Wednesday, January 20, 2010

தமிழ்ப்படம் -”நக்கல்” மெலடி பாட்டு

”தமிழ்ப்படம்” என்று ஒரு படம் 29-1-10 ரிலீஸ் ஆகப்போகிறது. அதில் பாடல்கள் கேட்டேன்.பொங்கல் தினம் டீவியில் இதன் விளம்பர வீடியோக்களையும் (பில்ட் அப்?)பார்த்தேன்.இது தமிழ்ப்படங்களின் புளிச்சுப்போன/வழக்கமான “பில்ட் அப்” பற்றிய நக்கல் படம் என்று தெரிகிறது.அந்த விளம்பர வீடியோக்களும் “நக்கல்” தொனிதான்.ஆவலைத் தூண்டுகிறது.

ஆங்கிலத்தில் spoof என்று சொல்லுவார்கள்.ஹாலிவுட் படங்களை நக்கல் அடித்தும் படங்கள் வந்திருக்கிறது.டீவியிலும் “லொள்ளு சபா” “சூப்பர் டென்” என்று  தமிழ்சினிமா படங்களை நக்கல் அடித்து வரும் நிகழ்ச்சிகள் வருவதுண்டு.நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி.”தங்கப்பதக்கம்” “நாளை நமதே” பட நக்கல்களை என்னால் மறக்கவே முடியாது.நடிகர் கார்த்திக்கின் “மெளன ராகம்” நக்கலுக்கு, பார்சலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டது லொள்ளுசபா சுவாமிநாதனுக்கு.

ஆனால் இந்த படம் வித்தியாசமான நக்கலாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.சொன்ன மாதிரி பாட்டு அப்படித்தான் இருக்கிறது.

நடக்கப்போகும் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சிக்கு உண்டான தமிழ் சொற்களில் புனைந்த தமிழ்ப்பட பாட்டின் வார்த்தைகளை வைத்து "ஓ! மஹா சியா”)ஒரு பாட்டுப்போட்டிருக்கிறார்கள்.(நாக்கமுக்க,ஓ ஷகலக்க,ரண்டக்க,டோல்டப்பி,பல்லேலக்கா,
உல்லாஹி,அசிலி பிசிலி,டைலாமோ)அதுவும் சிவரஞ்ஜனிராகத்தில்.ஆனால்
“நக்கலாக”நல்ல மெலடியில் கம்போஸ் செய்யப்பட்டிருக்கிறது.ரசிக்க முடிகிறது.(ஹரிஹரன்+ஸ்வேதா)தலைகிழாக பாடல் பாடுவது மாதிரி இருக்கிறது.அதாவது கேசட்டை ரிவர்ஸ்ஸில் போட்டுக்கேட்பது மாதிரி.(இப்போது ஏது கேசட்?)அடுத்து (ராஜா+ரஹ்மான்+வித்யா+விஜய்+ஹாரிஸ்) என்று கிண்டல் அவியல் படைப்பு இசைக்கோர்ப்புகள்.


அடுத்த கிண்டல் ஒரு பெப்பி செக்ஸி பாட்டு.முதலில் வீணையில் தர்பாரி கானடாவில் ஒரு prelude".பாட்டின் ஆரம்ப வரி ”குத்துவிளக்கு, சத்தியமாய் நான் குத்துவிளக்கு”
”அப்பளமாய் என்னை நொறுக்கு”.ஆடுபவர் நடிகை கஸ்தூரி.இது “ஏக் தோ தீன்” பாட்டின் சாயல் அடிக்கிறது.அடுத்து “பச்ச,மஞ்ச,பிங்க், வொய்ட்,ரோஸ் தமிழன் நான்” என்ற பாட்டு. 2011 குறிவைத்துப் பாடுவது.ஆங்கிலம்,தமிழைக் கடித்துக்குதறிப் பாடுவது.

தலைப்பில் “ப்” இல்லாமல் தமிழ்படம் என்றுதான் விளம்பரம் இருக்கிறது.ஏழு எழுத்து ராசி இல்லாமல் ஆகிவிடுமோ?

இதன் ஹீரோ சிவா அழகான அப்பாவி லுக் எனக்குப் பிடித்திருக்கிறது.ரேடியோ மிர்ச்சியில் இருக்கிறார்.இவர் ஆறாவது அல்லது ஏழாது வரைத்தான் படித்திருக்கிறார்.இவரே இதை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.ஒரு முறை என் கம்பனி விஷயமாக இவரைச் சந்தித்தப்போது பேச்சிலும் இந்த அப்பாவித்தனம் வெளிப்பட்டது.தமிழ்ப்படத்தை கிண்டல் அடிப்பதால் தயாரிப்பாளர் வீட்டிற்கு “ஆட்டோ” அனுப்ப முடியாது.அனுப்பினால் அனுப்பியவர் வீட்டிற்கே போகும். காரணம் தயாரிப்பாளர் அழகிரி மகன், தயாநிதி அழகிரி.

படிக்க:இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்

15 comments:

 1. தர்பாரி ! சிவரஞ்சினி !
  எஸ்கேப்.

  ReplyDelete
 2. பாட்டெல்லாம் கேட்டுட்டு பதிவு படிக்கறேன் :)

  ReplyDelete
 3. பின்னோக்கி said...
  // தர்பாரி ! சிவரஞ்சினி ! எஸ்கேப்.//
  அடடா!பாட்டின் இனிமையை கவனியுங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 4. Blogger சின்ன அம்மிணி said...

  //பாட்டெல்லாம் கேட்டுட்டு பதிவு படிக்கறேன் :)//

  செய்யுங்க. நன்றி.

  ReplyDelete
 5. Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

  // ப் கவனித்தீர்களா?//

  கவனித்தேன்.பதிவில் எழுத மறந்து விட்டேன். இப்போது சேர்த்துவிட்டேன்.

  நன்றி சார்!

  ReplyDelete
 6. கேட்கவில்லை . ஆனால் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 7. நல்ல மெலடி அது... இன்னும் மற்ற பாடல்கள் கேட்கவில்லை.. தரவிறக்கிக் கொண்டிருக்கிறேன்...
  http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_18.html
  ஓ மஹசீயா பாடலுக்கான ‘வசந்த்’அ வரிகள் மேற்கண்ட லிங்கில்....

  ReplyDelete
 8. படம் பார்க்கத் தூண்டும் இடுகை.

  ReplyDelete
 9. ஒரு சூறாவளி கிளம்பியதே அப்படின்னு இன்னொரு பாட்டு இருக்கு பாருங்க.. அதுல நம்ம சூப்பர் ஸ்டார்ய்யெ கலாச்ருகாங்க....

  ReplyDelete
 10. அட இது தெரியாம நான் பல பேர்ட்ட பாட்ட கிண்டல் பண்ணிக்கிட்டு இருதேன்...பரிசல்/கார்க்கி கூட நல்ல மெட்ட கெடுத்து புட்டதா வருத்தப்பட்டாங்க..ஹ்ம்ம்.. நல்ல தவகல்... இப்போ படத்தை பெருசா எதிர்பார்க்குறேன்...நன்றி..

  ReplyDelete
 11. Blogger ஸ்ரீ said...

  // கேட்கவில்லை . ஆனால் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.//

  பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 12. Blogger தமிழ்ப்பறவை said...

  // நல்ல மெலடி அது... இன்னும் மற்ற பாடல்கள் கேட்கவில்லை.. தரவிறக்கிக் கொண்டிருக்கிறேன்...
  http://kaalapayani.blogspot.com/2010/01/blog-post_18.html
  ஓ மஹசீயா பாடலுக்கான ‘வசந்த்’அ வரிகள் மேற்கண்ட லிங்கில்....//

  பார்க்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 13. Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...

  //படம் பார்க்கத் தூண்டும் இடுகை//

  நன்றி இராதாகிருஷ்ணன்.

  ReplyDelete
 14. ramasamy kannan said...

  // ஒரு சூறாவளி கிளம்பியதே அப்படின்னு இன்னொரு பாட்டு இருக்கு பாருங்க.. அதுல நம்ம சூப்பர் ஸ்டார்ய்யெ கலாச்ருகாங்க....//

  கேட்டேன் சார்.ஆமாம் செம்ம கலாய்ப்பு.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!