Tuesday, November 18, 2008

திடீர் ரசம் - யாரடீ நீ மோகினி



                   நான் ரசித்த கவிதை
                   
                    (எப்பவோ படித்தது)


                   திருமணங்கள் சொர்க்கத்தில்
                   நிச்சியக்கப்படுகிறது
                   என் திருமணம் மட்டும் ஏன்
                   செங்கல்பட்டில் நடந்தது
                   கேட்டான் ராமரத்தினம் 
                           
                  _____________XXX__________         



....மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம்
     இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு
     வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா... நான்
     பிறப்பதற்கு முன்.....என்னைப் பற்றி எனக்கு ப்ரங்ஞ்சையுண்டா ? 
     எனனைப்பற்றி,இப்போது என்னைப்பற்றியுள்ள சுழ் நிலைக்குத்தான்
     ப்ரங்ஞ்சையுண்டா ? 


                      கயிற்றரவு - சிறுகதை - புதுமைப்பித்தன் 



                 ______________xxxx______________________




       கிழுள்ள திடீர் ரசம்” செய்முறை விளக்கத்தில் ஒரு காமெடி
உள்ளது

            
       அது என்ன சொல்லுங்கள்?
                                      


                 திடீர் ரசம்” செய்முறை


       1.புளியை அரை மணி நேரம் தண்ணீரில்
         ஊற வைக்க  வேண்டும்.
               
       2.நன்கு பிழிந்து கரைசல் எடுத்துக் கொண்டு தண்ணீர் 
         சேர்த்து நீர்த்து 5 கப் தயாரித்துக் கொள்ளவும்.


       3.உப்பு,வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை
         நீங்கும் வரை 1அல்லது 2 நிமிடம் கொத்திக்க விடவும்.


       4.நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து
         ரசத்தில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து
         இற்க்கி வைக்கவும்.


       5.உடனடியாக மூடியால் மூடவும். சூடாக சாதத்துடன்
         பரிமாறவும் 


            
                ”அறு சுவை மதிய உணவுகள்” -  மல்லிகா பத்ரிநாத்.
                                                   
                 பக்கம் -170


            
                                               
           ___________ xxxxxxxxxxxxxxxxxx_______
        


                         படம்: யாரடீ நீ மோகினி
                         பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
                         இசை: யுவன் சங்கர்
                         பாடியவர்: உதித் நாராயண்




     நல்ல மெட்டு. நல்ல வரிகள். நல்ல இசை.நல்ல விஷுவல்
     ஆனால் தமிழ் தெரியாத T.R.மஹாலிங்கம் மாதிரி ஒரு”சேட்”குரல்.
       
     
     வழக்கமாக “மெய்க்கம், நெர்க்கம் ,ஒர்கோடி,
     போதம், சிருப்பம் “ என்று”பருவாயில்லை” தமிழில் ஒரு
     ஹதம்(கொலை). பாடலை ரசிக்கமுடியாமல்.


     இனி மேல் பாடகர்களை TNSPSC தேர்வு வைத்துதான் தேர்வு
     செய்யவெண்டும்.

     இவர் தப்பு தப்பாக பாடினால் படம் ஒடும் என்ற செண்டிமெண்ட் 
     உண்மையா? 
         
     ஓடாவிட்டாலும் “பருவாயில்லை”


 
____________xxxxxxxxxx___________



           


8 comments:

  1. மன்னிக்கவும். சரியாக அலைன் செய்யமுடியவில்லை. என்னுடைய
    templateல் பிரச்சினை.

    ReplyDelete
  2. //

    ”திடீர் ரசம்” செய்முறை


    1.புளியை அரை மணி நேரம் தண்ணீரில்
    ஊற வைக்க வேண்டும்.//
    ithuve sariya illeenga. thideer rasam , aanaa 30 mins wait pannanumaa?

    ReplyDelete
  3. தமிழுக்கு கொடி பிடிப்போர் ஏன் இதை கவனிப்பதில்லை.உததி பாடக் கேட்டால்..............கடவுலே...[ளே இல்ல லே]
    மற்றபடி வலைப்பூ சுவாரஸியமாகவே உள்ளது.

    ReplyDelete
  4. உதித் ஒரு தமிழ்க்கொலைஞர்.....
    'பெரியம்மா பொண்ண ரசிக்கலாம் தப்பில்லே...' விட்டுட்டீங்களே...
    //நெய்யில் நறுமண பொருட்களை வறுத்து பொடித்து
    ரசத்தில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து//
    என்கூட்ல நெய்யெல்லாம் சேர்க்கச் சொன்னா, விளக்கமாறு பிஞ்சிடும்....
    பாவம் ராமரத்தினம்... கிட்டத்தட்ட எல்லாருமே அப்படித்தான் ஏமாந்து போறாங்க போல...

    ReplyDelete
  5. திடீர் ரசம்” செய்முறை
    1.புளியை அரை மணி நேரம்
    //
    என்ன இது, இதுக்கு பேர்தான் திடீர் ரசமா.

    ஓடாவிட்டாலும் “பருவாயில்லை”//

    நம்மைச் சுற்றி நடக்கும் ஏகப்பட்ட பரவாயில்லைகளில் இதுவும் ஒரு
    “பருவாயில்லை”

    ReplyDelete
  6. ரசத்தில நறுமணப் பொருளா :O
    எங்கையோ இடிக்குது. இரண்டு அலைவரிசைகள் மாற்றி மாற்றி ஒலிபரப்பப் படும் பழைய காமெடி போல் இரண்டு பக்கங்களை தாறுமாறாய் ஒட்ட வைத்தது போல் ஒரு தெரிகிறது.

    வெல்லாம், நறுமணப்பொருள் எல்லாம் பொட்டு திடீர் ரசம் செஞ்சா, சாப்பிட வரவங்க திடீர்ன்னு காணாம போய்டுவாங்க ன்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  7. ஷக்திப் ப்ரபா,

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!