தெரியாது.இப்போது தைரியமாகச் சொல்ல முடிகிறது.”மொழி தெரிந்ததாக” பிலிம் காட்டி கல்லூரி காலத்தில் பார்த்த படங்கள் Bobby,யாதோங்கி பாரத்,ஜவானி திவானி,டான்,தீவார், ஜுலி என்று பெரிய பட்டியல் நீளும்.காரணம் காலக்கட்டம்.
ஹிந்தியை எதிர்த்து உக்கிரமாக மொழி போராட்டம் நடந்த
அதே தமிழ்நாடுதான் ஹிந்தி சினிமா மோகத்தின் பிடியிலும் இருந்தது ஒரு காலக் கட்டத்தில்.கொடுமை என்னவென்றால் பகீசா என்ற உருது படத்தை ஹிந்திப் படமாக பாவித்து பார்த்தது பஞ்சமா பாதகங்களில் ஒன்று.ஐந்து வருடங்கள் கழித்துதான் தெரிந்தது.பகுத் துஷ்மன் வாலா ஹை?
ஒரு வார்த்தைக் கூட புரியாமல் வேறு ஒரு மொழியின் படத்தைப் பார்ப்பது சற்று அருவருப்பாக உணர நேரிட்டது ஒரு காலக் கட்டத்தில்.அடுத்த கால கட்டத்தில் ஒரளவுக்கு (20%) புரிய ஆரம்பித்தது.காரணம் வாசிப்பு அனுபவமும் காமென் சென்சும்தான்.
(கிழ் வருவது விமர்சனம் இல்லை.சும்மா ஒரு குறிப்பு)
நேற்று எதேச்சையாக Dhobi Ghat என்ற ஹிந்திப் படம் பார்க்க
நேர்ந்தது.காரணம் partly English என்றுப் போட்டிருந்தது.ஹிந்தியும் ஆங்கிலமுமாக வசனங்கள்.புரிந்தது ரொம்ப சந்தோஷம்.
படம் ஓகே ரகம்தான்.ஆனால் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது.இரண்டு மூன்று சிறுகதைப் படித்தார் போல் ஒரு உணர்வு.ஹிந்திப் படங்கள் தொடர்பு விட்டுப்போய் பார்ப்பதால் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருந்தது.
Prateik Babbar,Monica Dogra
மும்பாய் நகரம் ஒரு பாத்திரமாக வருகிறது. ஆனால் அதை விட அதில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் மனதில் இடம் பெற்றுவிட்டது.எல்லாம் புதுமுகங்கள். முதல் படமாம.இயக்குனருக்கும் முதல் படம்.
வெளி ஊரிலிருந்து குடிப்பெயர்ந்து மும்பை வாழும் பாத்திரங்களுக்கிடையிலான உணர்வுகள்தான் கதை.
கிருதி மல்ஹோத்ரா
கதாபாத்திரங்கள் பெயர்கள் முன்னா,ஷாய், யாஸ்மின்.நடித்தவர்கள் Prateik Babbar,Monica Dogra,Kirti Malhotra.
அமெரிக்கா வாழ் இந்தியராக(உண்மையிலேயே அவர் ஒரு NRI மற்றும் பாடகராம்) வரும் மோனிகா தோக்ரா நடிப்பு அட்டகாசம்.சிக்கென்று இருக்கிறார்.அடுத்து கிரீதி மல்ஹோத்ரா.வெளி ஊரிலிருந்து வந்து மும்பாயில் வாழும் புது மணப்பெண்.பேசும்போது முகத்தில் பொங்கும் ஆர்வம்.
மூன்றாவதாக பிஹாரி சலவையாளராக நடிக்கும் பிரதீக் பாப்பர்.இவரும் கூச்ச சுபாவம் உள்ளவராக வந்து மனதை கவர்கிறார்.
படத்தைத் தயாரித்தவர் அமீர்கான்.இவரும் நடிக்கிறார். இயக்கியவர் இவர் மனைவி கிரன்ராவ்.
கிரன் ராவும் அமீர்கானும்
கொறிப்பதற்கு முதலிலேயே வாங்கி வைத்துவிட வேண்டும்.காரணம் இடைவேளை இல்லாமல் முழுமூச்சாக 1.44 நிமிடம் ஓடும் படம்.
இசையும் ரொம்ப எளிமை.பாடல்கள் கிடையாது.கதையோடு ஒட்டி மனதைத் தொட்டது.
80களில் வந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாமோ?
விமர்சனம் அருமை..
ReplyDeleteஅவளவு தானா...படத்தை பத்தி வேற எதுவுமே சொல்லலை...:)) கதாபாத்திரங்கள் மட்டுமே குறிப்பிட்டிருக்கிங்க:)) படம் கொஞ்சம் போர் னு விமர்சனம் வருதே..உண்மையா ரவிசங்கர் ????????????????/
ReplyDeleteநன்றி கருன்.
ReplyDelete//அவளவு தானா...படத்தை பத்தி வேற எதுவுமே சொல்லலை...//
ReplyDeleteஇது விமர்சனம் அல்ல. சும்மா ஒரு பார்வை.
//படம் கொஞ்சம் போர் னு விமர்சனம் வருதே..உண்மையா ரவிசங்கர் ????????????????//
இது வழக்கமான மசாலா இல்ல. மெதுவாக நகரும்
சிறுகதைகள்தான்.
நன்றி ஆனந்தி.
paakalama?or vaendama?
ReplyDeleteபாக்கலாம் அம்பிதம்பி.ஆனால் உங்கள் ரசனை எப்படியோ? நன்றி.
ReplyDeleteபாகீஸா நானும் புரியாம பார்த்தேன். எனக்கு அப்போ 11 வயசு.. எங்கம்மா நச்சு தாங்க முடியாம வீடியோ காசெட் எடுத்துண்டு வந்து பார்த்தோம். ரொம்ம்ம்ம்ம்ம்ப நீ........ளமா இருந்தது. ஒரு எழவும் புரியலை. பாட்டுக்கள் மட்டும் நல்லா இருந்தது. எங்கம்மா மட்டும் மீனாக்குமாரி மீனாக்குமாரின்னு ரசிச்சு ரசிச்சு பார்த்தா! கஷ்டம்!
ReplyDelete80கள் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்போ படம் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு சொல்றீங்க.. பார்த்துட வேண்டியது தான்!
Looks like, I can skip this movie.
ReplyDeleteஅநன்யா மஹாதேவன் said...
ReplyDelete//80கள் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அப்போ படம் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு சொல்றீங்க.. பார்த்துட வேண்டியது தான்!//
ரசனையைப் பொருத்தது.நன்றி.
நன்றி சித்ரா.
ReplyDelete