Tuesday, March 22, 2011

இளையராஜா King of Mesmerising Musical Guitar



    கிடார் என்றால் என் மாணவ வயதில் மனதில் பதிந்த பிம்பங்கள்:
  1. கையில் கிடார் வைத்திருந்தால் மேலே உள்ளவர் மாதிரி நடை,உடை பாவனை இருககவேண்டும்.Hey.. you..! come to the stage yaar!sing a song with me? ஒரு மார்டன் பெண்ணைப் பார்த்து கத்த வேண்டும்(கிடாரைத் தீற்றிக்கொண்டே)
  2. கண்டிப்பா சுராங்கன்னிகா மாலு கண்ணா வா பாட்டுப் பாடனும்
  3. ஹோட்டல் காபிரே டான்ஸ் பாடல்களுக்கு இசைக்கப்படும் கருவி
  4. ஆங்கிலோ இந்தியர்கள்தான் இதை வாசிப்பார்கள்
  5. ஊட்டி பிக்னிக்கில் நெருப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்து காதலியைப் பார்த்து இசைக்கவேண்டும் அல்லது டாப்லெஸ் காரில் சட்டைபோடாமல் கையில் கிடார் வைத்துக்கொண்டு கோவா செல்ல வேண்டும்
  6. கிடார் கிறிஸ்துவ மதத்திற்கென்று உருவான இசைக்கருவி
  7. முஸ்லீம் அல்லது பாலைவனம்  போன்ற அரேபியன் வகை இசைக்கு உகுந்த கருவி
  8. திகிலுக்கு பின்னணியாக (மார்டர்ன் தியேட்டர்ஸ்/கர்ணன் படங்களில் எலெக்டிரிக் கிடார் பயன்படுத்துவார்கள்)
  9. ஸ்டைல் அல்லது ஜாலி என்றால் இதை கையில் பிடித்து போஸ் கொடுக்க வேண்டும்.
  10. சினிமா கல்லூரி விழாக்களில் கட்டாயம் இருக்கும்
  11. சினிமா கிடார் இசையெல்லாமே இதைச்சுற்றித்தான் இருக்கும்
  12. தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல.
90%  பழைய சினிமா  கிடார் இசையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுற்றி வந்தது.இந்திய கலாசாரத்திற்கு ஒவ்வாத இசைக்கருவி. அதுவும் அந்தக் கால குடும்ப செண்டிமெண்ட் படத்திற்கு கிடார் ஒத்துவராது.

மேற்கத்திய இசையில் உபயோகிக்கப்படும் கிடாரைப் பற்றி  அல்ல நான் சொல்லுவது. அது ஒரு தனி இசை உலகம்.


(வேட்டியோட கிடார்  வாசிக்கும் போஸ் கொடுத்த ஒரே நாள் இசைஞானிதான்)

இசைஞானி இளையராஜா தமிழ்ப் பட  கிடார் சம்பிரதாயங்களை உடைத்துத் தூள் தூள் ஆக்கினார்.எல்லாவற்றையும்  தலைகிழாகக் கவிழ்த்தார். கிடார் நரம்புகளை வித விதமாக அதிர வைத்தார்.

மனிதனுக்கு பத்து விரல்கள்தான் இறைவன் கொடுத்தார்.ஒரு வேளை இருபது விரல்கள் கொடுத்திருந்தால் ராஜா என்னவெல்லாம் செய்திருப்பார்.

நான் வீனஸ் அல்லது ஜுபிடர் கிரகத்தில் ஜாக்கிங் போவது போல் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் மென்மையான கிடாரில் “அதிகாலை நிலவே” மற்றும் “ ராமனின் மோகனம்” “இளைய நிலா” பாட்டினிடையே வித்தியாசமாக இசைக்க சாத்தியமுண்டு\என்று  கனவு கண்டதில்லை.

முதல் படத்திலேயே கிடாரை தைரியமாக வித்தியாசமாகப் பயன்படுத்தினார்.காரணம் இவரிடம் இருக்கும்  பலவித கருவிகளின் இசை இழைகளை பிணைக்கும் திறமை.


ஒரு அம்மா தன் குழந்தைகளைப் புரிந்து வைத்திருப்பதுப் போல இவர் எல்லா இசைக்கருவிகளையும் நுணுக்கமாகப் புரிந்துவைத்து ஆட்சி செய்திருக்கிறார்.செல்லம் கொஞ்சி இருக்கிறார்.அதில் ஒன்று கிடார்.இது நம்மூர் வீணையின் ரொம்ப தூரத்து கசின் என்று சொல்லலாம்.

இவர் முறையான  கிடாரிஸ்டும் கூட.கேட்க வேண்டுமா இசைக்கு?தந்தியின் அதிர்வுகளை inch by inch உணர்ந்திருக்கிறார்.He tamed the instrument like a circus man tamed Lion.எல்லாவிதமான மணமும் கொடுக்கிறார்.
நாரதர் கையில் வீணை
கிடாரில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் சின்ன நகத்தீற்றல் வருடலிலிருந்து எல்லா வகையான வருடல்களும் கிடார் தந்திகளில் வருடி இசையை பொழிந்திருக்கிறார்.பாட்டின் மெலடியை தனியாக திரியவிடவில்லை.

கவுண்டர்பாயிண்ட் கவிதைகளை கிடார் நரம்பில் தீட்டி இருக்கிறார்.

மிகைப்படுத்தவில்லை. கேட்டால் தெரியும்.பாடல்களோடு வாழவேண்டும்.

முக்கியமாக புளித்துப்போன  பிக்னிக் மற்றும் ஹோட்டல் கிளப்
பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுத்தார்.உதாரணம் “வான் எங்கும்”
(மூன்றாம் பிறை).

கவனிக்க வேண்டியது, பொழிந்த காலம் தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத காலம்.லேப்-டாப்பிலிருந்து பொழியவில்லை.ஆத்மார்த்தமாக இசைக்கப்பட்டது.

98% சதவீதம் அவர் பாடல்களில்  bass guitar பாட்டின் பின் தம்புரா சுருதி போல மெதுவாக ரீங்காரம் இட்டபடி இசைத்துக்கொண்டே பின் தொடரும். கவனமாக கேட்டால் ரசிக்கலாம்.
சதா என்கிற சதானந்த்
இவரிடம் சதானந்த்,சந்திரசேகர்,சாய்பாபா,டேவிட் ஜெயகுமார்(ஹாரிஸ் ஜெயராஜ் தந்தை),கங்கை அமரன்,ராதா விஜயன் மற்றும் சஷி போன்றவர்கள் கிடாரிஸ்ட்டாக பணிப்புரிந்துள்ளதாக வலையில் ஒரு செய்திப் படித்தேன்.
.
ராதா விஜயன்

 பாட்டு அல்ல.கடைசிவரை கட்டாயம் கேளுங்கள்(இதன் ஒலிப்பதிவு சூப்பர்)
 Guitar-SPB(16 takes).mp3


அன்னக்கிளி உன்ன தேடுதே(சோகம்-டிஎம்எஸ்) -அன்னக்கிளி-1976
00.11-00.25 முன்னணியில் ஒரு கிடாரின் சோகமும் பின்னணியில்(bass guitar) சோகமும்.
Guitar-AnnakiliUnnaiTMS-Sad.mp3

 Bass Guitar

கொடியிலே மல்லியப்பூ-கடலோரக்கவிதைகள்-1986
படத்தில் உள்ளதுதான் bass guitar இதை வைத்து முக்கால் பாட்டு இசைக்கிறார்.

உறுத்தாமல் பாட்டில் மயிலிறாக  அங்கங்கு வருடுகிறது.bass guitarக்கு என் அன்பு முத்தங்கள்.
Guitar-Kodiyile Malliyapoo.mp3

தத்தோம் தலாங்கு தத்தோம் - வெற்றிவிழா-1989
கிடாரே ஆச்சரியப்பட்டிருக்கும் “ நம்மிடம் இது மாதிரி ஒசையெல்லாம் வருமா?”தோல் கருவியின் வீரியத்தோடு கிடார் இசைக்கப்படுகிறது.அட்டகாசம்
Guitar-Thatthom Thalangu-Vetrivizha.mp3

அரும்பும் தளிரே - சந்திரலேகா-1995
பாட்டின் பின்னணியில் கிடாரின் நரம்புத் துடிப்புகள் அருமை.மிகவும் மென்மையான வித்தியாசமான உணர்ச்சிகள் கொண்ட பாட்டு.

0.45-1.03 வேறு ஒரு கிரகத்து இசை.பாட்டின் அதே மூடிலேயே இசையும். 0.50-0.55 கிடாரின் உணர்ச்சிகள் அருமை.பிரமிக்க வைக்கிறார்.
Guitar-Arumbum Thalire-Chandraleka.mp3

உத்தமபுத்திரி நானு-குருசிஷ்யன் - 1988
விதவிதமாக கலை உணர்வோடு மீட்டுகிறார்.வெளிப்படும் உணர்ச்சிகள் புல்லரிக்கிறது. தல ஒண்ணயும்  பிரியல!
Guitar-UthamaPuthiriNane.mp3

Mudhi Mudhi Ittefaq Se - Paa -2009 
0.46-0.57 மேற்கத்திய ஸ்டைல் வித்தியாசமாக கொடுக்கப்படுகிறது.இது மாதிரி நாம் கிடாரின் நாதத்தை கேட்டுருக்கிறமோ?

Guitar-Paa-MudhiMudhi-Shilpa.mp3

ராமனின் மோகனம் -நெற்றிக்கண்-1981
0.24-0.35 இடையில்(வேறு கருவி நாதத்திற்கு) இசைவாக மீட்டப்படுகிறது.கிட்டத்தட்ட வீணை மாதிரியே பயன்படுத்துகிறார்.சில சமயம் வீணையா கிடாரா என்று கண்டுப்பிடிப்பது கஷ்டம்.

கிடாரயே வீணை மாதிரி பயன்படுத்துவார் நண்பர் ரவி நடராஜன் சொன்னதுண்டு.ஒன்றுக்கொன்று வித்தியாசமான இசை கருவிகளின் நாதங்களை  இணைத்து ஒரு கெமிஸ்டரி உருவாக்குகிறார்.
Guitar-RamaninMoha.mp3

அதிகாலை நிலவே-உறுதிமொழி-1990
கிடார் தேனாக நாதத்தை இறைத்துக்கொண்டே போக மற்ற நாதங்கள் தேனீயாக மொய்க்கின்றது.ராஜாவின் அழகுணர்ச்சி(aesthetics)கிடார் தீற்றலில் மிளிர்கிறது
Guitar-AthikalaiNilave.mp3 

ஹே ராஜா-ஜல்லிக்கட்டு -1987
0.32-0.43கிடாரை வீணை மாதிரி மீட்டுகிறார்.முடிவிலும் ஆனால் வேறு மாதிரி.

தொடர்ந்து வரும் கிடார் தீற்றலில் 0.12ல் சர்ரென்று ஒரு வயலின் சரம் உருவிக்கொண்டு வந்து  0.19-0.24  கிளாசிகல் மணம் கொடுக்கிறது.Mindblowing maestro! 

Guitar-Jallikkattu-HeyRaaja.mp3


ஒரு சிரிகண்டால்(மலையாளம்) -பொன்முடிபுழையோரத்து-2005
முன்னணியில் வீணை நம்மை வருடுகிறது. பின்னணியில் கிடார் வீணையை வருடுகிறது.
Guitar-OruChirikandal--Ponmudipuzhayorathu.mp3
 
நிலா அது வானத்துமேலே - நாயகன் - 1987  
Guitar-Nila Athu Vanathu.mp3


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு - 16 வயதினிலே-1978
Guitar-Aatukuttimuttai.mp3
  
சிந்துநதிக் கரையோரம்-நல்லதோர் குடும்பம் -1979
Guitar-SindhunadhiKaraioram.mp3

குதிக்கிர குதிக்கிர - அழகர்சாமியின் குதிரை (ரிலிஸ்???)
Guitar-Kuthikkira Kuthikkira-Azhakarsamiyin.mp3

ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்-1978
0.03-0.08 கவுண்டர் பாயிண்ட்(பு.குழல்-கிடார்).0.17-0.25 இரண்டு கிடார் நாதங்கள் கேட்கிறது.ஏதோ வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார்.

Guitar-OruVaanavilPole-Katrinile Varum.mp3

மஞ்சள் அரைக்கும்போது -ஆளுக்கொரு ஆசை -1977
Guitar-AalukuOruAasai-Manjal.mp3

ஏஞ்சல் -கவரிமான்-1979
Guitar-KavariMaan-Angel.mp3

அழகான பூக்கள் - அன்பே ஓடி வா -1984
Guitar-Anbe Odi Vaa-AzhagaanaPookal.mp3

ராஜராஜ சோழன் - ரெட்டை வால் குருவி -1987
மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ்.00.23பாடல் ஆரம்பிக்கும் போது plainஆக கிடாரை தீற்றியபடி ஆரம்பிக்காமல் வரவேற்பில் தலையில் பன்னீர் தெளிப்பது மாதிரி ஒரு அழகுணர்ச்சி.

0.47-0.57 இடையில் கிடாரின் உரையாடல் டச்சிங்.இரண்டாவது 0.52கிடாரின் (சிந்த்?)நாதம் அப்படியே பேசுகிறது.Highly divine and soulful.
Guitar-RajaRajaChozhan.mp3

கவுண்டர்பாயிண்ட்  கிடார் கவிதைகள்:
(ஒரே சமயத்தில் இரு வேறு மெட்டுக்களை இசைப்பது.கேட்பதற்கு ஒன்றுபோல் தோன்றும்)

கவிதை-1

பூந்தளிர் ஆட - பன்னீர்புஷ்பங்கள்-1981

 நிஜங்களின் நடனத்தில் இணையாக  நிழல்கள் இசைக்கும் கவிதை
  (கிடார் vs கிடார் மற்றும் ஹம்மிங் vs கிடார் )
ஹம்மிங்கிற்கு இசைவாக கிடார் தீற்றல் வளமான கற்பனை.
Guitar-Poonthaliraada.mp3

கவிதை-2
தேன்பூவே பூ -அன்புள்ள ரஜினிகாந்த்-1984
புல்லாங்குழலும் கிடாரும் தேன் பூவில் ரீங்காரமிட்டபடி ரொமாண்டிக் கவுண்டர்பாயிண்ட் அதில் தளும்பும் இசையின் அழகு. 
Guitar-TheanPoove.mp3

மலையோரம் வீசும் -பாடு நிலாவே-1987
சோகத்திற்கு கிடார் மாற்றப்படுகிறது.
Guitar-Paadu Nilave-Malaiyoram.mp3

மயிலே மயிலே - ருசி கண்ட பூனை-1978
0.08-0.16 புல்லாங்குழலுக்கு தாளமாக கிடார்.0.44-0.54 ஹம்சத்வனி ராக சாயலில் நாதம். இந்தப்பாடலே  ஹம்சத்வனி ராகம் என்று யூகிக்கிறேன்.
Guitar-MayileMayile.mp3


உனக்கெனதானே இன்னேரமா-பொண்ணுக்கு ஊரு புதுசு-1979
Guitar-Unakenethaane Innerama.mp3

வானெங்கும் தங்க வீண் மீன்கள்- மூன்றாம் பிறை-1982
ஜானகி ஒன்றை ஹம் செய்ய பாஸ் கிடார் வேறொன்று ஹம் செய்கிறது.

Guitar-Moondram PiraiVaanengum.mp3

ஓ மானே மானே - வெள்ளைரோஜா -1983
Guitar-Oh Mane Mane.mp3
கிடார் விட்டு விட்டு சினனதாக வித்தியாசமாக தீற்றப்படுகிறது.0.27-0.35 கிடார் -புல்லாங்குழல் பேச்சு அருமை.முதலில்0.08-0.20 வயலினோடு உரையாடுகிறது.
Guitar-Oh Mane Mane.mp3

பிறையே பிறையே - பிதாமகன் -2004
Guitar-PirayeaPirayea.mp3

சினோ ரீட்டா -ஜானி-1980
Guitar-Sinorita I love Johnny.mp3

என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி-1993
Raja is the King of Romanticization.பாடல்களை ஓவராக romanticize செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு இவர் மேல்.நல்லதானே இருக்கு.
Guitar-EnnulleEnnulle.mp3

என்னம்மா கண்ணு-மிஸ்டர் பாரத்-1986
0.25 வரை முனகிக்கொண்டே வரும்Bass Guitar பின்னால் வேறுவிதமாக இசைக்கப்படுகிறது
Guitar-YennammaKannu-MrBharath.mp3

அந்திவரும் நேரம் - முந்தானை முடிச்சு-1983
கிடாரை  ஜாலிக் கருவி என்று நினைக்கிறோம் இதில் வயலின் போல் இசைக்கப்படுகிறது.சூப்பர்.அதுவே ஒரு கலவையுடன் கொடுக்கப்படுகிறது. உற்றுக்கேளுங்கள்.
Guitar-AndhivarumNeram.mp3

எங்கெங்கோ செல்லும் - பட்டாகத்தி பைரவன் -1979
Guitar-Engekengosellem.mp3
                          
என்னடி மீனாட்சி -இளமை ஊஞ்சலாடுகிறது-1978
சொன்னது என்னாச்சு?மீனாட்சி மேல் கிடாருக்குக் கோபமோ?
Guitar-YeenadiMeenaakshi.mp3

அழகே உன்னை -அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்-1979
Guitar-AzhageunnaiAradhanai.mp3

மாமன் மச்சான் - முரட்டுக்காளை-1980 
Guitar-MamanMachan.mp3

பழமுதிர்சோலை - வருஷம் 16 -1989

Guitar-Varusham16-Pazhamuthir.mp3

மனதில் என்ன நினைவுகளோ-பூந்தளிர்-1979
 Guitar-ManathilEnnaNinaivugalo-Poonthalir.mp3

ஊமை நெஞ்சின் சொந்தம்- மனிதனின் மறுபக்கம்-1986
Guitar-Oomai Nenjin-Manithanin Marupakkam.mp3

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா-1982
0.16-0.17 மற்றும் 0.28-0.29 சிக்கலானச் சின்னத்திற்றலில் இசையைக் கோர்க்கிறார். இதைக் காப்பி அடிப்பது கூட  ரொம்ப கஷ்டம் என்று யூகிக்கிறேன்.
Guitar-RojaveThalaatum.mp3

யார் யாரோ எனக்கு -செல்வி-1985
Guitar-Selvi-YaarYaaroi.mp3

மண்ணில் இந்த காதல் - கேளடி கண்மணி-1990
Guitar-MannilIndha.mp3
 
வனிதா மணி - விக்ரம் - 1986
எனக்குப்பிடித்தமான ஒன்று. இதில் 0.12-0.16 ஒரு அதட்டல் தொனியை உணர்வேன்.0.18-0.27 பிரமிக்க வைக்கும் இசைத் துளி. இதனிடையில் ஒவ்வொரு தீற்றலுக்குப் பிறகும் வரும் ஒவ்வொரு(18/20/22/24/27) சின்ன நாதமும் அருமை.ஆச்சரியப்படுத்தும் கற்பனை.மிஸ் செய்யாதீர்கள்.
Guitar-VanithaMani.mp3

காதல் மகராணி - காதல் பரிசு-1987
0.12-0.14 அருமை. 
 Guitar-Kaathal Maharani-KaathalParisu.mp3

ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்-1988
GuitarAadumNeram.mp3

சங்கீத மேகம் - உதய கீதம் -1985
என்ன ஒரு வித்தியாசம்.

Guitar-Sangeetha Megam.mp3

காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு-1984
கிடாரில் ஒரு கவிதை.ரொம்ப அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.ரஜினி ரொம்ப ஸ்மார்ட்.
Guitar-Kadhalin Deepam.mp3

பூவே செம்பூவே - சொல்லத் துடிக்குது மனசு-1988
கிட்டத்தட்ட 22 வருடமாக இந்த இசைப் பகுதியை ரூம் போட்டு பிரமித்துக்கொண்டிருக்கிறேன்.இவ்வளவு ரகளையில் இசை நாதங்கள் இருந்தாலும் மெலடி மற்றும் ஆத்மாவை மெயிண்டெய்ன் செய்கிறார். GuitarPooveSempoove.mp3

பூவாடைக் காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை-1983
Guitar-Gopurangal Saiva-Poovaadikaatru.mp3

காதில் கேட்டது - அன்பே ஓடி வா -1984
Guitar-KathilKettathu-Anbe Odi Vaa.mp3


செந்தூராப்பூவே - 16 வயதினிலே -1978
Guitar-SenthooraPoove.mp3

சுந்தரி நீயும் - மைக்கேல் மதனகாமராஜன் - 1990
Guitar-SundariNeeyum.mp3


”இளையநிலா”ஆவணப்படுத்த வேண்டிய ஒரு இசைக்கோர்ப்பு.


55 comments:

  1. Dear Ravi,

    Very Best Blog of U........... Raja vin Guitar ai - ipadi azhagaga eduthu sonnadhal......

    (வேட்டியோட கிடார் வாசிக்கும் போஸ் கொடுத்த ஒரே நாள் இசைஞானிதான்)

    enna oru Unmai Vaarthai............... Thank u Ravi.........

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  2. இப்படியான அற்புதமாக இளையராஜாவின் இசைத்தொகுப்புகளை நீங்கள் தொகுத்து வாயடைக்க வைத்தால் என்ன சொல்லிப்போவது.

    ReplyDelete
  3. கிட்டாரைப் பற்றி நீங்கள் மாணவப்பருவத்தில் நினைத்ததைப் போலவே நான் இப்போதும் நினைத்துவருகிறேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி...

    இன்னும் முழுதாகக் கேட்கவில்லை... கேட்டுவிட்டு வருகிறேன் சார்...நன்றி,,,

    ReplyDelete
  4. அ.உ.ஆ.. படத்தில் நானே...நானா பாடலில் தொடக்கத்தில் வரும் கிட்டார் இசையை தொகுப்பில் சேர்த்திருக்கலாம்...

    ReplyDelete
  5. நன்றி உஷா.படிச்சிட்டு வாங்க.

    ReplyDelete
  6. அருமையான‌ ப‌திவு..

    ம‌றுப‌டியும் ப‌ட‌த்தில் வ‌ரும் ந‌ல‌ம் வாழ‌, எல்லோரும் சொல்லும் பாட்டு ந‌ல்ல‌ கிடார் டியூன்ஸ்,

    ஆனால் எதை சேர்க்கிற‌து எதை விட‌ற‌துன்னு உண்மையிலேயே குழ‌ப்ப‌ம் ஆகி விடும்

    ReplyDelete
  7. Fantastic post Ravi
    Immediately when i saw that post was on guitar,i searched for Manadhil Enna from Poonthalir and it was there :)
    Interesting you have updated it till Raja's latest work Azhagarsamiyin Kudhirai..Great job..

    ReplyDelete
  8. raja said...

    // அ.உ.ஆ.. படத்தில் நானே...நானா பாடலில் தொடக்கத்தில் வரும் கிட்டார் இசையை தொகுப்பில் சேர்த்திருக்கலாம்...//

    ஒரு மாறுதலுக்காக வேறு பாட்டைப்போட்டேன்.
    இன்னும் இருக்கிறது.இரண்டு பாட்டு ஆடியோ தகராறு செய்துவிட்டது.

    ReplyDelete
  9. என்னத்த சொல்ல...

    நான் இன்னும் கொஞ்ச நேரம் மேல சுத்திகிட்டிருக்கேன்

    ReplyDelete
  10. இளையராஜாவின் கொலை வெறி ரசிகர் தவிர வேறு யாரும் இப்படி இசையை அனுபவித்து எழுத முடியாது. எனக்கு அவர் வயலினில் செய்த சாதனைகள் ரொம்பப் பிடிக்கும். 1980களில் வந்த பாட்டுக்களை இன்றும் கேட்டு இன்புற முடிவது இளையராஜாவின் இசையால் மட்டுமே.

    கிடார் பற்றிய உங்கள் அனுமானங்கள்தான் எனக்கும் முதலில் இருந்தது. குறிப்பாய் கிறிஸ்தவர்கள் வாசிப்பது :-)

    அருமை.

    ReplyDelete
  11. An excellent compilation of excellent compositions! இன்னும் பல விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்! இருந்தாலும் நல்ல கலக்‌ஷன்!

    ReplyDelete
  12. மனதில் தோன்றும் எல்லா விதமான உணர்வுகளுக்கும் இசைக்க கூடிய ஒருவர் இசை தெய்வம் தான் ;) எந்த விதமான மனஅழுத்தத்தில் இருந்தாலும் தன்னோட இசையின் முலம் மழையாக பொழிந்து எல்லாவற்றையும் அடித்து சுத்தம் பண்ணிவிடும் இசை தெய்வத்தின் இசை ;)

    இசை தெய்வத்தை அணுவணுவாக ரசித்து நீங்கள் எழுதும் எல்லா பதிவும் பெரும் இசை மழையே ;)

    நன்றி தல ;)

    \\கிடாரில் ஒரு கவிதை.ரொம்ப அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.ரஜினி ரொம்ப ஸ்மார்ட்.\\

    இந்த முழுபாடலையும் தொலைபேசியிலியே பாடிக்காட்டி நோட்ஸ் கொடுத்து முடிச்ச பாட்டு...அப்போது இசை தெய்வத்துக்கு பெரியாம்மை வந்தால் !

    ReplyDelete
  13. I thoroughly enjoyed this. PLEASE do take up the other instruments (flute, drums etc.) and create such posts. Music lovers like me will definitely appreciate your efforts.

    GIYAPPAN

    ReplyDelete
  14. Thanks a ton! I enjoyed it thoroughly. :)

    Aadhavan

    ReplyDelete
  15. பாராட்ட வார்த்தைக்களே இல்லை. இசைஞானியின் பாடல்களில் கிட்டாருக்கு கொடுக்கும் தனித்துவமே தனிதான். என் இனிய பொன்நிலாவே, இளைய நிலா பொழிகின்றது பாடல்களை நினைத்தாலே ஞானியை விட கிட்டாரே முன்னால் வருகின்றது.

    ஞானியின் படமும் அருமை.

    ReplyDelete
  16. Excellent Post Mr. Ravi. A big salute to you. I began to appreciate Raja's guitar work from Mr. Krish, who is an avid follower of Raja's guitar. Mention Sada Sir, Sasi Sir and Viji Manuel Sir, he will flow like a river speaking endlessly about these men's contribution to Raja.
    Now from your blog, i got some more insights in Raja's guitar. Guitar gets his due only from Raja.
    Hats off to you and keep posting more.

    ReplyDelete
  17. நல்ல அழகான தமிழில் எழுதி இருப்பது ராஜாவின் தேவசங்கீதத்தை ரசிப்பதில் இன்னும் இன்பம் சேர்க்கிறது. வாழ்க வாழ்க! - கிருஷ்ணன்

    ReplyDelete
  18. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி ஆதவன்

    ReplyDelete
  19. ஜோதி,

    //ஆனால் எதை சேர்க்கிற‌து எதை விட‌ற‌துன்னு உண்மையிலேயே குழ‌ப்ப‌ம் ஆகி விடும்//

    வயலின்(இரண்டுமே சூப்பர்)பதிவில் குழப்பம் வந்து என் பையனை விரலைத் தொடச்சொல்லி ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  20. நன்றி கானகம்

    நன்றி தமிழினியன்

    நன்றி ராஜீவ்

    ReplyDelete
  21. Giyappan,

    //do take up the other instruments (flute, drums etc.)//

    I have already done on flute and beats.

    Thanks.

    ReplyDelete
  22. நன்றி அனானி

    நன்றி லோகேஷ்(கிரிஷ் என்பவர் சினிமாவில் பின்னணிப்பாடும் கிரிஷ்ஷா?)

    நன்றி வந்தியத்தேவன்

    ReplyDelete
  23. கோபிநாத்,

    //இந்த முழுபாடலையும் தொலைபேசியிலியே பாடிக்காட்டி நோட்ஸ் கொடுத்து முடிச்ச பாட்டு...அப்போது இசை தெய்வத்துக்கு பெரியாம்மை வந்தால்//

    இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    (காதலின் தீபம்)கிடார் முடிந்ததும் கோரஸ் வயலின்... அட்டகாசம்.

    நன்றி.

    ReplyDelete
  24. ரவிஷா said...

    வாங்க ரவிஷா. ரொம்ப நாளாச்சு.

    // இன்னும் பல விட்டுப் போய்விட்டது என்று நினைக்கிறேன்! //

    I avoided certain known guitar pieces of Raja just for a change.

    Thanks Ravisha.

    ReplyDelete
  25. Absolutely a grand collection of songs listed here.....Keep it coming!!

    Songs have a different and wonderful meaning when we listen to it from others good suggestions...!

    ReplyDelete
  26. Your collections have many of my favourite songs too. The first one in my list is the "Kadalin deepa" song from the movie "Thambiku endha ooru" in which the violin part i enjoyed hearing all these days. Next time, when i hear the song, i will follow the guitar too. thanks for the list and the wonderful introduction to the world of guitar and people associated with it with B&W photos.

    ReplyDelete
  27. ராஜாவைப் பத்தி ஒரு வரலாறே எழுதலாம் உங்கள் பதிவுகலாய்த் தொகுத்தால். நன்றி...

    ReplyDelete
  28. நன்றி கேகே.

    முதல் வருகைக்கு நன்றி mira-arts.blogspot.com .
    கருத்துக்கும் நன்றி.

    //"Thambiku endha ooru" in which the violin part i enjoyed hearing all these days.//

    The fountain of chorus violin after the Guitar is awesome.It takes you thr stars inthe universe.

    ReplyDelete
  29. //தத்தோம் தலாங்கு தத்தோம் - வெற்றிவிழா-1989
    கிடாரே ஆச்சரியப்பட்டிருக்கும் “ நம்மிடம் இது மாதிரி ஒசையெல்லாம் வருமா?”தோல் கருவியின் வீரியத்தோடு கிடார் இசைக்கப்படுகிறது.அட்டகாசம் //

    ஆமாம். உணர்ந்திருக்கிறேன். வீரியம்தான்.

    இன்னும் எத்தனை டாபிக் வைத்திருக்கிறீர்கள்? கொட்டிக்கொண்டேயிருங்கள். கேட்டு மகிழ்கிறோம். நன்றி!

    ReplyDelete
  30. நன்றி Mohammed Rafi TMH

    ReplyDelete
  31. NALLA WRITING ABOUT ONE AND ONLY IR Guitar Works. I would like to add few more goodies from my side.

    1) Endrendrum Anandame - Kadal Meengal - MV
    2) Paadi Vaa Thendrale - Mudivalla Arambam - SJ
    ....
    Madhanraj M
    Bahrain

    ReplyDelete
  32. என்னைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் சிறந்த இசை அமைப்பாளர்
    பண்ணை புறத்தில் பிறந்த இளையராஜா அவர்கள்தான்
    by
    Kabeer

    ReplyDelete
  33. Awesome job,continue it

    ReplyDelete
  34. இதுவரை இசையை நான் ரசிப்பதாகவே நினைத்திருந்தேன் இப்பொழுதுதான் தெரிகிறது நாங்கள் கேட்கமட்டுமே செய்தோம் என்று..
    முடிந்தால் அடுத்தமுறை உங்களை போல் நானும் ரசிக்க முயற்சிக்கின்றேன்.. இசைஞானியின் கிட்டருடனான உங்கள் பயணத்திற்கு நான் அடிமை ஐயா.. தொடரப்போகும் நல்ல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. நன்றி மதன்ராஜ்.

    ReplyDelete
  36. //என்னைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் சிறந்த இசை அமைப்பாளர்பண்ணை புறத்தில் பிறந்த இளையராஜா அவர்கள்தான்//
    by Kabeer

    சத்தியமா இவரேதான்.சாட்சி அவரின் இசை.இசையின் எல்லா கூறுகளையும் பிரித்து மேய்ந்துவிட்டார்.

    நன்றி கபீர்.

    ReplyDelete
  37. மணி Trinco said...

    // இசைஞானியின் கிட்டருடனான உங்கள் பயணத்திற்கு நான் அடிமை ஐயா.. தொடரப்போகும் நல்ல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.//

    ஏற்கனவே உள்ள ராஜாவின் மற்ற பதிவுகளைப் பார்த்தீர்களா?

    நன்றி மணி

    ReplyDelete
  38. மை டியர் மார்த்தாண்டன் படத்தின் பாடல்களில் வரும் கிடார் இசையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  39. இளையராஜா
    இசையின் பிள்ளை இவர்,இறைவனாக‌ என் நெஞ்சத்தில் மாறிப் போனவன்,காற்று அலைகளை கிழிக்காமல்,என் காதருகே தேவ காணம் பாடியவன்.இதை தவிர சொல்லவதற்கு ஒன்று இல்லை தலைவா.
    உங்களின் இந்த படைப்பிற்கு என்ன சொல்லி வாழ்த்துவது.வார்த்தைகளே இல்லை.நன்றிகள் கோடி....

    ReplyDelete
  40. Dear Mr. Ravi,
    Mr. Krish is one of the 4000 odd members of ilaiyaraaja@yahoogroups.com which is moderated by Coimbatore based Doctor named Mr. Vijay Venkatraman, who is a passionate fan of Raja like us.
    logesh aravindan

    ReplyDelete
  41. மைதீன் said...
    // மை டியர் மார்த்தாண்டன் படத்தின் பாடல்களில் வரும் கிடார் இசையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதிவுக்கு நன்றி!//

    ஆமாங்க. இன்னும் நிறைய இருக்கு.பெரிய பிராஜெக்ட் மாதிரி செய்யனும்.200 மேல் போகும்.

    நன்றி

    ReplyDelete
  42. நன்றி எஸ்.மகராஜன்.உங்கள் ஊக்கங்கள் எனக்கு மிகப் பெரிய பலமாய் இருக்கிறது.

    ReplyDelete
  43. Anonymous said...


    // Mr. Krish is one of the 4000 odd members of ilaiyaraaja@yahoogroups.com which is moderated by Coimbatore based Doctor named Mr. Vijay Venkatraman, who is a passionate fan of Raja like us.
    logesh aravindan//

    Thanks for the information. I am also a member of Yahoo, but I very very rarely visit and participate.

    ReplyDelete
  44. I am sure you would have visited this page http://solvanam.com/?p=13585

    Regards,
    Aadhavan

    ReplyDelete
  45. நான் சொல்வனம் பக்கத்தைப் பார்க்கவில்லை.
    உங்களின் பகிர்தலுக்குப் பிறகுதான் பார்த்தேன்.மிகுந்த நன்றி ஆதவன்.

    ReplyDelete
  46. என்னவொரு ரகளையான ரசனை! கம்போஸ் பண்ணும்போது இவ்வளவு நுணுக்கமா ரசிப்பாங்களான்னு ராஜா நினைச்சிருப்பாரா? ஆனா அது சேர வேண்டிய இடத்துல சரியா சேர்ந்திருக்கு. இசை ரசிக்கும்படியா இருந்தாலும் உங்க ரசனை அதை விட ரசிக்கும்படியா இருக்குது. சூப்பர்!

    ReplyDelete
  47. நன்றி டென்சில்.

    ReplyDelete
  48. அண்ணா...நீங்க பதிவு போட்ட அன்னைக்கே கிட்டார் பதிவு முக்கால்வாசி கேட்டுட்டேன்...முழுசாய் இன்னைக்கு இப்போ கேட்டு முடிச்சேன்...அந்த பூ வாடை காற்று prelude இசை இன்னும் கேட்டுகிட்டே இருக்கிறேன்....ம்ம்...பெருமையா இருக்கு...இளையராஜா சார் இன் period இல் நாமும் இருக்கோம்னு...

    ReplyDelete
  49. whatey! work ,you are indeed a genius to write about genius's work

    ReplyDelete
  50. One one word i can say - THANK YOU

    ReplyDelete
  51. /எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!/

    சத்தியமாகப் போக வாய்ப்பில்லை. அற்புதமான பகிர்வு சகோ! இன்னும் நிறைய எழுதுங்கள்..! :-)

    வாழ்க இசைஞானி,

    இ.ப. :-)

    ReplyDelete
  52. நன்றி கிருஷ்

    நன்றி இசைஞானி பக்தன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!