வருடா வருடம்
களிமண் பிள்ளையாரை
சம்பிரதாயமாக கடலில்
கரைத்துவிட மனம் இருந்தாலும்
வண்ணக் குடையை அவருடன்
அனுப்புவதற்கு மனது வரவில்லை
அவர் போனதும் பரணில்
தங்கிவிடுகிறது
அதைப் பற்றி
கரைந்தப் பிள்ளையார்
வருத்தப்பட்டதில்லை
அடுத்து வரும் அடுத்த வருட
புதுப் பிள்ளையாரும்
அலட்டிக் கொண்டதில்லை
பரண் மீறி ஏறிப்பார்த்து-
ஒன்றுக்கு நான்காக
பரணில் இருக்கும்
எல்லா குடைகளையும்
ஒருசேர தலைக்கு மேல் பிடி
என்றும் அடம் பிடித்ததில்லை
கடலுக்கு கரையக் கிளம்பும் போதும்
எல்லா குடைகளையும் கையோடு
எடுத்தச்செல்ல பிடிவாதம்
பிடிப்பதில்லை
கனவிலும் வந்து படுத்துவதில்லை
குற்றம் குறையில்லாமல்தான்
கடலில் கரைகிறார்
ஒவ்வொரு வருடமும்
புதுப் பிள்ளையாருடன்
புது குடையும் வாங்கப்படுவதால்
இந்த விஷயத்தில்
எங்களுக்கும் பிள்ளையாருக்கும்
ஒர்க் அவுட் ஆகிறது
நல்ல கெமிஸ்டரி
நம்ம வீட்டுலே இன்னும் பிள்ளையாரையே கரைக்கலை. சென்னையில் சுத்தமான கடற்கரையைத் தேடிக்கிட்டு இருக்கேன்.
ReplyDeleteகுடை அழகா இருக்கு. அதை மற்ற விக்கிரகங்களுக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு.
கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது:-))))))
துளசி கோபால் said...
ReplyDelete//நம்ம வீட்டுலே இன்னும் பிள்ளையாரையே கரைக்கலை. சென்னையில் சுத்தமான கடற்கரையைத் தேடிக்கிட்டு இருக்கேன்//
அப்படியா?
//குடை அழகா இருக்கு. அதை மற்ற விக்கிரகங்களுக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு//
எங்க வீட்ல ரொம்ப சிம்பிள்.படங்கள்தான்(ரெண்டே படம்தான்)
கருத்துக்கு நன்றி.
நன்றி தமிழ்ப்பறவை.
ReplyDeleteநல்லா இருக்கே.
ReplyDelete