Friday, January 7, 2011

முலையில் தேங்கிய விழிகள் - கவிதை

முலையில் தேங்கிய விழிகள்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்துவிட்டது

எல்லாவற்றையும் உதிர்த்து
கைகளில் போட்டுக் குலுக்கினாள்
கண்ணாடி கோலிகுண்டுகளாய்
ஒலியெழுப்பிக் குலுங்கியது
உற்றுப் பார்த்து தேடினாள்

சிலது வழுக்கி மறைந்தது
மரணவிழிகள் விழித்து
பலது மூடிக்கொண்டது
சில பெண்கள் குழந்தைகள்
அடியில் சில குருட்டுக் கண்கள்
அதற்கடியில் குடும்பக் கண்கள்

மீண்டும் குலுக்கினாள்
முலைக் காம்புகள் விறைக்க
தேடிய ஜோடி பயத்துடன்
வெளிவந்தது

நினைவாக
பனிக்கட்டியாய்
உறைந்த ராட்ஷச அருவிகள்
குளியலறை குழாயில்
விட்டு விட்டு சொட்டும்
நீர் துளிகளில்

பாஸ்போர்ட் சைசில் இறந்தவர்கள்
இறந்த பிறகு சிரித்தபடி
போஸ் கொடுக்கமுடிவதில்லை
முதலிலேயே பாஸ்போர்ட் சைசில்
சிரித்துவிடுகிறார்கள்

அரை சதவிதம்  அதிக வட்டிக்காரர்கள்
நிறைய இறந்திருக்கிறார்கள்

ஸ்கேன் செய்து பார்த்ததில்
சில பேர் தாங்கள் இறந்துவிட்டதாகவும்
சிலபேர் இறைவனடி சேர்ந்ததாகவும்
யாரோ சிலர் யூ டர்ன் எடுக்க
முயல்தாகவும்
உறுதி செய்துக்கொள்ள
இப்போதே பாஸ்போர்ட் சைஸ்
தயார் செய்துக்கொள்ளுமாறு
பிரிண்ட் அவுட் சொல்கிறது
.

11 comments:

  1. இந்தக் கவிதைகள் மட்டுமல்லாமல் உங்களின் பழைய கவிதைகள் சிலவும் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். எல்.ஆர்.ஈஸ்வரி பற்றிய பதிவில் இரண்டு இடங்களிலும் அவர் பாடிய அம்மம்மா கேளடி தோழி சொன்னாளே ஆயிரம் சேதி என்ற பாடல்பற்றிக் குறிப்பிடும் பொழுது அந்தப் பாடல் இடம் பெற்ற படம் கற்பூரம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அந்தப் புகழ்பெற்ற பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதித் தயாரித்து நடித்த கறுப்புப்பணம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இசை;விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு நன்றி அமுதவன்.

    //அம்மம்மா கேளடி தோழி //

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன் நண்பரே.

    பாராட்டுக்கும் நன்றி அமுதவன்.

    ReplyDelete
  3. கொஞ்சம் சுத்தியடிச்சாலும் கவிதைகள் பிடிச்சிருந்தது சார்...

    ReplyDelete
  4. nalla kavithai.vaazhthukkal.
    mullaiamuthan
    http://kaatruveli-ithazh.blogspot.com

    ReplyDelete
  5. இதை எல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லை... எனிவே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. தமிழ்ப்பறவை said...

    // கொஞ்சம் சுத்தியடிச்சாலும் கவிதைகள் பிடிச்சிருந்தது சார்...//

    வாங்க தமிழ்ப்பறவை.என்னோவோ தோணிச்சுங்க.எழுதினேன்.நன்றி.

    ReplyDelete
  7. முல்லை அமுதன் said...

    // nalla kavithai.vaazhthukkal.
    mullaiamuthan//


    முதல் வருகைக்கு நன்றி முல்லை அமுதன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. Philosophy Prabhakaran said...

    // இதை எல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லை... எனிவே வாழ்த்துக்கள்...//

    புரியனும்னு அவசியம் இல்லைங்க.சும்மா படிங்க அவ்வளவுதான்.

    ReplyDelete
  9. ரொம்ப நல்லாருக்கு. தலைப்புக் கவிதை அபாரம்

    ReplyDelete
  10. நன்றி உழவன்.

    ReplyDelete
  11. nalla kavithai...surukamaga niraiya boorul...


    bharathichandran

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!