மீதி 20 விமர்சனம் டாப் -2 தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர்.
இந்தப் போட்டியிலும் சில அற்புதமான கதைகள் படித்தேன்.அருமையாக எழுதும் அறிமுக எழுத்தாளர்கள்.வித்தியாசமான கருக்கள்.இவர்கள் எழுதி எழுதிப் பழகினால் எங்கேயோ போய் விடுவார்கள்.சிலரின் கதைகளை fine tune செய்தால் மேன்மைப்படும்.
”நச்” விதியினால் சில கவித்துவமான கதைகள் ஊசிப்போய் ஒரு மாதிரி ஆகிவிட்டது.சில நல்ல கதைகள் என்கெளண்டர் செய்யப்பட்டு விட்டன.சில”நச்” சுக்கள் லூசுத்தனமாக இருக்கிறது.புத்திசாலிதனமானக் கதையும் புத்திசாலித்தனமான “நச்” சிலதுதான் இருக்கிறது.”நச்”க்குப் போய் ரொம்ப சீரியஸ்ஸாக மண்டையை உடைத்துக்கொண்டிருக்க வேண்டாம்..நானும் அதே தப்பு செய்து விட்டேன்.கதை பணால் ஆகிவிட்டது.
சிலவற்றில் ஜாடி(கதை)க்கேற்ற மூடி (நச்)இல்லை.மூடி நல்லா இருந்தால் ஜாடி சரியில்லை.இந்தப் பார்முலாவை கொஞ்சம் சரியாக உள் வாங்கி இருந்தால் ஜாடிக்கேற்றார் மூடியும், மூடிக்கேற்றார் போல் ஜாடியும் செய்திருக்கலாம்.கதைக்கும் SOP(Standard Operating Procedure) உண்டு.
சில கதைகள் ஹோம் வொர்க்/மறுபார்வை/திருத்தி எழுதுதல்/மெருகேற்றுதல்/ஒட்டுப் போடுதல்/ இவைகளுக்கு உட்பட்டார் போல் தெரியவில்லை.கடைசி “நச்” எழுதிய அடுத்த நிமிடம் ..”அவ்வளவுதாண்டி/டா... பிச்சிட்டடி/டா ..... அனுப்பு...! ஜன்னலை மூடு..! சர்வேசா...!அமெண்ட NEFT ல என் வங்கிக்கு அனுப்பு!”என்கிற ரீதியில் இருக்கிறது..
டிஸ்கி: பல வருட வெகுஜன/இலக்கிய கதை படித்த/எழுதிய அனுபவத்தில் இந்த விமர்சனங்களை எழுதுகிறேன்.நான் சிறுகதையின் அத்தாரிட்டி அல்ல.சொந்த ரசனையும் வெளிப்படலாம்.பொது ரசனையும் வெளிப்படலாம்.நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். சற்று விலகி நின்று பார்த்துதான் எழுதினேன்.நீங்களும் சற்று விலகி நின்று பார்த்து சரி/தப்பு தீர்மானிக்கலாம்/எடுத்துக்கொள்ளலாம்.
விமர்சனத்தில் மனம் புண்படுமானால் அட்வான்ஸ் மன்னிப்பு!
இது என்னுது - புவனேஷ்வரி மாமி - (போட்டிக்கல்ல)
சர்வேசன் எழுதியது.
நடிகை புவனேஷ்வரி கதை அல்ல.நல்ல “நச்”.ஊகிக்க முடியவில்லை.கதையின் உள்ளடக்க விவரிப்புகளும் கதையை சுற்றி தோதாக வருகிறது.கச்சிதமாக இருக்கிறது.உதாரணம்:”சவரம் செய்யாத முகத்துடன் நின்று கொண்டு”.உரையாடல்களில் ”ரேடியோ டிராமா”த்தனத்தைக் குறைத்திருக்கலாம்.அடுத்து கடைசிவரி தேவையா? “சுகுமாரன், வாயடைத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான்”இதெல்லாம் ஈஸ்ட் இண்டியா காலத்துப் பழசு..
தயவு செய்து கதையில் பின்/முன் குறிப்பு,அண்டர்லைன்,ஹைலைட்,கலர் அடிப்பது /கோனார் நீதி/நோட்ஸ் போடுவது செய்யாதீர்கள். ஏன்? கதைச்சொல்லியின் “அல்டுதல்””இந்த இடத்தில நான் பின்னிட்டேன்” “சொந்தக் கருத்தை திணிப்பது”’படிப்பவரின் அறிவை மழுங்க அடிப்பது””ஒரே கோணத்திலேயே பார்க்கச் செய்வது” இதில் தெரியும்.படிப்பவர் முட்டாள் அல்ல.
2. அசைன்மென்ட் - கிஷோர்
கதையை கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்.குழந்தைக் கதையில் “முதிர்ச்சி” திங்கிங்கைதவிர்ப்பது கடினம்.ரெண்டு நச்?ஏதோ மிஸ்ஸிங்.ப்ளோ சீர் செய்யலாம்.
4. உதவி - ஷைலஜா
அவன் கடவுளை நம்புகிற மாதிரி “நச்” வைத்திருக்கலாமோ!கடவுள் நமபிக்கை உள்ள யாவரும் உதவி செய்தாற்போல் தெரியவில்லை.அதனால இவன் ரெண்டுபடி மேலே போகிறான்(அம்மா சொன்னதை விட).ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.
5. உயிரின் உயிரே - R. Gopi
திறமை இருக்கிறது.இன்னும் கூட அழுத்தமாக எழுதலாம்.வேறு சில முடிவுகளும் யோசித்துப் பார்த்து செட் ஆகுதா என்று பாருங்கள்.
6. தொழில் - ராமலக்ஷ்மி
நல்ல ”நச்” க்கான கரு.இந்த மாதிரி கதைகளை “acton packed"ஆக புனைய வேண்டும்.முதல் அல்லது இரண்டாவது பாராவில் ஆகஷன் ஆரம்பிக்கனும்.”மாட்டவே மாட்டேன்(விவரிப்பு) vs மாட்டுவட மவனே(நச்)” என்ற பார்முலாவில் எழுத வேண்டும்.பெரிய குறை கடைசியில் “நச்”சை உடனே நச்சாமல் ரொம்பத் தள்ளிப்போய் நச்சுகிறார்.கதை முடிந்தவுடன் கதைச் சொல்லாதீர்கள்.ஹோம் ஒர்க் தேவை?
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
இன்னும் கூட”ஆழம்” தேவை.கதை அப்படி.அப்பத்தான் நச் இம்பேக்ட் கொண்டு வர முடியும்.ஆபிஸ்காரர்களை போலியாகக் காட்டுகிறார்.இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் விரலுக்கு மேல் வீங்கும் போலிகள்தான்.ஆபீஸ் பாராவே ஒரு கதைதான் அதற்கு “நச்”செட்டாகிறது.
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
கதையின் ஓபனிங் ஷாட் விவரிப்புகள் நல்லா இருக்கு.பிரமாண பாஷயை இன்னும் கூட உரையாடலில் பாந்தமாகக் கொண்டு வந்திருக்கலாம்.பலம் கூடும்.ரசித்த கதை.கடைசியில் நீதி வைக்காமல் யதார்த்தம்.நல்ல நச்.
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
இது இவரின் இரண்டாவது இனிங்க்ஸ் கதை.இந்த ”திடீர்” நாட்டுப்பற்று ஏன்?டு மினிட்ஸ் நூடூல்ஸ் “நச்”சில் நம்பகத்தன்மை இல்லையே?
11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
கதை மற்றும் விவரிப்புகளில் நம்பகத்தன்மை வேண்டும்.”கதை” விடுகிறார்.
13. ஆவணி பௌர்ணமி - நானானி நம்ப முடியவில்லையே?ராக்கியை முன்னமே கட்டி கல்யாணச் செலவை சேமித்திருக்கலாமே?வேறு முடிவு யோசித்திருக்கலாமோ!விவரிப்பில் சற்று முதிர்ச்சி கொண்டுவரலாம்.புதுசானக் கருக் கூட யோசிக்கலாம்.
14. நொடிப் பொழுதில் - Pappu
நடை நல்லா இருக்கு.ஆனா குழப்பமா இருக்கு.தெளிவாக சொல்லி இருக்கலாம்.
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
அருமையான திரில்லர் விவரிப்பு.முடிவு ஈஸ்ட் இண்டியா காலத்துப் பழசு.இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.நண்பரே! யோசியுங்களேன்.
16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
பழைய உத்தி.கதை விவரிப்பு ப்ளஸ்.திகிலை கொண்டுவருகிறார்.செய்யுள் மாதிரி இவ்வளவு பாரா பிரிக்கவேண்டுமா?இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.வேற்று நாட்டு திரில்லா கதைகள் அதனால்தான் நன்றாக இருக்கிறன.முகத்தில் ஆசிட் ஊற்ற வரும் ஆட்கள் முகத்தைப் பார்த்தபின் “இவள் அவள் அல்ல” என்று முடித்திருக்க்லாம்.
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
சென்னைக்கு வரும் வரை வருணனை/கதை அருமை.அங்கேயே முடித்திருக்கலாம்.அதற்குப் பிறகு ரொம்ப நீளம்.பொறுமைப் போய் அலுப்பு வருகிறது.சுருக்கமாக எழுதுங்கள்.சீக்கிரம் கதைக்குள் வந்து விடுங்கள்.அடுத்து நமக்குப் பிடித்ததெல்லாம் எழுதக்கூடாது.(கதையின் கருவைச் சொல்லவில்லை).சீரியஸ் கதை எழுதி உள்ளிர்கள்.
18. ஆதவன் - நான் ஆதவன்
நல்லா இருக்கு ”நச்”.கதையை இன்னும் மெருகேற்றலாம்.எதற்குஅடிக்கடி ”மகனே” என்கிறார் ராவுத்தர்.(மவனே!வா).
20. யாரோ ஒருத்தி - குகன்
”நச்”க்கான ஸ்கோப் நிறைய.Missed the bus.லாஜிக்+விவரிப்பு இரண்டும் சறுக்குகிறது.இரண்டையும் திறமையாக கையாண்டிருந்தால் எங்கேயோ போய் இருக்கும்.எழுத்துப்பிழைகள் கவனிக்க.கதை முடிந்தவுடன் கூட கதைச் சொல்லுகிறார்.தவிருங்கள்.
21. செவப்புத் தோல் - ஈ.ரா
இந்த ”நச்”க்கு இவ்வளவு பெரிய கதை?சுருக்கி இருக்கலாம்.வேறு கதை முயற்சித்திருக்கலாம்.முடிவு யூகித்துவிடலாம்.
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
அம்பா சிகண்டியாக மாறி அர்ச்சுனன் பின்னணியில் பிஷ்மரை விழ்த்துவது கதை.தன் வாழ்வை நாசமாக்கியவனுடன் ஒரு உரையாடல் கடைசி தருணத்தில்.இதில் என்ன நச் இருக்கிறது என்று புரியவில்லை.கதையும் உரையாடலிலும் சுவராஸ்யமும் இல்லை.நீங்கள் அட்டகாசமான எழுத்தாளர் ஆயிற்றே.எப்படி இப்படி?
23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
விறு விறு நடை.உரையாடலகளும் தோதாக இருக்கிறாது.சரி “நச்”.ஆனால்நச்சுக்கு ஏற்றார்போல் அவளைத் தேடும் காரணம் பலமாக இல்லை.
24. ரெட் லைன் - வண்டிக்காரன்சூப்பர் விறு விறு. ஆனால்இதுவும் ஒரு பழைய உத்தி கலாய்ப்பு “நச்”.இது ஈசி.இதற்கு வேறு முடிவு வைப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.வேற்று நாட்டு திரில்லா கதைகள் அதனால்தான் நன்றாக இருக்கிறன.
25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
கதை வித்தியாசமாக படுகிறது.பக்கெட் காரணமாக அல்லல்.இன்னும் கூட சிறப்பாக எழுதி இருக்கலாமோ.கதை விவரிப்பில் முதிர்ச்சி தேவை.உள்ளடக்கத்தை கச்சிதமாக நெய்யுங்கள்.பழகினால் நல்லா வரும்.
26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
திறமை இருப்பதால் கலாய்ப்பு கதைகளை நிறுத்தி வேறு எழுதலாமே!
27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
நல்லா இருக்கு.விவரிப்பும் நன்று.ஆனால் “நச்”?தவற விட்டு விட்டீர்கள்
28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
பூமிகாவின் அப்பா விசாரிக்காமல் ரவுடி மனித குலத்துக்கு பூமிகாவை ”கல்லாணம்” கட்டி வச்சு விடுவதால்,பூமிகா ஒரு நாள் பொங்கி எழுவாள் என்பதுதான் கதை.டைனோ சொன்ன மாதிரி கடைசி நச் வைத்திருக்கலாம்.
29. டிஸ்லெக்சியா - Vinitha
ஏதோ மிஸ்ஸிங்!
31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
விவரிப்பில் தாக்கம் கொண்டு வருகிறார். relevant ஆன பின்னணியை நன்றாக பின்னியிருக்கிறார். நடை நல்லா professional ஆக இருக்கு.ரசித்த கதை.ஆனால் கடைசி டிவிஸ்ட் பொருந்தவில்லையே.கணவன் நோக்கில் அவளைப் பற்றி சொல்லப்பட்டு வந்தால் இந்த டிவிஸ்ட் செட் ஆகும.
32. ஜனனி - படுக்காளி
கவித்துவமான நடை.”நச்”க்கு ஏற்றா கதை இல்லை.என்ன சொல்ல வருகிறார்.புரியவில்லை?
33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்த
கதையா? கட்டுரையா?கதாநாயகி விவரமே முக்கால்(பாசஞ்சர் வேகத்தில்) ஓடுகிறது.கதைக்குள் விரைவாக வர வேண்டும்.முடிச்சு போடவேண்டும். நச்சில் அவிழ்க்க வேண்டும்.”அவள்””அவர்” “அவள்” “அவர்” மற்றும் வயது குழப்பம். திருமணம் எக்ஸ்பிரஸ வேகத்தில் நடக்கவில்லையா?அதான் “நச்”சா?
35. புகை - kalyanaraman raghavan
நம்பகத்தன்மை இல்லையே? ஏழை வீட்டில் தினமும் புகை அடுப்புச் சமையல்தானே? மாற்றி யோசித்திருக்கலாமோ?
36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
நச் செட்டாகவில்லை. சீரியஸ் கதை எடுத்தது தவறு. திரில்லர் கதை எழுதியும் போட்டிக்கு அனுப்பாமல் இருந்தது அதை விட இமாலய்த் தவறு.கதைப் பற்றி ஹோம் ஒர்க் செய்யவில்லை.
37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன
நல்லா இருக்கு.ரசித்தேன்.மாறவர்மனின் கடிதம் நம்பகத்தன்மையினால் யூகிக்க கஷ்டமாக இருக்கிற்து.ரெண்டு நச் வருகிறது.மாட்டிக்கொள்வது/மேலதிகாரி மன்னிப்பது.
38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
உண்மை சம்பவத்தின் அடைப்படையில் எழுதபட்டிருக்கிறது.ஆனால் கதையில் எஙகு முடிச்சு விழுந்து “நச்”சுவதற்கு தோதாக இல்லையே.வேறு மாதிரி திறமையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
அருமையான “நச்”.ஷார்பாக முடிந்தும் கதைச்சொல்லி கடைசிப் பாரா போட்டு “கருத்து” சொல்வது ஏன்?படிப்பவர்களே அதே உணர்கிறார்களே!கருத்து சொல்வதை தவிருங்கள்.
41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
நல்ல நச்.பிடித்த கதை.கொஞ்சம் சீரியஸ்னெஸ் கொண்டு வந்திருக்கலாம்.
42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
கலாய்ப்பு கதை?ஊகிக்க முடிகிறது.வேறு முயற்சிக்கலாமே?
43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
நல்லா இருக்கு. இன்னும் கூட வித்தியாசமான கதையை யோசித்திருக்கலாமோ?
46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
நல்ல நடை.நல்ல விவரிப்பு.ஆனால் நச்?
47. காமம் வழிந்தோடும் உடல் - graham
இதுவும் ஒரு மாதிரி சர்-ரியலிசம் கதை.மூன்று கோணத்தில் சொல்லப்படுகிறது.ஆனால் ஏதோ மிஸ்ஸிங்.
48. லாரி விபத்து - MSV Muthu
மன்னிக்க.தலைச் சுத்துது. கதை இன்னொரு தடவைப் படிக்க வேண்டும்.இதுக்கு கோனார் நோட்ஸ் கிடைக்குமா?சுருக்கமாக எழுதுங்களேன்.
49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
ஓகே விவரிப்பு.ரெண்டு கதை.முடிவு ”மாத்தி யோசி”ச்சிருக்கலாமே.இங்குதான் நாம் மண்டை உடைத்துக்கொண்டு யோசிக்க வேண்டும் நண்பரே!கோட்டை விட்டு விடுகிறோம்.சங்கர் பண்ணுவது புத்திசாலித்தனம் ஆனால் ”நச்” இல்லையே!
50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
வித்தியாசமான யதார்த்தமான டிவிஸ்ட்.விவரிப்புகளில் “முதிர்ச்சி” கொண்டுவரலாம்.பிடித்த கதை.
51. நானே நானா - சுப.தமிழினியன்
நான் ரசித்துப் படித்த கதை.போட்டியில் எனக்குப் பிடித்த கதை.மெளனியின் கதை போல.படமும் கதைக்கு ஏற்றார்போல்.“நான்”ஐ இன்னும் கூட சில இடங்களில் கொண்டு வந்திருக்கலாம்.மோகன் குமார் என்ற பதிவர் சொன்னது “துவக்கம் மிக நன்று. அந்த முதல் பாரா போல் முழுதும் எழுதப் பழகுங்கள்”. கரெக்ட்.அப்படி எழுதியிருந்தால் கதை எங்கோ போய் இருக்கும்.”நச்”க்கு செட் ஆகாத கதை?
54. ஐ லவ் யூ - சுவாசிகா
ஆகா! இப்படி ஒரு வித்தியாசமான கதையா?லாஜிக்கலா சொல்லுங்களேன்.கலாய்ப்புக் கதை.
57. முதல் காதல் - chelladhurai
விவரிப்புகள் நல்லா இருக்கு.ஆனா ஓவரா போய் திகட்டுது.கதைச்சொல்லி ஒரு கதையில் எல்லா விஷயங்களையும் சொல்ல விழைகிறார்.ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து நச்ச வேண்டும்.முடிவு? ரொம்ப பழசு.ஓவர் மெலோடிராமா.
58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
நம்ப முடியவில்லை.கதையில் நிறைய பாத்திரங்கள் குழப்புகிறது.காதலியின் போன் நம்பர் எப்படி கிடைத்தது?
60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
ஆரம்பமே கதாநாயகியை வில்லியாக உரத்த குரலில் அற்முகப்படுத்துகிறார்.சுயதம்பட்டம் அண்ட் போலி டொனேஷனிஸ்ட் என்று இரு நெகட்டிவ் வில்லிக்கு.ஆனால் “நச்”லும் வேறு ஒரு நெகட்டீவ்.எப்படி நச் ஆகும்?.கதை சரியாக ஹோம் வொர்க் செய்யப்படவில்லை.ஏதோ ஒரு வேகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
61. நடிகையின் கதை - சாணக்கியன்
ஏதோ மிஸ்ஸிங்.”நச்”ஏற்றார் போல் இல்லை.படித்த கபிலன் சினிமா மூலமாக சமூக விழிப்புணர்வு கொண்டு வருவேன் என்பது யதார்த்தமாக இல்லை.சினிமா வர்த்தகம் குழந்தைக்கூடத் தெரியும்.
62. Blackhole - இரா.வசந்த குமார்
சூப்பர் கதை.இதே மாதிரி சுஜாதா “திமலா” என்று ஒரு கதை எழுதினார்.”எதிர்காலம்” என்பதால் டெக்னிகல் விஷயங்கள் நல்ல விவரிப்பு.சரியான நச்.பிடித்த கதை.
65. திருடன் - Parameswerey Namebley
என்னங்க மைனாக்கும் ஒரு ரோல் குடுத்தீட்டீங்க!.குழந்தைகள் கதை டைப்பா இருக்கு.
66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
நச் நல்லா இருக்கு. உள் விவரிப்புகளில் பிரசாரம் குறைக்கலாம்.கதையை இன்னும் சுருக்கி இருக்கலாம்.நச் முடிந்தவுடன் எதற்கு பல வரிகள்.
67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
ஒரு பக்கத்துக்கான சரியான “நச்”நாட்.கதைக்கு சரியான டீரிட்மெண்ட் இல்லை?கதையின் ப்ளோவை நிறைய மெருகேற்றனும்.உரையாடல்களில் லாஜிக் வேண்டும்.
ஸ்வர்ணரேகா கதை டாப் 20 வந்திருக்கும்னு நினைச்சேன். மீதியேல்லாம் படிச்சிட்டு மறுபடி வர்றேன்.
ReplyDelete:))
ReplyDeleteவிமர்சன பகிர்விற்கு நன்றி ரவிசங்கர்
//////தயவு செய்து கதையில் பின்/முன் குறிப்பு,அண்டர்லைன்,ஹைலைட்,கலர் அடிப்பது /கோனார் நீதி/நோட்ஸ் போடுவது செய்யாதீர்கள். ஏன்? கதைச்சொல்லியின் “அல்டுதல்””இந்த இடத்தில நான் பின்னிட்டேன்” “சொந்தக் கருத்தை திணிப்பது”’படிப்பவரின் அறிவை மழுங்க அடிப்பது””ஒரே கோணத்திலேயே பார்க்கச் செய்வது” இதில் தெரியும்.படிப்பவர் முட்டாள் அல்ல///////
ReplyDeleteகவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நன்றி.
விமர்சனம் எல்லாம் சூப்பரா இருக்கு.
நன்றி சின்ன அம்மிணி.படிச்சுட்டு வாங்க.சொல்லுங்க.
ReplyDeleteஅதேதான்..எதுவும் சொல்லலை...ஆனா எங்கேயும் போகலை
ReplyDelete////தயவு செய்து கதையில் பின்/முன் குறிப்பு,அண்டர்லைன்,ஹைலைட்,கலர் அடிப்பது /கோனார் நீதி/நோட்ஸ் போடுவது செய்யாதீர்கள். ஏன்? கதைச்சொல்லியின் “அல்டுதல்””இந்த இடத்தில நான் பின்னிட்டேன்” “சொந்தக் கருத்தை திணிப்பது”’படிப்பவரின் அறிவை மழுங்க அடிப்பது””ஒரே கோணத்திலேயே பார்க்கச் செய்வது” இதில் தெரியும்.படிப்பவர் முட்டாள் அல்ல////
ReplyDeleteஇந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பலகதைகளில் கலர் அடிப்பது மட்டுமே நன்றாக இருந்திருக்கிறது.
எனது கதை குறித்த உங்களது விமர்சனத்துக்கு நன்றி.
நன்றி சென்ஷி.படித்தவுடன் அப்போதைக்கு அப்போது
ReplyDeleteஎழுதி திருத்தியதுதான்.ஒரே மூச்சில் எழுதவில்லை.
நன்றி சர்வேசன்.
ReplyDeleteதண்டோரா ...... said...
ReplyDelete//அதேதான்..எதுவும் சொல்லலை...ஆனா எங்கேயும் போகலை//
தல சுத்துதே.
//இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பலகதைகளில் கலர் அடிப்பது மட்டுமே நன்றாக இருந்திருக்கிறது.//
ReplyDeleteகிண்டலா மணிகண்டன்? கருத்துக்கு நன்றி.
//ஆகா! இப்படி ஒரு வித்தியாசமான கதையா?லாஜிக்கலா சொல்லுங்களேன்.கலாய்ப்புக் கதை//
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி ரவி..என் எழுத்தை சரி செய்து கொள்ள மிகவும் உதவும்...உண்மையில் கதையில் குறிப்பிட்ட இரண்டு பெயர்களும் ஆந்திராவை சேர்ந்த என் நண்பர்களின் பெயரே..ஆந்திராவில் இப்படி பெயர் வைத்து கொள்வது இயல்பு..ஆனால் அதை நான் ஒழுங்காக present செய்யவில்லை என்பது தெளிவாக உணர்ந்தேன்...வரும் நாட்களில் திருத்தி கொள்கிறேன் :)
நன்றி
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
நன்றி சுவாசிகா.
ReplyDeleteநல்ல விமர்சனங்கள்... உங்கள் கருத்துக்கள் இனிமேல் எழுத மிகவும் உதவியாக இருக்கும்... நன்றி....
ReplyDeleteநன்றி ராம்குமார் -அமுதன்.உங்கள் கதையும் படித்தேன்
ReplyDeleteநன்றாக் இருந்தது.
36 super
ReplyDeleteரியல்லி க்ரேட் சார்... 70 கதையயும் படிச்சி விமர்சனம் பண்ணியிருக்கது...
ReplyDeleteநான் சோம்பேறி.. நேத்துதான் டாப்-20 மட்டும் படிச்சேன்...
நீங்க சொல்லியிருக்கதுல ப்ளாக் ஹோல்,நானே நானா,திடீர்பாசம், நடிகையின் கதை,டிஷ்யூங்,ஜாதி கேடயம், உங்க கதை மட்டுமே படிச்சேன்...
நீங்கள் சிபாரிசு செய்கிற மற்ற கதைகளையும் உடனே படித்துவிட்டு வந்து சொல்கிறேன் சார்...
கதைகளைத்தான் படிக்க நேரமில்லை என அனைத்து விமர்சனத்தையும் படித்தேன், தொடர்ச்சியாக சில கதைகளையும்.
ReplyDeleteசின்சியராக பண்ணியிருக்கிறீர்கள், நன்றி.! அதென்ன 50 கதைன்னு சொல்லிட்டு லிஸ்ட்ல 67 இருக்குது.? புரியலையே.!
//அதென்ன 50 கதைன்னு சொல்லிட்டு லிஸ்ட்ல 67 இருக்குது.? புரியலையே.!//
ReplyDeleteதெளிவாத்தான் இருக்கீங்களா/...
நான் மெனக்கெட்டு எண்ணிப்பார்த்தேன்.. 50 தான் இருக்கு...
அதெல்லாம் கதையோட வரிசை எண்கள்
அப்பாடி கண்ணைக் கட்டுது.இம்புட்டு கதைகள் படிக்க விமர்சிக்க எம்புட்டு பொறுமை?
ReplyDeleteவிமர்சக திலகம் பட்டம் தந்தோம்...உமக்கு
அறிவிலி,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
தமிழ்ப்பறவை சொன்னது,
ReplyDelete//ரியல்லி க்ரேட் சார்... 70 கதையயும் படிச்சி விமர்சனம் பண்ணியிருக்கது...//
250 படித்த ஆள் ஆயிற்றே?ஒண்ணுமில்ல சிம்பிள்.
ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது நான்கு கதைப்படித்து அப்போதே விமர்சன குறிப்பு எழுதிக்கொண்டேன்.
அனுபவத்தில் நானும் என் கதை எழுத்தை திருத்திக்கொள்ள உதவியது.
நீங்களும் படித்தால் நல்ல அனுபவம் வரும்.கதை எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
நன்றி.
ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//கதைகளைத்தான் படிக்க நேரமில்லை//
50 படித்த ஆள் ஆயிற்றே?ஒண்ணுமில்ல சிம்பிள்.
ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது நான்கு கதைப்படித்து அப்போதே விமர்சன குறிப்பு எழுதிக்கொண்டேன்.சிறுதுளி பெருவெள்ளம்.
நீங்களும் படித்தால் நல்ல அனுபவம் வரும்.கதை எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
// அதென்ன 50 கதைன்னு சொல்லிட்டு லிஸ்ட்ல 67 இருக்குது.? புரியலையே.!//
அதெல்லாம் கதையோட வரிசை எண்கள்.
கண்மணி said...
ReplyDelete//அப்பாடி கண்ணைக் கட்டுது.இம்புட்டு கதைகள் படிக்க விமர்சிக்க எம்புட்டு பொறுமை?//
மேலுள்ள பின்னோட்டத்தைப் படிக்க.
அம்மணி உங்க பதிவு எதுவும் காணும்.த.மணத்தில் இணைப்பதில்லையா.நன்றாக எழுதுவீர்களே!
குரங்கு கையில் பூமாலை போல டெம்ப்லேட்டில் கை வைக்க பப்ளிஷ் பண்ணால்'புதிய இடுகை ஏதும் இல்லைனு' தமிழ்மணம் சொல்லுது.அத்துடன் பின்னூட்ட மறுமொழியிலும் வருவதில்லை.அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteவிமர்சனம் செய்வதற்க்காக கதைகள் படிக்கப்பட்டதா..அல்லது கதைகளைப் படித்ததால், விமர்சன்ம் செய்யப்பட்டதா...:P நல்லதொரு பங்களிப்பு, மிகுந்த பொறுமையும், எழுத்துக்களின் மேல் ஆர்வமும் வியக்க வைத்தது !! நான் உங்கள் இந்த விமர்சனத்தையே கருவாக வைத்து ஒரு கதையை வடிக்கலாம் என்றிருக்கிறேன்.. கதையின் தலைப்பு, நடு மண்டையில் நச் !!
ReplyDeleteசூப்பர் விமர்சனம் சார். நச் போட்டிக்காக நான் எழுதலை. இந்தக் கதை எழுதினதும் நச் போட்டியும் டைமிங் செட் ஆயிடுச்சி. அவசரக் குடுக்கையா சப்மிய் பண்ணிட்டேன் ஹி ஹி (என் மீசைல மண்ணு ஒட்டலிங்க்ண்ணா)
ReplyDelete//27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
ReplyDeleteநல்லா இருக்கு.விவரிப்பும் நன்று.ஆனால் “நச்”?தவற விட்டு விட்டீர்கள்//
என் கதை சொல்லும் முறையில் உள்ள குறை என்றே நினைக்கிறேன், கீழிருந்து மேலாக கதையை விளக்க முயற்சிக்கிறேன்.
பூமியிலிருந்து வேற்று கிரகம் ஒன்றுக்கு, உயிர் வாழ்வின் சாத்தியங்கள் குறித்து ஆராயப்போன விஞ்ஞானிகளுக்கு அங்கு ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்த வீடு ஒன்றில் கிடைக்கும் நாட்குறிப்பின் கடைசிபக்கம் தான் அக்கதை. இப்போது மீண்டும் படித்துப் பார்த்து நச் உள்ளதா இல்லையா எனகூறுங்களேன்
Sowmya said...
ReplyDeleteவிமர்சனம் செய்வதற்க்காக கதைகள் படிக்கப்பட்டதா..அல்லது கதைகளைப் படித்ததால், விமர்சன்ம் செய்யப்பட்டதா.//
செளமியா இது ஒரு நல்ல கோணம்.திடீர்னு வந்து
ஒரு சிக்ஸ் அடிச்சிட்டு போயிடுறீங்க.
.// கதையின் தலைப்பு, நடு மண்டையில் நச் !!//
நீங்க ஏதாவது கதைப் படிச்சீங்களா?நன்றி.
முகிலன் said...
ReplyDelete// அவசரக் குடுக்கையா சப்மிய் பண்ணிட்டேன் ஹி ஹி (என் மீசைல மண்ணு ஒட்டலிங்க்ண்ணா//
சரி போகட்டும்.நல்லா டீப்பா திங்க் பண்ணுங்க வேறு ஒரு முடிவு கிடைக்கும்.பண்ணிட்டு சொல்லுங்க.நான் என்னோட முடிவ சொல்றேன்.
சங்கர் said...
ReplyDeleteவ்ருகைக்கு நன்றி.படிச்சேன் சார்.நல்லா இருக்கு.”ந்ச்” செட்டாகவில்லை.
உண்மையிலேயே கிரேட் சார்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை.
கதை முடிந்தபின் கதைத்தது.. சஸ்பென்ஸை கூட்டி ஓரளவேனும் முடிவை ‘நச்’ ஆக்கும் எனும் ந(த)ப்பாசையால்:))! அந்த ஹைலைட். ரைட்:)! இனி இருக்காது.
ReplyDeleteஅப்புறம் உங்கள் பொறுமையான வாசிப்புக்கும் எடுத்திருக்கும் சிரத்தைக்கும் பாராட்டுக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் உங்கள் பொறுமைக்கு ஒரு பூங்கொத்து!
ReplyDeleteஅதி பிரதாபன் said...
ReplyDelete//உண்மையிலேயே கிரேட் சார்.தொடரட்டும் உங்கள் சேவை.//
நன்றி.ஒரு கதைக்கு இவ்வளவுன்னு ரேட் போட்டு ஏதாவது கொடுங்கப்பா!
ராமலக்ஷ்மி said...
ReplyDelete// கதை முடிந்தபின் கதைத்தது.. சஸ்பென்ஸை கூட்டி ஓரளவேனும் முடிவை ‘நச்’ ஆக்கும் எனும் ந(த)ப்பாசையால்:))! அந்த ஹைலைட். ரைட்:)! இனி இருக்காது//
வெகுஜன கதைக்கு வழக்கமாக சொல்லும் குக்கர் சாதம் உதாரணம்தான்.மெலிதான “உஸ்”,பிறகு வெயிட் போடுதல்,பிறகு மூன்று அல்லது நான்கு பெரிய விசில் முடிந்து சிம்மில் வைத்து ஒரு சின்ன விசிலில் அடுப்பை அணைத்துவிடுதல் நலம்.எல்லாம் ஒரு கணக்குதான்.
நன்றி.
அன்புடன் அருணா said...
ReplyDelete// முதலில் உங்கள் பொறுமைக்கு ஒரு பூங்கொத்து!//
நன்றி அருணா.
நன்றி ரவிஷங்கர்
ReplyDelete//கே.ரவிஷங்கர் said...
ReplyDeleteஅதி பிரதாபன் said...
//உண்மையிலேயே கிரேட் சார்.தொடரட்டும் உங்கள் சேவை.//
நன்றி.ஒரு கதைக்கு இவ்வளவுன்னு ரேட் போட்டு ஏதாவது கொடுங்கப்பா!//
அதான் சேவைனு சொல்லிட்டொம்ல. வேணும்னா கலை சேவை அல்லது கதை சேவைனு கூட சேத்து பாராட்டுறேன்.
வாழ்க உங்க கதை சேவை.
//படித்தவுடன் அப்போதைக்கு அப்போது
ReplyDeleteஎழுதி திருத்தியதுதான்.ஒரே மூச்சில் எழுதவில்லை.//
நல்லாவே வந்திருக்கு விமர்சனம். இத்தனையும் படிக்கவே நேரம் வேணும். அப்பறம் விமர்சனம் வேற எழுத பொறுமை வேணம். Welldone
அதி பிரதாபன்,
ReplyDelete//அதான் சேவைனு சொல்லிட்டொம்ல. வேணும்னா கலை சேவை அல்லது கதை சேவைனு கூட சேத்து பாராட்டுறேன்.//
கலைச் சேவைன்னு போட்டுக்கிறேன். நன்றி.
சின்ன அம்மிணி said..
ReplyDelete//நல்லாவே வந்திருக்கு விமர்சனம்.//
ஆகா! ரியல்லி கிரேட் அம்மிணி.”நா படிச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அதே மாதிரி சின்சியராக வந்து பின்னூட்டம் போட்டது.கிரேட் அம்மிணி!உங்கள் எழுத்தை மேம்படுத்தும்.
ஏன் கிரேட்?
1.மற்றவர்கள் மாதிரி “சே! நேரமே இல்லாப்ப” என்று...? 2.மற்றக் கதைகளைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம்3.விமர்சனத்தை மதித்தது 4.என்னதான் எழுதறாங்க இவங்க,அதனால் கதைகளைப் படித்து எப்படி எழுதலாம்/எப்படி எழுதக்கூடாது என்ற புரிதல் 5.இந்தாளு ஒழுங்க விமர்சனம் எழுதறார..
நன்றி.
ரவிஷங்கர்ஜி..
ReplyDeleteபாராட்டுக்கும் அறிவுரைக்கும் பொறுமைக்கும் நன்றி.. நன்றி...
//ஸ்வர்ணரேகா கதை டாப் 20 வந்திருக்கும்னு நினைச்சேன்// - சின்ன அம்மிணி said..
டாப் 20 என்ன.. டாப் லயே வந்தது போலிருக்கு சின்ன அம்மிணி...நன்றி.. நன்றி...
நல்லா டிஸ்கஷன் போயிட்டுயிருந்திருக்கு.. லேட்டா வந்து மிஸ் பண்ணிட்டேன்...
நன்றி ஸ்வர்ணரேகா!
ReplyDeleteVery sincere effort on your part to read all the stories and give positive, useful comments. This is really commendable. I am personally not happy that your story did not make it to 20; I had already written few times in few places that I liked your story.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய கதை பற்றிய உங்கள் விமரிசனத்திற்கு நன்றி.
ReplyDeleteநான் "கதை" எழுதியதாய் நினைத்தேன், "கதை" விட்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறீர்கள். நன்றி. (ஆனா, நான் திருந்தாத ஜன்மம்பா... பாருங்க இன்னொரு கதை(?!) எழுதியிருக்கிறேன்.
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_25.html
இதற்கும் உங்கள் விமரிசனத்தை (பின்னூட்டமாக) எதிர்பார்க்கிறேன்)
நன்றி ரவிஷங்கர்.
ReplyDeleteஇனிவரும் கதைகளை நல்லபடியாக படைக்க முயற்சிக்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். கூகுள் வழியாக பின்னூட்டுவதில் சில தடைகள் இருந்தன. :)
அந்த கதையை சற்று மாற்றினேன் பிறகு.
நன்றி கிஷோர்.
ReplyDelete