Tuesday, November 11, 2008

அதுதான் சஸ்பென்ஸ்........ கண்டுபிடியுங்கள்

  

  குறிப்பு: இந்த கவிதை ஒரு ஆங்கில poem தழுவி, சில மாற்றங்களுடன்    எழுதியுள்ளேன்.இந்த கவிதை எதைப் பற்றி. அதுதான் சஸ்பென்ஸ்...  கண்டுபிடியுங்கள்

                   குதிரை வீரன்

இரவு . கரு மேகங்களில் தோன்றி மறைந்து திரியும் நிலவு .ஒரு பாழடைந்த வீடு. வீட்டின் பக்கவாட்டில் உடைந்த கருங்கல் படிகளால் செய்த மாடி . செடிகளும் கொடிகளும் படர்ந்து..... வாசலில் தலை விரித்த மரம். அதன் பெரிய நிழல் வீட்டின் முன். வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு ஒத்தையடிப் பாதை, எங்கோ வளைந்து போய் மறைகிறது. நாய் குரைக்கும் சத்தம்.கொளக்.... கொளக்... கொளக்......

குளம்பொலி சத்தம்

ஒரு குதிரை வீரன்

அந்த வீட்டின் முன்

வந்து நிற்கிறான்

குதிரை திமிறுகிறது

லகானன பிடிக்ககனனக்கிறது

முன்னம் கால்களை தூக்கி.......

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

கேட்கிறான் குதிரை வீரன்

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

காற்றில்  எதிரொலி

மயான அமைதிக்கு - பிறகு

ஏதோ கிசு கிசுப்புகள்....

குறுக்கும் நெடுக்குமாக

அலையும் கால் ஒலிகள்

செல்லரித்தக் கதவு துளைகளிள்

தெரியும் கண்கள்

பின் கதவு தாளிடப்படும்

ஒசைகள் - வீட்டினுள்ளே

நிலவு மறைந்து போய்

உலகமே இருண்டது போல்

ஆக......................

வீட்டின் பக்கவாட்டில்

வருகிறான் குதிரை வீரன்

யாராவது வீட்டில் இருக்கிறீர்களா

பதில் இல்லை

எதிரொலியும் இல்லை

உங்களைத்தான்....உங்களுக்காக

ஒரு பரிசு பொருள் - மன்னர்

அன்பாக கொடுத்துள்ளார்

வாங்கிக்கொள்ளுங்கள்

உலகமே ஒடுங்கின அமைதி

தயவு செய்து கதவைத்திறங்கள்

................................................

................................................

மன்னித்து விடுங்கள்

கிளம்புகிறேன் நேரமாகிவிட்டது

வெகு தூரத்தில்.............

கொளக்.... கொளக்... கொளக்

.               என்ன சஸ்பென்ஸ்?

இந்த கவிதை குதிரை வீரன் அல்லது வீட்டில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றியோ மற்ற பொருள்களை பற்றியோ அல்ல.

ஒரு அடுத்தது-என்ன-நடக்கும் என்ற ஒரு மூன்று அல்லது நான்கு

நிமிட திகில் மட்டும். உணர்ந்தால் கவிதைக்கு வெற்றி.

 

இது  VI th std. (CBSE) English lessonஇல் வரும் poem.

 

 

9 comments:

 1. திகில் என்று சொல்ல முடியாவிட்டாலும்... அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை ஏற்படுத்திச் சென்றது உண்மை...தழுவல் கவிதை என்று நீங்கள் சொல்லாதவரை தெரிய வாய்ப்பில்லை...!!!

  ReplyDelete
 2. தமிழ் மணத்தில் இணைத்து விட்டீர்களா? www.tamilmanam.net

  ReplyDelete
 3. இனியவள் புனிதா,

  நன்றி.
  தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.
  இணைப்பதற்க்கு முன்னேயே blogspotல் பார்த்துவிட்டீர்களா?

  ReplyDelete
 4. நல்ல கவிதை...அடுத்து என்ன நடக்குமோ திக் திக் என்று இருந்தது..குதிரை, இரவு, அழைப்பு இதெல்லாம் கொஞ்சம் பயம் தரும்..ஏனென்றால் சின்ன வயதில் 'உம்மாண்டிக் கதைகள்' கேட்டு வளர்ந்தவர்கள் தானே நாம்..கல்கிக்கு அனுப்புங்கள் அல்லது நான் அனுப்பிவிடுகிறேன்..எனக்கு தனிமடலில் இக்கவிதையை அனுப்புங்கள் ரவி..id uparvathy@gmail.com..

  ReplyDelete
 5. நல்ல கவிதை

  ReplyDelete
 6. கவிதை நன்றாக இருந்தது.. ஆனால் போயம் கண்டுபிடிக்க முடியவில்லை...
  உங்கள் சிலபஸ் வேறு... எங்கள் சிலபஸ் வேறு...
  cbseஎ என்றால் என்னவென்று எனக்கு +2 படிக்கும்போதுதான் தெரிந்தது.
  எல்லோருக்கும் புரிகிறமாதிரி பரவலான பாடல்கள் கேளுங்கள் ரவி சார்...

  ReplyDelete
 7. தமிழ் பறவை அண்ணா!

  என்ன சொல்ல வறிங்க? ஒரே குழப்பம்? இந்த poem போன வருடம் 6th std CBSE.

  இந்த poem படித்து ,இது எதைப்பற்றி (விளக்க உரையை பிடிவாதமாக படிக்காமல்) நானே ஒரு நான்கு நாள் மண்டை காய்ந்து கடைசியில் கண்டு பிடித்தேன்?

  //புரிகிறமாதிரி பரவலான பாடல்கள் கேளுங்கள் //

  புரியலே!

  ReplyDelete
 8. சற்றுப் புரிதல் எனக்கே இல்லாமல் பின்னூட்டிவிட்டேன். விட்டுவிடுங்கள் சார்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!