Wednesday, November 18, 2009

நட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை





மொட்டை மாடியில் படுத்தபடி
வானத்தில் தென்படும்
நட்சத்திரங்களை எண்ண
வசதியாக வானத்தை
 “A” அண்ட் ”B” எனப் பிரித்து
இரண்டாக பிரித்துக் கோடுபோட்டு
எண்ணத் தொடங்குகிறேன்

எண்ணும்போது நிறைய தடங்கல்

ஏர்டெல் டவர்  மறைக்கிறது
குறுக்கே மேகம் போகிறது
“A” யிருந்து  ”B”க்கும்
”B” யிருந்து  “A”க்கும்
கள்ளத்தனமாகத்  தாவுகிறது
சில நட்சத்திரங்கள்
வரிசைக் கலைகிறது
சட்டென வானம் மப்பாகிவிடுகிறது
ஒரு நட்சத்திரம் உதிர்கிறது
குழப்பும் விமானத்தின்
லைட் மினுக்கல்கள்
மறைக்கும் வீடு திரும்பும் பறவைகள்

இதே நட்சத்திரங்களை
திருவல்லிக்கேணி மொட்டை மாடியில்
எண்ணியிருக்கிறேன்
நான்காவது படிக்கும்போது


ஒரு அசைவு இல்லாமல்
எனக்குக் காட்டி இருக்கிறது


அப்போது மொத்த எண்ணிக்கை
 175.5 என்பதால்
நான் எண்ணிய 15வுடன்
மீதி 160.5க் கூட்டி ரவுண்ட் ஆப் செய்து
176 ஆக்கி விடுகிறேன்


திருவல்லிக்கேணி
மொட்டை மாடிக்குச் சென்று
சரி பார்க்கலாம்
சந்தேகம் இருந்தால்

8 comments:

  1. //திருவல்லிக்கேணி
    மொட்டை மாடிக்குச் சென்று
    சரி பார்க்கலாம்//
    அதுக்கு நான் இப்போ நான்காம் வகுப்பு படிச்சிட்டிருக்கணும்ல...
    :-)
    ரசித்தேன்....

    ReplyDelete
  2. கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை said...
    //அதுக்கு நான் இப்போ நான்காம் வகுப்பு படிச்சிட்டிருக்கணும்ல..//

    என் கணக்குப் படி 176 வரணும் அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. நன்றி ஸ்ரீ

    நன்றி பா.ராஜாரம்

    ReplyDelete
  5. நன்றி சித்ரன்.பழசி ராஜா பாடல்கள் கேட்டீர்களா?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!