Friday, November 6, 2009

நனைந்து விட்ட குடை - கவிதை




















கல்யாணத்தின் போது
அடைமழைப் பெய்தது
குதூகலமானது காசியாத்திரை குடை
புது மாப்பிள்ளைக் கணக்காய்
நனைவதற்கு


மாப்பிள்ளையைத் தவிர 
எல்லோரும் நனைவார்கள் என
மண்டபத்திற்குள்ளேயே
பிடிக்கப்பட்டு உடனே
மடக்கப்பட்டும் விட்டது


அன்று மடக்கப்பட்டு
மாப்பிள்ளை வீட்டின்
ஹால் கதவின் பின்னால்
வளைந்த மரப் பிடி கொண்டு
பல வருடங்களாக
வாக்கிங் ஸ்டிக் மற்றும்
பாச்சா உருண்டையுடன் 
ஜோடியாக தொங்கிக்கொண்டிருந்த
இக்குடை

மழையில் சொட்ட சொட்ட
நேற்றுதான் நனைந்தது
வீட்டின் நடு ஹாலில்

விருந்தினர் குழந்தை
இக்குடையை எடுத்து
மழை விளையாட்டு
விளையாடுகையில்

படிக்க:

வசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி




11 comments:

  1. ///எதுவும் சொல்லாத போகாதீங்க!///

    ஆஹா செக்கு வச்சுட்டாங்கையா, செக்கு வச்சுட்டாங்கையா !!!!

    போதும் வேணாம்!!!!! அழுதுருவேன்.
    :)-

    ReplyDelete
  2. நீங்க மழையில் நனைவீர்களோ?

    ReplyDelete
  3. //போதும் வேணாம்!!!!!அழுதுருவேன்.//

    அழுது முடிச்சு கவிதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  4. தண்டோரா ...... said...

    //நீங்க மழையில் நனைவீர்களோ?//
    நனைவது பிடிக்கும்.ஜல்பும் பிடிக்கும்.

    ReplyDelete
  5. நன்றி ஸ்ரீ/ தமிழ் பறவை

    ReplyDelete
  6. தாத்தாவின் வீட்டை நினைவு படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  8. நன்றி கும்க்கி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!