Wednesday, November 11, 2009

ஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்

பலவருடங்களாக ஜுவி மற்றும் ஆங்கில  தினசரிகள் படிக்கிறேன்.அதில், முக்கியமாக என் கவனத்தைப் பெறுவது குற்றம் பற்றிய செய்திகள்.தினசரிகளில் சற்று மேலோட்டமாக இருக்கும்.ஆனால் ஜூவி “குற்றம்...நடந்தது என்ன?”பாணியில் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பார்கள்.”திருந்தவே மாட்டார்களா” என்று கட்டுரையின் முடிவில்  தன் கருத்தைச்சொல்லி முடிப்பார் அதன் ரிப்போர்ட்டர்.

இதையெல்லாம் படித்துப் படித்து நானும் இன்ஸ்பெக்டராகி,
உள்ளங்கையில் லத்தியைத்தட்டி“அந்த சம்பவம் நடந்தபோது நீங்க” என்று யோசிக்கஆரம்பித்துவிடுகிறேன்சிலவற்றைப் படிக்கும்போது (பிணத்தை காய்கறி நறுக்குவது போல் நறுக்குவது) நடுங்குகிறது.தூக்கம் வருவதில்லை.மெண்டல் ஆகிவிடுவேனோ என்ற பயம்.ரொம்ப மனதில் அசைப்போட்டால் இதான் பிரச்சனை.

சரி! குற்றங்களுக்கு வருவோம்....

அம்மாடியோவ்! விதவிதமான குற்றங்கள்.குற்றவாளிகள் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! முன்னணியில் இருப்பது (இருக்க முடியாது) கள்ளக்காதல்(?). ஒரு வாரம் கொள்ளை,லஞ்சம்,ஊழல் வந்துவிட்டால் ”அடுத்தது நாந்தாம்ப்பா..!”  என்று கள்ளக்காதல்கியூவில் நிற்கிறது. வட்டம்  மாதிரி வந்துக்கொண்டே இருக்கிறது.பூமி சூரியனைச் சுற்ற மறந்தாலும் இந்த கள்ளக்காதல் நடப்பது மறப்பதில்லை.

குற்றம் செய்பவர்கள் 100% குற்றவாளிகள்தான் சட்டத்தின் முன்பு.அதற்கு முன்பு  இவர்கள் உலக மகா முட்டாள்கள் (அ) மக்குகள் (அ) அசடுகள் என்பேன்.அதுவும் முதல் கொலை குற்றம் செய்பவர்கள்.குற்றவாளிகள் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! என்றேன்.ஆனால் ரூம் போட்டு யோசிக்காதா  சுத்தமான முட்டாள்கள்தான் இவர்கள்.

ஏன் முட்டாள்கள்? பார்க்கலாம்.

ஹிந்துவில்நேற்றுப் படித்தது.கள்ளக்காதல் கொலை.மனைவியும் குழந்தையும் விடி காலை(3.30மணி-அக்டோபர்-26) எழுந்திருக்கிறார்கள்.பெட்ரூம் கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது.கதவைத்தட்டி ஹாலில் படுத்திருக்கும் கணவனை(வயது 36) எழுப்புகிறாள்.கணவன் எழவில்லை. தன் செல் போனில் எதிர் வீட்டில் இருக்கும் கணவனின் உறவுக்காரப்பையனை(வயது-23)கூப்பிட்டு கதவைதிறக்க உதவி கேட்கிறாள்.உதவ வந்தவன்.(எப்படி உள்ளே வந்தான்? அவனுடன் சகோதரியும் வருகிறாள்) பதறுகிறான்.கணவன் ஹாலில்  பிணமாக கிடக்கிறான். கழுத்தில் கயிறு இறுக்கின சுவடுகள்.பதறியபடி கதவைத் திறக்கிறான்.தற்கொலை என்றுமுடிவாகிறது.

அது தற்கொலை அல்ல.கொலை.சிறிது நாள் கழித்து இறந்தவனின் மனைவியும் அந்த உறவுகாரப் பையனும்  கைது செய்யப்படுகிறார்கள.இருவருக்கும் கள்ள உறவு.தூக்கத்தில் மனைவி கணவனின் கால்களை பிடித்துக்கொள்ள(helping hand)  கழுத்தைக் கயிற்றால் கள்ளக்காதலன் நெறிக்க,கணவன் இறந்துபோகிறார்.வெளியில் தாழ்பாள் போட்டு,காலையில் கூப்பிடுவது போல் ஒரு செட்ட அப்.கணவன் ஒழிந்தான்.இனிமே ஜாலிதான்.உலகத்துல யாருமே கண்டுபிடிக்க முடியாது.பின்னணியில் ராஜாவின் வயலின் இசை ஒலிக்க கிழ்வானில் மறைந்துபோய்விடலாம்.

அட லூசுகளா?இதற்கு எவ்வளவு நுணக்கமான முன் திட்டமிடல் வேண்டும்.

காட்டிக்கொடுத்தது செல்போன்.மனைவியின் செல்போன் கால்களை ஸ்கான் செய்த போது  அதில் கள்ளக்காதலுனுக்கு நிறைய கால்போய் இருக்கிறது.கள்ளக்காதலனை மிரட்டியவுடன் கக்கிவிட்டான்.

கள்ளக்காதலன் கணவனின் nephew,அதாவது கணவனின் சகோதரி அல்லது சகோதரனின் மகன்.கள்ளக்காதலனுக்கு பெரியம்மா/சித்தி/மாமி  இதில் ஏதோ ஒரு உறவு முறை வருகிறது.Incestuous  Sex.பெருந்திணை?பொருந்த காமம்.இதனால்தான் முதலில் போலீஸ் பார்வை இவன் மேல் விழவில்லை.

எந்த செயலுக்கும் முன் திட்டமிடல், தொலைநோக்குப் பார்வை வேண்டும்.அது செயலின் தன்மையைப் பொறுத்தது.அதுவும் கொலைக் குற்றம் செய்வதற்கு இரண்டு மடங்கு தேவை.Professional க்கே இவ்வளவு தேவை  என்றால் முதன்முதலாக செய்யும் amateurக்கு எவ்வளவு தேவை?

எந்த குற்றவாளியும் தனக்குத் தெரியாமல் ஒரு சாட்சியை விட்டுச்செல்வான் என்பது எழுதாத விதி. அடுத்து குற்றத்திற்குப் பிறகு எவ்வளவு பாதக விஷயங்கள் இருக்கிறது.ஒரு பொய்யைச் சொன்னாலே அதை மறைப்பதற்குப் பத்து பொய்கள் சொல்ல வேண்டும்.அவ்வளவு கஷ்டம்.இதை யோசித்தாலே குற்றம் செய்வதை நிறுத்திவிடுவார்கள்.அப்படி எதற்கு கள்ளக்காதல்.ருசி?

அடுத்து இவர்களின் பொது அறிவு.சுத்தம்?FIR,போலீஸ்,
கோர்ட்,விசாரணை,வாய்தா,சாட்சிகள்,போலீஸ் நாய்,
தடயங்கள்,போலீஸ்”விசாரிப்பு”,ஊடகங்களில் அடிபடுவது,தலையை துண்டுப் போட்டு போர்த்திக்கொண்டு போவுதல்...ஒரு குற்றவாளி அப்ரூவராக மாறி போட்டுக்கொடுப்பது.... எவ்வளவு இருக்கிறது.இதைப் பற்றியெல்லாம் யோசித்ததுண்டா இவர்கள்?இடுப்புக்குக் கிழே மட்டும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

சும்மா சொப்பு வைத்து விளையாடும் குழந்தை விளையாட்டா இது?இதே மாதிரி வேறு ஒரு குற்றம்.திருமண ஹனிமூனில்(மூணார்) கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றுவிட்டு “இனிமே ஜாலிதான்...எங்கள் காதலுக்கு குறுக்கே யாருமே..இல்லை .” என்றவர்கள் இப்போது ஜெயிலில்.குறுக்கே கம்பிகள்.

அப்பா கொலையாகிவிட்டார்.அம்மா ஜெயில்.இவர்களின் குழந்தைகள் கதி?நினைத்தால் மனது கனக்கிறது.

டெய்ல் பீஸ்:ஒருவர் ஸ்பேம் மெயிலில் 100 கோடி பரிசு விழுந்ததுப் பற்றி மகிழ்ந்து அதைப் பெறுவதற்கு அதற்குமுன்பணமாக(வரி,ஆட்டோ,டெம்போ போசார்ஜ்,டிபன்,விமான செல்வு) 20 லட்சம் தவணை முறையில் கட்டி ஏமாந்து(கடைசி தவணையில்தான் இது ஏமாற்று வேலை என்று விளங்கியதாம்)போனாராம்.

எல்லாம் இழந்து ஒரு துண்டைக்கட்டிக்கொண்டு கமிஷனர் ஆபிசுக்கு ஓடி இருப்பார்.அடுத்து ஒருவர் SMS ல் பரிசு விழுந்து இதே மாதிரி..ஓடினாராம்.மற்றொருவர் தற்கொலை.இங்கும் காமென் சென்ஸ் மருந்துக்குக் கூட இல்லை.அட லூசுகளா!

இதற்கெல்லாம் நான் ரூம் போட்டுச் சிரிக்காமல், கிரெடிக் கார்டில் ஒரு five star ஒட்டலில் கான்பிரன்ஸ் ஹால் புக் செய்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

டெயில் பீஸ்-2: காலேஜ் படிக்கும்போது நானும் ஒரு குற்றம் செய்து ஒரு சாட்சியை விட்டு மாட்டிக்கொண்டேன்.காலேஜ் நூலக பீஸ்(fees) ரசீதில்ரூபாய் 80/- ஐ 88/- ஆகத் திருத்தினேன்.பேனா இங்கின் நிறம், amount in words,ரப்பர் அழித்த அழுக்குகளை மறைத்தல் ...எல்லாம் professional ஆக செய்தேன்.ஆனால் மாட்டிகொண்டேன். எப்படி?

அந்த ரசீதின் கீழே அச்சிடப்பட்டதைக் கவனிக்கவில்லை. அது -
Fees accepted are strictly  rounded off to  the nearest five or ten.

12 comments:

 1. டெயில் பீஸ் ரெண்டு சூப்பர் :)

  ReplyDelete
 2. பாஸ் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காலேசு ஆரம்பிக்கலாமா பாஸ்..?
  நீங்க அவனுங்களை திட்டினதை பார்த்து மனசு பொறுக்கலை பாஸ்....

  ReplyDelete
 3. சீரியஸா யோசிச்சு பார்த்தா,
  அந்த நேரங்களின் சுதந்திரத்தினை அடையும் எரிச்சல், பெண்களின் தரப்பிலிருந்து தொடரப்படும் தூண்டுதல்(இதற்கான அடிப்படையாக நம்பிக்கையின்மையினை தவிர்க்கும் பொருட்டு ஏதேனும் ஒரு உத்திரவாதத்திற்க்கு நச்சரிக்கும் மனோபாவமாகக்கூட இருக்கலாம்தான்)
  இன்னும் கூட சினிமாக்களில் கற்றுக்கொடுக்கப்படும் சட்டம் ஒழுங்கு சார்ந்த, கொலைகள் சார்ந்த (கதாநாயகர்கள் அல்லது தற்போதைய லும்பன் கலாச்சார வில்லத்தனமான நாயகர்கள் நியாயம் கருதி அல்லது நாயகத்தன்மைக்காக அநியாயமாவது கருதி செய்யப்படும் கொலைகள் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்குள்ளும் வராது..அல்லது அவரின் சித்தப்பா அல்லது பெத்தப்பாவான போலீஸ் ஆப்பிச்சர் அதை கண்டும் கானாமல் அதன் நியாயத்தை சிலாகித்தபடியே கடந்து போய்விடுவார்..அதைப்போல ))
  நியாயங்கள் இதைப்போன்ற அவரசரக்காரர்களுக்கு ரொம்ப சரியாக படும் போல...

  இன்னும்கூட இதை குறுக்கும் நெடுக்குமாக அகழ்ந்து பார்க்கலாம் பாஸ்.....ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

  ReplyDelete
 4. கருத்துக்கு நன்றி கும்க்கி.

  //இன்னும்கூட இதை குறுக்கும் நெடுக்குமாக அகழ்ந்து பார்க்கலாம் பாஸ்.....ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.//

  ஆமாம். ஒரு பதிவே போடலாம்.

  //நியாயங்கள் இதைப்போன்ற அவரசரக்காரர்களுக்கு ரொம்ப சரியாக படும் போல...//
  அதெல்லாம் நிழல் என்று உணர வேண்டும்.

  ReplyDelete
 5. நச்ச்சுன்னு இருக்கு... நானும் யோசித்ததுண்டு..ஏன் தான் இப்பிடி மாட்டிக்கிறா மாதிரி பண்றாங்க... இதுக்குப்பண்ணாமயே இருக்கலாமேன்னு,,,,
  டெயில்பீஸ் 1க்கு ரூமிலேயே சிரித்தேன்..
  டெயில் பீஸ் 2க்கு இனிமே தனியா ரூம் போட்டுதான் சிரிக்கணும்...
  :-))

  ReplyDelete
 6. நன்றி தமிழ்ப்பறவை.


  முதலில் இருந்த பின்னூட்டத்தை ஒரு காரணமாக எடுத்து விட்டேன்.காரணம் யூகிக்கலாம்.

  ReplyDelete
 7. கிரைம் ரேட் பயங்கரம்...முக்கால்வாசி காரணம் கள்ளக்காதல்

  ReplyDelete
 8. யூகித்துவிட்டேன்...

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!