Tuesday, November 3, 2009
மழை....சாரல்...! மொட்டு...பூ..! - கவிதை
அவசரமாக ஓடி வந்து
ஜன்னல் கதவின்
கொக்கிகளை எடுத்துச்
சாத்துகையில் முகத்தில்
செல்லமாக தெறிக்கிறது
சாரல் வீட்டிற்குள்
வீட்டுக்கு வெளியே பெய்கிறது
மழை
_____________________________
கைக்கடக்கமாக இருப்பதை
கைப்பையிலிருந்து எடுத்து
அதன் காம்பில் விரலால் அழுத்த
தலைக்கு மேல் வண்ணத்தில்
பட்டென மலர்கிறது பூவாக
மொட்டு
மழை முடிந்தவுடன் மடிக்கப்பட்டு
கைக்கடக்கமாகி கைப்பையில்
மீண்டும் மொட்டாக்கி விடுகிறது
பூ
மொட்டோ பூவோ
எந்த நிலையிலும் மறப்பதில்லை
செல் பேசுவதை -அதுவும்
கைக்கடக்கம்தான்
Subscribe to:
Post Comments (Atom)
நல்லாயிருக்குங்க
ReplyDeleteநன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.
ReplyDeleteநல்லாயிருக்கு ரவிஷங்கர்
ReplyDeleteநன்றி என்.விநாயகமுருகன்.
ReplyDeleteரெண்டாவது எனக்குப் பிடிச்சிருந்தது சார்...
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteகுடை படமும் , பூவோடு ஒப்பிடலும் அருமை
ReplyDeleteசின்ன அம்மிணி said...
ReplyDelete//குடை படமும் , பூவோடு ஒப்பிடலும் அருமை//
கருத்துக்கு நன்றி
சிந்தனை அருமை...
ReplyDeleteநன்றி Achu pk.
ReplyDelete