Tuesday, September 15, 2009

இளையராஜாவின் வயலின் உருக்கம்

”இத்தாலியில் ராஜா நேரலை”(Raja live in Italy) என்ற தலைப்பின் கிழ் இந்த இந்த இசைக்கோர்ப்பைக் கேட்டேன்.இந்த இசைக்கோர்ப்பில் குரல் கிடையாது.இசைக்கருவிகளின் இசைப்பு மட்டும்தான்.இந்தக் கோர்ப்பு அவரின்
இசையில் வந்த ஒரு தமிழ்படத்தின் பாட்டுதான்.வழக்கமான ராஜாவின் ஜீனியசான இசை.ஜானகி சோலோ.பாடும் கதா பாத்திரத்தின்  உணர்ச்சிக்கொந்தளிப்பை உருக்கமாக வெளிப்படுத்தும் பாடலின்  வரிகள்.

நான் சொல்லப்போவதில்லை.கேட்டால் தெரிந்துவிடும்.இதன் சிறப்பு:
திருமணத்தில் முகூர்த்தத்தின் போது மணப்பெண் ஒரு விதமான ஒப்பனை கம் உடையில்  அழகாகக் காட்சியளிப்பாள்.அதே மணப்பெண் மாலை ரிசப்ஷனில் வேறு விதமான ஒப்பனை கம் உடையில் அழகாகக் காணப்படுவாள்.


 அது மாதிரி நம்மூரின்  வழக்கமான தமிழ் சோகப்பாட்டு இத்தாலியில் இசைஞானியின்  இசைக்கோர்ப்பால் அதே ஜாடையில் வேறுவிதமாக உருவெடுக்கிறது.இசைஞானி தன்னுடைய இசையையே இன்னும் மேம்படுத்தி கொடுத்ததுதான் இந்த இசைக் கோர்ப்பு.ரீமிக்ஸ் என்கிற வாந்தி இல்லை.ஒரிஜனல் பாட்டில்(5.20 நிமிடங்கள்)முதலில் மிருதங்கம்/ஆண் சோக ஜதிகள்/ ஜலதரங்கத் தட்டல்கள்.நடுவில் கிழிக்கும் வயலின்,புலம்பும் ஜானகியின் ஹம்மிங்குகள்.இடையிடையே வரும் சோக ஷெனாய்.கடைசியில் வயலின்,  ஜதிகள் பொறியாகப் புறப்பட்டு அடங்கும்.


இனி இசைக்கோர்ப்பு...............


முதலில் ”கும்” என ஒரு கிடார் தீற்றல்.அடுத்து வயலினில் ஒரு சோகமான இசைப்பு மிகவும் அற்புதம் அந்த வயலினைத் தொடரும் மற்ற உப வயலின்கள் என 4.20 நிமிடங்களுக்கு இசை சோக மழை.முழுவதும் வயலின் புலம்பலகள்.நடுவில் வேறு இசைக்கருவிகள்.

இது ஹிந்துஸ்தானி ராகத்தில் போடப்பட்டதாக ஒரு யூகம்.தவறு இருந்தால் திருத்தலாம்.ராகம் பெயர் தெரியவில்லை.
கேட்க & பார்க்க:
                                                  Raja Live in Italy

(நமக்கு முன்னாடி  ராஜா விசிறியார், பதிவர்  தமிழ்ப்பறவை கேட்டுருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்)

14 comments:

 1. ***
  மணப்பெண் ஒரு விதமான ஒப்பனை கம் உடையில் அழகாகக் காட்சியளிப்பாள்.அதே மணப்பெண் மாலை ரிசப்ஷனில் வேறு விதமான ஒப்பனை கம் உடையில் அழகாகக் காணப்படுவாள்.
  ****
  அதோடயே நிறுத்திட்டாரா ராஜா ?

  ReplyDelete
 2. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. நன்றி ரவிசார்...
  //(நமக்கு முன்னாடி ராஜா விசிறியார், பதிவர் தமிழ்ப்பறவை கேட்டுருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன்)//
  இப்போதுதான் கேட்கிறேன்.ராஜா ஒரு சர்க்கரைக்கடல்.துளிகளிலேயே மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் சுட்டிய துளி அழகு. நல்ல பகிர்வு...
  முழுக்கவே ஆக்ரமித்த வயலின் சிறப்பைச் சொல்ல வாயிலன்.திரைப்பாடலில் சூழல் கருதி வந்த ஜதிகள் மற்றைய இசையை விட, இந்த இசைக்கோர்ப்பில் அதற்குண்டான இடத்தில் வந்த இசை அருமை.
  3:30 நிமிடங்களில் தபேலாவும்,வயலினும் தனிப்போட்டி நடத்திய இடங்கள் இசை ராஜ்யம்.
  வெற்று வார்த்தைகளான மானே,தேனே காதல் கனிரசங்கள் எதுவும் தேவையில்லை ராஜ இசைக்கு.அவைகள் வந்ததால் மட்டுமே தமிழுக்குள்ளேயே முடங்கிப்போனது பண்ணைப்புரத்து ஆர்மோனியம்.
  மற்ற உலகத்தரங்களைக் கேட்டதில்லை. இருந்தும் சொல்வேன் இதுவும் முதல்தரம்...
  சட்டத்தின் ஓரத்திலிருந்து உள்ளே வரும் ராஜாவின் படம் சூப்பர்.
  மொத்தத்தில் நல்ல பகிர்வு,பதிவு...
  உங்களின் ஒப்பனை கம் உடை ஒப்பீடும் அழகுதான்...

  ReplyDelete
 4. சூப்பர்! அது சந்திரகௌன்ஸ் ராகம்! இந்த சுட்டியை
  தட்டுங்கள்! மூன்று வயது சிறு குழந்தை வாசிப்பதை:

  http://www.youtube.com/watch?v=5c8oYyxY1Sg

  ReplyDelete
 5. அப்படியே இந்த பாட்டையும் கேளுங்கள்! ஏதேதோ கற்பனை வந்தால் நான் பொறுப்பல்ல! ஞானிதான் பொறுப்பு:

  http://video.google.com/videoplay?docid=-6383599793523625904#

  ReplyDelete
 6. தமிழ்ப்பறவை said...

  // முழுக்கவே ஆக்ரமித்த வயலின் சிறப்பைச் சொல்ல வாயிலன்.//

  சூப்பர் போங்க!

  //திரைப்பாடலில் சூழல் கருதி வந்த ஜதிகள் மற்றைய இசையை விட, இந்த இசைக்கோர்ப்பில் அதற்குண்டான இடத்தில் வந்த இசை அருமை.//

  மிகவும் சரி.இதன் பைல் டவுன்லோடு செய்ய கிடைக்குமா என்று நான் தேடுகிறேன்.முடிந்தால் நீங்களும் உதவலாம்.ரவிஷாவையும் கேட்கிறேன்.

  அதே மாதிரி “தும்பி வா தும்ப குடத்தில்” இதன் இசைக்கோர்ப்பும் இங்குதான் (இத்தாலி)
  இசைத்துள்ளார் என்று நினைக்கிறேன்.பாடல் என்னிடம் உள்ளது.

  இசைக்கோர்ப்புத் தேட வேண்டும்.


  நன்றி.

  ReplyDelete
 7. September 16, 2009 1:31 AM
  ரவிஷா said...

  // சூப்பர்! அது சந்திரகௌன்ஸ் ராகம்!//
  நன்றி ரவிஷா.இரண்டு மூன்று இடங்களில் அந்த வயலின் உரசல்களில் இந்த ராகம் வெளிப்படுகிறது. சோகம் கம் விரகதாபத்திற்கான ராகம்?நீங்கள் ராஜாவை லைவ்வாக பார்த்திருப்பீர்கள்.

  // இந்த சுட்டியை தட்டுங்கள்! மூன்று வயது சிறு குழந்தை வாசிப்பதை//

  ஹார்மோனியத்துடன் சண்டைப்போட்டு சந்திரகௌன்ஸ் கொண்டுவருகிறது.சூப்பர்.

  ரவிஷா:

  //மிகவும் சரி.இதன் பைல் டவுன்லோடு செய்ய கிடைக்குமா என்று நான் தேடுகிறேன்.முடிந்தால் நீங்களும் உதவலாம்.ரவிஷாவையும் கேட்கிறேன்//

  முடியுமா?

  நன்றி.

  ReplyDelete
 8. சின்ன அம்மிணி said...

  //Thanks for this . Wonderfull//

  நன்றி சின்ன அம்மிணி.உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் கேட்கிறேன். என்ன பாட்டு அம்மிணி?

  ReplyDelete
 9. ரவிஷா said...

  //அப்படியே இந்த பாட்டையும் கேளுங்கள்! ஏதேதோ கற்பனை வந்தால் நான் பொறுப்பல்ல! ஞானிதான் பொறுப்பு//

  தல! இது சூப்பர் கிராமத்துப் பாட்டு.ஜேஸு/ஸ்வர்ணா
  பாடியது.மேற்கத்திய இசை கவுண்டர் பாயிண்ட்ஸ் மற்றும் நம்முடைய கிராமத்து இசை காம்பினேஷன்
  அட்டகாசம்.இவராலதான் முடியும்.

  ”மாமரத்தின் கிழிருந்து....” என்று ஸ்வர்ணா பாட்டின் உள்ளே வரும் இடம் சூப்பர்.கதாநாயகி பளிச்சென்று இருக்கிறார்.

  ReplyDelete
 10. தல - நன்றி ;))))

  ஏற்கனவே அந்த வலைப்பக்கம் பார்த்துட்டேன். இதையும் பாருங்கள்

  இசை தெய்வத்தின் பல முக்கிய படங்களின் பின்னனி இசையை நண்பர் ஒருவர் வலையேற்றியிருக்கிறார். அந்த தொகுப்பு உங்கள் பார்வைக்கு. நேரம் கிடைக்கும் போது பாருங்கள் - குறைந்தது 100+ இருக்கும் ;)

  http://www.youtube.com/user/yowan1977#grid/uploads

  இதில் குறிப்பிடும் படியாக மேற்கத்திய இசை அமைப்பாளர்கள் இசையும் அதே அளவுக்கு எந்த அளவுக்கும் குறைவில்லமால் நம்மோட இசைஞானி இசையும் எந்த அளவுக்கு இருக்குன்னு சில தனி வீடியோக்கள் இருக்கு. இந்த மாதிரி ஒப்பிடு பிடிப்பது இல்லை என்றாலும் உங்கள் பார்வைக்கு :)

  for Ex - http://www.youtube.com/watch?v=Ujm31AuT46A

  பிறகு இசை தெய்வம் மணிகண்டன் என்கிற ஒரு animation படத்திற்க்கு இசை அமைக்கிறார். அந்த படத்தில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுத்த வீடியோ காண இங்க செல்லுங்கள்

  http://www.youtube.com/watch?v=ar5qc0CFU8c

  இது ஒரு ஸ்பெசல் - michael jackson's moonwalk for illayaraja bgm

  http://www.youtube.com/watch?v=30F4eT34SRg

  ReplyDelete
 11. ரொம்ப நன்றி கோபிநாத்.மணிகண்டன் வீடியோ பார்த்து உள்ளேன்.yowan 1977 ராண்டம் ஆகப் பார்த்துள்ளேன். நீங்கள் சொல்லும் இரண்டையும் இப்போதுதான் பார்த்தேன். நல்லா இருக்கு.பார்க்காத மற்றதையும் ரசித்தேன்.

  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 12. //நன்றி சின்ன அம்மிணி.உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் கேட்கிறேன். என்ன பாட்டு அம்மிணி?//

  அழகு மலராட அபிநயங்கள் கூட
  இந்தப்பாடல் இடம் பெற்ற படத்தில் இன்னொரு அருமையான பாடல் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. படத்தில் எல்லாப்பாடல்களுக் அருமை என்பது வேறு விஷயம்.

  ReplyDelete
 13. நன்றி சின்ன அம்மிணி.

  //அருமையான பாடல் காத்திருந்து காத்திருந்து //
  ஆமாம்.

  //படத்தில் எல்லாப்பாடல்களுக் அருமை என்பது வேறு விஷயம்//

  சூப்பரான பாடல்கள்.”ராசாத்தி ஒண்ண” பாட்டை ரசிப்பின் அடுத்த நிலைக்கு போய் அதன் இடையிசை &முதலிசை கோர்ப்புக்களைக் கூர்ந்து கவனித்தால் போனால் பிரமித்து விடுவோம்.

  நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!