என் டீச்சர் TVS-50 டீச்சரும் இல்லை
Scooty டீச்சரும் இல்லை
Bajaj-Kawasakiயில் யாரும்
கொண்டுவிடுவ்தும் இல்லை
தலையில் கொண்டையுடன்
கையில் குடையுடன்
பூப்போட்ட பார்டர் புடவையுடன்
மார்பில் அணைத்த
கரக்ஷன் நோட் புக்குகளும்
நடந்தே பள்ளி வரும்
பக்கத்து தெரு மரினா கிரேஸ் சில்வியா
கன்னியாகுமரி கிறிஸ்டியன் டீச்சர்
கருப்பாக இருந்தாலும் -களையான
முகத்தில் கருப்பு திராச்சை கண்களும்
எண்ணை மின்னும் தலையில்
சைடு வைகிடு எடுத்த தலை முடியும்
பாடம் நடத்துகையில்
ஏசுநாதர் சிலுவை போட்ட
தங்க செயின் மார்பில் ஆடுவதையும்
பிரா ஸ்ட்ரப்பை அடிக்கடி உள்ளே
தள்ளுவதும் பின் பக்கம் சரிபார்ப்பதும்
கடிகார பெண்டுலம் போல் ஆடும்
அலை அலையான நீண்ட கூந்தலின்
கடைசி நுனி வரை சென்று
நான்,ராபர்ட்,பரமேஸ்வரன்,சத்தியநாதன்,மணிவண்ணன்
எல்லோரும் சேர்ந்து
மொத்தமாக காதலித்தோம் .
ஒருவன் காதலித்தது – இன்னொருவனுக்குத்
தெரியாமல்.
கே .ரவிஷங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
பாவம் ஆசிரியர்கள்...மாணவர்கள் பாடம் கவனிக்கிறார்கள் என பாடம் நடத்துகிறார்கள்.ஆனால் ம்ம்ம்...என்னத்தைச் சொல்ல???
ReplyDeleteஅன்புடன் அருணா
நன்றி அருணா,
ReplyDeleteமதிப்பு வைத்து வந்து விமர்சனம் செய்ததற்கு.மேலோட்ட ‘Humour" தான் இதில் பார்க்க வேண்டும்.சென்சார் போர்டு பார்வை சத்தியமாக தேவையில்லை என்று
தாழ்மையுடன் சொல்லிக் கொல்கிறேன்.
சூப்ப்ப்ப்பர்....நீங்க ரொம்ப உணர்வுபூர்வமா அணுகி இருக்கீங்க....!!
ReplyDeleteவித்தியாசமான கவிதைங்க!
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
ReplyDelete"ஸ்பேம்/ரயில்வே கேட்”கவிதைகள் மற்றும் கட்டுரை பற்றி கருத்து சொல்ல வேண்டுகிறேன்.
கலக்கல் கவிதை. உங்கள் கவிதையை வாசித்ததுமே நீங்கள் ஒரு எழுத்தாளன் என்பதாக உணருகிறேன். பத்திரிகைகளில் எழுதுகிறீர்களா?
ReplyDeleteநன்றி!
அன்புள்ள லக்கி லுக்,
ReplyDeleteநீங்கள் வந்ததற்கு நன்றி.
கதை எழுதியிருக்கிறேன் 14 வருடங்களுக்கு முன்பு.
கவிதை இப்போதுதான் முதல் தடவையாக எழுதுகிறேன் .
வலைப்பூவில் வரும் சில கவிதைகளை பார்த்தேன் .மனதில்
ஒட்டவில்லை .நாமும் எழுதி பார்ப்போம் என்று முயன்றேன் .
அவ்வளுவுதான்.
ஸ்பேம்/ரயில்வே கேட்”கவிதைகள் மற்றும் கதை/ கட்டுரை பற்றி கருத்து சொல்ல வேண்டுகிறேன்.
October 27, 2008 9:58 PM
நன்றி
ஒரு வீடியோ பார்த்ததுபோல் இருக்கின்றது.
ReplyDeleteஎனக்கு ஒரு பௌடர் வாசனை கூட அடிக்கிறது ;)
நெடு நாட்களுக்கு பின் ஓர் நல்ல கவிதை வாசிப்பு....
ReplyDeleteநெறைய ஆண்களுக்கு முதல் காதல் அவனது வகுப்பாசிரியை தான் :)
அன்புள்ள மணிஸ்,
ReplyDeleteஎன் வலைக்கு(முதல் வருகைக்கு) வந்து கருத்து சொன்னதற்கு நன்றி