உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ- சுஜாதா
நான் முயற்சித்த ஹைக்கூக்கள்
காலி பிரியாணி தட்டை
முகர்ந்துப் பார்த்து
வாலாட்டும் நாய்
முதலையின் வாயில் வரிக்குதிரை
பிதுங்கிய வயிற்றில்
குட்டி
மொட்டை மாடியில்
அவளுக்குத் துணையாக
நிலவு
உதிர்ந்தப் பூக்களை
புழுதிப் பறக்க பெருக்கும்
பூந்துடைப்பம்
யேசு மட்டும்
சிலுவையில்தொங்கியபடி
சிதிலமடைந்த மாதாகோவில்
தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைகூ.மற்றும் வேறு விதிகள் உண்டு.இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.
Haiku only describes, does not prescribe or tell or preach.
படிக்க: ஹைக்கூக்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்துமே அருமை. அதிலும் ஒன்றும் நான்கும் மிக அருமை
ReplyDeleteBlogger குடந்தை அன்புமணி said...
ReplyDelete//அனைத்துமே அருமை. அதிலும் ஒன்றும் நான்கும் மிக அருமை//
நன்றி.
அருமை
ReplyDeleteபிரியாணியும் பூந்துடைப்பமும் என்னை மிகவும் கவர்ந்தது.
ReplyDeleteசுஜாதாவின் 'ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்' படித்திருக்கிறீர்களா?
ReplyDeleteஅந்த புத்தகத்தின் பாதிப்பில் எனக்குத் தோன்றுவது, நான்காவது மட்டுமே, சற்றே ஹைக்கூ அனுபவம் தருகிறது
தலைவர் சொல்வது போல், இவற்றை, சிறு கவிதை என்று சொல்லலாமா
ReplyDeleteநான் ஹைக்கு என்று தலைப்பிட்ட கவிதைகளை சுட்டிக் காட்டி ஹைக்குவின் பரிமாணத்தை எனக்கு என்றோ ஒருநாள் நீங்கள் சொன்ன பிறகுதான் நான் ஹைக்கு எழுதுவதையே நிறுத்தினேன் ( என்னால் முடியாது என்று உணர்ந்து)
ReplyDeleteஆனால் நீங்களே இவை எல்லாவறையும் ஹைக்கு என்று எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கு நண்பரே...
பின்னோக்கி said...
ReplyDelete//பிரியாணியும் பூந்துடைப்பமும் என்னை மிகவும் கவர்ந்தது//
நன்றி பின்னோக்கி.
//மொட்டை மாடியில்
ReplyDeleteஅவளுக்குத் துணையாக
நிலவு//
அருமை....
சங்கர் said...
ReplyDelete//சுஜாதாவின் 'ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்' படித்திருக்கிறீர்களா?//
இதற்கு முன் வேறு ஆங்கில புத்தகங்கள் படித்துவிட்டேன்.இதுவும் படித்திருக்கிறேன்.சுஜாதாவில் வரும் வரிதான் முதலில்கோட்செய்திருப்பது.
//அந்த புத்தகத்தின் பாதிப்பில் எனக்குத் தோன்றுவது, நான்காவது மட்டுமே, சற்றே ஹைக்கூ அனுபவம் தருகிறது//
ரொம்ப தீவரமா பார்த்த தமிழ் நாட்டில் ஒரு ஹைகூ கூட எழுதப்படவில்லை என்று சொல்லுவார்கள்.அதன் விதி அப்படி.
ஜப்பான் ஹைகூ எல்லாம் சீசன் சம்பந்தப்பட்டது.ஏன் என்றால் அந்த காலம் 1644-1700.
நாம் இதையெல்லாம் கடந்த் எங்கோ வந்து விட்டோம்.
எல்லாமே snapshotல் ஹைகூ அனுபவம் தரும்.
சங்கர் said...
ReplyDelete//தலைவர் சொல்வது போல், இவற்றை, சிறு கவிதை என்று சொல்லலாமா//
பொய்கூ?
சீசனைத் தவிர்த்து வேறு ஹைகூவும் இருக்கு.(1644-1694)
Poverty's child -
he starts to grind the rice,
and gazes at the moon.
நன்றி சங்கர்.
T.V.Radhakrishnan.. said...
ReplyDelete//அருமை//
நன்றி சார்.
மயாதி said...
ReplyDelete//ஆனால் நீங்களே இவை எல்லாவறையும் ஹைக்கு என்று எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கு நண்பரே...//
சுட்டிக்காட்டியது உண்மைதான்.ஆனால் ஹைகூவுக்கு நெருங்கி இருக்கும்.ஆனால் என்னுடையது unhaiku அல்ல.
சமுதாயச் சாடல்/நீதி/அடவைஸ் வைத்து எழுதும் ஹைகூக்களை ரசிப்பதில்லை.
நன்றி
Sangkavi said...
ReplyDelete//மொட்டை மாடியில்
அவளுக்குத் துணையாக
நிலவு//
//அருமை....//
நன்றி சங்கவி.
ஹைக்கூ க்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteBlogger கண்மணி said...
ReplyDelete//ஹைக்கூ க்கள் அனைத்தும் அருமை//
நன்றி கண்மணி.
முதல் இரண்டும் அருமை.
ReplyDelete1,2, 4 பிடிச்சிருந்தது சார்...
ReplyDeleteஅட! போட வைக்கின்றன.. அத்தனையும்!!
ReplyDeleteநானும் கொஞ்சம் முயற்சித்துள்ளேன்.. முடிந்தால் பின்னூட்டமிடவும்.
http://subadhraspeaks.blogspot.com/2010/09/blog-post_21.html
நன்றி.
நன்றி சுபத்ரா.உங்கள் ஹைக்கூவைப் படிக்கிறேன்.
ReplyDeleteமீண்டும் ஒரு ஹைக்கூ முயற்சி!!
ReplyDeletehttp://subadhraspeaks.blogspot.com/2011/01/kutti-poems.html
நேரம் கிடைக்கையில் படித்துவிட்டுக் கருத்துகளைக் கூறுங்கள்?