Saturday, January 15, 2011

இளையராஜா- King of Vibrating Veenai

இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.
வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி.திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.


 
(ராஜாவிற்கு வீணை வாசித்த புண்யா ஸ்ரீனிவாஸ்)

கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன்.நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.


 ( வீணை ஈ.காயத்ரீ ஆரம்பகாலங்களில் இவர் ராஜாவிற்கு வாசித்தவர்)
 
சில எண்ணங்கள்:
  • பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”
  • இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
  • பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.
  • இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.
  • பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
  • இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
  • நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம்  ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது. 
  • வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை  exploit செய்திருக்கிறார்
  • இளையராஜாவின் வீணை நாதம்............
 பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.

வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.


(ஆடியோ தகராறு செய்தால் முழுவதும் ஓடவிட்டு கேட்கவும்).

போவதற்கு முன்......

Veenai Ennule.mp3


துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
Veenai Sugamoaayiram.mp3

ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
VeenaiKanmaniye.mp3

தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
Veenai Anthapurathill.mp3


கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
VeenaiNeervizhchi-KanneKalai.mp3

இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
VeenaiMalaipozhuthin.mp3

பிறகு தன் இசையில் கற்பனை கலந்து  fusion ஆகி வருகிறது.
அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Veenai Kalainera katre.mp3



நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
Veenai-O Vasantha Raja.mp3

சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
VeenaiPoomaalai-Sindhu.mp3

புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின்  இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
Veenai thamthananam.mp3

கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
VeenaiSugaRagame.mp3

அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
 Veenai NathiyiladumKathal Oviyam.mp3

இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
Veenai Kathal Oviyam.mp3

பழசிராஜா(2009)-குன்னத்தே
நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம். 
VeenaiPazhazi-Kundrathu.mp3


இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
VeenaiSridevienvazhvil.mp3

மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
VeenaiChinnachiru-Vaya.mp3

எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
Veenai- Alaipayuthe Kanna.mp3

நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
Veenai Dhooraathil.mp3

வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.
Veenai Indraikkuenintha.mp3


ராஜபார்வை(1981)-அழகே அழகே
VeenaiAzhake azhake.mp3

வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை 
சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
VeenaiVietnam Colony.mp3 


மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து 
எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
Veenai-Sollaayo-Moga.mp3

பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
"அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

VeenaiThogaiIlamayil.mp3 

 நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
 VeenaiPaadumVanam.mp3

உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
 தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது.மாத்துங்கப்பா..!

VeenaiThogaiIlamayil.mp3

பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Veenai-KannanOru.mp3

தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
சின்னத் துளிகள் அருமை.
Veenai- Vizhiyil Oru.mp3

கோயில்புறா(1981) வேதம் நீ
Veenai Vedham nee.mp3

நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
 Veenai Neeorukathal.mp3

காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
Veenai NathiyiladumKathal Oviyam.mp3


எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
Veena(MSV) Veenai Pesum.mp3


டெயில் பீஸ்
பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

.

33 comments:

  1. அருமை சார் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி மாணவன்

    ReplyDelete
  3. Dear Ravi,
    Paatai kaekalai.. Ellam Manasil irundhindae iruku.

    analum kaekanum. adharkul avasram..

    reply panna..hahhaha...

    Thanks a loooooooooooooooooooooooooot indha jenmam pooravukum...........

    with Love,
    Usha Sankar.

    ReplyDelete
  4. Dear Ravi,
    Think of RAjesh Vaithya.
    avaroda oru yotube - Raja songs a irukum.......
    very sweet it is...
    didnt get the link..
    ungaluku kedacha adhaiyum podungo.

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  5. ராகவேந்திரா படத்தில் வரும் 'ராம நாம' என்ற பாடலிலும் வீணை இசை நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. படிச்சிட்டு வாங்க உஷா. நன்றி.பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி ஸ்ரீ.ராகவேந்திர பாடல் தெரியும்.இதிலும் வீணை இனிமையாக இருக்கும்.

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி இந்த இசைத்தொகுப்புகளுக்கு ரவி
    ஸார்... இளையராஜாவின் வீணைகளின் தாலாட்டுகள் ஜீவனை மேம்படுத்தும் பொக்கிஷங்கள். எல்லாவற்றையும் விட வாழ்வு என் பக்கம் எனும் படத்திலிருந்து வீணை மீட்டும் பாடலை எனக்கு ஞாபகப்படுத்தி மீண்டும் என் பால்ய பருவத்தை கொண்டுவந்ததற்கு.மீண்டும் உங்களுது தொகுப்புகளுக்காக காத்திருக்கும் வாசகன் இராஜா.

    ReplyDelete
  9. தல அனுபவிச்சேன் ;))

    \\வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.\\

    நீங்க சொன்னது போல வேறோரு உலகத்துல இருந்துட்டு வந்தேன்

    ;)

    ReplyDelete
  10. நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  11. Super musical veena.Good work.

    ReplyDelete
  12. நன்றி அனானி.

    ReplyDelete
  13. சூப்பர் தொகுப்பு சார்...
    எனது ஃபேவரைட் பழசிராஜா, தூரத்தில் நான் கண்ட, கண்மணியே,அழகே அழகு,நதியிலாடும்....
    ‘பாக்யலஷ்மி, பகவதிபுரம் ரயில்வே கேட்டாக மாறிய அதிசயம் அழகு...

    ReplyDelete
  14. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  15. ரவி...எல்லா ஒலிநாடாவையும் கேட்டேன்..வீணையின் நாதம்..ம்ம்...ஒரே வார்த்தையில் சொல்ல போனால்..பரவசமடைந்து சொக்கி போனேன்...mastro ..he is a legend..he is d ocean of music...அப்புறம் ரவி...உங்களுக்கும் என் வணக்கங்கள் அண்ட் வாழ்த்துக்கள்...உண்மையிலே சொல்லபோனால் அருமையான ஒரு இசை பதிவு என்பது இது தான்...நீங்க சின்ன சின்ன நுணுக்கங்களையும் ரசிச்சு,அதை அருமையா தொகுத்து ,அற்புதமா எங்களையும் இன்னும் ரசிக்க வச்சிட்டிங்க...மிக்க நன்றி ...நான் எதாவது மிஸ் பண்ணினால் கட்டாயமாய் மாஸ்ட்ரோ பதிவுகளை எனக்கு நினைவூட்டுங்கள்...

    ReplyDelete
  16. வீணை நாதத்தை அனுபவத்தீர்களா!நன்றி ஆனந்தி.

    ReplyDelete
  17. ரவிஷங்கர்,

    இன்னொரு விஷயம் - நான் செல்லமாய் ‘அக்கிரம ராஜா’ என்று சொல்லும் விஷயம் - ராஜா கிடாரையும் வீணையும் மாற்றி மாற்றி ‘அக்கிரம்ம்’ செய்வதில் பயங்கர ஆசாமி. அவருடைய கிடார் செல்ல வாத்தியக்காரர் (ராஜாவின் செல்ல கிடார் வாத்தியக்காரர் என்பது சாதாரண சாதனை அல்ல)சதா பேட்டியில் சொல்லிக் கேட்டுள்ளேன்.

    எழுதிய இசைக் குறிப்புகள் வீணைக்காக இருந்தாலும் சதாவிடம், ‘கிடாரிலேயே வாசிச்சுடுங்க!’. சில உதாரணங்கள்:

    1) நினைவெல்லாம் நித்யாவில் இடம்பெற்ற ’பனி விழும் மலர்வனம்’ - முதல் இடையிசை எல்லாம் ஒழுங்காக கிடார் கிடாராகவும் வீணை வீனையாகவும் சமர்த்தாக ஒலிக்கும். சாளநாட்டையில் அமைந்த இந்த பாடலின் இரண்டாவது இடையிசையை கேளுங்கள் - வீணை வர வேண்டிய இடத்தில் கிடார், கிடார் வர வேண்டிய இடத்தில் வீணை - அது ராஜா!

    2) நீங்கள் கேட்டவையில் இடம் பெற்ற - ‘ஓ வசந்த ராஜா’ - கூர்ந்து கவனியுங்கள் - அதே கிடார்/வீணை அக்கரமம் தாராளமாக உண்டு.

    3) சொஞ்சம் மலையாளப் பக்கம் போவோமே - 80 களில் பிரபலமான ‘வீணே வீணே’ (ஆலோலம்) என்ற பாடல் மிகப் பொறுத்தமானது.

    http://www.youtube.com/watch?v=d-VVMc4Pn_k

    பூவாய் விரிஞ்ஞ - அதர்வம் (கீரவாணி)

    http://www.youtube.com/watch?v=G-H6AIT7UwE

    கடைசியாக ராஜாவின் மலையாள அக்கரமம் - 2007 ல் வெளிவந்த ‘சூர்யன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்த நிலாவின்’ - ஸ்ரீரஞ்சனியின் ஸிந்தஸைஸரும் வீணையும், மது பாலகிருஷ்ணனும் - ஒரே வார்தையில் - தூள்!

    http://www.youtube.com/watch?v=OW5qNv4Vmp8

    இதைவிட நவீனமாக வீணையை யாராவது உபயோகித்திருந்தால் சொல்லுங்களேன்!

    ரவி நடராஜன்

    http://geniusraja.blogspot.com

    ReplyDelete
  18. //கிடாரையும் வீணையும் மாற்றி மாற்றி ‘அக்கிரம்ம்’ செய்வதில் பயங்கர ஆசாமி. அவருடைய கிடார் செல்ல வாத்தியக்காரர் (ராஜாவின் செல்ல கிடார் வாத்தியக்காரர் என்பது சாதாரண சாதனை அல்ல)சதா பேட்டியில் சொல்லிக் கேட்டுள்ளேன்//

    நானும் கேள்விபட்டுள்ளேன்.

    எழுதிய இசைக் குறிப்புகள் வீணைக்காக இருந்தாலும் சதாவிடம், ‘கிடாரிலேயே வாசிச்சுடுங்க!’. சில உதாரணங்கள்:

    //1) நினைவெல்லாம் நித்யாவில் இடம்பெற்ற ’பனி விழும் மலர்வனம்’ - முதல் இடையிசை எல்லாம் ஒழுங்காக கிடார் கிடாராகவும் வீணை வீனையாகவும் சமர்த்தாக ஒலிக்கும். சாளநாட்டையில் அமைந்த இந்த பாடலின் இரண்டாவது இடையிசையை கேளுங்கள் - வீணை வர வேண்டிய இடத்தில் கிடார், கிடார் வர வேண்டிய இடத்தில் வீணை - அது ராஜா!//

    புதுசா கேள்விப்படுகிறேன்

    சில சமயம் தடுமாற வேண்டி இருக்கிறது.

    நீங்கள் மலையாளம் நிறைய reference சொல்லுகிறீர்கள். கேட்கிறேன்.

    நன்றி ரவி நடராஜன்

    ReplyDelete
  19. My Favorites from the above list..

    1. Ennulle Ennulle(Valli)

    2. Kanmaniye Kadhal(AArilirunthu arubathu)

    3. Kanne Kalaimaane

    4. Ohh Vasantha raja(superb fusion of violin & veena)

    5. Pudhiya Varpugal( from 0.25) just awesome

    6. Kadhal Oviyam - this song always stays on my top charts

    7. Ilamai Kovil - just awesome from 0.06

    8. Yethanai konam yethanai parvai

    9. Nilalgal super - I like all songs from this movie esp. poongathave(you missed the veena prelude in this song)

    10. Vaithegi Kathirunthal

    11. Mogamul - I haven't heard it before but just awesome..

    12. Payanangal Mudivathillai

    13. Paadum Vaanampadi

    14. Ilam Solai poothathey - this looks to me like the BGM that goes for Muthu(Father Rajini)

    15. Nayagan - Nee Oru kadhal

    aanal Ravi Sir..yeppudi ivvalo nunukkamaa gavanikkuringa..??
    hats off to you sir...!!!

    ReplyDelete
  20. வாங்க கிரண். கருத்துக்கு நன்றி.

    //aanal Ravi Sir..yeppudi ivvalo nunukkamaa gavanikkuringa..??
    hats off to you sir...!!! //

    ரொம்ப சுலபம்.You have to live with that.

    ReplyDelete
  21. ilayaraja uses guitar for veena in some of his compositions this was said by Mr.purushottaman
    This was evident when u see his concert(youtube) in tiruvannamalai where Mr.Sada doing veena strings in Arunamalai guru ramana song.
    Ravi Sir, u have immense observation on Raja music.Thanks for sharing

    Thiyagarajan

    ReplyDelete
  22. வாங்க தியாகராஜன். முதல் வருகைக்கு நன்றி.
    //ilayaraja uses guitar for veena in some of his compositions this was said by Mr.purushottaman//

    கேள்விப்பட்டேன். பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  23. குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலில் ஒரு வீணை நாதம் ஒலிக்கும். அதனை இந்த வரிசையில் எதிர் பார்த்தேன். அருமையான இசை. உங்கள் பதிவில் நிறைய பாடல்கள் பார்கிறேன். ஒவ்வொன்றாய் அனுபவிக்கிறேன். நன்றி.

    சுரேந்தர்.

    ReplyDelete
  24. Anonymous said...

    //குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலில் ஒரு வீணை நாதம் ஒலிக்கும். அதனை இந்த வரிசையில் எதிர் பார்த்தேன். அருமையான இசை. உங்கள் பதிவில் நிறைய பாடல்கள் பார்கிறேன். ஒவ்வொன்றாய் அனுபவிக்கிறேன். நன்றி.//

    எவ்வளவு ஹோம் வொர்க் பண்ணியும் சிலவற்றை மிஸ் செய்தாகிவிடுகிறது.நல்ல வீணை நாதம்.பாகம் இரண்டில் பார்க்கலாம்.

    நன்றி சுரேந்தர்.

    ReplyDelete
  25. "THenpaandith thamizhae" from paasap paravaigal.

    ReplyDelete
  26. குறித்துக்கொண்டேன் அழகன். நன்றி. வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  27. முதல் முறையாக எட்டிபார்க்கின்றேன்.இனி அடிக்கடி.நல்லவேளை ராஜா முன்பே வந்துவிட்டார்..உண்மை.இன்றும் என்றும் இனிக்கின்ற பாடல்கள் அவருடையது.
    ஜனனி ஜனனி பாடலில் வரும் வீணையும் புல்லாங்குழலும் தம்பதியாக இனிக்க வைத்திருப்பார்களே..அதை போடவில்லையே
    அருமை அருமை உங்கள் தொகுப்புகள் அனைத்தும்.

    ReplyDelete
  28. முதல் வருகைக்கு நன்றி.

    உங்கள் கருத்துக்கும் ரசிப்புக்கும் ரொம்ப நன்றி.மிகுந்த ஊக்கம் அளிக்கிறது.

    ReplyDelete
  29. Ravi superb post..
    I think one more piece having amazing Veena - Its the Bethrotal Function piece in the film Punnagai Mannan ..

    ReplyDelete
  30. Thanks for the first visit Rajiv.

    Thanks for the comment.

    ReplyDelete
  31. Really nice post keep it up. :)

    Ganesh

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!