பூட்டிய
பிரம்மாண்டபங்களாவின்
உட்புறம்
மேலும் கீழுமாக
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமும்
சில சமயங்களில்
ஓரங்களில் நின்று
உற்றுப் பார்த்தபடி
தன்னந்தனியாக
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
ஓரே ஒரு
சின்னஞ்சிறிய
வண்ண மீன்
ஒளிர்ந்துக்கொண்டிருக்கும்
எமெர்ஜன்சி விளக்கின்
ஒற்றை குழல் விளக்கைப்
பார்த்தபடி
படிக்க திரை விமர்சனம்:
நல்லாயிருக்கு சார்..எழுத்து பிழைகளை சரி செய்யுங்கள்
ReplyDeleteஓட்டு போட்டா தமிழ்மணம் ஏற்கவில்லை
ReplyDeleteதண்டோரா
ReplyDeleteகருத்துக்கு நன்றி.பிழையை சரி செய்து விட்டேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
//ஓட்டு போட்டா தமிழ்மணம் ஏற்கவில்லை//
இதற்கு நான் என்ன செய்யவேண்டும். மேலும்
இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நன்றி
ஹாய் ரவி..... நல்லா இருக்கு...... வாழ்த்துகள்
ReplyDelete/கிழுமாக//
ReplyDeleteகீழுமாக..
இதை கவனிக்கவில்லை.நன்றி தண்டோரா.மாற்றி விட்டேன்.
ReplyDeleteJACK and JILLU said...
ReplyDelete//ஹாய் ரவி..நல்லா இருக்கு....வாழ்த்துகள்//
நன்றி.
நல்லா இருக்கு சார். தொட்டி மீன்கள் ரொம்ப ரொம்ப தனிமையானவை.
ReplyDeleteம்ஹூம்.., எனக்குப் புரியலை சார்...
ReplyDeleteவெங்கிராஜா | Venkiraja said...
ReplyDelete//நல்லா இருக்கு சார். தொட்டி மீன்கள் ரொம்ப ரொம்ப தனிமையானவை//
நன்றி வெங்கிராஜா.
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//ம்ஹூம்.., எனக்குப் புரியலை சார்//
சும்மா ஒரு அமானுஷ்யம்.பூட்டிய வீட்டில் தொட்டியில் நீந்தும் மீனும்,பவர் போன பிறகு எரியும்
எமர்ஜென்சி விளக்கும் அதில் ஒன்று பீயூஸ் போனது.
தனிமை என்னும் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் said...
ReplyDelete//தனிமை என்னும் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்//
ரொம்ப சரி.
வண்ண மீனாக ஒரு மாசமா சுத்த விட்டுடாங்க :(
ReplyDeleteகொஞ்சம் யோசித்தால் அதுவே உண்மை , நிரந்தரம் என்று புரிகிரது . போதாகுறைக்கு ஆத்மானாம் புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்துள்ளேன் :)
நல்லாயிருக்குதுங்க!
ReplyDeletePrakash said...
ReplyDelete//வண்ண மீனாக ஒரு மாசமா சுத்த விட்டுடாங்க//
வருத்தமா இருக்கு.
//கொஞ்சம் யோசித்தால் அதுவே உண்மை , நிரந்தரம் என்று புரிகிரது . போதாகுறைக்கு ஆத்மானாம் புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்துள்ளேன்//
ஆத்மாநாம் படிங்க நல்லா இருக்கும். இதில இன்னும் புரியாத கவிதைகள் இருக்கு. ஒரு நாள் புரியும்.
நன்றி.
ஊர்சுற்றி said...
ReplyDelete//நல்லாயிருக்குதுங்க!//
நன்றி.
ஸ்மைல் ப்ளீஸ் கதைக்காக ஒரு சின்ன விருது உங்களுக்கு.
ReplyDeletehttp://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html