Saturday, January 22, 2011

புதிர்களுக்கு விடை என்ன சொல்லுங்கள்?

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களை யாராவது வாங்கிப்பார்த்தால் சற்று குழம்புவார்கள். ஒரே கலந்துக்கட்டியாக இருக்கும்.எல்லா வகை புத்தகங்களும் இருக்கும். அதில் முக்கியமாக மறக்காமல் வாங்குவது மாயஜாலக் கதைகள்,புதிர்க் கதைகள்,நாட்டுப் புற கதைகள்.எல்லாம் “தமிழில்”.

முதலாக இந்தக் கதைகள் என் விருப்பம் சார்ந்து வாங்குவது.அடுத்து  நான் படிப்பதைப் பார்த்து என் மகனும்  ஈர்க்கப்பட்டுவிட்டான்.என் மனைவியும்.

நன்றி:ஆசிரியர்: எ. சோதி -நன் மொழிப் பதிப்பகம், புதுச்சேரி-605 003.

ஆனால் இதில் சில(புதிர்க்) கதைகளை செவி வழியாக
கேள்விப்பட்டும்,படித்தும்,தொலைக்காட்சியில் பார்த்தும் உள்ளேன்.

புதிர்க் கதைகளில் வரும் சில புதிர்களை விடுவிக்க முடியுமா என்று பாருங்கள்.

1.அரசன் ஊர்வலம் வரும்போது ஒரு நாய் ஒன்று அரசனின் விரலைக் கடித்துக் குதறிவிட்டது.காரணம் அரசனின் பர்சனல் காவல்காரனின் கவனக்குறைவு.

ஆத்திரத்தின் உச்சத்திற்குப்போன அரசன்  காவல்காரனைப் பார்த்து” இந்த நாயை நீயே உன் கையால் கொல். இதை நீ எப்படிக்கொல்கிறாயோ அதே முறையில் நான் உன்னையும் கொல்வேன்”.

உக்கிரமாக குரைத்துக்கொண்டே வந்த நாயைக் காவல்காரன் கொன்றான்.ஆனால்  அரசனால் அவனைக் கொல்லமுடியவில்லை?தப்பித்துவிட்டான். எப்படி?

(நாம்(பெரும்பாலோர்) இந்த நிலமையில்(வெலவெலப்பில்) இருந்தால் மென்மையாக சாகவேண்டும் என்று நாயை மென்மையாக சாகடிப்போம்)

2. ஒரு  பெரியரோஜா பூந்தோட்டத்தில் இளவரசியும் அவள் தோழிகளும் ரோஜாப்பூவை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுகிறார்கள்.அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் முகத்தில் பச்சென்று அடித்து முள் குத்தி எரிச்சலாகிறார்.அவர் as usual  கோபத்தில் அவளைப் பார்த்து சாபம் இடுகிறார்.” நீ இந்தப் பெரிய பூந்தோட்டதில் ரோஜாச் செடியாக மாறக் கடவது”


அவளும்  as usual அறியாமல் செய்த பிழை,சாபத்தில் டிஸ்கெளண்ட் உண்டா என்கிறாள். அதற்கு “பகலில் மட்டும் ரோஜாச் செடியாக இருப்பாய். இரவில் பழைய வடிவத்தில் இளவரசியாக மாறிவிடுவாய்.இங்கு இருக்கும் இந்தப் பெரிய ரோஜாப் பண்ணையில் உன்னை மட்டும் தோழியர் கண்டுப்பிடித்து வேரோடு தூக்கி எறிந்தால் நீ எப்போதும்  இளவரசியாக  இருப்பாய்” என்கிறார் முனிவர்.

இளவரசியும் தோழிகளுடன் ரூம் (அந்தப்புரம்?)போட்டு ரோஜாவை முகர்ந்துக்கொண்டே யோசித்து தப்பித்து விடுகிறாள்.எப்படி?

3. ஊருக்கும்  ஊருக்கும் இடையில் ஒரு பெரிய பாலம் இருக்கிறது.வெள்ளம் கிராமத்தை அழிக்காமல் இருக்கக் கட்டியது இந்தப் பாலம்.அதன் செலவை இதைக் கடப்பவர்களிடமிருந்து வசூலிக்க ஏற்பாடு.அதற்காக  ஒரு காவல்காரன்.யாரும் காசு கொடுக்காமல் பாலத்தை கடக்க முடியாது. முயன்றால் பொளேர் என்று ஒரு அறை அறைந்து “பிச்சிபுடுவேன் படுவா”என்று திருப்பி விரட்டிவிடுவான். யாரும் தப்ப முடியாது.

யாரும் அதைக் கடக்க இருபது நிமிடம் ஆகும்.அதனால் காவல்காரன் பத்து நிமிடத்திறகு ஒரு முறை  ரெஸ்ட்எடுத்துவிட்டு அடுத்த பத்த நிமிடம் காவல் காப்பான்.

ஒரு  ”ஐ”ஊர் வாலிபன்  ”ஆ”ஊர் காதலியை  அர்ஜண்டாக காதலிக்க செல்ல வேண்டும். இல்லையேல் லவ் கான்சல்.கடப்பதற்கு கையில் காசு இல்லை.வெகு தூரத்தில் ஆடு ஒன்று வருகிறது.திட்டம் போட்டு கடக்கும்போது மாட்டிக்கொள்கிறான். காவல்காரன் அறைந்து திருப்பி விரட்டி விடுகிறான். “ரொம்ப தாங்கஸ்ன்னா” என்று கடந்துவிடுகிறான்.காவல்காரன் முழிக்கிறான்.

எப்படி?


விடைகள்:
1. நாய் வாலைப் பிடித்து சுழற்றிக் கொல்கிறான்

2.மறு நாள் பகலில் ஒரு ரோஜாவில் மட்டும் பனித்துளி இல்லை.காரணம் பனி பெய்யும் இரவெல்லாம் அவள் இளவரசி. பகலில்தான் ரோஜாவாகி விடுவாள்.அதைப் பிடுங்கி எறிந்தவுடன் அவள் full time இளவரசி ஆகி விடுகிறாள்.

3.காவலன் ஓய்வெடுக்கும் சமயத்தில் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கிறான்.”ஐ” ஊர் வாலிபன். பத்து நிமிடம் ஆனதும் அப்படியே திரும்பி நடந்து தான் “ஆ” ஊரிலிருந்து வருவதாக பாவ்லா காட்டி நடக்க, ஓய்வு முடிந்து காவலன் வெளி வந்து அவனைப் பார்த்ததும் ”காசு கொடுக்காத இவ்வளவு தூரம் நடந்து விட்டியா..திரும்பி ஓடுறா உங்க ஊருக்கு என்று விரட்ட அவன் “ஆ” ஊருக்கே ஜாலியாக ஓடுகிறான்.
.

13 comments:

  1. பகிர்வுக்கு நன்றி
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 3 vathu புதிர்க்கு மட்டும் எனக்கு vidai தெரியும்

    ReplyDelete
  3. நன்றி sakthistudycentre-கருன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி புலிகேசி.சொல்லுங்கள்.பின்னூட்ட மாடரேஷன் வைத்துள்ளதால் சொல்லலாம்.

    ReplyDelete
  5. 1)நாயின் வாலை பிடித்து தூக்கி அடித்து கொன்னிருப்பான். மனிதனுக்கு வாலில்லாத காரணத்தால் அவனை ராஜாவால் கொள்ள முடியாது.
    2)நீங்களே சொல்லுங்க ஹி...ஹி.....
    3)”ஐ”ஊர் வாலிபன் ”ஆ”ஊர் நோக்கி பாதி தூரம் நடந்திருப்பான். திடீரென்று காவலன் பார்க்கும் போது மீண்டும் வந்த திசையிலேயே நடக்கிறான். இதை பார்த்த காவலன் ஆ ஊரிலிருந்துதான் இந்த வாலிபன் ஐ ஊருக்கு போகிறான் என்று நினைத்து திருப்பியனுப்பிருப்பான். இவனும் ஓசியில் ஆ ஊர் சென்றான். எப்படி நம்ம வடை சே...விடை

    ReplyDelete
  6. 1. நாயின் வாலைப் பிடித்து சுழட்டியடித்துக் கொல்கிறான்
    2.இளவரசி மாறும் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட வண்ணப் பூந்தொட்டியில் அமர்ந்து கொள்கிறாள் (?) அல்லது அந்தத் தோட்டத்தில் இல்லாத வண்ண ரோஜாவை முகர்ந்தவாறு மாறும்போது அந்த வண்ண ரோஜாவை வைத்துக் கண்டுபிடிக்கலாம் (?)
    3.காவல்காரன் ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில் பாதி தூரம் தாண்டி அவன் கவனிக்கும் சமயத்தில் போக வேண்டிய ஊரிலிருந்து வருவது போல காதலன் திரும்பி ஷோ காண்பித்தால் காதலி ஊருக்குச் சென்று விடலாம்.

    ReplyDelete
  7. மிடில்கிளாஸ் மாதவி,

    1 & 3 சரியான விடை.வாழ்த்துக்கள். 2 சரியில்லை.

    இரண்டாவதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கிறது.

    ReplyDelete
  8. ரசீம் கஸாலி,

    1 & 3 சரியான விடை.வாழ்த்துக்கள். 2 சரியில்லை.

    இரண்டாவதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கிறது.
    கண்டுபிடியுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  9. விடையையும் போட்டுட்டீங்க. அடுத்து எப்போ??

    ReplyDelete
  10. அதுக்குள்ள விடைகள் போட்டுட்டீங்களா?....முதலாவது சரியா கெஸ் பண்ணேன். அடுத்த ரெண்டும் முடியலை... :(

    ReplyDelete
  11. வாங்க பலே பிரபு. முதல் வருகைக்கு நன்றி.

    //அடுத்து எப்போ?? //

    கொஞ்ச நாள் கழித்துதான். நன்றி.

    ReplyDelete
  12. தமிழ்ப்பறவை said...

    // அதுக்குள்ள விடைகள் போட்டுட்டீங்களா?....//
    நான் சாதா ப்திவர்.அதான் சீக்கிரம்.

    //அடுத்த ரெண்டும் முடியலை...//
    கொஞ்சம் சிரமம்தான். நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!