Monday, January 10, 2011

புறாக்களும் சித்த வைத்தியமும் -கவிதை

சமயலறைப் புறாக்கள்
தினமும்  ஜன்னலில்
புறாக்கள் வந்துபோய்க்
கொண்டிருக்கின்றன
ரொமப நாள் பழக்கம்
அவைகள் இஷ்டம் போல்
இருக்கிறது

ஒன்றும் சொல்வதில்லை

குக்கர் விசில் எண்ணிக்கைகளில்
என்றாவது குழப்பம் வந்தால்
அவைகளிடம் கேட்டு வைப்பேன்

சித்த வைத்தியர்
ரொம்ப நாளாக
தலைமறைவாகித்
தப்பிக்கொண்டிருந்தேன்
நேற்று இவரின்
முழுப் பேச்சையும்
கேட்டுவிட்டேன்
தொலைக்காட்சியில்

ஒரு  பயம்தான்

இல்லாவிட்டால்
கை கால் நடுக்கம்
கண் எரிச்சல்
தூக்கமின்மை
தகுந்த நேரத்தில் முடியாமை
சக்தி சிறுநீரில் கலந்து போகுதல்
இவைகளில் எதையாவது
ஒன்றைச் சொல்லி
சபித்துவிட்டால்

.

5 comments:

  1. பரவாயில்லை போல் தோன்றியது முதல் வாசிப்பில். பின் பிடித்துப் போனது... :)

    ReplyDelete
  2. இரண்டுமே ரொம்ப பிடிச்சிருக்கு ரவிஜி! :-)

    ReplyDelete
  3. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!