Wednesday, January 6, 2010

ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்




                           பட்டுக்கோட்டை பிரபாகரின் க்ரைம் திரில்லர் நாவல் மாதிரி விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்டது ராஜிவ் படுகொலை.Facts are stranger than fiction.நாவலையே மிஞ்சும் அளவுக்குநாட்டுப்பற்று,வீரம்,காதல்,சோகம்,
காமெடி,தற்கொலை,மரணம்,வருத்தம்,துரோகம்,பக்தி,மெத்தனம்,அரசியல்,குழந்தை பிரசவம்(நளினி)  எல்லாமும் கலந்த ஒரு நிகழ்வு.


இந்த ஸ்கூல் பெண்ணும் பச்சைப் புடவையும் கோடியில் நிறகும் அந்த பெண் இன்ஸ்பெக்டரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் .தணுவோடு சேர்ந்து...................................?

இதன் லொகேஷன்கள் ஸ்ரீபெரும்பதூர்,முனியாண்டி விலாஸ்,ராயப்பேட்டை,மேற்கு மாம்பலம்,நாதமுனி மற்றும் ராயல் தியேட்டர்கள்,விஜிபி கோல்டன் பீச்,நாதமுனி பிள்ளையார் கோவில்(ராஜீவை கொல்லப்போவதற்கு முன் தணு பிராத்தனைச்செய்த இடம்)பாண்டிபஜார்,வில்லிவாக்கம்,
வடபழனி என நான் புழங்கிய இடங்கள் வருவது திகில் கலந்த ஆச்சரியம்.கடைசியில் கோனான குண்டேயில் முடிகிறது.


இதற்கு பின்னணி இசைதான் இல்லை.
ராமாயண மகாபாரதம் போல் குறுக்கும் நெடுக்கும் வந்து போகும் எவ்வளவு கதாபாத்திரங்கள்?ஒருவர் பெயர் தேள்கடி ராமமூர்த்தி.ஒரு கதாபாத்திரத்திற்கே பல பெயர்கள்.பாக்கிய சந்திரன் என்கிற ரகுவரன் என்கிற சிவராசன்   என்கிறவர் கொலைக்குப் பிறகு “ஒற்றைக்கண்” சிவராசன்.அதே மாதிரி முருகனுக்கும்.ரவிசங்கரன் (??)எனபவர் கூட வருகிறார்.ஒரு கேமரா.மற்றும் சஸ்பென்ஸ் கதைகளில் வரும் ஒரு விசிட்டிங் கார்ட் இதிலும் பாத்திரமாக வருகிறது.


சுபா மற்றும் நளினி


நமக்கு திரில்லர்.சோனியாவுக்கு மாபெரும் இழவு.ராஜிவின் கூட இறந்தவர்களுக்கும் தாங்க மாட்டாத சோகம்.பிரபாகரனுக்கு ராஜிவின் துரோகத்திற்கு ஒரு பாடம். துன்பவியல் சம்பவம். இதற்கான விலையைக் கொடுத்து விட்டார் போராளி பிரபாகரன். .

1983ல் ஈழத்தில் நடந்த படு கொலைக்காக  ஒரு நாள் பந்த் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.அப்போது தமிழ் நாடே இதய பூர்வமாக சகோதர தமிழருக்காக அதைஅனுசரித்தார்கள். வெகுளித்தனமான  பொது புத்தியில் எல்லாம் நல்லா படியாக நடந்து  ஹீரோ பிரபாகரன் ஈழத்தைப் பெற்று சூப்பராக ஆள்வார் என ஒரு எண்ண ஓட்டத்தோடு இருந்தார்கள். ஆனால் 1991ல் நடந்த ராஜிவ் படுகொலை எல்லாவற்றையும் தலைகிழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.அதே வெகுளித்தனமா பொதுபுத்தியில் “அடக்கடவுளே! நீங்களா இப்படி?” என்றும் எண்ணவும் வைத்துவிட்டது.


அடுத்த இரண்டு அல்லது மூன்று செகண்டுகளில்...............?


வழக்கமாக முன்னாள்/இன்னாள் இந்திய பிரதமர்கள்,குடியரசு தலைவர்கள்,அமைச்சர்கள் மாரடைப்பு,தூக்கத்தில் இறப்பார்கள்.ஒரு நாள் விடுமுறை விடப்படும்.ஒரு வாரம் ஷெனாயில் துக்கம் கொண்டாடுவார்கள்.


Rajiv gandhi assassination Photos














ஆனால் ராஜிவ் இறந்த விதம் பார்த்து தமிழ்நாடே வெலவெலத்துப்போனது. கொடூரத்தின் உச்சம்.


இனி புத்தகத்திறகு வருவோம்.

ஓய்வு பெற்ற  தலைமைப் புலனாய்வு அதிகாரி கே.ரகோத்தமன் என்பவரால் எழுதப்பட்டு கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.எளிய நடை.பரபரப்பு இல்லை.அரசியல் இல்லை. தன் மத்திய அரசு பணி நோக்கில் மெல்லிய குரலில் (softer tone) எழுதி இருக்கிறார்.பக்கத்தில் உட்கார்ந்துப் கதைக் கேட்பது போல் உள்ளது.(சில விஷயங்கள் பத்திரிக்கைகளில் படித்த விஷயம்தான்)

இந்தியாவிற்கே உரித்தான புரையோடிப்போன அரசாங்க இயந்திரத்தின் மெத்தனத்தைப் பற்றி வருத்தப்படுகிறார் நிறைய இடங்களில்.இதனால வெளி வரவேண்டிய நிறைய விஷயங்கள் ஆழமாகப் புதைந்துப் போய்விட்டது என்கிறார்.தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு இப்படி நடக்கப் போகிறது என்பது முன்னமே தெரிந்தும் இது நடந்துவிட்டது குறித்தும் வருத்தப்படுகிறார்.நடக்காமல் இருந்தால் தனி ஈழம் கிடைத்திருக்கலாமோ என்கிறது மீண்டும் பொது புத்தி.

சுவராஸ்யமான சில விஷயங்கள்:

(கொலை நடந்த இரவு ரகோத்தமன் பெங்களூருவிலிருந்து சென்னை வந்துக்கொண்டிருந்தார்.சென்னையில் விடிகாலையில் இறங்கியதும்தான் தெரிந்தது.சொந்த கார், ஆட்டோ எதுவும் கிடைக்காமல் எக்மோர் வரை நடந்தே சென்று இருக்கிறார்.வீட்டுக்குப் போனால் விசாரணை அஸைன்மெண்ட் காத்திருந்தது.)

  • நளினி நன்றாக ஆங்கிலம் பேசுவார்.எம்.ஏ.படித்தவர்.
  • ஒரு கட்டத்தில் நளினி-முருகன் தீவர காதலால் இந்த அஸைன்மெண்டுக்கு தொய்வு வந்து முருகன் ஈழத்திறகு திரும்பி அழைக்கப்பட்டார்.ஆனால் இதே காதலால்தான் படுகொலையும் சாத்தியமாகும் என்பது தெரிந்து  மீண்டும் சென்னைக்கே அனுப்பிவைக்கப்படுகிறார்.
  • தி.நகர் பாண்டிபஜாருக்கு ஷாப்பிங் போன சுபா ஒரு சர்தார்ஜியைப் பார்த்து ”இவனங்க பண்ண அட்டகாசம்” என்று ரொம்ப ஆவேசமாகி இருக்கிறார்.நளினி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
  • இதில் ஒரு கேமரா முக்கியமான பாத்திரம்.இதில் உள்ள நெகட்டீவ் பிர்ண்ட் போடுவதறகு நல்ல கடைகள் அங்கு இல்லாமல் ஹிண்டு ஆபிசில் பிரிண்ட்ப் போடப்பட்டது.
  • பத்திரிக்கையாளர்கள் தகவல் தொடர்புக்காக ஒரு போலீஸ் ஸ்டேஷன் போய் போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார்கள் கொலைப் பற்றி.
  • (ஆங்கிலத்தில் spill the beans என்று சொல்வார்கள்.தெரியாமல் செய்து மாட்டிக்கொள்வது.)இதுதான் கொலைக்கான முக்கியமான லீட்.அந்த குடிசை வீட்டுக்கு,ஹரிபாபுவின் வீட்டிற்கு,விசாரணைக்குப் போன ரகோத்தமனுக்கு(இந்த புத்தகத்தை எழுதியவர்) டீ வாங்க ஹரிபாபுவின் அம்மா பணம் எடுக்க பிளவுசுக்குள் கைவிட்டு எடுக்கும்போது கத்தை கத்தையாக 100 ரூபாய் நோட்டுக்கள்.சொதப்பல்.
  •  கொலைக்கு சில நேரங்களுக்கு முன் ஸ்ரீபெரும்பதூரில் தணு கனகாம்பரம் பூவும்,சுபா மற்றும் நளினி மல்லிகைப்பூ வாங்கிவைத்துக்கொண்டார்கள். 
  • ராஜிவுக்குப் போட்ட சந்தன மாலை விலை 65/-வாங்கிய நாள் 21.5.91.இடம் மவுண்ட் ரோட் பூம்புகார் எம்போரியம்.இங்குதான் குவாலிட்டி கிடைக்கும் (கம கமவென்று மணக்க வேண்டும்)என்று சிவராசன் கண்டிப்பாகச் சொல்லி வாங்கப்பட்டிருக்கிறது.இதன் போட்டோ காபி இந்த புத்தகத்தில் உள்ளது.முக்கியமான சாட்சியம்
  • கொலைக்கு முன் பிள்ளையாரை(நாதமுனி தியேட்டர் அருகே) பிராத்தனைச் செய்ய கோவிலுக்குப் போனார் தணு. மாலை நான்கு மணி என்பதால் கோவில் மூடி இருந்தது. வெளியில் நின்றபடியே பிராத்தனைச் செய்து விட்டு கிளம்பினார்.
  • தாமதம் இல்லாமல் ராஜீவ் மேடைக்கு வந்திருந்தால் போட்டோகிரபர் ஹரிபாபு உயிர் பிழைத்திருப்பார்.தணு அவசரப்பட்டு விசையை,ராஜிவின் சிவப்பு கம்பள் விரிப்பு நடப்பில், இயக்கிவிட்டார்.
  • “பாபு,நீ வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வரும்வரை”தாலியை காப்பாற்று” என்று கடவுளிடம் கண்ணீர் விட்டு வாழ என்னால் முடியாது” இது ஹரிபாபுவின் காதலி சுந்தரி எழுதியது.
  • ”இது LTTE செய்திருக்க மாட்டார்கள். I have mole in LTTE.அவர் கிட்டு.இவர் சொன்னார்.இவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்”  சொன்னவர் இந்திய “ரா” அமைப்பின் தலைவர் பாஜ்பாய்.
 அன்றும் சரி இன்றும் சரி நான் பிரமிக்கும் ஒரு விஷயம் இந்த போராளிகளின் நாட்டுப்பற்று மற்றும் உயிர்தியாகம்.மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அடுத்த நிமிடத்தில் “குப்பி” கடித்து இறப்பது.

இதில் இறந்த போன ஈழவிடுதலை ஆதரவாளர் டிக்ஸன் எழுதியகடிதத்தில்”திரு.கார்த்திகேயன் (புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி)அவர்களே,தங்கள் திறமைக்கு எங்கள் பாராட்டுக்கள்.”என்று இருந்ததாம்.

18 comments:

  1. நல்லாருக்குங்க அறிமுகம். ராஜிவ் கொலை வழக்குதான புத்தகத்தோட தலைப்பு நீங்க ஏன் ராஜிவ் படுகொலை வழக்குனு வச்சிருக்கீங்கோ!

    ReplyDelete
  2. புத்தகம் எப்போது படிப்பேன் என தெரியலை. ஆனா நீங்களே நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் தந்திருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  3. அதிஷா said...
    //நல்லாருக்குங்க அறிமுகம்//

    அதிஷா அபூர்வமா பின்னூட்டம் போட்டார்னா அதுல ஏதோ இருந்ததான் போடுவாரு.

    நன்றி.

    // ராஜிவ் கொலை வழக்குதான புத்தகத்தோட தலைப்பு நீங்க ஏன் ராஜிவ் படுகொலை வழக்குனு வச்சிருக்கீங்கோ!//

    தகவலுக்கு நன்றி. மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  4. நன்றி மோகன் குமார்.மிஸ் பண்ணாதீர்கள்.

    ReplyDelete
  5. இந்தப் புத்தகம் பத்திதான் வலையுலகம் முழுக்கப் பேச்சு.. படிக்கணும்கிற ஆவல் தூண்டப் பட்டது உண்மை...நன்றி

    ReplyDelete
  6. நல்லாருக்கு அறிமுகம்

    ReplyDelete
  7. உங்களை மாதிரி பரபரப்புப்புனைகதை வாசகர்களாலேதான் இப்படியான கிழங்கு பதிப்புகள் வரல்லாறாகின்றன
    :-(

    ஐபிகேஎப் ரேப் பண்ணினத போட கிழங்கு பதிப்பகத்துக்குத் துணிவு இருக்குமா? காந்தி கண்ணதாசனுக்குப் பயந்து போன கண்காட்சியிலே புலி பேர்போட்ட புத்தகங்களையே ஒளித்த க்தையேதும் புத்தகமா வருதுங்களா?

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    //இந்தப் புத்தகம் பத்திதான் வலையுலகம் முழுக்கப் பேச்சு.. படிக்கணும்கிற ஆவல் தூண்டப் பட்டது உண்மை...நன்றி//

    படியுங்கள்.ஆனால் இது பரபரப்பு அல்ல.

    ReplyDelete
  9. -/பெயரிலி. said...

    கருத்துக்கு நன்றி. வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. T.V.Radhakrishnan said...

    //நல்லாருக்கு அறிமுகம்//

    நன்றி சார்.

    ReplyDelete
  11. The Rajiv Gandhi Assassination - The Investigation by D.R.Kaarthikeyan and Radhavinod Raju

    நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  12. அனைத்துவகைகளிலும் பல அரசியல் துறை மற்றும் தனி மனித குணங்கள் ஆகிய வற்றின் சன்னல்களை திறந்து திறந்து நம்மை புதிய வெளிச்சத்திற்குள் கைபிடித்து அழைத்துச் செல்லம் அதி அற்புத புத்தகம். இதன் விலை 1 லட்சம் என்றாலும் நான் கடன் வாங்கியாவது வாங்கியிருப்பேன். இதை எழுதிய ரகோத்தமன் பதிப்பித்த ராகவன் பத்ரி ஆகியோருக்கும் மனங்கனிந்த பாராட்டுகள். Opening a new vistas in tamil literature. ஒரு ந்ல்ல புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதைற்கான சரியான உதாரணம். இதைப் போன்ற ஒருசில புத்தகங்கள் இருந்தால் ஒட்டுமொத்த மனித குலத்தையே புரட்டிப் போட்டுவிடும் தன்மை வாய்ந்தது என்பதை முழுவதும் உணர்ந்து அனுபவித்து படித்து முடித்த பின்பும் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தோன்றிய ஒரு அற்புத பெட்டகம்...
    கந்தசாமி

    ReplyDelete
  13. நன்றி கந்தசாமி.

    இதில் பல பரிமாணங்கள் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  14. January 8, 2010 12:34 PM
    Vidhoosh said...

    // The Rajiv Gandhi Assassination - The Investigation by D.R.Kaarthikeyan and Radhavinod Raju

    நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.//

    படிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  15. (??)
    :--))))

    புத்தகம் அலமாரியில் அடைக்கலமாகியிருக்கிறது...
    சுவாரஸ்ய தகவல்களால் நிரம்பி வழிகிறது....நம்பகத்தன்மை குறித்து...?

    ReplyDelete
  16. Blogger கும்க்கி said...

    // புத்தகம் அலமாரியில் அடைக்கலமாகியிருக்கிறது...
    சுவாரஸ்ய தகவல்களால் நிரம்பி வழிகிறது.//

    முதலில் படியுங்கள்.
    //...நம்பகத்தன்மை குறித்து...?//

    நம்பலாம்.இதில் சில முக்கிய விஷயங்கள் நமக்குத்தெரிந்ததுதான்.
    ”பில்ட் அப்”புக்கு வழியில்லை.
    சம்பவங்களும் உள்ளது உள்ளபடிதான்.

    பிலா இருந்தால் சுலபமாக வெளிப்பட்டுவிடும்.

    ReplyDelete
  17. //இதில் உள்ள நெகட்டீவ் பிர்ண்ட் போடுவதறகு நல்ல கடைகள் அங்கு இல்லாமல் ஹிண்டு ஆபிசில் பிரிண்ட்ப் போடப்பட்டது.//

    தவறான தகவல்.இப்பகுதியை மறுபடியும் படிக்கவும். நன்றி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!