Wednesday, September 30, 2009

மீனும் எமெர்ஜென்சி விளக்கும்





பூட்டிய
பிரம்மாண்டபங்களாவின்
உட்புறம்
மேலும் கீழுமாக
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமும்
சில சமயங்களில்
ஓரங்களில் நின்று
உற்றுப் பார்த்தபடி
தன்னந்தனியாக
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
ஓரே ஒரு
சின்னஞ்சிறிய
வண்ண மீன்
 ஒளிர்ந்துக்கொண்டிருக்கும்
எமெர்ஜன்சி விளக்கின்
ஒற்றை குழல் விளக்கைப்
பார்த்தபடி


படிக்க திரை விமர்சனம்:

“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”


18 comments:

  1. நல்லாயிருக்கு சார்..எழுத்து பிழைகளை சரி செய்யுங்கள்

    ReplyDelete
  2. ஓட்டு போட்டா தமிழ்மணம் ஏற்கவில்லை

    ReplyDelete
  3. தண்டோரா

    கருத்துக்கு நன்றி.பிழையை சரி செய்து விட்டேன்.
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    //ஓட்டு போட்டா தமிழ்மணம் ஏற்கவில்லை//

    இதற்கு நான் என்ன செய்யவேண்டும். மேலும்
    இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    நன்றி

    ReplyDelete
  4. ஹாய் ரவி..... நல்லா இருக்கு...... வாழ்த்துகள்

    ReplyDelete
  5. /கிழுமாக//

    கீழுமாக..

    ReplyDelete
  6. இதை கவனிக்கவில்லை.நன்றி தண்டோரா.மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  7. JACK and JILLU said...

    //ஹாய் ரவி..நல்லா இருக்கு....வாழ்த்துகள்//

    நன்றி.

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சார். தொட்டி மீன்கள் ரொம்ப ரொம்ப தனிமையானவை.

    ReplyDelete
  9. ம்ஹூம்.., எனக்குப் புரியலை சார்...

    ReplyDelete
  10. வெங்கிராஜா | Venkiraja said...

    //நல்லா இருக்கு சார். தொட்டி மீன்கள் ரொம்ப ரொம்ப தனிமையானவை//

    நன்றி வெங்கிராஜா.

    ReplyDelete
  11. தமிழ்ப்பறவை said...

    //ம்ஹூம்.., எனக்குப் புரியலை சார்//

    சும்மா ஒரு அமானுஷ்யம்.பூட்டிய வீட்டில் தொட்டியில் நீந்தும் மீனும்,பவர் போன பிறகு எரியும்
    எமர்ஜென்சி விளக்கும் அதில் ஒன்று பீயூஸ் போனது.

    ReplyDelete
  12. தனிமை என்னும் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்

    ReplyDelete
  13. கிறுக்கல் கிறுக்கன் said...

    //தனிமை என்னும் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்//

    ரொம்ப சரி.

    ReplyDelete
  14. வண்ண மீனாக ஒரு மாசமா சுத்த விட்டுடாங்க :(


    கொஞ்சம் யோசித்தால் அதுவே உண்மை , நிரந்தரம் என்று புரிகிரது . போதாகுறைக்கு ஆத்மானாம் புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்துள்ளேன் :)

    ReplyDelete
  15. நல்லாயிருக்குதுங்க!

    ReplyDelete
  16. Prakash said...

    //வண்ண மீனாக ஒரு மாசமா சுத்த விட்டுடாங்க//

    வருத்தமா இருக்கு.

    //கொஞ்சம் யோசித்தால் அதுவே உண்மை , நிரந்தரம் என்று புரிகிரது . போதாகுறைக்கு ஆத்மானாம் புத்தகத்தை மட்டுமே எடுத்து வந்துள்ளேன்//

    ஆத்மாநாம் படிங்க நல்லா இருக்கும். இதில இன்னும் புரியாத கவிதைகள் இருக்கு. ஒரு நாள் புரியும்.

    நன்றி.

    ReplyDelete
  17. ஊர்சுற்றி said...

    //நல்லாயிருக்குதுங்க!//

    நன்றி.

    ReplyDelete
  18. ஸ்மைல் ப்ளீஸ் கதைக்காக ஒரு சின்ன விருது உங்களுக்கு.

    http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!