Saturday, November 15, 2008

குட்டிக்கதை

     

             உங்கள நம்ப முடியாது சார்! 

மலைச்சிகரத்தின் மீது ஒரு நாத்திகன் நடந்து கொண்டிருந்த போது தவறி விழுந்து விட்டான்.பள்ளத்தில் விழுந்து ஒரு பாறை இடுக்கில் உள்ள ஒரு மரக்கிளையை விழும் போது பிடித்துக் கொண்டான்.தொங்கினான்.

உயிரை நடுக்கும் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. தொங்கியபடியே தனது நம்பிக்கையற்ற நிலையைச் சிந்தித்துப் பார்த்து நொந்து கொண்டிருந்தான்.

கிழே அதள பாதளம்.கிளையின் பிடிப்பும் நழுவிக் கொண்டிருந்தது. மனதில் ஒன்று தோன்றியது. இப்ப இருக்கும் நிலையில் கடவுள் மட்டுமே காபபாற்ற முடியும்.

எப்பொழுதுமே கடவுளை நம்பியதில்லை.இப்பொழுது அவர்தான் ரட்சகர். ஜெயோ,முகவோ,கேப்டனோ மற்ற யாரலும் காப்பற்ற முடியாது.

கடவுளை அழைத்தான்.

”கடவுளே! நான் இப்பொழுது நம்புகிறேன் காப்பாற்றுங்கள்!"

பதிலே இல்லை.

”என்றுமே நம்பியதில்லை. என்னை காப்பாற்றினால் இந்த ஷணத்திலிருந்து நம்புவேன்.24/7 நம்பிக்கை உண்டு”

கடவுள் மேகக்கூட்டத்திலிருந்து பேசினார்.

”நீ என்னை நம்ப மாட்டாய்”


”கடவுளே நம்புகிறேன் காப்பாற்றுங்கள்!”


”இல்லை ...இல்லை உன்னை பற்றி பலர் சொல்லியிருக்கிறார்கள்”

அந்த மனிதன் மீண்டும் கெஞ்சினான்.கதறினான்.

”இல்லை ...இல்லை நீ பொய் சொல்கிறாய்”

”சத்தியமாக நம்புகிறேன்!நம்புகிறேன்!நம்புகிறேன்!” போதுமா?
ஒரு மாதிரி அட்ஜ்ஸ் செய்து ஒரு கையால் சத்தியம் செய்தான்.கடவுளுக்கு நம்பிக்கை பிறந்தது.

”சரி, உன்னை நம்புகிறேன். காப்பாற்றுகிறேன் மரக்கிளையிலிருந்து கையை விட்டு விடு”


”கைய்ய விட்டா செத்துருவேன்.விடமாட்டேன்”.
முற்றும்


.....பெண் பார்க்க வந்தான் பையன். கூடத் தாயும்
தகப்பனும் தமையனும் வந்தார்கள்.

”தேவல” என்று தாயாரிடம் அடக்கமாகச் சொல்லி முகத்தில்
நிரம்பி வழிந்த ஆவலைத் தேக்கிக்கொண்டான் பையன்.”ஒரு பிடி குட்டையாக இருக்கலாம்;பரவாயில்லை” என்று வழக்கத்தையும் மீறாமல் நொட்டைச்சொல் சொல்லிச் சம்பந்தியம்மாள் தன்மையைக் காட்டிக்கொண்டாள் தாயார். தகப்பானார்,தாயார் பேச்சை ரசிக்காமல்,அதற்காக கோபித்துக் கொள்ளாமல் முகூர்த்தத்திற்கு நாள் பார்க்கச் சொன்னார்.தமையன் - கல்யாணமானவன் - தம்பியைக் கண்டு பொறாமைப்படாதவாறு மனசைக் கடிந்து கொண்டான். “இரட்டை நாடியாயிருந்த பெண்டாட்டி, கெட்டிக்காரி; இங்கிதம் தெரிந்தவள்” என்ற ஆறுதலில் குறையை அமுக்கிச் சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டான்.

“சண்பகப் பூ” சிறுகதை ...தி.ஜானகிராமன்


ஒரு ஹைகூ

60 வயது பெண்ணும் 20 வயது ஆணும்

        தனி அறையில்

        ரீமிக்ஸ்


6 comments:

 1. குட்டிக்கதை சூப்பர்.
  //”.போடா புண்ணாக்கு. விட்டா காலிடா”.//
  கடைசி வரி அவன் வேறுவிதமாகச் சொல்லி இருந்திருப்பான். நீங்கள்தான் சென்ஸார் பண்ணி மாற்றிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.

  ஹைக்கூ ரீமிக்ஸ் (வயிற்றைக்) கலக்கல்...

  //“இரட்டை நாடியாயிருந்த பெண்டாட்டி, கெட்டிக்காரி; இங்கிதம் தெரிந்தவள்” என்ற ஆறுதலில் குறையை அமுக்கிச் சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டான்.
  //
  இயல்பு மனிதர்கள்.

  ReplyDelete
 2. புத்தக வாசிப்பு பற்றிய தொடர் பதிவுக்கு உங்களைக் கேடகாமல் அழைத்து விட்டேன். மன்னிக்கவும்.
  விருப்பமும், நேரமும் இருப்பின் புத்தக வாசிப்பு பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும்.

  http://thamizhparavai.blogspot.com/2008/11/blog-post_6657.html
  please check details in the ablove link....thank you

  ReplyDelete
 3. புத்தக வாசிப்பு பற்றிய தொடர் பதிவுக்கு உங்களைக் கேடகாமல் அழைத்து விட்டேன். மன்னிக்கவும்.
  விருப்பமும், நேரமும் இருப்பின் புத்தக வாசிப்பு பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும்.

  http://thamizhparavai.blogspot.com/2008/11/blog-post_6657.html
  please check details in the ablove link....thank you

  ReplyDelete
 4. குட்டிக்கதை நல்லா இருக்கு

  ReplyDelete
 5. புலிக்கதை ஏற்கனவே வேற மாதிரி படிச்சிருந்தாலும்

  குட்டிக்கதை ரீமிக்ஸ் முறை நல்லாருக்கு

  நானும் முயற்சிப்பண்ணிப்பாக்கணும்

  ReplyDelete
 6. அவன் அட்லீஸ்ட் ஹிபோக்ரெட் இல்லை. நம்மில் பலர், கடவுளை நம்புவதாகச் சொல்லிக்கொண்டு, மரக்கிளையை விட்டுவிட தயங்குவோம்.

  "போடா புண்ணாக்கு" க்கு பதிலா "ஸாரி, கடவுள், பயமா இருக்கு" ன்னு அமுக்கி வாசிக்கும் கோழைகள் !

  கதை நன்றாய் இருந்தது.
  உங்கள் ஹைக்கூவும்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!