Saturday, January 1, 2011

செருப்பு... ஒரு கணக்கு..-கவிதை

 செருப்பு

உரிமையாளர்கள் உள்ளே
போய் இருக்கிறார்கள்

நடந்து வந்த களைப்பில்
கோணல்மானலாக உருண்டு
தூங்குகிறோம்

யாரோ ஒருவர் காலால்
எட்டி உதைத்து எங்களை
ஒரு பக்கம் தள்ளுகிறார்
நாங்கள் தடுமாறி
பாதி தூக்கம் கலைய
அடுத்த பயணத்திற்கு தயாராகிறோம்

ஒரு கணக்கு

ஆவின்பால் லாண்டரி
தள்ளிப்போன நாள்
கழிக்க வேண்டியது
கேஸ் புக்கிங்
பப்பிள் டாப் டெலிவரி
கணக்கு வழக்குகள் முடிக்க
காலண்டருக்கு
ஒரு மாதம் கூடுதலாக
ஆயுள் கிடைத்துவிடுகிறது


.

4 comments:

  1. சூப்பர்... ரெண்டுமே எனக்குப் பிடிச்சிருந்தது. ரெண்டாவது டாப்பு...

    ReplyDelete
  2. சூப்பர்... அருமையான கவிதைகள் ...

    Wish You Happy New Year

    http://sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி சக்தி.வருகைக்கும் நன்றி. என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!