Saturday, January 16, 2010
கனிமொழி கவிதை - சிகரங்களில் உறைகிறது காலம்
கனிமொழியுடன் பம்பாய் ஜெயஸ்ரீ
மேசை விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப் போல உள்ளது
நம்பிக்கை
விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
திரவம்
எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே
காலியாய் இருப்பதில்லை மேசை
நன்றி: ”சிகரங்களில் உறைகிறது காலம்” -கனிமொழி
படிக்க:ராஜிவ் கொலை வழக்கு - புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஎனக்கு ஓரளவுக்குப் பிடித்திருந்தது கவிதை...
வாழ்த்துக்கள் பிரபல பதிவர் ஆகிட்டீங்க..மைனஸ் ஓட்டெல்லாம் விழுகுது...:-)
//பிரபல பதிவர் ஆகிட்டீங்க..மைனஸ் ஓட்டெல்லாம் விழுகுது...:-)//
ReplyDeleteபாசிட்டீவ் ஓட்டேயே கண்டுக்
கொள்வதில்லை.
நன்றி.