Thursday, October 30, 2008

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது பிரச்சினையின் அடி வேருக்கு சென்று நிரந்தர தீர்வாக காண வேண்டும். அந்த பிரச்சனையை மேலோட்டமாக அணுகினால் நிரந்தர தீர்வு கிடைக்காமல் ,பிரச்னை அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் .

பிரச்சினையின் அடிவேர்க்கு எப்படி போவது?. ஒரு பிரச்சினை வரும்போது, ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? (5 ஏன்களுக்கு மேல் போகக் கூடாது) கேட்டு Drill down செய்து கொண்டே போனால் அடி வேர் வந்து விடும் . எப்படி?

(இந்த முறை பெரிய கம்பனிகளில்(TQM) பயன்படுத்த படுகிறது

கிழே பார்க்கலாம்:-

பிரச்சனை 1

வீட்டிற்க்கு (மழை நாளில்) இரவு ஏழு மணிக்கு வர வேண்டியவன் 11 மணிக்கு வந்தேன்.

(நாலு மணி நேரம் லேட் )

லேட்

ஏன் லேட்?

டிராபிக் ஜாம்

ஏன் டிராபிக் ஜாம் ?

ரோட்டில் தண்ணிர் தேங்கி டிராபிக் ஊர்ந்தது .

ஏன் தண்ணிர் தேங்கியது ?

கழுவு நீர் கால்வாய் வழியாக மழை தண்ணிர் ஓட வழியில்லை

ஏன் மழை தண்ணிர் ஓட வழியில்லை ?

கழுவு நீர் கால்வாய்யில் அடைப்பு.

ஏன் கழுவு நீர் கால்வாய்யில் அடைப்பு?

ஊரிலுள்ள எல்லா குப்பைகளும் விழுந்து

அடைத்துக்கொண்டு விட்டது./மற்றும் கால்வாய் சரியில்லை.

என்ன தீர்வு? அரசே யோசியுங்கள்!.

கிழிருந்து மேலே போய் பார்க்கலாம் (பிரச்சனை தீர்ந்தால் )

குப்பை போடப்படவில்லை

ஆதலால் அடைப்பு இல்லை

ஆதலால் மழை தண்ணீர் ப்ரீயாக ஓடுகிறது

ஆதலால் மழை தண்ணீர் தேங்கவில்லை

ஆதலால் டிராபிக் ஜாம் இல்லை

ஆதலால் லேட் இல்லை

நான் வீட்டிற்கு ஏழு மணிக்கு வந்து விட்டேன்


பிரச்சனை 2

என்னுடைய (Honda Activa ) வண்டி நின்று விட்டது


ஏன்? நின்று விட்டது ?

ஸ்டார்ட் ஆக வில்லை?

ஏன்? ஸ்டார்ட் ஆக வில்லை?

பேட்டரி வீக்

ஏன்? பேட்டரி வீக் ?

Distilled வாட்டர் இல்லை

ஏன்? Distilled வாட்டர் இல்லை?

பேட்டரி சர்வீஸ் செய்யவில்லை

ஏன்? சர்வீஸ் செய்யவில்லை?


பிரச்சினையின் அடிவேர் ------- periodical சர்வீஸ்

இந்த maintenance marthiyaal ,ஆட்டோவிற்கு 150/- செலவு

என்ன தீர்வு? யோசியுங்கள்.


பிரச்சனை – 3

என்னுடைய blog லுக்கே இல்லாமல் பழசாக இருக்கிறது .

ஏன்? பழசாக இருக்கிறது ?

நான் beginner டெம்ப்லேட் use செய்கிறேன்

ஏன்? beginner டெம்ப்லேட் use செய்கிறேன்?

இதை சரிபடுத்த முயற்சிப்பதில்லை

ஏன்? சரிபடுத்த முயற்சிப்பதில்லை?

எப்படி/எங்கு/ஏன் கேட்க வேண்டும் தெரியவில்லை

ஏன்? கேட்க தெரியவில்லை?

முயற்சிப்பதில்லை

ஏன்? முயற்சிப்பதில்லை

ஆர்வமில்லை

பிரச்சினையின் அடிவேர் - ஆர்வமில்லை

Blog காலமெல்லாம் பழசாகவே இருக்கும்

8 comments:

  1. ஸ்பாம் கவிதை, டீச்சர் கவிதை அருமை...எல்லாப் பதிவுகளும் interesting...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ந்ன்றி உமா,

    உங்களுடைய கருப்பு வெள்ளை பெண் லோகோ அருமை .சிம்பிள்.சின்னதாக் ரப்பர் பேண்ட் போட்டு பின்னலை முன் விட்டிருக்கலாம் .
    இதேமாதிரி oviyaaruna.blogspot.com ஓவியர் ம.செ. ஒட்டி அருணா வரைந்த ஓவியத்தை பார்த்து என்னுடைய கமெண்டை அங்கு பார்க்கலாம் .karuthu sollunkal.

    மீண்டும் நன்றி .உங்கள் வலைப்பதிவிற்கு வந்து படிக்கிறேன்.
    creative criticism இருக்கும்.

    ReplyDelete
  3. 2 நாட்களாக உங்கள் பதிவுப்பக்கத்தை என் மோசில்லாவை விட்டு மூடவில்லை.
    முழுதாக படித்தே தீர்வது என்ற தீர்மானத்தோடு உள்ளேன்.

    ReplyDelete
  4. நன்றி கிஷோர்!என் வலைப்பூ வருகைக்கு .

    சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்

    அன்புடன்
    கே .ரவிஷங்கர்

    ReplyDelete
  5. //Blog காலமெல்லாம் பழசாகவே இருக்கும்
    //
    பழசாக இருந்தாலும்,முகப்புப் புகைப்படத்துடன் அருமையாக உள்ளது.
    ஏன்?ஏஏஏஏஏன்?ஏன்?ஏன்?ஏன்?(5 ஆயிடுச்சா...? ஓ.கே)
    இன்னும் புதுப்பதிவு ஏன்(அடடா ஆறு ஏன் ஆயிடுச்சே..?) வரலை?
    காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  6. சுவாரஸியமாக எழுதும் திறன் இருக்கிறது உங்களிடம்......தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. 5 Whys' கான்செப்டை அழகாக சொல்லியுள்ளீர்கள், தொடருங்கள்.. வாழ்த்துகள்.!

    ReplyDelete
  8. தாமிரா,

    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!