Tuesday, October 28, 2008

ஷேர் மார்க்கெட் ரவுடிகள்

ஷேர் மார்க்கெட் ரவுடிகள்-கவிதைகள்

காதில் கடுக்கனும்

தலை முடி கற்றையை

ரப்பர் பேண்டில் முடிந்து

பின்னல்போல் முதுகில் விட்டு

ஆட்டோவிலிருந்து FII க்கள்

இது எவ்வளவு ?

சில இடது விரல்களை

விரித்து காட்டி கேட்டார்கள்

சொன்னேன் - "அடிங்கடா இவன"

அடித்தார்கள் , அடித்தார்கள்

தெளிய வைத்து - மறுபடியும்

ஜனவரியில் 21000 புள்ளிகள் என்று

" மகர ஜோதிகாட்டிய புள்ளிகள்

ஆறிப்போன புண் தழும்புகளின்

மேல் அடித்தார்கள்,அடித்தார்கள்

தெளிய வைத்து, தெளிய வைத்து

அவர்கள் ஊரில் வாங்கிய

அடிகளை இங்கு வந்து

ஓட ஓட மடக்கி மடக்கி

"வூடு" கட்டி அடித்தார்கள்

அம்பானிகளும்,மிட்டல்க்ளும்

ராகேஷ் ஜுன் ஜுன் வாலாக்களும்

வாடியாக்களும், பஜாஜ்களும்

தப்பவில்லை இந்த முறை

ஜெனரல் வார்டில் - பல சிராய்ப்புகளும்,

சில உள் காயங்களுமாக

ICU வில் ரவுண்ட்ஸ் வந்த

டாக்டர் என் கைப்பிடித்து

2025குல் சரியாகிவிடும் என்றார்

.கே .ரவிஷங்கர்

7 comments:

  1. நீங்க என்ன கவிஞர்ன்னு சொல்லிட்டிங்க. பதிலுக்கு நான் உங்கள சொல்லியே ஆகனும். நிறைய வரிகள் இருக்கு. என்ன விட பெரிய ஆள்தான் நீங்க.

    ReplyDelete
  2. கவிஞ்சன்னு சொல்லலே. நல்ல நகைச்சுவை எழுத்தில் இருக்கிறது
    என்று சொன்னேன் . நன்றி என்னுடைய வலைதளத்திற்கு விசிட் செய்ததற்கு

    ReplyDelete
  3. வேறு பல முறைகளிலும் நீங்கள் கவிதை எழுதிப் பார்க்கலாம் :)

    ReplyDelete
  4. சாதாரண நடையில் இல்லாமல் கொஞ்சம் "கவித்துவம் "
    இருக்கிறமாதிரி சரியா சுந்தர் ? உங்கள் பதில் என்ன ?

    ReplyDelete
  5. சாதாரண நடையில் இல்லாமல் கொஞ்சம் "கவித்துவம் "
    இருக்கிறமாதிரி சரியா சுந்தர் ? உங்கள் பதில் என்ன ?

    ReplyDelete
  6. நடை அல்ல நான் சொல்ல வந்தது. விஷய கனத்தினால் மட்டுமே எழுதப்படுவது கவிதையாகிவிடாது இல்லையா?

    அப்புறம், உங்கள் கவிதைகள் ஒரே மாதிரி இருப்பதுபோல் ஒரு ஃபீலிங் :)

    ReplyDelete
  7. நானே உண்ர்ந்தேன்.மாற்றி கொள்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!