Monday, November 24, 2008

சட்டக்கல்லூரி மாணவர்கள் (பயணிகள்) கவனிக்கவும்


ஒரு கவிதை


பயணிகள் கவனிக்கவும்

ஒரு ரயில் நிறுத்தம்

கண்டிப்பாக ஐந்து நிமிடம்

நின்று கிளம்பி விடும்

நூறு ரூபாய் கொடுத்து

நான்கு சமோசாவும்  இரண்டு டீயும்

ஒரு கை கேட்கிறது

கேட்டதை கொடுத்து  மீதி சில்லரையும்

கொடுக்கிறார்  மறக்காமல்

இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்

கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட

கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்

அடுத்த ஸ்டேஷனில் நிற்காது

தீர விசாரித்து ஒரு கை

பத்து ரூபாயும் அறுபது காசுகளும்

எண்ணிப்பார்த்து கொடுத்து

வாங்கி கொள்கிறது 

சில கைகள் ஏதோ வாங்கிக்

கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்

உடைந்த நாணயங்கள்

தயிர் சாதத்திற்கு பதிலாக  லெமன் ரைஸ்

மாற்றிக்கொள்கிறது ஒரு கை

அந்த கைக்கு கூட்டி கழித்து

கூட குறைய இல்லாமல்

கொடுக்கிறார் துல்லியமான சில்லரை

இதை அந்த குப்பை தொட்டியில் போடு

என்ற ஒரு சொன்ன  - ஒரு

சிறுமி கைக்கு பணிகிறார்

ஊசிப்போச்சு என்று பாதி

சாப்பிட்டுவிட்டு மீதியை  நீட்டுகிறது

முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை

வண்டியின் கூடவே ஒடி

உள்ளே போய் அந்த கையைப் பர்ர்த்து

கொடுத்துவிட்டு பிளாட்பாரத்தின்

கடைசி சிமெண்ட் சதுர நுனியில்

உயிர்பிடித்து  இறங்கும் அவர்

சட்டக் கல்லுர்ரி வாசலில்

ஆயுதம் தாங்கிய் கைகளின்

ஏதோவொன்றின் அப்பாவாக

இருக்கலாம்.

  

8 comments:

  1. இருக்கலாம்.. இருக்கும்..

    ReplyDelete
  2. அசத்தலாக முடித்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் ரவி சார். படித்து முடிக்கையில் எனது அப்பாவின் ஞாபகம் வந்து போனது.
    தங்களின் அடுத்த பதிவு, 'நான், இளையராஜா, அந்திமழை, ஒரு வானவில்' கவிதை தங்களின் வலைப்பூ பக்கத்தில் தெரியவில்லையே...
    கூகுள் ரீடரில் படித்தேன்.வித்தியாசமாக இருக்கிறது.
    கவிதையூடே தாங்கள் கொடுத்த தகவல்களுக்கு நன்றி சார்(வசந்தா, ஹம்சாநந்தி, டி.வி. கோபாலகிருஷ்ணன்...)
    இனி அப்பாடலைக் கேட்கையில் இளையராஜா, மாதவி தவிர்த்து நீங்களும் உங்கள் தகவல்களும் எனக்கு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.

    ReplyDelete
  4. நன்றி தமிழ் பறவை.

    “இளையராஜா, அந்திமழை, ஒரு வானவில்”

    ஒரு மறு பரிசீலனைக்காக delete செய்து விட்டேன். மீண்டும் வரும்.
    Only a few changes.

    ReplyDelete
  5. நன்றி

    மங்களூர் சிவா,Ŝ₤Ω.,நாடோடி இலக்கியன் முதல் வருகைக்கு.

    ReplyDelete
  6. வணக்கம் ரவி.. உயிரோசையிலேயே பார்த்தேன். வலைப்பூ இப்பொழுதுதான் தெரியவந்தது. கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. ம்தன்,

    தேடி வந்து கருத்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி மதன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!