Friday, November 7, 2008

மழை போன பின்னும் மழை கவிதைகள்



குடை இல்லாத நாட்கள்


"மழை லேசாக தூர ஆரம்பித்தது"

"கிழ் வானில் ஒரு மின்னல் கீற்று"

"தொலை தூரத்தில் எங்கோ இடி சத்தம்"

"ஏதோ ஒரு மழை நாளில் தொடங்கியது"

"மழை விட்டும் தூவானம் விடவில்லை"

"கரு மேகங்கள் அலை திரண்டன"

மழை கவிதை - எழுத

தெரியாத நாட்களில்

சிறுகதைகளின் முதல் வரிகளாய்

அல்லது கடைசி வரிகளாய் .....





வானவில் சாட்சியாய்..........


மழை பெய்யும் தருணங்களில்

நீ என் நினைவுகளோடும்

நான் உன் நினைவுகளோடும்

இருந்ததற்கு சாட்சியாய்

தொலை தூரத்தில் வானவில்

எப்பொழுதும் இருபபதில்லை




டைட்டானிக்


ஒரு திடீர் மழை நாளில்

ஹோம் வொர்க் நோட்டில்

அவசரமாக கிழிக்கப்பட்டு

புவனா விட்ட கப்பல்

நெடுந்தூரம் மிதந்து போவதை

வாய் பிளந்து பார்த்துகொண்டிருக்க

ஒரு திருப்பத்தில் சற்று .....

புவனா போய் விட்டாள்

ஸ்கூல் வேன் ஏறி


ரங்கோலி

இடி...மின்னல் ...புயல்...

பேய் மழை பெய்து விட்டு

ஓய்ந்த ஒர் இரவு பொழுதில்

கோலமாவு... கோலமாவு... கோலமாவே.....



குடைக்குள் மழை (மனைவி)-1


குடைக்குள் மனைவி

பேசிக்கொண்டு நடக்கிறேன்

பழைய காதலியுடன்


குடைக்குள் மழை -2


மழைக்கு குடை பிடிக்க

படித்துக் கொணட நான்

இன்னும் படித்துக் கொள்ளவில்லை

மேல் நோக்கி தோகை விரித்து

குடைக்கு(ள்) மழை பிடித்தாள்

மகள் நித்யகல்யாணி

மழைக்கு குடை பிடிக்க

ப்டித்துக்கொள்ளாமல்.....

மைல் கல்


ஒரு மழை நாளில்

நனைந்த்தது மட்டுமல்ல

தூரமும் தெரியாமல்

கடந்து விட்டோம்

வானவில்லை.

மழைக்கு பின்னும் கவிதைகள்


பச்சையுமாய் ஈரமுமாய் குளிர்ச்சியுமாய்

தலை துவட்டாம்ல்

மரங்கள்.. செடிகள்... கொடிகள்

19 comments:

  1. அழகான கவிதைகள்! நல்லா இருக்கு...

    //பேப்பர் காகித கப்பல்// - redundant words.

    ReplyDelete
  2. நன்றி tkbg!நீங்கள் சொன்னது சரி. மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  3. எல்லாமே எளிமையா, இயல்பா இருந்தது. எனக்குப் பிடிச்சது குடைக்குள் மழை 1,2...

    ReplyDelete
  4. நன்றி தமிழ் பறவை.

    ReplyDelete
  5. மழையைப் போல் கவிதையும் குளிர்ச்சியாய் உள்ளது..பாராட்டுகள்!!

    ReplyDelete
  6. \\பச்சையுமாய் ஈரமுமாய் குளிர்ச்சியுமாய் தலை துவட்டாம்ல் மரங்கள்.. செடிகள்... கொடிகள்\\

    மறுபடியும் படிக்கத்தூண்டிய வரிகள்......அழகானதொரு கற்பனை:))

    அருமை!!

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. சட சட என சில நிமிடங்களில் பெய்து விட்டுப் போன மழையில் எத்தனை கலவையான உணர்வுகள் .. மழை மட்டுமே எல்லாரையும் நனைத்து மென்மையாக்கி விடுகிறது .

    அழகான கவிதைகள் :-)

    ReplyDelete
  8. அன்புள்ள ரெஜோ,
    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  9. அழகு....

    //மழைக்கு பின்னும் கவிதைகள்



    பச்சையுமாய் ஈரமுமாய் குளிர்ச்சியுமாய்

    தலை துவட்டாம்ல்

    மரங்கள்.. செடிகள்... கொடிகள்//

    இது கவிதைங்க..

    ReplyDelete
  10. You are a way too different!

    சிலிர்க்க வைக்கும் மழைத்துளிகள்
    கன்னத்தில் தெறிப்பது போல
    கண்களில் நிறைகிறது உங்கள் கவிதைகள்!

    ஓட்டைக்கூரையும் ஒழுகும் தாரையும் போல
    மழைக்கும் கவிஞர்களுக்கும் நெடுங்கால உறவு...
    உங்களுறவோ, ஓட்டைக்கூரையையும் ரசிக்க வைக்கிறது!

    இன்னும் எழுதுங்கள், வாசித்த பின்னும் நினைவில் இருக்கும் வண்ணம் இவை போல் ஆயிரம் கவிதைகள்!
    வாசிக்கக் காத்திருக்கிறேன்!
    :)

    -Mathu

    ReplyDelete
  11. மழையின் ஈரக் கசிவை சுவாசிக்க முடிந்தது உங்கள் கவிதை வரிகளில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அன்புள்ள தூயா,சதங்கா,ரெஜோ
    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  13. மழைக்கு குடை பிடிக்க

    படித்துக் கொணட நான்

    இன்னும் படித்துக் கொள்ளவில்லை

    மேல் நோக்கி தோகை விரித்து

    /குடைக்கு(ள்) மழை பிடித்தாள்

    மகள் நித்யகல்யாணி

    மழைக்கு குடை பிடிக்க

    ப்டித்துக்கொள்ளாமல்...../

    really superb

    ReplyDelete
  14. Hi all rain fans here! good to track you. I've written a Tamil poetry book on rain exclusively. the title is Mazhaiyuthir kaalam... for a brief glance please visit my site www.mashookrahman.com I'm selling the copies also... you can get it from me.

    ReplyDelete
  15. பச்சையுமாய் ஈரமுமாய் குளிர்ச்சியுமாய்

    தலை துவட்டாம்ல்

    மரங்கள்.. செடிகள்... கொடிகள்


    Kavithaigala Idhu,Tamizhin Varigale...Nanum Tamilan Enbathil Perumitham Kolkiren...Really Superb...Good Luck Sir....

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!