Haiku only describes, does not prescribe or tell or preach.
ஓடும் காரின் மேல்
தொப்தொப்பென்று
விழும் நிழல்கள்
பழைய வயலின்
சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
அம்மா
இடி சத்தம்
பயத்தில் விழுந்த
காலண்டர்
ரொம்ப ரொம்ப தனியாக
கண்ணாடித் தொட்டியில்
ஒரு மீன்
குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா
எல்லோரையும் ரோடின்
ஓரத்திற்கு விரட்டியது
தீடிர் மழை
குட்டையில் குதிக்கும்
தவளைகள்
உடையும் நிலா
இறந்து போனவரின்
பாய் தலையணை
குப்பைத் தொட்டியில்
காரின் மேல் விழுந்து
தொலைந்து போகின்றன
நிழல்கள்
அப்பாவின்
பிண்டத்தைச் சாப்பிடும்
அணில்கள்
படிக்க சிறுகதை:
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
ReplyDeleteநல்லாயிருக்கு ரவிஷங்கர். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி butterfly Surya.
ReplyDeleteஅருமையான ஹைகூக்கள்..!!!
ReplyDeleteமச்சான்சுக்கும் வந்துட்டு போங்க...!!!
இது எங்களுடைய ஹைக்கூ முயற்சிகள்.
http://machaanblog.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82
வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.உங்கள் வலையில் பார்த்தேன்.அவையெல்லாம் ஜாலி ஹைகூக்கள் ஆனாதால் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி சிவன்.
//பழைய வயலின்
ReplyDeleteசுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
அம்மா//
ஜி பிரமாதம்.
வாத்தியார் கடைசிப் பக்கங்கள்-ல ஹைக்கூ-க்கு முக்கியமான விசயமா மூணு சொல்லியிருக்கார் இல்லீங்களா, அதை ஞாபகபடுத்தனும்னு தோணுச்சு.
* நேரடி அனுபவம்
* உவமை உருவகம் கூடாது
* மூணாவது வரியில் திருப்பம்.
நன்றி பாசகி.
ReplyDelete//வாத்தியார் கடைசிப் பக்கங்கள்-ல ஹைக்கூ-க்கு முக்கியமான விசயமா மூணு சொல்லியிருக்கார் இல்லீங்களா, அதை ஞாபகபடுத்தனும்னு தோணுச்சு//
தெரியும்.இன்னும்கூட விஷயங்கள் இருக்கு ஒரிஜினல் ஜப்பானிய ஹைகூக்கு.
//தெரியும்.இன்னும்கூட விஷயங்கள் இருக்கு ஒரிஜினல் ஜப்பானிய ஹைகூக்கு.//
ReplyDeleteஜி, அதையும் பகிர்ந்துக்கலாமே?
வாஸ்துவந்தான்.நல்ல அனுபவப்பட்டு,பக்குவப்பட்டு
ReplyDeleteபிறகுதான் அதில் இறங்க(பகிர்தல்)வேண்டும்.
ஒரு விஷயம் தெரியுமா? தமிழ் நாட்டில் இன்னும் ஒரு
சரியான ஹைகூ கூட எழுதப்படவில்லை என்ற ஒரு கருத்து உண்டு.
//ஒரு விஷயம் தெரியுமா? தமிழ் நாட்டில் இன்னும் ஒரு
ReplyDeleteசரியான ஹைகூ கூட எழுதப்படவில்லை என்ற ஒரு கருத்து உண்டு.//
கேள்விபட்டிருக்கேன் ஜி. ஆனா அதைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு ஒண்ணும் தெரியாது.
//
ReplyDeleteபழைய வயலின்
சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
அம்மா
குட்டையில் குதிக்கும்
தவளைகள்
உடையும் நிலா
அப்பாவின்
பிண்டத்தைச் சாப்பிடும்
அணில்கள்
//
இம்மூன்றும் என் எளிய அறிவிற்கு ஹைக்கூக்கள் - நன்று
நன்றி நந்தா.
ReplyDeleteஇந்த ஹைகு definitionsஐ ஒரு பத்து தடவை சொல்லியிருப்பீர்களா :)
ReplyDeleteஜ்யோவ்ராம் சுந்தர் said...
ReplyDelete//இந்த ஹைகு definitionsஐ ஒரு பத்து தடவை சொல்லியிருப்பீர்களா :)//
தெரியல.சரியா எண்ணல.ஆனால் ஒவ்வொரு முறையும் எழுதும் போது ஹோட்டலின் விலைப் பட்டியல் மாதிரி இதைப் போட்டு விடுவது உண்டு.
போடுவதன் நோக்கம் ஹைகூ என்பதன் அரிச்சுவடி என்ன என்பது பற்றி.
நன்றி.
//ஓடும் காரின் மேல்//
ReplyDelete//பழைய வயலின்//
//அப்பாவின்//
மிக ரசித்தேன்/...
//குட்டையில் குதிக்கும்//
நல்லா இருக்குது.. ஆனா ஏற்கனவே படிச்ச ஃபீலிங் வருது சார்...
//ஆனா ஏற்கனவே படிச்ச ஃபீலிங் வருது சார்...//
ReplyDeleteமிக சரி.அனுபவத்தை மூன்று வரிக்குள் யோசித்து எழுதுவதற்குள் பெண்டு கழண்டு விடுகிறது.கருத்துக்கு நன்றி.
// இடி சத்தம் பயத்தில் விழுந்த காலண்டர்
ReplyDeleteஅருமை.
ஹைக்கூவின் இலக்கணத்தை தேடி போவதை விட, ரசிக்கும் சில வரிகள் எனக் கொள்ளலாம்.
நன்றி பின்னோக்கி.
ReplyDeleteரொம்ப ரொம்ப தனியாக
ReplyDeleteகண்ணாடித் தொட்டியில்
ஒரு மீன்
touching lines
நன்றி உதயா.
ReplyDelete