Friday, September 4, 2009

அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா?
இந்த பிரபஞ்சத்தில் எல்லோருமே நிச்சியமாக ஆயுளின் ஏதோ ஒரு கணத்தில்    நின்று அதைப்பற்றி யோசனைச்செய்திருப்போம்.

எதைப் பற்றி?

இந்த பிரபஞ்சம் பற்றிதான்.

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?நாமெல்லாம் யார்? எப்படி வந்தோம்?எதற்கு வந்தோம்?கோடானகோடி அண்டங்களின் கதை-வசனம்-டைரக்‌ஷன் யார்?ஏதேதோ மனதில் யோசித்து விட்டு அடுத்த வேலைக்குப்போய்விடுவோம்.ஏன் என்றால் விடை தெரியாது.

ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.

ஒரு பானை இருந்தால் செய்தவன் (குயவன்),செய்வதற்கான கருவி (சக்கரம்),செய்யும் முறை,(சுத்திவிட்டு கையால் பிடிப்பது),செய்பொருள்
(களிமண்) (raw materials).


இந்தப் பிரபஞ்சத்திற்கு உண்டான Man,Machine,Method,Materials?வடமொழியில் ஒரு வஸ்துக்கு தேவை உபாதானம்,நிமித்தம்,ஸஹகாரி என்பார்கள்.


 500,00,00,000 கோடி வருடங்களுக்கு முன் சூன்யம் அல்லது எங்கும் தூசு மண்டலம் (தூசு எப்படி வந்தது?சூன்யம் ஏன்?).இத்தூசுகளுக்கு இடையே ஏற்பட்ட இயக்கத்தின் காரணமாகஇவைகள் ஈர்க்கப்பட்டு,மோதி விளையாடி,சுற்றி, சின்ன சின்னக் கோளங்களாக உருவாகி சுற்றத் தொடங்கின என்கிறது விஞ்ஞானம்..

அடுத்து நமது பூமி ஒரு பெருவெடிப்பில் (bing bang theory) சூரியனிடமிருந்து பல லட்சம் உஷ்ணத்தில் துண்டாகப் பிரிந்து பல கோடி ஆண்டுகள் மழை மற்றும் காற்றால் குளிர்ந்து ஏற்பட்டதுதான் என்கிறது விஞ்ஞானம்.


(இந்த பிரபஞ்சத்தில் நான் இருக்கும் தெரு எங்குள்ளது?)


பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா கடவுள்தான்.இவர்தான் பிரபஞ்ச காரணன்.பிரம்மாதான் படைத்தார்.விஷ்ணுதான் அட்மினிஸ்ட்ரேஷன்.சிவன்தான் அழித்தலைப் பார்த்துக்கொள்கிறார் என்கிறது என்கிறது மதம் .

மற்ற மதங்களும் அவரவர் கடவுள்கள்தான் என்று சொல்லுகின்றன.

ஜகத்மித்யா அதாவது உலகம்(ஜகம்) மாயத்தோற்றம்.நமது ஜீவாத்மா மாயத்தோற்றத்தில் மயங்கி இருக்கிறது.(கயிறு பாம்பாகத் தோற்றம் அளிக்கிறது மாயை என்ற போர்வையால்)மாயத்தோற்றம் நீக்கி பெருவெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவை இந்த ஜீவாத்மா உணர்ந்தால் ஒன்றும் கிடையாது./அஹம் பிரம்மாஸமி. அதுதான் இது தத்வமஸி என்கிறது வேதாந்தம்.
இதைத் தவிர பாட்டி, அம்மா, செவிவழி,சந்தமாமா கதைகள் நிறைய உண்டு.


எப்படி தோன்றியது என்று எல்லாம் சொல்கிறது.ஏன் தோன்றவேண்டும் என்பதற்கு விடை இல்லை.

எதற்குப் பானை? புரியாத புதிர்தான்.

தெரியாமல் இருப்பதுதான் சுவராசியம் என நினைக்கிறேன்.

ஆனால் கலர்கலரான கோடானகோடி அண்டசராசரங்கள் அற்புதம்.வாயைப் பிளக்க வைக்கும் ஆச்சிரியம். அதை ரசிக்கவும் அதைப் பற்றி யோசிக்கவும் அறிவைக்கொடுத்த அந்த முகம் தெரியாத  “அனானி”க்கு நன்றி.
33 comments:

 1. நல்ல பதிவுதான்.இருந்தும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் சார்.
  இந்தப் பதிவுக்கும் அந்த அனானி வந்து கமெண்ட் போடறாரான்னு பார்ப்போம்..
  இங்கயும் குழப்பத்தோட ஒரு தம்பி புலம்புறாரு. நேரம் இருந்தா படிச்சுப் பாருங்க சார்...
  http://rainbowstreet-karthik.blogspot.com/2009/08/blog-post_19.html

  ReplyDelete
 2. 2001: A Space Odyssey பார்த்திருக்கிறீர்களா?
  தெளிவான Write-up. சாயல்கள் இருந்தாலும், எனக்கு ரொம்ப பிடித்த டாபிக் என்பதால், வாசித்துக்கொண்டே வந்தேன். படங்களும் அருமை.

  "இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்தாற்போல் சொல்லுகிறார்களே... எப்படி?"
  -சுஜாதா.

  ReplyDelete
 3. தமிழ்ப்பறவை said...
  //நல்ல பதிவுதான்.இருந்தும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் சார்.//

  இந்த பிரபஞ்சம் எல்லோர் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட விஷயம் சார்!

  //இந்தப் பதிவுக்கும் அந்த அனானி வந்து கமெண்ட் போடறாரான்னு பார்ப்போம்.//

  அவர் flying saucerல் வருவாரா?

  நன்றி.

  ReplyDelete
 4. இந்த பிரபஞ்சம் உருவானது இயற்கையான விடயம்... இயற்கையை யாராலும் உருவாக்க முடியாது... அப்படி உருவாக்கி இருந்தால் அது செயற்கையாகிவிடும்!!

  ReplyDelete
 5. வெங்கிராஜா | Venkiraja said...
  //2001: A Space Odyssey பார்த்திருக்கிறீர்களா?//

  இல்லை. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்ல பதிவு. :)

  சில விஷயங்கள் வேறு மாதிரி சொல்லப்படும். உதாரணத்திற்கு பிக் பாங் பூமி சூரியனிலிருந்து பிரிந்ததை (?) பற்றியதல்ல.

  ReplyDelete
 7. நன்றி தமிழ்ப்பறவை. :)

  ReplyDelete
 8. படைக்கவும் செய்து தன்னால் படைக்கப்பட்டதையே தாம் எப்படிப் படைக்கப்பட்டோம் என்று யோசிக்கவைத்து குழம்பவைத்த பவர் அவர். மிகப்பெரிய படைப்பாளி. யோசித்தால் தீராது.

  ReplyDelete
 9. ஜாய்.. said...

  //இந்த பிரபஞ்சம் உருவானது இயற்கையான விடயம்... இயற்கையை யாராலும் உருவாக்க முடியாது... அப்படி உருவாக்கி இருந்தால் அது செயற்கையாகிவிடும்!!//

  சரிதான்.இப்படித்தான் என்று எப்படி ஆரம்பித்தது.கருத்துக்கு நன்றி ஜாய்.

  ReplyDelete
 10. சித்ரன் said...
  //படைக்கவும் செய்து தன்னால் படைக்கப்பட்டதையே தாம் எப்படிப் படைக்கப்பட்டோம் என்று யோசிக்கவைத்து குழம்பவைத்த பவர் அவர். மிகப்பெரிய படைப்பாளி. யோசித்தால் தீராத//

  நன்றி.

  ReplyDelete
 11. Karthik said...
  நல்ல பதிவு. :)

  //சில விஷயங்கள் வேறு மாதிரி சொல்லப்படும். உதாரணத்திற்கு பிக் பாங் பூமி சூரியனிலிருந்து பிரிந்ததை (?) பற்றியதல்ல.//

  நீங்கள் சொல்வது சரி கார்த்திக்.நான் சொன்னது தவறு.

  நன்றி.

  ReplyDelete
 12. தமிழ்ப்பறவை said...
  நல்ல பதிவுதான்.இருந்தும் என் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் சார்.//

  இவுருக்கு மட்டும்தான் அப்பிடிங்கறமாதிரியும், என்னவோ எனக்கு மட்டும் விளங்கிடுச்சுங்கிற மாதிரியும்.. சொல்றார் பாருங்க.

  ReplyDelete
 13. ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி//

  எக்ஸ்டண்டு செய்து அதை பிரபஞ்சத்திற்கு கொண்டு போவது என்னை பொறுத்த வரை ஏற்புடையது இல்லை !

  ReplyDelete
 14. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //இவுருக்கு மட்டும்தான் அப்பிடிங்கறமாதிரியும், என்னவோ எனக்கு மட்டும் விளங்கிடுச்சுங்கிற மாதிரியும்.. சொல்றார் //

  "வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்”
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. Prakash said...
  //ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி//

  எக்ஸ்டண்டு செய்து அதை பிரபஞ்சத்திற்கு கொண்டு போவது என்னை பொறுத்த வரை ஏற்புடையது இல்லை !

  கரெக்ட்.என்னுடையது ஒரு conditioned thinking.இதுவே இந்த பிரபஞ்சம் கொடுத்ததுதான்.

  ReplyDelete
 16. //ஏன் தோன்றவேண்டும் என்பதற்கு விடை இல்லை.

  எதற்குப் பானை? புரியாத புதிர்தான்.

  தெரியாமல் இருப்பதுதான் சுவராசியம் //

  வேதாத்திரி மகானின் வாக்கு

  தனி இடுகையாக போட்டு விடுகிறேன்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. அனானியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு , அனானியின் காரணி ( காரணன் ) யார் / எது ? ;)

  ReplyDelete
 18. அறிவியலில் ஆரம்பித்தீர்கள், ஆன்மீகத்தில் முடித்து வைத்து இருக்கிறேன். படித்து பாருங்கள் :))


  http://arivhedeivam.blogspot.com/2009/09/blog-post_06.html

  ReplyDelete
 19. //நீங்கள் சொல்வது சரி கார்த்திக்.நான் சொன்னது தவறு.

  நான் அப்படி மீன் பண்ணலைங்க. சொல்ல வந்ததை சரியா சொல்லலைனு நினைக்கிறேன். ஸாரி. :(

  ReplyDelete
 20. Karthik said...

  //நான் அப்படி மீன் பண்ணலைங்க. சொல்ல வந்ததை சரியா சொல்லலைனு நினைக்கிறேன். ஸாரி. :(//

  ஆமாம் கார்த்திக்.இதுவும் கரெக்ட்.

  ReplyDelete
 21. Prakash said...

  //அனானியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு , அனானியின் காரணி ( காரணன் ) யார் / எது ? ;)//

  ஒரு லெவலுக்கு மேல்(விஞ்ஞானம்/மெய்ஞ்ஞானம்) போக முடியாது.அதான் அதன் சூட்சமம்.


  September 5, 2009 10:55 PM
  நிகழ்காலத்தில்... said...

  அறிவியலில் ஆரம்பித்தீர்கள், ஆன்மீகத்தில் முடித்து வைத்து இருக்கிறேன். படித்து பாருங்கள் :))

  ReplyDelete
 22. நல்ல சிந்தனைதான்!!!!!!!!

  ///ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.////

  என்கதான்ப்ப இருக்காரு அவரு சீக்கிரம் சொல்லிடுங்க?

  பிரபஞ்சத்தை பற்றிய உங்கள் சிந்தனையை இங்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 23. லேசா புரியறாப்ல தோணுது.
  ஏன் இந்த குழப்ப சப்ஜெக்ட்டுக்கு போனீங்க?

  ReplyDelete
 24. இது ரொம்ப நல்ல பதிவுங்க

  ReplyDelete
 25. Kesavan said...

  //நல்ல சிந்தனைதான்!!!!!!!!//

  நன்றி கேசவன்.

  கும்க்கி said...
  //லேசா புரியறாப்ல தோணுது.
  ஏன் இந்த குழப்ப சப்ஜெக்ட்டுக்கு போனீங்க?//

  ஏங்க நல்ல சப்ஜெட்டுதாங்க. நன்றி

  ReplyDelete
 26. TKB காந்தி said...

  //இது ரொம்ப நல்ல பதிவுங்க//

  நன்றி.

  ReplyDelete
 27. //தெரியாமல் இருப்பதுதான் சுவராசியம் என நினைக்கிறேன்.//

  தெரிந்து கொண்டாலும் சுவாரசியம் குறையாது. தன்னை மறைத்து தன்னை வெளிப்படுத்துபவர் அல்ல இறைவன். தன்னை ஒளியாக்கி உணர்வில் உறையாது இருப்பவரே இறைவன்.

  மனிதர்களாகிய நமது சிந்தனையின் உச்சகட்டம் இறைவனை மறைந்திருப்பவனாகப் பார்க்கச் செய்தது.

  ஒன்றில் தொடங்கி வேறொன்றில் முடியும் எனும்போது தொடக்கமும், முடிவும் இதெல்லாம் ஏன் என்கிற விளக்கமும் அவசியப்படும். தொடங்கியதிலே சென்று முடியும் என்கிற நிலை இருப்பதால் எது தொடக்கம், எது முடிவு, இதெல்லாம் ஏன் என்பது அறிய இயலாதது.

  ஒரு செல் உயிரினம் தொடங்கி பல செல் உயிரினங்கள் வந்ததென சொல்லும் அறிவியல் பல செல் உயிரினங்களிலிருந்து ஒரு செல் உயிரினம் ஏன் போயிருக்கக்கூடாது என சிந்திக்கவும் செய்கிறது. விரிந்து செல்லும் அண்டவெளி மீண்டும் சுருங்கிப் போய்விடும் என அச்சுறுத்துகிறது அறிவியல். அன்றைய நிலையை இன்றைய நிலை கொண்டு சிந்தித்துப் பார்த்தால் என்ன பதில் கிடைக்குமோ அந்த பதில் மட்டுமே கிடைக்கும். இன்றைய நிலையைக் கொண்டு எதிர்கால நிலையை சிந்தித்துப் பார்த்தால் என்ன பதில் கிடைக்குமோ அந்த பதில் தான் கிடைக்கும்.

  காலம் இல்லாத போதிலே எல்லாம் தொடங்கியது என்பதை காலம் இருக்கும் போது கணக்கிட்டால் சரிவராது என்பதை அறிவோம்.

  ஏன் தொடங்கியது என்பதற்கான விடை மிகவும் எளிது, முடிய வேண்டும் எனத் தொடங்கியது, முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

  நல்லதொரு சிந்தனைக்கு நன்றி ரவிசங்கர் அவர்களே.

  ReplyDelete
 28. வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே.
  நீண்டதொரு விளக்கத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 29. கலக்குங்க!
  //பிரபஞ்ச சிருஷ்டிகர்த்தா கடவுள்தான்.இவர்தான் பிரபஞ்ச காரணன்.பிரம்மாதான் படைத்தார்.விஷ்ணுதான் அட்மினிஸ்ட்ரேஷன்.சிவன்தான் அழித்தலைப் பார்த்துக்கொள்கிறார் என்கிறது என்கிறது மதம் .

  மற்ற மதங்களும் அவரவர் கடவுள்கள்தான் என்று சொல்லுகின்றன.//

  வரிசையில இந்த இடுகை தலைப்பில் உள்ள பெயரையும் சேர்த்துக்கலாம்!

  ReplyDelete
 30. ஊர்சுற்றி said...

  //வரிசையில இந்த இடுகை தலைப்பில் உள்ள பெயரையும் சேர்த்துக்கலாம்!//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 31. எனக்கும் இந்த மாதிரி சிந்தனைகள்...! சின்ன வடசில் ஏற்ப்பட்டதுண்டு. அதே மாதிரி பேரு வெடிப்பு கொள்கையிலும் பெருத்த சந்தேகம். அறிவியலாலர்கள் சொல்லும் கோட்பாடு ஒரு சிறிய மிகுந்த பொருண்மை உடைய ஒரு சிறு புள்ளி வெடித்து சிதறி, இந்த பிரபஞ்சம், கோள்கள எல்லாம் அந்த வெடிப்பு சித்ரலால் உரிவானது என்கிறார்கள். அதாவது அந்த வெடிப்புக்கு பின் என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்து கொள்ள என்து மனம் ஒத்துகொல்கிறது. ஆனால் அந்த வெடிப்புக்கு முந்திய மைக்ரோ செகண்டை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு அடர்ந்த அணுக்கரு வெடித்து இந்த பிரபஞ்சம் விண்வெளி என்ற எல்லை இல்லாத ஒன்று உருவானது என்றால் அந்த அடர்ந்த அனுவானது எதில் இருந்தது. அது எங்கு (space or medium or whatever it is) இருந்தது? ஐயோ திருமப்வும் ரொம்ப குழப்புதே...!
  என்து சிரமம் புரிகிறதா நண்பர்களே?

  ReplyDelete
 32. மன்னிக்கவும் நண்பர்களே. நிறைய எழுத்துப்பிழைகள். கவனிக்கவில்லை.

  ReplyDelete
 33. நன்றி சி.பி.பழனிசாமி

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!