1975ல் ஒருவர் தன் இசைப் பயணத்தை இவர்களுடன் ஆரம்பித்தார்.........
ஆர்.கோவர்த்தன்,ஆர்.சுதர்சனம்,வி.குமார்,விஜயபாஸ்கர்,எம்.எஸ்.விஸ்வநாதன்,தக்க்ஷிணாமூர்த்தி,கே.வி.மகாதேவன்,ஜி.கே.வெங்கடெஷ்,சங்கர்-கணேஷ்,
ஜி.தேவராஜன்,ரவீந்தரன்,தேவேந்தரன்,குன்னக்குடிவைத்தியநாதன்,எல்.வைத்தியநாதன்,தேவா,சந்திரபோஸ்,
அம்சலேகா,மனோஜ் கியான்,ஜெயா விஜயா,லஷ்மிகாந்த்பியாரிலால்,
சிற்பி,ஆதித்யன்,கங்கைஅமரன்,மணிஷர்மா,எஸ்.ஏ.ராஜ்குமார்,வி.எஸ்.நரசிம்மன்,எஸ்.பி,பி,பரத்வாஜ்,மனோஜ்பட்நாகர்,பாலபாரதி,மரகதமணி,டி,ராஜேந்தர்,கே.பாக்கியராஜ்,ரஞ்சித் பரோட்,மாணிக்கவிநாயகம்,விஜய் ஆனந்த்,ரமேஷ் விநாயகம்,செளந்தர்யன்
ஜோஸ்வா ஸ்ரீதர்,பரணி,தீனா,எஸ்.பி.சரண்,பவதாரிணி,
ரஹ்னா,தீனா,ஆர்.கே.சுந்தர்,தீபக் தேவ்,ஜெஸ்ஸி கிஃப்ட்,கே.மணிஷ்,டி.ஏ.தாமஸ்,ஸ்ரீலேகா,எஸ்.பாஸ்கர்,எம்.ஜி.ஸ்ரீகுமார்
இதில் இசை மாமேதைகள் மற்றும் திறமையானவர்கள் அடக்கம்.இசைப்“போட்டவர்”களும் அடக்கம்.வெத்துவேட்டுகளும் அடக்கம்.அதிர்ஷடம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள்.பலர் காணாமல் போய் விட்டார்கள்.
இதற்குப் பின்னும் இளம் இசையமைப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.
இன்றும் இவர்களுடனும் அமிதாப் பச்சனின் "Paa" வரைத் தொடர்கிறது.
அவர்........யார்? இசை ஞானி, மேஸ்ட்ரோ இளையராஜா!
ஏன் தொடர்கிறது...?
கேட்க இந்த பாடல்.அதனால் தொடர்கிறது.ஆல்பத்தில் இரண்டாவது பாட்டு.
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00544.html
Subscribe to:
Post Comments (Atom)
//இவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள்.பலர் காணாமல் போய் விட்டார்கள்.
ReplyDeleteஇதற்குப் பின்னும் இளம் இசையமைப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.
//
அதில் ஒருவரின் இசையை உலகமே கொண்டாடுகிறது. பல ஆஸ்கார் அளிக்கிறது
:) well said
ReplyDelete//அதில் ஒருவரின் இசையை உலகமே கொண்டாடுகிறது. பல ஆஸ்கார் அளிக்கிறது
ReplyDelete//
ஆஸ்கர் வென்றவர் 1992ல் வந்தவர் என்று நினைவு. இப்பதிவு 1975களில் வந்தவர்களைப் பற்றிப் பேசுகிறது.
சென்ஷி/புருனோ/அது ஒரு கனாக் காலம்
ReplyDeleteநன்றி.
கலக்கல் தல...;))
ReplyDeleteதல அப்படியே நேரம் இருக்கும் போது இதையும் படியுங்கள்
ReplyDeleteபழசிராஜா - இளையராஜாவின் இன்னுமொரு பெருங்காவியம்
http://meedpu.blogspot.com/
யுவகிருஷ்ணா
ReplyDeleteஇப்போது லேட்டஸ்ட் “பழசி ராஜா”(மலையாளம்)
“Paa" கேட்கும்போது தோன்றிய பதிவு.பாடல்களில் இருக்கும் ஒரு freshness.
”Paa”வில் Modhi modhi என்ற பாட்டைக் கேளுங்கள்.புத்திசாலித்தனமாக இருக்கிறது.அதில்
லோக்கல்,மேற்கத்திய flavour இரண்டுமே வருகிறது.
ஸ்டைல் பாட்டு.
http://www.in.com/music/track-halke-se-bole-486407.html
கோபிநாத்
ReplyDeleteநன்றி.நான் படிக்கிறேன்.
75 இல் இவர்களோடு ஆரம்பித்தார் என்று தந்திருக்கிறீர்கள் அதில் ஒரு பொருள் மயக்கம் உள்ளது. எம்.எஸ்.வி, மகாதேவன் போன்ற ஜாம்பவான்கள் ராஜா வரவுக்கு முன்னும் பின்னும் சில காலமும் கொடிகட்டிப் பறந்தவர்கள்.
ReplyDeleteராஜாவின் இசை தனித்துவமானது தான், ஆனால் இந்த வகையிலான ஒப்பீட்டை என்னால் ஏற்க முடியவில்லை. ராஜாவுக்கு முன்னும் பின்னும் ஒற்றைப் பாடல் என்றாலும் திறமையாக இசையமைத்த தனித்துவங்கள் உண்டு.
கானா பிரபா said...
ReplyDelete//எம்.எஸ்.வி, மகாதேவன் போன்ற ஜாம்பவான்கள் ராஜா வரவுக்கு முன்னும் பின்னும் சில காலமும் கொடிகட்டிப் பறந்தவர்கள்//
ஒப்பிடே அல்ல நண்பா.அதனால்தான்”இதில் இசை மாமேதைகள் மற்றும் திறமையானவர்கள் அடக்கம்”
என்ற வரி வரும்.இந்த மேதைகளின் இசைக் கேட்டுத்தான் ராஜாவிற்கு வந்தேன்.குறைச் சொல்ல முடியுமா?
வி.தக்க்ஷணமூர்த்தியின்(நந்தா என் நிலா)
மறக்க முடியுமா?
இவர்கள் தலைமுறையிலும் டிரெண்டியாக இருந்து
அடுத்தடுத்த தலைமுறையிலும் அதே டிரெண்டியாக இருந்து இப்போ “paa" வந்துவிட்டார்.
இந்த தாக்குபிடித்தல்தான் ராஜாவின் மேதமை.
நன்றி.
கானா பிரபா:
ReplyDeleteபோன பின்னூட்டத்தில் விட்டு போனது.இந்த மேதைகளின் பாடல்களைப் பற்றி சிலாகித்துப் பதிவும்
போட்டிருக்கிறேன்.
நல்ல பகிர்வு...
ReplyDelete‘காத்திருந்தேன் தனியே’ பாடல் பாடியது ஏ.எம்.ராஜா பையன் தானே.
@யுவகிருஷ்ணா...
//
ஆஸ்கர் வென்றவர் 1992ல் வந்தவர் என்று நினைவு. இப்பதிவு 1975களில் வந்தவர்களைப் பற்றிப் பேசுகிறது.//
இல்லை யுவகிருஷ்ணா.. ராஜாவின் காலத்தில் வந்தவர்களைப் பற்றியும் சொல்கிறது.. சிற்பி, மணிசர்மா etc.,
அதனால் புருனோ கேட்டிருக்கிறார்....
அவருடைய இசை ஸ்கேலில் ‘ஆஸ்கார்’ என்னும் நான்கு வார்த்தைகள் மட்டும்தான் இருக்கிறது. so அவர் கருத்து அவரோடு...அவரின் ஸ்கேல் படி இளையராஜா இசையில் இன்னும் ‘அ’தான் ‘ஆ’ கூட இல்லை.
கருத்துக்கள் மாறுபடும்...
ஸாரி.. போன பின்னூட்டத்தில் சிறுதவறு...
ReplyDelete//நான்கு வார்த்தைகள்// அல்ல நான்கு எழுத்துக்கள்...
//‘காத்திருந்தேன் தனியே’ பாடல் பாடியது ஏ.எம்.ராஜா பையன்தானே//
ReplyDeleteஆமாம்.அவர் பெயர் சந்திரசேகர்.
நன்றி தமிழ்ப்பறவை
நன்றி ஸ்ரீ.
ReplyDeleteஇந்த இடுகைக்குத்தொடர்பில்லையெனினும், இளையராசா bashing செய்யும் இரகுமான் இரசிகர்களில் ஒரு நுண்வகையினர் உள்ளனர்.
ReplyDeleteகாரணம் பெரியதாக ஒன்றுமில்லை.
இளையராஜா ஒரு தலித்தாக் இருந்தாலும் கிறுத்துவத்தை விடுத்து இந்து மதத்திற்கு மாறியவர். ரகுமான் ஒரு மேல்சாதி இனத்தைச் சேர்ந்தவரென்றாலும் ஹிந்து மதத்தை விடுத்து வேறு மதத்திற்கு மாறியவர்.
நல்ல அலசல் ரவிசங்கர். ராஜா முதல்ல மாதிரி அதிக படங்கள்ல இசையமைக்கலைன்னாலும் முதலிடம் அவருக்குதான்.
ReplyDeleteநன்றி VAIKKAMPEN
ReplyDeleteசின்ன அம்மிணி said..
ReplyDelete//நல்ல அலசல் ரவிசங்கர்//
நான் லிங்கில் கொடுத்தப் பாடலைக்கேட்டீங்களா?
அதைப் பற்றிய உங்க கருத்தச்சொல்லுங்க.ஏ.எம்.ராஜா-ஜிக்கி மகன் பாடியுள்ளான்.அதில் வரும் புல்லாங்குழல்
அமுதம்.
நன்றி.
நண்பரே.. ஆர்.கோவர்த்தன் பெயரை குறிப்பிடவும், இந்த சிறு தகவல்.
ReplyDeleteராஜாவும் கோவர்தனமும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் இணைந்து "வரப்ரசாதம்" என்ற படத்திருக்கு "கோவர்த்தன - ராஜா " என்ற பெயரில் இசை அமைத்தனர். இது அன்னக்கிளிக்கி முன் வந்த படம்.
~ரவிசங்கர் ஆனந்த்
இந்த பதிவில் ஆரம்பிக்கும் முதல் பெயரே அவர்தான்.கவனிக்கவில்லையா.மறக்கமுடியுமா?”கங்கை நதி ஓரம் ராமன்”(வரப்பிரசாதம்) பாட்டு அருமை.”நாதஸ்வர ஓசையிலே” (பூவும் பொட்டும்)
ReplyDelete//கோவர்த்தன் -ராஜா”
கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நன்றி சார்!
காத்திருந்தேன் பாட்டு தானே சொல்றீங்க. இப்பதான் முதல் முறையா கேக்கறேன். நல்ல மெட்டு. எங்கியாவது டவுன்லோட் பண்ணகிடைச்சா நல்லாருக்கும்.
ReplyDeleteகாற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா மாதிரியே இருக்கு :)
ReplyDeleteசின்ன அம்மிணி said...
ReplyDelete//காத்திருந்தேன் பாட்டு தானே சொல்றீங்க. இப்பதான் முதல் முறையா கேக்கறேன். நல்ல மெட்டு. எங்கியாவது டவுன்லோட் பண்ணகிடைச்சா நல்லாருக்கும்//
இங்கே போங்கள்.
http://music.cooltoad.com/music/song.php?id=342140
இந்தப் பாட்டிற்கு:-
வலது பக்க மூலையில் singupல் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ளுங்கள்.ரிஜிஸ்டரேஷன் வள வள கிடையாது இங்கு.சில அபூர்வ பாடல்களும் கிடைக்கும்.ஆனால்பாடல்களின் ஸ்பெல்லிங்க் பார்த்து டைப் செய்யவேண்டும்.
மற்ற நேரங்களில்:-
http://music.cooltoad.com/music/search.php?TITLE=manip
cooltoad.com ..Music....World...Tamil
என்று போகவேண்டும்
நன்றி.
சின்ன அம்மிணி said...
ReplyDelete//காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா மாதிரியே இருக்கு//
”காற்றில்” கல்யாணி ராகத்தில் போடப்பட்ட பாட்டு.
இது மோகன ராகத்தில்.