சமீபத்தில் ஒரு கியூ வரிசையில்(ரெண்டும் ஒண்ணுதானே!) ரொம்ப நேரம் நின்று நொந்துப்போனேன்.”கருவறை முதல் கல்லறைவரை லஞ்சம்” என்று பல வருடங்களுக்கு முன்பு ஆட்டோ பின்னால் எழுதிய வாசகம் ஒன்று இப்போது ஞாபகம் வருகிறது.அது போல் கருவறை முதல் கல்லறை வரை உள்ள பல விஷயங்களுக்கும் கியூவில் நின்ற அனுபவம் பல பேருக்கு வாய்த்திருக்கும்.
கல்லறைக்குப்பின்னும் கியூ உண்டு என்று புராணங்கள் சொல்கிறது. மேல் உலகத்தில் எமன் ஆபிஸ் கவுண்டர் கியூவில் நின்றுதான் சொர்க்கமா அல்லது நரகமா கன்பார்ம் செய்துக்கொண்டு பிரிய வேண்டுமாம்.
இதுவரை என்னென்ன மாதிரியான கியூக்களில் நின்று இருக்கிறேன்.விதவிதமான வரிசைகள் வயதுக்கேற்றார்போல் குழாய்தண்ணி, பால்கார்டு,ரேஷன்,பள்ளி பீஸ், டிரெயின் பாஸ்.பஸ் பாஸ்,கோவில்,வோட்டு,தியேட்டர்,திருப்பதி, ஏடிஎம்,வங்கி,சூப்பர் மார்க்கெட்,,EB ஆபிஸ், ஆபிஸ் லிப்ட்,கண்காட்சி,விசா,பாஸ்போர்ட்,அக்ஷயதிரிதி,சாப்பாடு,buffet lunch என்று வழக்கமான வரிசைகள்.
வீட்டில் கூட கியூ உண்டு.ஒரு கல்யாணம் முடிந்து லைன் கிளியராகும் வரை அடுத்தவர் (தம்பியோ அல்லது தங்கையோ)கியூவில் நிற்பார்.
ஒருவர் எந்த கியூவில் நிற்காவிட்டாலும் “மூச்சா” போக தியேட்டரில் யார் முதுகின் பின் நின்றோ“......” எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றிருப்பார்.
கனவிலும் எதிர்பார்க்காத சில”பின்நவீனத்துவ” வரிசையில் நின்றதுதான் சூப்பர்.அது கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்த போது அது ஹெல்மெட் கியூ.ஒன்றரை மணி நேரம் நின்றேன் அதுவும் ஐஎஸஐ ஹெல்மெட்டுக்காக.
அடுத்த “பின்நவீனத்துவ” டூ வீலர் நம்பர் பிளேட்பெயிண்ட் கியூ.இதற்கு ஒரு சட்டம் வந்தது.வெள்ளைப்பின்னணியில் கருப்பு எழுத்துக்கள் என்று.பெயிண்டர் முன்னால் நீள( 35 பேர்) வரிசை. அதுவும் கடைசி நாள்.பெயிண்டர் அதிர்ச்சியாகி கோமாவில் விழுந்துவிட்டார்.
என் சொந்தக்காரார் பிணத்தை வைத்துக்கொண்டு கியூவில் ஒரு நாள்.பெசண்ட் நகர் மின் மயானம்.உள்ளே ஒரு பிணம் எரிந்துக்கொண்டிருந்தது. அடுத்து வெயிட்டிங்கில் ஒன்று.அதற்கடுத்து என் பிணம்.
நாம் காலில் நிற்காமலேயே கையில் நிற்கும் கியூ ஒன்று உண்டு.அது BSNLலில் ஏதாவது என்கொயரிக்கு டயல் செய்தால் "நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்” என ஒரு பெண் குரல் வரும்.
சில மக்குகள் கியூவில் ரொம்ப நின்று கவுண்டரை நெருங்கியதும்தான் தெரியும் அது தன் சம்பந்தமான கியூ இல்லை என்பது. இது வேஸ்ட் கியூ.
கியூவைப் பற்றி ஒரு பிளே பாய் ஜோக். ஒரு ஊர்சுற்றும் சேல்ஸ்மென் வீட்டு வாசலில் நீள கியூ.சேல்ஸ்மென் தன் டூர் முடிந்து வந்துப்பார்த்து குழப்பமாகி ”இது என்ன கியூ” என்று கியூவில் இருக்கும் ஒருவரிடம் கேட்கிறார். அதற்கு அவர் “இந்த வீட்டில் இருக்கும் பிகரிடம் உல்லாசமாக இருப்பதற்கு” என்கிறார்.”அட பாவி...! அது என் மனைவிடா” என்று கத்தியபடி விட்டிற்குள் ஒடுகிறார்.
பின்னாடி இருந்து ஒரு குரல்” ஏன்யா...முன்னாடி ஒடுற! கியூல வாய்யா!”.

பொறக்குறதுல இருந்து இறக்குற வரை எல்லா கியூவையும் சொல்லிட்டீங்க. விட்டுப்போனது ஒண்ணும் நியாபகத்துக்கு வரலை. நம்ம வாழ்க்கையில எத்தனை நாள் கியூல நின்னுருக்கோம் ?. அத கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க :)
ReplyDeleteபின்னோக்கி said...
ReplyDelete//நம்ம வாழ்க்கையில எத்தனை நாள் கியூல நின்னுருக்கோம் ?. அத கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க :)//
கியூப் போட்டு யோசிக்கணும்.
நன்றி
//
ReplyDeleteபின்னாடி இருந்து ஒரு குரல்” ஏன்யா...முன்னாடி ஒடுற! கியூல வாய்யா!”.//
இது மேட்டர்.... :-)