Wednesday, September 23, 2009

ஸ்மைல் ப்ளீஸ்

அதைப் பார்த்ததிலிருந்தே ஏதோ ஒரு ஏக்கம் வாட்டி எடுத்தது கல்யாணிக்கு.ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது.

அவள் பார்த்தது முப்பது வருடத்திற்கு முன் எடுத்த ஒரு குரூப் போட்டோ. அரதப்பழசான போட்டோ.அரதப் பழசே ஒரு லட்சணம்தான்அந்த போட்டோவிற்கு.அவள் பள்ளியில் எடுத்தது.ஒன்பதாவது  வகுப்பு வருட இறுதியில் பள்ளி ஆண்டு விழாவிறகு முன் எடுத்த போட்டோ.மாணவ/மாணவிகள் சேர்த்து மொத்தம் 35 பேர் போட்டோவில்.

மகள் ஹரிணிக்காக புத்தகம் ஒன்றை தேட எல்லாப் பெட்டிகளையும் குடையும் போது இந்தப் போட்டோ அகப்பட்டது.ஹரிணியை விட்டு விட்டு இதில் முழுக ஆரம்பித்தாள்.

பின்னணியில் தொங்கும் ஏற்றலும் குறைச்சலுமாக தொங்கும் கந்தல் படுதா.அதன் முன்னால் தன் பள்ளி வகுப்புத்தோழி/தோழர்கள்.அனாதை ஆசிரம குழந்தைகள் போல முக பாவங்கள்.கிளாசில் செய்யுள் ஒப்புவிப்பதுப் போல கையைக் கட்டிக்கொண்டு போஸ்.கசங்கிய உடைகள்.போட்டோகிராபஃர் “ஸ்மைல் ப்ளிஸ்” சொல்லவே இல்லையா?உம்மென்று யார் முகத்திலும் சிரிப்பு சுத்தமாக இல்லை.போட்டோ என்றால் ஹிட்லரின் நாஜி முகாமா அப்போது? 


இவளுக்குதான் சிரிப்பு வந்தது.மனது முழுவதும் சந்தோஷ ஊற்றுக்கள் கிளர்ந்தெழ“so sweet"  சொல்லியபடி போட்டோவிற்கு முத்தம் கொடுத்தாள்.

ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து அடையாளம் கண்டு வருகையில் கூடவே  மக்கிப் போன பிளாக் அண்ட்ஓயிட் நினைவலைகள் பின் படுதாவில் ஓடியது. முடித்தவுடன் இந்த முப்பது வருட பழசு உடனே எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கிளப்பிவிட்டது.

ஏன் என்று இவளாள் இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.ஒரு வேளை இதுதான் முதலில் தோன்றிய அந்த இனம் புரியாத ஏக்கமா? பள்ளி படிப்பு முடிந்ததும் யாருடனும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அப்போது இல்லை.ஆனால் இந்த பிளாக் அன்ட் ஒயிட் பழசு அந்த எண்ணத்தை இப்போது கிளப்பிவிட்டது.

எங்கு போய் தேடுவது?உலகத்தின் எந்தெந்த மூலையில் இருக்கிறார்களோ?தன்னை மாதிரி இவ்வளவு பெரிய போஸ்டில் எவ்வளவு பேர் உயர்ந்தார்களோ?முகம் கொடுத்துப் பேசுவார்களா?இதே அலைவரிசை ஏக்கம் அவர்களுக்கு இருக்குமா?கல்யாணி ஊர் விட்டு ஊர் மாறி எங்கோ வந்து விட்டாள்.போட்டோவை பத்திரப் படுத்தி உள்ளே வைத்தாலும் அதில் உள்ளவர்கள் உயிரோடு கண் முன் வந்து கொண்டிருந்தார்கள்.

ஏதோ சாமிக்கு நேர்த்திக்கடன் போல் இந்த குரூப் போட்டோ உள்ள 35 பேரில் ஒருத்தரையாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் கல்யாணியைப் பிராண்டி எடுத்தது.குடும்ப உறுப்பினர்கள் ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத்தான் முடிந்தது.

அடுத்த இரண்டு நாளில் பல வித தேடல் முயற்சிகளில் இறங்கி இந்தப் போட்டோவில் இல்லாத கிளாஸ் டீச்சர் ஸ்டெல்லா ராணியின் விவரங்கள்தான் கிடைத்தது.போன் நம்பர் எதுவும் கிடைக்கவில்லை.கிடைத்த இதுவே அவளுக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுத்தியது.


தன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரத்தில்தான் டீச்சர் வீடு.தன் காரை எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு கிளம்பினாள்.


தேடிப்பிடித்து டீச்சர் ஸ்டெல்லா ராணியின் வீட்டை அடைந்தாள் ரொம்ப பழைய வீடு.ஆர்வத்துடன் காத்திருந்தாள்.டீச்சரும் வந்தாள்.ஸ்கூல் பழக்கத்தில் மரியாதையாக எழுந்து நின்றாள். டீச்சரின் வயது முதுமை கல்யாணிக்குப் பார்க்க சகிக்கவில்லை.இந்த கோலத்தில் கற்பனைச் செய்துப் பார்க்கவில்லை.கையில் ஸ்கேலோடு எப்படி கிளாசில் பாடம் எடுப்பார்.


 துக்கம் தொண்டையை அடைத்தது.டீச்சர் ரொம்பவும் ஒடுங்கிப்போயிருந்தார்.வேலைக்காரி உதவியுடன்தான் நடந்து வந்தார்.

”குட் மார்னிங்..மேம்!”பார்த்தவுடன் தன்னை அடையாளம் தெரியவில்லை.கல்யாணிக்கு வருத்தம்தான்.அறிமுகம் செய்து விவரம் சொன்னாள்.குரூப் போட்டோவைக் காட்டி அடையாளம் தெரிய சற்று நேரம் ஆயிற்று.இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு மனம் நெகிழ்ந்தார்கள்.

”விஷயம் தெரிஞ்சுதான வந்துருக்கயா கல்யாணி?”


“தெரியாது.என்ன விஷயம் மேம் ?”


“.................”


”அந்த போட்டோவ பாத்தியா?”

தன் எதிரே வரவேற்பு அறையில் மாட்டியிருந்த போட்டோவை நோக்கிக் கைக்காட்டினார் டீச்சர்.ஆர்வம் மேலிட எழுந்துப் பார்த்தாள் கல்யாணி.

சந்தோஷம் தாங்கமுடியவில்லை.அதே தன் சின்ன வயது பள்ளி வகுப்பு மாணவ/மாணவிகளின் குரூப் போட்டோ.ஆனால் வயது 25-26 இருக்கும். அடப்பாவிகளா! என்னை விட்டு விட்டு இவர்கள் டீச்சரைச் சந்தித்திருக்கிறார்கள்.பழைய போட்டோவில் தன் பக்கத்தில் இருந்த  சாம்பவி-அனுசுயா என்ற இரட்டையர்கள் மட்டும் இல்லை.மீதி எல்லோரும் இருந்தார்கள்.சே! மிஸ் பண்ணிட்டோம்.சற்று அவமானமாகக் கூட இருந்தது.

” சே! இவங்கெல்லாம் உங்க மேல குரு மரியாதை வச்சு சிரத்தையா அன்போடு ஒண்ணு சேர்ந்து உங்கள சந்திச்சுருக்காங்க...நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்.ஐ ஆம் அன் லக்கி மேம்..”

” நோ..நோ...! யூ ஆர்  வெரி லக்கி கல்யாணி...!”

“ஏன் மேம்?”

“ஒ,,,ஜீசஸ்....” என்று சொல்லி சிலுவை குறி போட்டபடி “இவங்க யாருமே உயிரோட இல்ல.என்ன சந்திச்சிட்டு  இவங்க ஒரு மலைப் பிரதேச டூர் போனங்க.மலையில் இருந்து பஸ் உருண்டு ஆத்துல விழுந்து எல்லோரும் இறந்துட்டாங்க”தட்டு தடுமாறி வார்த்தைகள் வந்தது.

“ஓ காட்! நம்பவே முடியல”அதிர்ந்து போய் தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.சே!இதைக் கேட்பதற்கா இவ்வளவு தூரம் மெனக்கெட்டது? ஒரு விதமான பயத்தில் உடம்பு லேசாக நடுங்கியது.அந்த குரூப் போட்டோ தன் பார்வையில் படாமல் இருக்க தலையை தாழ்த்திக்கொண்டாள்.

சோகமும் பயமும் கலந்த ஒரு விதமான தாக்கத்தில் பேச வார்த்தைகள் ஒன்றும் பிடி படவில்லை.
இருப்பும் கொள்ளவில்லை.ஐந்து நிமிடம் மெளனமாக ஓடியது.

திஸ் இஸ் வெரி வெரி சாட் அண்ட் குரூயல் மேம்.அப்புறம்....அந்த சாம்பவி-அனுசுயான்னு டிவின்ஸ் இருந்தாங்களே....அவங்க இப்ப எங்க இருக்காங்க மேம்.அட்ரஸ் தெரியுமா. ஐ வாண்ட் டு சீ தெம்?”

”அவங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் முன்னாடி கேன்சர்ல இறந்துட்டாங்க”சிலுவை குறிப் போட்டுக்கொண்டார்.


                                             முற்றும்



படிக்க கவிதை:புன்னகையில் நழுவும் காதல்


24 comments:

  1. ஐயய்யோ. அப்ப அடுத்தது கல்யாணியா ..ஆவ்வ்வ்

    ReplyDelete
  2. எதிர்பாராத முடிவு.நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. சின்ன அம்மிணி said...

    //ஐயய்யோ. அப்ப அடுத்தது கல்யாணியா ஆவ்வ்வ்//

    எனக்கு தெரியாது மேடம்?முற்றும் போற்றவுடன் நானும் கல்யாணியும் பிரிந்து விட்டோம்.கதையப் பத்தி ஒண்ணும் சொல்லலயே?

    நன்றி.

    ReplyDelete
  4. அருமை..
    எதிர்பாராத முடிவு..!

    ReplyDelete
  5. ஸ்ரீ said...

    //எதிர்பாராத முடிவு.நன்றாக இருக்கிறது.//

    நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  6. நன்றி பட்டிக்காட்டான்.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு சார்...
    முடிவு பிடிச்சிருந்தது..
    பட்டும்,படாமல் உங்கள் ஸ்டைல் கதை.

    ReplyDelete
  8. //எனக்கு தெரியாது மேடம்?முற்றும் போற்றவுடன் நானும் கல்யாணியும் பிரிந்து விட்டோம்.கதையப் பத்தி ஒண்ணும் சொல்லலயே?//

    என்ன மேடம்னு சொல்லி கிழவியாக்கப்பாக்கறீங்க. கதை நல்லாருக்கு. அதனாலதான் அடுத்தது கல்யாணியான்னு யோசிக்கவைச்சுது.

    ReplyDelete
  9. நன்றி கல்யாணி...சாரி...!சின்ன அம்மிணி.

    //என்ன மேடம்னு சொல்லி கிழவியாக்கப்பாக்கறீங்க//

    இது மரியாதைல சொன்னது.

    //ஐயய்யோ. அப்ப அடுத்தது கல்யாணியா//

    இந்த கதை எழுதத் தூண்டிய படம்(சுட்டி கிழே) பாருங்க.இந்தப் படத்த இந்த பதிவுக்கு மேல போடலாந்தான் இருந்தேன்.மனசு கேட்கல அடுத்து வம்பு எதுவும் வரக்கூடாதுன்னு.

    http://www.andhraassociationschool.com/history.html

    நன்றி.

    ReplyDelete
  10. தமிழ்ப்பறவை said...

    //நல்லா இருக்கு சார்...
    முடிவு பிடிச்சிருந்தது..
    பட்டும்,படாமல் உங்கள் ஸ்டைல் கதை.//

    நன்றி.

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு,
    உண்மையிலேயே எதிபார்க்கவில்லை இந்த முடிவு, நான் கற்பனை செய்தது வேறொன்று.

    ReplyDelete
  12. நன்றி எவனோ ஒருவன்.

    ReplyDelete
  13. ஆட்டோகிராஃப் படம் மாதிரி ஆரம்பிச்சு, Final Destination படம் மாதிரி முடிச்சிட்டீங்க.

    நல்ல திகில் கதை.

    ReplyDelete
  14. என்ன சொல்லன்னு தெரியலெ. ஏதும் சொல்லாம போகாதீங்கன்னு சொல்லிட்டீங்க.
    ஸ்மைல் ப்ளீஸ்னு சொல்லி அழ வைச்சுட்டீங்க
    சகாதேவன்

    ReplyDelete
  15. நன்றி சித்ரன்.

    ReplyDelete
  16. நன்றி சகாதேவன்.

    ReplyDelete
  17. நல்லா இருக்கு !!!

    ReplyDelete
  18. கருத்துக்கு நன்றி gulf-tamilan.

    ReplyDelete
  19. சா.கந்தசாமி அவர்கள் எழுதிய “தொலைந்து போனவர்கள்” படியும். மிகவும் அருமையாக இருக்கும்.
    உங்கள் கதை ஒரு த்ரில்லர் படம் பார்ப்பது போல இருந்தது. தொடருங்கள்

    ReplyDelete
  20. படித்திருக்கிறேன்.மறந்து விட்டது.

    கருத்துக்கு நன்றி பின்னோக்கி.

    ReplyDelete
  21. ஸ்மைல் ப்ளீஸுக்காக ஒர் சின்ன பதிவுலக விருது.

    http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html

    ReplyDelete
  22. நன்றி சின்ன அம்மிணி.உங்கள் பதிவில் பின்னூட்டம் போட்டாச்சு.

    ReplyDelete
  23. நல்ல ஃபுளோ ரவி சார்.எதிர் பாரா திருப்பம்.கடைசியில் வரும் குருப் போட்டோ படிக்கும் போதே கும்பகோணம் இன்ஸிடென்ட் மாதிரி ஏதோ அடுத்து வரப்போகுதுன்னு தோணுச்சு.

    ReplyDelete
  24. நன்றி நாடோடி இலக்கியன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!