Thursday, January 13, 2011

லஞ்சம் வாங்கினால் குஷ்டம்

இந்தப் பிரபஞ்சத்தில இருக்கிற காற்றை ஒழித்தாலும்
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் பேசும்போதெல்லாம் கறுப்பு எம்ஜியார் கேப்டன் விஜயகாந்த்.இது விருதகிரி படத்திற்கு ஓகே.நடைமுறையில்?

சிவப்பு எம்ஜியாரும்,ஆட்சிக்கு வருவதற்கு முன்  இந்த லஞ்சத்தை ஒழிப்பேன் டயலக்கை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.இதெல்லாம் முழு நீள காமெடி என்று அவருக்கே தெரியும்.எல்லாம் கைமீறி போய் அவரும் அதில் விழுந்தார்.

சைக்கிளில் டபுள்ஸ் போனதற்கு அபராதம் ரூ2/-க்கு பயந்து பதினைந்து பைசா என் அண்ணன் கொடுத்ததைப் பார்த்தேன்.இப்போது 2Gஐ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நானும் பல சந்தர்ப்பங்களில் கொடுத்துள்ளேன்.வாங்குபவனிடம் மாரடிப்பதற்கு தெம்பு நேரம் இல்லை. இதுதான் பெருகுவதற்கு முக்கிய காரணம்.

பொதுமக்களும்  பஞ்சபூதத்தில் லஞ்சமும் ஒன்று என்று பழகிவிட்டார்கள்.

ஒழிப்பதற்கு ஒரு வழி.லஞ்சம் வாங்கினால் கொடுத்தால் அடுத்த நாளே “குஷ்டம்” வரவேண்டும்படி கடவுள் செய்யவேண்டும்.நோய் எதிர்ப்பு மாத்திரை ஏதாவது போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தால் முதலில் கைக்குப் பதிலாக கண் அழுக ஆரம்பிக்கும்.

சில இஸ்லாமிய நாடுகள்போல் கடுமையாக தண்டனை வைத்தால் அதிலும் நம்மவர்கள் லஞ்சத்தைப் புகுத்தி தப்பிப்பார்கள்.

குஷ்டம் சீப் & பெஸ்ட்.
________________________________________

”மாமா.. என்ன உட்ருங்க. என்னல முடியல.போதும் மாமா... போதும் மாமா..! .” அப்படின்னு சொல்லனும்டா உனக்கு வர பொண்டாட்டி.எவ்வளவு சுகம் இருந்தாலும் இந்த சுகம் முக்கியம்டா. நா உங்க தாத்தா மாதிரிடா..உன் கிட்ட இருக்கிற குறைய எங்கிட்ட தைரியமா சொல்லுடா. நீ எப்ப வேணா வரலாம்.எல்லா உரிமையும் எங்கிட்ட எடுத்துகிடுடா. ஒரு தாத்தாகிட்ட பேரன் பழகுகுற மாதிரி தாண்ட். பேரனுக்கு ஒண்ணுண்ணா தாத்தா பதற மாட்டாரா? (அழுகிறார்).அப்பாயிண்ட்மெண்ட் தேவை இல்ல.எப்ப வேணாம் வரலாம்.வாடா...காலையிலிருந்து ராத்திரி எப்ப வேணாம் வரலாம்.கூச்சப்படாத தாத்தாகிட்ட சொல்லலாம்.”

ராஜ் டிவியில் சித்த வைத்தியர் சேலம் சிவராஜ்

”அய்யோ  தாத்தா என்ன உட்ருங்கோ...”
________________________________________

”பூவே செம்பூவே “ என்ற அருமையான பாட்டு “சொல்லத் துடிக்குது மனசு ”படத்தில் வருகிறது.படம் மறந்தே போச்சு. பூஞ்சகாலன் பூத்த தொலைக்காட்சி ஒன்றில்  ஒரு நாள் இந்தபடம் போட்டார்கள்.”இதோ இப்ப வந்துரும்... ” என்று எதிர்ப்பார்த்து  எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து
எதிர்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்க  படம் முடியும் தருவாயில்தான் வருகிறது.இந்தப் பாட்டிற்க்காக மொக்கைப் படத்தை தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இதே மாதிரி “நந்தா என் நிலா” படத்தில் வரும்
“நந்தா நீ என் நிலா" பாட்டும் எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து  கடைசியில்.

.

8 comments:

 1. ”பூவே செம்பூவே “ என்ற அருமையான பாட்டு “சொல்லத் துடிக்குது மனசு ”படத்தில் வருகிறது.படம் மறந்தே போச்சு. பூஞ்சகாலன் பூத்த தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நாள் இந்தபடம் போட்டார்கள்.”இதோ இப்ப வந்துரும்... ” என்று எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து
  எதிர்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்க படம் முடியும் தருவாயில்தான் வருகிறது.இந்தப் பாட்டிற்க்காக மொக்கைப் படத்தை தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.


  ....Same thappu .... same blood.... same pulambal!

  ReplyDelete
 2. தாத்தா பற்றிய பத்தி செம கலக்கல்... காமெடி காம நெடி...

  ReplyDelete
 3. //”அய்யோ தாத்தா என்ன உட்ருங்கோ...//

  ஹஹாஹா

  ReplyDelete
 4. நன்றி சித்ரா.

  ReplyDelete
 5. நன்றி பிரபாகரன்.

  ReplyDelete
 6. நன்றி தொப்பி தொப்பி.

  ReplyDelete
 7. ஐயோ என்ன உட்ருங்க....:))))

  ReplyDelete
 8. நன்றி தமிழ்ப்பறவை.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!