போன வெள்ளிக்கிழமை. ஹிந்து தினசரி பேப்பரில் டீவி நிகழ்ச்சிகள் பகுதி.பொதிகை டீவியில் (முன்னாள் தூரதர்ஷன்)இரவு 7.30 மணிக்கு “ஒளியும் ஒலியும்”சினிமா பாடல்கள்.”ஆமா...இத எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே?இன்னும் வருகிறதா?.உடனே”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” னும் ஞாபகம் வந்தது.
________________________________________________________________________
தமிழ் சினிமாவில் நகைச்சுவை.வறட்சிதான்.நகைச்சுவைக் காட்சிக்கென்று சிலவிதி முறைகள் உள்ளன.முடிக்கவேண்டிய இடத்தில் ஷார்ப்பாகமுடிக்க வேண்டும்.காட்சியின் நோக்கமான குபீர் சிரிப்பு வந்தவுடனசட்டென முடிதது விடவேண்டும்.முடிந்தவுடன் அறுக்கக்கூடாது அல்லது காட்சிக்கு நோட்ஸ் போட கூடாது. இப்படி அறுப்பது தமிழ் சினிமாவில் நிறைய.அதுவும் வடிவேலு காமெடியில்.
ஷார்ப்பாக முடிக்காத காமெடி: வடிவேலு டீக்கடையில் பெஞ்சில்எதிரில் இருப்பவர் மாதிரி ஒவ்வொரு சைகையும் செய்யும்படி உசுப்பேத்துவார ஒருவர்.
கடைசியில் அவர் மாதிரி சாய்ந்து உட்கார பின்னாடி சாக்கடையில ்விழுவார்.
விழுந்தவுடன் காமெடி முடிகிறது.புரிந்தும் விட்டது.சிரிப்பும் வந்துவிட்டது.ஆனால் அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வசனம் பேசி விளக்கம் கொடுப்பார்.காமெடி
நீர்த்து விடுகிறது.
ஷார்ப்பாக முடிந்த காமெடி: வடிவேல் பெண் பார்க்கப்போன இடத்தில்,பெண் தனியாக பேச அழைத்து வசனங்கள் காமெடியாகப போய்கொண்டிருக்க கடைசிஅடியாக “உங்க வீட்ல வேலக்காரங்க இருக்காங்களா...”கேட்க உடனே வடிவேல் கத்த காமெடி ஷார்ப்பாக முடியும்.(அப்புறம் வசனம் பேசி கோனார் நோட்ஸ் அறுவை இல்லை)
சமீபத்தில் பார்த்த வித்தியாசமான மற்றும் fresh காமெடி.சார்லியின மாடுவாங்கும் காமெடி. சார்லி அசத்துவார். படம்....ராமகிருஷ்ணா.?
________________________________________________________________________
டெல்லியில் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது சாலையின நடுவே வயதான ஒருவர் கிடந்தார்.நான் நிறுத்திப் பார்த்ததில் அவர் மிகவும் இறந்திருந்தார்.போகிற வருகிற கார்கள் எல்லாம் சற்றுத் தயங்கி அந்த உடலை
மரியாதையாகத் தவிர்த்து வளைந்து சென்று மறுபடி வேகம் பிடித்த மறைகின்றன.ஒருவரும் நிற்கவில்லை. நிற்பதில்லை.எதிர்வீட்டின் டெலிபோன் பீங்கான்களைப் பார்த்து அங்கே செய்தி சொன்னதற்கு “நீ ஏன் கவலைப் படுகிறாய்” அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று உபதேசம் கிடைத்தது.
யார் அந்த அவர்கள்........?
நன்றி - சுஜாதா “மிஸ் தமிழ்த்தாயே நம்ஸ்காரம்”
_________________________________________________________________
ரசித்த கவிதை:
எல்லா
எண்ணங்களும்
நினைவுகளாகும்
திறன் இல்லாதவை
ஆழமான காயங்களுக்கு
மட்டுமே
வடுக்கள்
சாத்தியம்
நன்றி-லீனா மணிமேகலை “ஒற்றையிலையென”
Subscribe to:
Post Comments (Atom)
super!
ReplyDeleteநல்ல கவிதை.வடிவேலு காமெடி அலசல் யதார்த்தம்.
ReplyDelete//வடிவேலு காமெடி அலசல் யதார்த்தம்.//
ReplyDeleteSUPER.
நன்றி ஸ்ரீ.
ஷார்ப்பாக முடிந்த காமெடி சீன் ரொம்பவே ”ஏ”த்தனமாக இருக்குமே? “கசக்கிட்டாரு”, “கண்டம் பண்ணிட்டாரு” அப்படி இப்படீன்னு வசனமெல்லாம் இருக்குமே! இதத்தான் இப்போ காமெடின்னு சொல்லிட்டு இருக்காய்ங்களா நம்மூர்ல?
ReplyDeleteரவிஷா said...
ReplyDelete//இதத்தான் இப்போ காமெடின்னு சொல்லிட்டு இருக்காய்ங்களா நம்மூர்ல?//
சார்லி காமெடி கண்ணுல படலயா ரவிஷா.
அந்த சமயத்துல வந்த எக்சாம்பிள் இதுதான்.
கருத்துக்கு நன்றி.