இல்லாவிட்டாலும் இவர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது.
உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது.கடவுளுடன் நேரடித் தொடர்பு உழைப்பதற்கு மனோதிடம் கொடுக்கும்.
.
Subscribe to:
Post Comments (Atom)
உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது!!!!!!!!!!
ReplyDeleteஉழைக்கமாட்டாங்ங்ங்க நண்பரே.......
இவங்க அடங்ங்ங்ங்க மாட்டாங்க....
திருந்த மாட்டாங்ங்ங்ங்ஙக....
ஏதோ டி.வியில் ஏதோ பெயராலஜி விற்பன்னர் சைடில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் "நான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பேன். உதாரணத்துக்கு உங்க வலது முழங்காலுக்குக் கீழே ஒரு மச்சம் இருக்கணுமே.. கரெக்டா?" என்று கேட்க, அந்தப் பெண் தயக்கமாய் ஆமாம் என்று தலையாட்டியது. எனக்கு இது நிச்சயம் ஏதோ செட்டப் என்றுதான் தோன்றியது. அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? கஷ்டகாலம்.
ReplyDeleteஒரு பரிகாரம் செஞ்சா தொப்புனு விழுந்துராதா? :)
ReplyDeleteநன்றி முனைவர்.இரா.குணசீலன்.
ReplyDelete//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? கஷ்டகாலம். //
ReplyDeleteஇதை எல்லோரும் யோசிக்க வேண்டும்.யோசித்தால்
இவர்கள் தோன்றமாட்டார்கள்.
நன்றி சிதரன்
அப்பாதுரை said...
ReplyDelete// ஒரு பரிகாரம் செஞ்சா தொப்புனு விழுந்துராதா? :)//
இடிதான் விழும். நன்றி அப்பாதுரை.
//அவ்வளவு தீர்க்கதரிசியான ஆசாமி எதற்கு டி.வி நிகழ்ச்சிகளில் குப்பை கொட்டவேண்டும்? //
ReplyDeleteகேட்டால் பொது மக்கள் சேவை என்பார்கள்.முதன் முதலாக ஒரு சாமியாரைப் பற்றி என் நண்பர் ஒருவர் வியந்து கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்.இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே எனக்குத் தெரிந்து விட்டது,ஆள் கீழ்பாக்கம் கேசு என்று.அளந்து விட்டார் பார்க்கணுமே.தங்கம் செய்யத்தெரியும் என்றார்.ஆனால் அவர் இருந்த இடத்துக்கு வாடகை பாக்கி.நண்பனைப் போல நம்புகிறவர்கள் இருக்கும் வரை இவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
ஜோதிடர்கள் பற்றி நான் என்னத்த சொல்ல ? ஏற்கெனவே ஒரு தடவை சொல்லப்போய் பல பேருக்குக் கோபம் வந்திட்டுது.நான் வரல இந்த ஆட்டைக்கு.
நல்ல இடுகை.பாராட்டுகள்.:-)))))))
நானும் உங்கள் கட்சிதான் ரவி.
ReplyDeleteஎனக்கும் பிடிக்காதுதான்...திருமணத்திற்கு சாதகம் பார்ப்பது சாதகமா பாதகமா????
ReplyDelete//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.//
ReplyDelete--- நூற்றுக்கு நூறு உண்மை...
நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.
ReplyDelete-- நூற்றுக்கு நூறு உண்மை..
நன்றி ஸ்ரீ
ReplyDeleteநன்றி வித்யா
ReplyDeleteசாதகமும் இல்லை பாதகமும் இல்லை.மனம் பொருத்தம்தான் முக்கியம். அது செட் ஆவதற்கு சில வருஷங்கள் ஆகும்.
ReplyDeleteநன்றி ஸ்வர்ணரேகா
ReplyDelete//நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.//
ReplyDelete---100% உண்மை...
பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார் என்று.
ReplyDelete//
ஹி..ஹி..
ஏண்ணே விரட்டினாரு?...
(என்னைய, பச்சபுள்ளயா நினச்சு பதில் சொல்லுங்க..!!!)
பட்டாபட்டி.... said...
ReplyDeleteவாங்க பட்டாபட்டி.
//ஹி..ஹி..ஏண்ணே விரட்டினாரு?..
(என்னைய, பச்சபுள்ளயா நினச்சு பதில் சொல்லுங்க..!!!)//
1.என்ன வச்சு நீ கடவுள தேடாதே.உனக்கு வேணும்னா நீயே தேடு.ஓடிப்போய்டு.
2.என்ன வச்சு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சு கடைசில
நக்கிரன் சிடில கொண்டுவிடுவீங்க..
ஹிஹிஹி ரெண்டாவது லேட்டஸ்டா யோசித்தது
solvatharku onrum illai en nilaimaiyai jthidam mullamaga veru thearinthu kollanuma hi..hi..hi...
ReplyDelete