Friday, September 25, 2009

ஹைகூக்கள்...! ஹைகூக்கள் ...!

தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைகூ.மற்றும் வேறு விதிகள் உண்டு.இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.

Haiku only describes, does not prescribe or tell or preach.


ஓடும் காரின் மேல்
தொப்தொப்பென்று
விழும் நிழல்கள்

பழைய வயலின்
சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
அம்மா

இடி சத்தம்
பயத்தில் விழுந்த
காலண்டர்

ரொம்ப ரொம்ப தனியாக
கண்ணாடித் தொட்டியில்
ஒரு மீன்

குட்டையில் விழுந்த
நிலாவைப் பார்க்கும்
மற்றொரு நிலா

எல்லோரையும் ரோடின்
ஓரத்திற்கு விரட்டியது
தீடிர் மழை

குட்டையில் குதிக்கும்
தவளைகள்
உடையும் நிலா

இறந்து போனவரின்
பாய் தலையணை
குப்பைத் தொட்டியில்

காரின் மேல் விழுந்து
தொலைந்து போகின்றன
நிழல்கள்



அப்பாவின்
பிண்டத்தைச் சாப்பிடும்
அணில்கள்



படிக்க சிறுகதை:

ஸ்மைல் ப்ளீஸ்

 

20 comments:

  1. நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு ரவிஷங்கர். ரசித்தேன்.

    ReplyDelete
  3. அருமையான ஹைகூக்கள்..!!!
    மச்சான்சுக்கும் வந்துட்டு போங்க...!!!
    இது எங்களுடைய ஹைக்கூ முயற்சிகள்.
    http://machaanblog.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.உங்கள் வலையில் பார்த்தேன்.அவையெல்லாம் ஜாலி ஹைகூக்கள் ஆனாதால் ரசித்தேன்.

    நன்றி சிவன்.

    ReplyDelete
  5. //பழைய வயலின்
    சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
    அம்மா//

    ஜி பிரமாதம்.

    வாத்தியார் கடைசிப் பக்கங்கள்-ல ஹைக்கூ-க்கு முக்கியமான விசயமா மூணு சொல்லியிருக்கார் இல்லீங்களா, அதை ஞாபகபடுத்தனும்னு தோணுச்சு.

    * நேரடி அனுபவம்

    * உவமை உருவகம் கூடாது

    * மூணாவது வரியில் திருப்பம்.

    ReplyDelete
  6. நன்றி பாசகி.

    //வாத்தியார் கடைசிப் பக்கங்கள்-ல ஹைக்கூ-க்கு முக்கியமான விசயமா மூணு சொல்லியிருக்கார் இல்லீங்களா, அதை ஞாபகபடுத்தனும்னு தோணுச்சு//

    தெரியும்.இன்னும்கூட விஷயங்கள் இருக்கு ஒரிஜினல் ஜப்பானிய ஹைகூக்கு.

    ReplyDelete
  7. //தெரியும்.இன்னும்கூட விஷயங்கள் இருக்கு ஒரிஜினல் ஜப்பானிய ஹைகூக்கு.//

    ஜி, அதையும் பகிர்ந்துக்கலாமே?

    ReplyDelete
  8. வாஸ்துவந்தான்.நல்ல அனுபவப்பட்டு,பக்குவப்பட்டு
    பிறகுதான் அதில் இறங்க(பகிர்தல்)வேண்டும்.

    ஒரு விஷயம் தெரியுமா? தமிழ் நாட்டில் இன்னும் ஒரு
    சரியான ஹைகூ கூட எழுதப்படவில்லை என்ற ஒரு கருத்து உண்டு.

    ReplyDelete
  9. //ஒரு விஷயம் தெரியுமா? தமிழ் நாட்டில் இன்னும் ஒரு
    சரியான ஹைகூ கூட எழுதப்படவில்லை என்ற ஒரு கருத்து உண்டு.//

    கேள்விபட்டிருக்கேன் ஜி. ஆனா அதைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு ஒண்ணும் தெரியாது.

    ReplyDelete
  10. //

    பழைய வயலின்
    சுருதி சேர்க்கையில் வெளிப்பட்ட
    அம்மா

    குட்டையில் குதிக்கும்
    தவளைகள்
    உடையும் நிலா

    அப்பாவின்
    பிண்டத்தைச் சாப்பிடும்
    அணில்கள்

    //

    இம்மூன்றும் என் எளிய அறிவிற்கு ஹைக்கூக்கள் - நன்று

    ReplyDelete
  11. இந்த ஹைகு definitionsஐ ஒரு பத்து தடவை சொல்லியிருப்பீர்களா :)

    ReplyDelete
  12. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    //இந்த ஹைகு definitionsஐ ஒரு பத்து தடவை சொல்லியிருப்பீர்களா :)//
    தெரியல.சரியா எண்ணல.ஆனால் ஒவ்வொரு முறையும் எழுதும் போது ஹோட்டலின் விலைப் பட்டியல் மாதிரி இதைப் போட்டு விடுவது உண்டு.

    போடுவதன் நோக்கம் ஹைகூ என்பதன் அரிச்சுவடி என்ன என்பது பற்றி.

    நன்றி.

    ReplyDelete
  13. //ஓடும் காரின் மேல்//
    //பழைய வயலின்//
    //அப்பாவின்//
    மிக ரசித்தேன்/...
    //குட்டையில் குதிக்கும்//
    நல்லா இருக்குது.. ஆனா ஏற்கனவே படிச்ச ஃபீலிங் வருது சார்...

    ReplyDelete
  14. //ஆனா ஏற்கனவே படிச்ச ஃபீலிங் வருது சார்...//

    மிக சரி.அனுபவத்தை மூன்று வரிக்குள் யோசித்து எழுதுவதற்குள் பெண்டு கழண்டு விடுகிறது.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. // இடி சத்தம் பயத்தில் விழுந்த காலண்டர்

    அருமை.

    ஹைக்கூவின் இலக்கணத்தை தேடி போவதை விட, ரசிக்கும் சில வரிகள் எனக் கொள்ளலாம்.

    ReplyDelete
  16. நன்றி பின்னோக்கி.

    ReplyDelete
  17. ரொம்ப ரொம்ப தனியாக
    கண்ணாடித் தொட்டியில்
    ஒரு மீன்
    touching lines

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!