வடக்கே சூலம்
பழைய காலண்டர்
விட்டுச்சென்ற
வெற்றுச் செவ்வகத்தில்
புதுக் காலண்டர் பொருந்தாமல்
வடக்கேயும் தெற்கேயும்
சூலங்கள் துருத்திக்கொண்டு
எட்டிப்பார்க்கிறது
பூட்டிய வீட்டில் காதல்
பூட்டிய வாசல்கதவைத்
திறக்கும்போதெல்லாம்
காலண்டரும் சுவர் கடியாரமும்
பேச்சை நிறுத்தி
மெளனமாகின்றன
காதலன் யார் காதலி யார்
என்று புரியாமல்
ஒவ்வொரு நாளும்
யோசித்தப்படி நானும் மெளனமாகிறேன்
பால்கணக்கு
டைரியைப் போல்
ரகசியம் ஏதும் இல்லை
காலண்டர்களுக்கு
365 நாட்களும் கடந்து போகும்
முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
அலுப்பாக இருக்கிறது
காலண்டர்களுக்கு
பிரம்மானந்தம்
மின்விசிறி காற்றில்
தோகை விரித்து
ஆடிக்கொண்டிருக்கிறது
காலண்டர்
.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாருக்கு.:-)))))))))))))
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteநல்லாருக்கு சார்...’பூட்டிய வீட்டில் காதல்’ ரொம்பப் பிடிச்சது.
ReplyDelete//முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
ReplyDeleteஅலுப்பாக இருக்கிறது
காலண்டர்களுக்கு//
நல்லா இருக்குங்க...
அடடே... அப்படின்னு சொல்லும் வகையில் கவிதைகள் கலக்கலாக இருந்தன...
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை.
ReplyDeleteயோவ் said...
ReplyDelete// நல்லா இருக்குங்க...//
முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.
Philosophy Prabhakaran said...
ReplyDelete// அடடே... அப்படின்னு சொல்லும் வகையில் கவிதைகள் கலக்கலாக இருந்தன...//
ரொம்ப நன்றிங்க பிரபாகரன்.