Thursday, September 17, 2009

கவுண்ட்டவுனில் பிராண அவஸ்தை

நான் காத்திருக்கும்
இந்த சிக்னல் நிறுத்தம் பிடிப்பதில்லை
நான்கு ரோடுகள் கூடும்
பெரிய நிறுத்தம்
இதே மாதிரி
அடுத்த ஜன்மத்தில்
கோழிகள் பஜாஜ் எம்-40  ஓட்ட
இந்த கசாப்புக்கடைக்காரனும்
தலைகிழாகத் தொங்கி
பிராண அவஸ்தைப் பட வேண்டும்
நேர்ந்துக்கொள்கிறேன்
ஏன் போன ஜன்மத்தில் 
கோழிகள் பஜாஜ் எம்-40  ஓட்டி
இவன் தலைக்கிழாகத் தொங்கி
பிராண அவஸ்தைப் பட்டிருக்கலாம்
அடுத்த நினைவு அடுக்க -
அதற்கு அடுத்த நினைவாக
இவன் பஜாஜ் எம்-40 ஓட்ட
அதுகள்  பிராண அவஸ்தைப் பட
பத்திக்கு இதுகள் பஜாஜ் எம்-40 ஓட்ட
அவன்  பிராண அவஸ்தைப் பட -
 மாறி மாறி இருவரும்
 பஜாஜ் எம்-40 ஓட்டிக்கொண்டிருக்கும்
இந்த  110  சிக்னல் நிறுத்தம்
பிடிப்பதில்லை
கவுண்ட் டவுனமுடியும் நேரம் வரை
நிறைய யோசித்து யோசித்து
இதுகள் மாதிரி பட வேண்டியிருக்கிற்து
பிராண அவஸ்தை



படிக்க: இளையராஜாவின் வயலின் உருக்கம்

7 comments:

  1. போன ஜென்மத்துல நான் எழுதியவற்றை நீங்கள் படித்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். அதனால்தான் இந்த பிராண அவஸ்த்தை.

    ReplyDelete
  2. கிறுக்கல் கிறுக்கன் said...

    // போன ஜென்மத்துல நான் எழுதியவற்றை நீங்கள் படித்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். அதனால்தான் இந்த பிராண அவஸ்த்தை.//

    அப்பாடா...!இருக்கலாம்.இதிலேயே உல்டாவா?

    நன்றி.

    ReplyDelete
  3. //.. பிராண அவஸ்தை ..//

    உங்களுக்கு அவஸ்தையோ இல்லையோ, எனக்கு கிறுகிறுத்துப் போச்சு..

    ReplyDelete
  4. நன்றி பட்டிக்காட்டான்.

    ReplyDelete
  5. நன்றி தமிழ் பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!