மெளன மொழி தேவதைகள்
ஒரு ஓரமாக
சுவரோடு சுவராக
அசையாமல் - ஒரு
அமானுஷ்ய அமைதியுடன்
நின்று கொண்டு கவனித்தேன்
யாரோ நுழைந்திருக்கிறார்கள்
மேகத்தில் நிலவு
நழுவுவது போல்
பக்கங்கள் நழுவும் கணங்களில்
புன் முறுவல்
புருவம் நெளிப்பு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
கண்கள் விரிய ஒரு கோபம் ....
மெலிதாக ஒரு உதடு கடிப்பு
இறுதியில் விரல்கள் சொடுக்கி
கடைசி பக்கத்திற்கு
வந்து விட்டார்கள்
இறுதியில் விரல்கள் முறித்து
ஏதோ தீவிர யோசனை....
உயிர் நுனியில் நின்று
காத்திருந்தேன் சுவாசம் அடக்கி
போய் விட்டார்கள்
சொல்லவில்லை
மறுமொழி
சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள்
இடது பக்கம் ஒடிக்க
அவளும் இடது பக்கம் ஒடிக்க
மாற்றி வலது பக்கம் ஒடிக்க
அவளும் வலது பக்கம்
ஒடித்து நேராக்கி
அவளும் நேராக்கி
மறுபடியும் இடது வலது நேர்
அவளும் இடது வலது நேர்
கடைசியாக
இருவரும் கால் ஊன்றி
தகவல் இடைவெளியை
ஒரு புன்னகையில்
சரி செய்துக்கொண்டே
கடந்து வந்து விட்ட
ஒரு திருப்பத்தில்
எந்த தகவல்
இடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப
எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா இரண்டாவது கவிதையை முடிச்சது சரியில்லையோ.. மொண்ணையா இருப்பதுபோல் ஒரு ஃபீலிங் :)அதுக்கு அப்புறம் நடக்கறதுதான் இதைக் கவிதையாக்கும்னு தோணுது.
ReplyDeleteமௌனமொழி தேவதைகள் .. அழகா இருக்கு..
ReplyDeleteமுதல் கவிதை அசத்தல்.. மௌன மொழி தேவதை எப்பவுமே ரசிப்புக்குரியதுதான்.. :))
ReplyDeleteஎனக்குப் பிடிச்சிருக்கு...என்னைப் பத்தி எழுதியிருக்கீங்க இல்லையா அதான்...ஹிஹிஹிஹி
ReplyDeleteமுத்து லட்சுமி கயல் விழி,
ReplyDeleteநன்றி உங்கள் முதல் வருகைக்கு
சுந்தர்,
மாத்திட்டேன். இதுல ஒரு காமெடி என்ன தெரியுமா? முதல்ல இப்ப மாற்றின வரிகள்தான் வைத்தேன். அப்புறம் அதை மாற்றி விட்டேன்.
மௌனமொழி தேவதைகள்
ReplyDeleteநன்றாக உள்ளது
எந்த தகவல்
ReplyDeleteஇடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப
:)))
மெளனமொழி தேவதைகள் மற்றும் சைக்கிள் புன்னகைகள்"
ReplyDeleteதலைப்பே ஒரு கவிதையாகத்தான் இருக்கிறது.
உயிர் நுனியில் நின்று
காத்திருந்தேன் :))))
சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள் :0-
சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள்
ReplyDeleteநன்றாக உள்ளது
நன்றாக எழுதுங்கள்
இரு கவிதை நிறையக் காதல்கள்...
ReplyDeleteமௌன மொழிதேவதைகள் எப்போதுமே இப்படித்தான்....
அருமை...
கவிதை எழுதுவானேன்! பின்னூட்டத்துக்கு ஏங்குவானேன்! நாமெல்லாம் திருந்த மாட்டோம். :)
ReplyDeleteஇரண்டாவது நல்லா இருக்கு.
அனுஜன்யா
ஒரு நாள் யோசித்தேன் .நாம் எழுதி பிறர் படிப்பதனால்தான் நெறைய பேர் எழுத வருகிறோம்.
ReplyDeleteஇல்லையென்றால் 99.999% வலைகள்
காலியாகிவிடும்.
உங்க கவிதையைப் படித்தப்பொழுது இன்னொரு கவிதையும் ஞாபகத்திற்கு வந்தது.
ReplyDeleteகுளிர்கால இரவொன்றில்
நிழல்கள் பனிசுமந்த வீதியில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டோம்
அவரவர்க்கான கவலைகளோடு
கடக்கையில் உலர்ந்த உதடுகள்
உதிர்த்த பரஸ்பரப் புன்னகை
இன்னல்களையெங்கோ
இடம்பெயற செய்தது
சற்றைக்கேனும்
- பாம்பாட்டி சித்தன்