Saturday, October 3, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்

என் விமர்சனத்திற்காகத்தான் கமலும் ரோன்னி ஸ்கூரூவாலாவும் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பதாக ஒரு செய்தி வந்ததால் நானும் எழுதி விட்டேன்.நான் ஒரு ”காமன் மேன்” ஆதலால் சம்பளம் வந்துதான் குடும்பத்தோடு இப்போதுதான் பார்க்க முடிந்தது.காமன் மேனுக்கு டிக்கெட் செலவு 500/-.ரூபாய் 500/-செலவழிக்கும் நான் உன்னைப் போல் ஒருவனா?.தியேட்டர் சூப்பராச்சே!நான் ஒரு பொதுபுத்தி காமன் மேன்.

எப்போதுப் பார்த்தாலும் தீவரவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு பொது ஜனம் நொந்து போய் அதே தீவரவாதத்தை கையில் எடுத்து தீவரவாதிகளை தன் சுண்டுவிரல் கூடப்படாமல் ரீமோட் கண்ட்ரோல் செயல்கள் மூலம் கொல்லுகிறார்.(அதற்கு முன் சில இடங்களில் குண்டு வைத்து விடுகிறார்.) கொன்று வீட்டு காய்கறிப்பையோடு வீட்டுக்குப் போகிறார்.கதை ஒரு நாள் காலை ஆரம்பித்து மாலை காமன் மேன்/விமன்கள் சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில்  படம் முடிகிறது.





கதை மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் கமலுக்கு கத்தி மேல் நடக்கும் சமாச்சாரம். அவரவர் மத கோணத்தில் பார்த்தால் Win-Lose அல்லது Lose-Win ந்தான் பார்ப்பார்கள் என்பதால் கமல் Win-Win சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.அதாவது கமலின் மெட்ராஸ் பாஷையில் சொன்னால் ”உனுக்கும் இல்ல எனக்கும் இல்ல.அல்லாரையும் கவர் பண்ணிட்டேன்”.

ஏன்?மீன் பிசினஸ்,புடவை பிசினஸ் போல் கமல் இருப்பது சினிமா பிசினஸ்.உள்ளதை உள்ளதுபடி சொல்லவது சினிமாவில் கஷ்டம்.

கமலைக் கஷ்டப்பட்டுதான் உன்னைப் போல் ஒருவனாக ஒத்துக்கொள்கிறோம்.காரணம் அவரின் பல வருட கதாநாயக பிம்பம் மனதில் உறைந்து கிடக்கிறது.நடிப்பு அவருக்குச் சொல்லித் தரவேண்டாம்.மிளிர்கிறார்.

வலை விமர்சனங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கலாம் நாசர் நடித்திருக்கலாம்,என்று சொல்கிறார்கள். இது அபத்தம். இவர்களுக்கு வில்லன் என்ற பிம்பம் இல்லையா? காமன் மேனின் அப்பாவித்தனம் போய் ஒரு வித வில்லத்தனம் தெரியும் இவர்கள் நடிக்கையில்/ செய்கையில்.

நாசரின் வில்லத்தனமான மூக்கே அவருக்கு வில்லன் கேரக்டர்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறது.மோகன்லால் நமக்கு ரொம்ப பரிச்சியம் இல்லாத ஆள் அடுத்து அவரின் நடிப்பு அவரின் பிம்பத்தை மறைத்து விடுகிறது.ஒரு மலையாளத்தான் போலீஸ் ஆபிசர் என்ற ரீதியில்.


பல பாரதிராஜா,பாலசந்தர் படங்கள் வெற்றிக்கு காரணம் புதுமுகங்கள்.ரொம்ப வருடத்திற்கு முன் வந்த “சோட்டி-சி-பாத்” என்ற படம் காமன் மேன் அமோல் பாலேகர் நடித்ததினால் பல நாட்கள் ஓடியது.இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ”ஈரம்” படத்தின் நாயகி ‘காமன் கேர்ள்”தான்.அதனால்தான் மனதில் ஒட்டுகிறார்.லட்சுமி, பாரதிக்கு பதிலாகக் கூட புதுமுகங்கள் போட்டிருக்கலாம்.

படம் எந்த வித குழப்பம் இல்லாமல் வழுக்கிக்கொண்டுச்செல்கிறது.பத்துப்பக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை படிப்பது மாதிரி.நேர்கோட்டு திரைகதை

மொட்டை மாடி லொகேஷன் அபாரம்.கேமராவும் சூப்பர்தான்.மோகன்லாலுக்கு அதிகாரம் இருந்தும்  தன்னுடைய இயலாமையை  வசனங்கள் மூலம் வெளிபடுத்தும் திரைக்கதை.அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாகச் செய்திருக்கிறார்.போலீஸ் ஆபிசராக வரும் ஆரிப்பும்  நம்மை கவர்கிறார்.லட்சுமியும் மோகன்லாலும் மோதிக்கொள்ளும் இடங்களில் வரும் வசனங்கள் ஷார்ப்.போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்.

 ஆங்கில படம் போல கடைசி காட்சியும் யதார்த்தம்.

எல்லா காட்சிகளும் நம் கண் முன்னே நடக்கும் பிரமையை கேமரா கொண்டு வந்துள்ளது.ரொம்ப மென்மையான வித்தியாசமான இசை.ஸ்ருதி ஹாசனுக்குப் பாராட்டுக்கள்.

கமல் மொட்டை மாடியில் சகல விதமான டெக்னாலாஜியுடன் உட்கார்ந்துக்கொண்டு ஒரு மாஜிக் போல் செய்யும் செயல்கள் சற்று யதார்த்தமாக இல்லை.அதுவும் அந்த காமன்மேன் இந்த ஒன் டைம் வேலையை எந்த வித nervousness இல்லாமல்செய்வது.

குறைகள்:
கமிஷனர் ஆபிசில் கையில் பேக்குடன் எந்த வித கேள்வி இல்லாமல் கமல் நுழைவது.தண்ணீ வராத டாய்லெட்(அதுவும் கமிஷனர் அலுவலகத்தில்)அங்கு பாஸ்கர் பற்றிய சுஜாத்தாத்தனமான அபத்த காமெடிகள்.டீவி சேனல் பெண் கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்பது படு அபத்தம்.அதுவும் பொது அறிவு இல்லாத டீவி சேனல் பெண்.



படிக்க திரைவிமர்சனம்:

“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”

18 comments:

  1. நீங்கள் குறைகள் என்று சுட்டிக் காட்டியிருப்பதுதான் இவ்விமர்சனத்தின் மிகப்பெரிய குறை.

    கமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷனுக்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது.

    கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று டிவி தொகுப்பாளினி கேட்பது உங்களுக்கு அபத்தமாக தெரிவது ஆச்சரியம். லயோலாவில் விஸ்காம் படிக்கும் மாணவன் யாரிடமாவது பேசிப்பாருங்கள். உங்களை சார் என்று விளிக்கமாட்டான். ரவி என்றுதான் கூப்பிடுவான். தலைமுறைகள் மாறிவிட்டது தலைவரே. பிரஸ்மீட்டில் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னபிறகும் இன்னொரு கேள்விக்கு நீங்க ஆன்ஸர் பண்ணியே ஆகணும் என்று இளையதலைமுறை ரிப்போர்ட்டர்கள் கலைஞரையே கலாய்ப்பதெல்லாம் இப்போது சகஜம்.

    அன்புமணிராமதாஸின் தேர்தல் பிரெஸ்மீட் ஒன்றில் ‘இப்போ நீங்க பிரஸ்மீட்டை ஆரம்பிக்கிறீங்களா? இல்லே நாங்க கெளம்புட்டுமா?’ என்று ஒரு இருபது வயது மதிக்கத்தக்க ஆங்கில் டிவி சேனல் நிருபர் அன்புமணியை கடுப்படித்ததை நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. யுவகிருஷ்ணா சொன்னது...
    //கமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. கமல் கையில் பேக்குடன் போவது கமிஷனர் ஆபிஸுக்கு அல்ல. அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷனுக்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது.க்கு. படத்தை இன்னுமொரு முறை தெளிவாகப் பாருங்கள். எனவே கமிஷனர் ஆபிஸில் தண்ணி வராத டாய்லெட் என்ற குறையும் அடிபட்டு போகிறது//
    தவறு என்றால் திருத்திக்கொள்கிறேன்
    அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷன் டாய்லெட் “ஐநாக்ஸ்” தியேட்டர் டாய்லெட் மாதிரி இருக்கு.

    //கமிஷனர் முன் சிகரெட் பிடிக்கலாமா என்று டிவி தொகுப்பாளினி கேட்பது உங்களுக்கு அபத்தமாக தெரிவது ஆச்சரியம்//

    தலைமுறைகள் மாறி விட்டது தெரியும் யூவகிருஷ்ணா.இவர்கள் நீங்கள் சொன்னது மாதிரி நடந்துகொள்வார்கள்(கலாய்ப்பது)ஓகே.ஆனால் சிகரெட் பிடிக்கத் துணிவார்களா?

    சாதாரணமாக யாருமே போலீசிடம் சற்று பவ்யமாகத்தான் பேசுவார்கள்.அதுவும் கமிஷனரிடம் மேலும் சீரியஸ்ஸான டைம்ல.புகைத்தல் தடை செய்யப்பட்ட இடம் வேறு அது.எந்த தொகுப்பாளன்/ளினிக்கு பயம் இருக்கும்.அவர்கள் சேனலிலேயே புகை பிடிக்கும் காட்சி வந்தால் வார்னிங் ஸ்கோரலிங்கில் போடுவார்கள்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. //தவறு என்றால் திருத்திக்கொள்கிறேன்
    அண்ணாசாலை போலிஸ் ஸ்டேஷன் டாய்லெட் “ஐநாக்ஸ்” தியேட்டர் டாய்லெட் மாதிரி இருக்கு.//

    இந்த லெவலுக்கெல்லாம் லாஜிக் பார்க்கலாமான்னு தெரியலை :-)

    ஈரம் படத்தில் உதயம் தியேட்டரில் ஒரு காட்சி. ஆனால் டாய்லெட் மட்டும் சத்தியம் தியேட்டரில் படமாக்கப்பட்டிருக்கும்!

    ReplyDelete
  4. //இந்த லெவலுக்கெல்லாம் லாஜிக் பார்க்கலாமான்னு தெரியலை.//
    இந்த படத்தில பல இடஙகள் யதார்த்தமா வரும் போது இதில ஏன் லாஜிக் பாக்கக் கூடாது.ஆரிப்பிடம் அடிப்பட்டு சாகும் நபர் ஒரு மார்வாடி என்று காட்டுவதற்காக அவர் அறிமுகம் ஓபனிங்க் ஷாட்டில்
    “இஸ்ஸ்டார்ட்டு”(or இஸ்ஸ்டைலு) என்றுதான் வசனம் ஆரம்பிக்கும்.

    //ஈரம் படத்தில் உதயம் தியேட்டரில் ஒரு காட்சி//

    படம் அட்டகாசம் தல.

    ReplyDelete
  5. //தலைமுறைகள் மாறி விட்டது தெரியும் யூவகிருஷ்ணா.இவர்கள் நீங்கள் சொன்னது மாதிரி நடந்துகொள்வார்கள்(கலாய்ப்பது)ஓகே.ஆனால் சிகரெட் பிடிக்கத் துணிவார்களா?//
    அதெல்லாம் பண்ணுவாங்க சார். நம்மளால அவங்களுக்கு ஒரு காரியம் ஆகனும் அல்லது நாம இப்போதைக்கு தேவைங்கிற பட்சத்துல தைரியம் தானா வந்திருமே.

    அப்புறம் லாஜிக் எல்லாம் பாத்தா ஒரு படம் கூட பாக்க முடியாது சார்.

    அப்புறம், நம்பர் கேட்டேனே?
    விருப்பம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.
    pbeski@gmail.com
    ---
    (5வது பாராவில் ஒரு எழுத்துப் பிழை உறுத்துகிறது, தயவுசெய்து சரிசெய்யவும்)

    ReplyDelete
  6. தல நீங்கள் எழுதி இருக்கும் தோரணைக்கும்
    //சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் படம் முடிகிறது.//
    இந்த வரிக்குமே முடிச்சு போட்டு உங்களை காய்ச்சு விடுவார்கள்..:))

    ReplyDelete
  7. வரவர சினிமா விமர்சனங்கள் அதிகமா வருதே சார்..?!
    //போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்//
    இதைக் கூட ஒத்துக்கலாம்..அந்த ஐ.ஐ.டி. பையன் மனசு மாறுவது ஓவர்..(பின்னாடி லாலாலா போட்டிருந்தா எஃபக்ட் நல்லா இருந்திருக்கும்)
    //வலை விமர்சனங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கலாம் நாசர் நடித்திருக்கலாம்,என்று சொல்கிறார்கள். இது அபத்தம். இவர்களுக்கு வில்லன் என்ற பிம்பம் இல்லையா? காமன் மேனின் அப்பாவித்தனம் போய் ஒரு வித வில்லத்தனம் தெரியும் இவர்கள் நடிக்கையில்/ செய்கையில்.//
    இல்லை சார். அவர்கள் குணசித்திரங்களும் செய்தவர்கள்தான்.தமிழ் ரசிகர்கள் மேற்கண்டோரை வில்லனாகப் பார்ப்பது எப்போதோ மாறிவிட்டது.’தலைவாசல்’ விஜய் கூட சாய்ஸ்ல இருக்கார்.
    கமல்,மோகன்லால் இருவரையும் இடம் மாற்றினால் கூட இன்னும் சுவாரஸ்யம் கூடும்.
    மற்றபடி கொஞ்சம் வித்தியாசமான சாதாரண படம்.விமர்சனம் வித்தியாசம்...

    ReplyDelete
  8. ரெம்ப late-ஒ?

    //சாமிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் படம் முடிகிறது.//

    இது சூப்பர்!!

    விமர்சனம் ஓகே ரகம்!!

    ReplyDelete
  9. எவனோ ஒருவன் said...
    //அதெல்லாம் பண்ணுவாங்க சார்//
    எனக்கு சரியாகப் படவில்லை.அதுவும் கமிஷனர் முன்னிலையில்.

    //அப்புறம் லாஜிக் எல்லாம் பாத்தா ஒரு படம் கூட பாக்க முடியாது சார்//
    இது முக்கியமான சீன் அதனால்தான் கேட்டேன்.

    //அப்புறம்,நம்பர் கேட்டேனே//
    படுத்திறீங்க சார்!

    //ஒரு எழுத்துப் பிழை உறுத்துகிறது//
    ஐய்யோ...!ஆமாம்.தவறைத் திருத்திவிட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. தமிழ்ப்பறவை said...
    //வரவர சினிமா விமர்சனங்கள் அதிகமா வருதே சார்..?!//

    வித்தியாசமானப் படங்களை விமர்சனம் பண்ணனும் ஆசை.ஆனா வெத்து மொக்கைப் படங்களைப் பண்ண மாட்டேன்.ஏதாவது பதிவு போட்டு ஆகனமே!

    //போலீஸ்காரர் (சிவாஜிராவ்)கடைசியில் கட்சி மாறுவது (இந்த ஸ்கெட்ச் கமல் இல்லை) யதார்த்தம்//

    //இதைக் கூட ஒத்துக்கலாம்.அந்த ஐ.ஐ.டி.பையன் மனசு மாறுவது ஓவர்.(பின்னாடி லாலாலா போட்டிருந்தா எஃபக்ட் நல்லா இருந்திருக்கும்)//

    ஜாதி,மதம் ரத்தத்தில் ஊறிய ஒன்று.
    (ஏன்மோகன்ல்லாலுக்கும் வெளிப்படையாகவே சந்தோஷம்தான்)இந்திய பாகிஸ்தான் மேட்ச்சின் போது என்ன நடக்கிறது.


    //இல்லை சார். அவர்கள் குணசித்திரங்களும் செய்தவர்கள்தான்.தமிழ் ரசிகர்கள் மேற்கண்டோரை வில்லனாகப் பார்ப்பது எப்போதோ மாறிவிட்டது.’தலைவாசல்’ விஜய் கூட சாய்ஸ்ல இருக்கார்.கமல்,மோகன்லால் இருவரையும் இடம் மாற்றினால் கூட இன்னும் சுவாரஸ்யம் கூடும்.//

    கரெக்டுதான். ஆனா இவர்கள் 60:40 அதாவது காமன் மேன்:நடிகர் இமேஜ் என்ற விகிதத்தில் தோன்றுவார்கள்.எனக்கென்னவோ 100% புதுமுகம் இருந்தால் பெட்டர்.ஆனால் யாருமே ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.

    நன்றி.


    மற்றபடி கொஞ்சம் வித்தியாசமான சாதாரண படம்.விமர்சனம் வித்தியாசம்...
    October 4, 2009 2:59 AM

    ReplyDelete
  11. வினோத்கெளதம் said...

    //இந்த வரிக்குமே முடிச்சு போட்டு உங்களை காய்ச்சு விடுவார்கள்..:))//

    சீரியஸ் தளங்கள் நம் விமர்சனங்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.அவர்கள் நேரத்தை வேஸ்ட் செய்ய விரும்புவதில்லை.நாமும் அங்கு போய் நம் நேரத்தை வேஸ்ட் செய்வதில்லை.

    ReplyDelete
  12. செந்தில் நாதன் said...

    //ரெம்ப late-ஒ?//
    //இது சூப்பர்!!விமர்சனம் ஓகே ரகம்!!//

    நன்றி செந்தில்.

    ReplyDelete
  13. //படுத்திறீங்க சார்!//
    :)

    ReplyDelete
  14. நானும் இதோ ஆட்டத்திற்கு வரேன்...

    உன்னைப் போல் ஒருவன் - சில கேள்விகள் & குழப்பங்கள்......


    1.அனுபம் கெர் சொல்லும் வசனம் That bastard just had the guts to walk into our lives and blow it apart. அனுபம் கெர் இந்த வசனத்தை ஆங்கிலத்தில் உச்சரிப்பார்.இதற்கு இணையான தமிழ் வசனம் - சுனாமி மாதிரி வந்தான். என் லைப்பை தலைக்குப்புற புரட்டிப்போட்டு போய்ட்டான். சுனாமி போல வர அவர் என்ன ஸ்பைடர் மேனா? காமன் மேனா?

    2. கமல் இந்த படத்தின் ஆரம்பத்தில் பஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரயில் போன்ற இடங்களில் சில பைகளை வைத்து விட்டு செல்வார். அந்த பைகளில் என்ன இருந்தது?ஜண்டு பாமா?எதற்கு இந்த பில்டப்?

    3. தீவிரவாதி ஒருவர் சொல்கிறார். அவரது ‘மூன்றுமனைவிகளுள்’ ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார்.

    பெஸ்ட்பேக்கரி கொலை நடந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். இது எப்படி சாத்தியம்?

    4. I G Raghavan Maraar I.P.S கிளைமாக்ஸில் செல்லும் காரில் சைரன் பொருத்தபட்டு இஸ்லாமிய மதக்கொடி பறக்கும். அரசாங்க வாகனத்தில் எதற்கு இந்த கொடி?

    5. அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’
    யாரை திருப்திப்படுத்த இந்த வசனம்?

    பேசாமல் ரீமேக்கிற்கு பதில் தமிழில் டப்பிங் செய்திருக்கலாம்

    ReplyDelete
  15. வாங்க விநாயக முருகன்.கருத்துக்கு நன்றி.

    1.இந்தி படம் பாக்கல.அப்படியே போடமுடியுமா?இது எனக்கு ஓகே முருகன்.

    2.அதெல்லாம் டம்மிதான்.வெடிக்கவில்லையே.முதல் குண்டுலேயே காரியம் நடந்துடுதே.அப்படித்தான் assumption hollywood movieமாதிரி.

    3.கரெக்ட்.படத்தில் தகவல் அபத்தம்.

    4.அப்படியா?கவனிக்கவில்லை.எதற்கு அந்த கொடி?

    மாறார் என்றால் ஒரு ஜாதி.கேரளாவில் கோவிலில் ஸ்வப்ன சங்கீதம் பாடுபவர்கள் அல்லது இசைக் கருவிகளை வாசிப்பவர்கள்.

    5.தேவையில்லாத காமெடி

    நன்றி.

    ReplyDelete
  16. உங்க விமர்சனம் ரொம்பவே ஷார்ப்பா இருக்கு ரவிஷங்கர். படம் பார்த்தபிறகுதான் உங்கள் விமர்சனம் படிக்கிறேன். நீங்கள் உட்பட பல சகபதிவர்கள் அனைவரும் எவ்வளவு டீப்பாக படம் பார்த்துள்ளீர்கள்.

    ReplyDelete
  17. போலீஸ் என்றால் பவயமாய் பேசுவார்களா..?நானே பேசுவதில்லை. அதிலும் டிவி பத்திரிக்கை காரர்கள்..நோ சான்ஸ்.. ஒருநாள் ஏதாவது பிரசச்னையின் போது நேரில் அவர்கள் கவர் செய்யும் முறைய்யை பாருங்க.. அப்போ தெரியும்.

    ReplyDelete
  18. வாஙக கேபிள் சங்கர்,
    கருத்துக்கு நன்றி.இங்கு ஸ்மோக்கிங் பத்திதான் விவாதம்.

    //நேரில் அவர்கள் கவர் செய்யும் முறைய்யை பாருங்க.. அப்போ தெரியும்.//

    பாத்திருக்க்கேன் சங்கர்.

    ஈரம் படம் விமர்சனம் பாத்தீங்களா?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!