Tuesday, September 29, 2009

ரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்

பல சந்தா(Pala Shanda),ப்ரியா, தர்ஷினி கோபி,சுவி,சுர்முகி(Surmukhi)பெஃபி
(Febi)பீலாஹிண்டோ(PellaHinto),சைந்தவி,ஜனனி,நவீன்,ரீட்டா,கெளசிக்,ஜானகி ஐயர்,பிரசன்னா,ஷீபா,பாலாஜி,ரம்யா,பிரியாஹேமேஷ்,விவேகா,சரிதா,ரேகா,கீதா,
வின்செண்ட்,,ஸ்வேதா,ஹரிகுமார்,கிளிண்டன்,சோலார்சாய்,ஷான்,பல்ராம்,
நான்சி,கீர்த்தி சஹாத்தியா,ஷாயில் ஹதா,மேகா,மஹேஷ் வினயகராம்,கல்யாணி,சங்கீதாராஜேஸ்வரன்,கிருஷ்ண ஐயர்,ஷோபா சேகர்,வேல் முருகன்...


............மற்றும் பலர்.


இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா? இல்லை.


பின்னணிப் பாடகர்கள்.வெளிவந்த மற்றும் வரப்போகிற படங்களின் பாடல்களைப் பாடியவர்கள்.இன்னும் கூட நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்னும் கூடவா? ஐய்யோ..! அம்மா!

டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது  இதில் இருக்கிறார்களா? பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.

இவர்கள் டீவி சீரியல்களில் பாடினாலும் சினிமா ஆசை அவர்களை விடாது.
தீவிர சினிமா பாடல் ரசிகர் கூட இவர்கள் பாடிய பாடலை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.


கார்பரேஷன் தினக்கூலி  நமக்கு இன்று வேலைக்கிடைக்குமா  என்று வாசலில் நிற்பது மாதிரி இவர்கள் தாங்கள் பாடிய குறுந்தகடைக் கொடுத்து இசையமைப்பாளர்கள் வீட்டு வாசலில் சான்சுக்காக நிற்க வேண்டும்.

அப்படியே சான்ஸ் கிடைத்தாலும் முன்னாள் மாதிரி 10 -20 வருடம் ஓட்ட முடியுமா?புதுபுது கதா நாயக/கிகள் மற்றும் இசையமைப்பாளர்கள் தோன்ற இவர்கள் மறைய ஆரம்பிப்பார்கள்.

இது தவிர சின்மயி,ரஞ்சித்,அனுராதா,நரேஷ்,பென்னி,சுசித்ரா,சுதா,கிருஷ் மது,திப்பு ,ஸ்ரீலேகா,மகதி என்று முன்னணியில் இருக்கும் பின்னணிப் பாடகர்கள்.


கடைசியாக:
 

முன்னெல்லாம் திரையில் ஒரு 10 அல்லது 20 வருடம் அனுபவப்பட்டு “திரை உலகைத் திரும்பிப் பார்க்கிறேன்” அல்லது “நான் கடந்து வந்த பாதை” என்று டீவியில் தோன்றி பேட்டி கொடுப்பார்கள்.
 

இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.

14 comments:

 1. டீவி சேனல்களில் ஜுனியர்,சீனியர்,ஹையர்,லோயர் பாடல் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்கள் யாராவது இதில் இருக்கிறார்களா? பைனா குலர் வைத்துப்பார்த்து இருந்தால் சொல்லலாம்.
  //

  நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ "சின்மை & "கார்த்திக் " மட்டும் தான் தெரியுறாங்க
  (AV Ramanan நடத்திய சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் சின்மை Winner,கார்த்திக்-abdul hamid in பாட்டுக்கு பாட்டு வில் பாடியவர் )

  ReplyDelete
 2. தலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்(என் நம்பர் மணிஜி பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுவில் இருகிறது)

  ReplyDelete
 3. //இவர்களெல்லாம் யார்?ரயில்வே RAC லிஸ்டில் இருப்பவர்களா? இல்லை.//

  இசையமைப்பாளர்கள் ஆதரவு இல்லாட்டி யாரும் பிரகாசிக்க முடியாதே. சித்ராவுக்கு ஆரம்பகாலத்தில் இளையாராஜா நிறைய வாய்ப்புகள் கொடுத்து வந்தாரே.

  ReplyDelete
 4. இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்// இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..

  ReplyDelete
 5. //நீங்க சொன்னா மாதிரி பைன குளர் வச்சு பாத்தப்போ "சின்மை & "கார்த்திக் " மட்டும் தான் தெரியுறாங்க //

  கிருஷ்குமார் இது நடந்து ரொம்ப நாளாச்சே.கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 6. தண்டோரா,

  நன்றி.

  ReplyDelete
 7. //இப்போதெல்லாம் ஒரே ஒரு பாடலைப் பாடி விட்டு டீவியில் ஒரு மணி நேரப்பேட்டிகொடுக்கிறார்கள்.இந்த வகையில் அதிர்ஷடம் செய்தவர்கள்.//
  என்ன கொடும சார் இது...

  //அமுதா கிருஷ்ணா said...
  இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//
  என்ன கொடு...


  //தண்டோரா ...... said...
  தலைவரே..அன்னிக்கு சரியா பேச முடியலை..நம்பர் கொடுங்க...பேசலாம்//
  என்ன... மன்னிக்கனும். இதுக்கு ரிப்பீட்டுன்னு போட வந்தேன்.

  ReplyDelete
 8. நன்றி சின்ன அம்மிணி.இசையமைப்பாளர்கள் ஆதரவு கொடுத்தாலும் எவ்வளவு படம் பாட முடியும்.

  ReplyDelete
 9. //இது உண்மை...அப்புறம் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகிறார்கள்..//

  ஆமாம் இதுவும் உண்மை.

  நன்றி அமுதா கிருஷ்ணா.

  ReplyDelete
 10. ஹா..ஹா.. தலைப்பை ரசித்தேன்...
  //)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்...குரலும் நன்றாகத்தானிருக்கிறது.
  பிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)
  சங்கீதா ராஜேஸ்வரனின் குரலில் ‘வேட்டைக்காரன்’இல் ஒரு பாடல் வருகிறது. நன்றாகப் பாடி இருக்கிறார்(கரிகாலன் காலைப் போல பாடல்)
  வேல்முருகன் வித்தியாசக் குரலுக்குச் சொந்தக்காரர்...
  ஹரீஷ்ராகவேந்திரா,மது பாலகிருஷ்ணனைக் காணோம்..????
  மாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)

  ReplyDelete
 11. நன்றி எவனோ ஒருவன்.

  ReplyDelete
 12. தமிழ்ப்பறவை said...

  //)பீலாஹிண்டோ(PellaHinto// பீலா ஷிண்டே எனக் கருதுகிறேன்..யுவன், இளையராஜாவின் தற்போதைய படங்களில் ஒரு பாடல் பெற்றுவிடுகிறார்..குரலும் நன்றாகத்தானிருக்கிறது//

  அப்படியா? உங்களை மாதிரி எவ்வளவு பேர் ஞாபகம் வைத்திருப்பார்கள்.

  .
  //பிரசன்னா கவனிக்கவேண்டிய ஒரு ஆள்...(டிவி ஷோக்களில் பார்த்தேன். கொஞ்சம் முசுடு)//

  அடிக்கடி வந்து பேட்டிக் கொடுப்பார். என்ன பாட்டு பாடி இருக்கிறார்?ஸ்மார்ட்டாக இருப்பார்.வீணை வாசிப்பார் என்று நினைக்கிறேன்.


  //மாதங்கி என்றொரு பாடகி இருந்தார்.. போதைப்பாடலுக்கேற்ற குரல் எனினும் சில நல்ல பாடல்களும் பாடியிருப்பார்.(’இவன்’ படத்தில் ‘அப்படிப் பாக்கிறதுன்னா வேணாம்’,’அழகிய தீயே’ படத்தில் ‘கஸ்தூரி மானினமே’ பாடல்)//

  ஆமாம்.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. காரணம் ஒரு யுனிக் குரல் இல்லாமை தான் :)

  உதாரணத்திர்க்கு இந்த் காணொளி
  http://www.youtube.com/watch?v=d7OoZ7eYVTc&feature=player_embedded

  ஆடிஃப் ஒன்றும் மிக சிறந்த் பாடகர் அல்ல ஆனால் சிறந்த் பெர்ஃபார்மர் , மிக தனித்துவமான குரல். ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்.

  எல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா என்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)

  ReplyDelete
 14. பிரகாஷ்,

  யூ டூயுப் பார்த்தேன்.மிகவும் தனித்துவமான குரல்தான்.
  சுபி டைப் பாடல்கள் பாடுவார் என்று நினைக்கிறேன்.

  //ஹிந்தியில் அடுக்கடுக்காக இது போல் மாறுபட்ட குரல்களுக்கு உதாரணம் தரலாம்//
  ஆமாம்.

  //எல்லொரும் ஒரெ மாதிரி பாடினா விஜய் யேசுதாசா , மது பால கிருஷ்னனா என்ற குழ்ப்பம் வர தான் செய்யும் :)//

  கேரளா பாடகர்களில் இந்த சாயல் குழப்பம் வரும்.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!