Tuesday, March 15, 2011

எல்லாமே லேட்டுதான்/எல.ஆர்.ஈஸ்வரி/சர்வீஸ் மெக்கானிக்

புகைப்பிடிப்பதின் தீமையைப் பற்றி நிறைய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இப்போது திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளில் அந்த காட்சி வந்தால் "புகை உடல் நலத்திற்கு கேடு” என்று போடுகிறார்கள்.
 
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தயாநிதி மாறனின் தொலைக்காட்சியில் போடுவதில்லை.இது முழு நீள (கொடூர) நகைச்சுவை.
பழைய தமிழ்ப் படங்களில்(கருப்பு வெள்ளை) சிகரெட்டை ஊதி
ஊதித்தள்ளுகிறார்கள்.சிவாஜி,ரங்கராவ்,எம்.ஆர்.ராதா,டி.ஆர்.ராமச்சந்திரன்,பாலையா,டி.ஆர்.மகாலிங்கம்,
சந்திரபாபு,ஜெமினி,ஜெய்சங்கர்,நாகேஷ் என்றபடி
 
இது ஹாலிவுட் படங்களின் தாக்கம்.அடுத்து கதாநாயகன் சிகரெட் பிடித்தால் ஸ்டைல்.சகலகலாவல்லவன்.ரஜனி தன் நடிப்பின் ஒரு அங்கமாகவே அதை வைத்திருந்தார்.பள்ளி பருவத்தில் பென்சிலை வாயில் வைத்து பிடிப்பது மாதிரி ஸ்டைல் காட்டுவது ஒரு ஸ்டைல்.

அப்போது ஏன் இல்லை விழிப்புணர்ச்சி. எல்லாமே லேட்டுதான்.ரூம் போடாமல் யோசித்தது.
 _____________________________________________________________

 சிறு வயதில் ஹோட்டலில் ஜுஸ் குடிக்கும்போது  உறிஞ்சிக் குடிப்பதற்கு ‘ஸ்ட்ரா” கொடுப்பார்கள்.வாய் அருகே கவ்வி குடிப்பதில் சிறு வயதுகாரர்களுக்கு பிரச்சனை அருக்கும்.ஒட்டகம் மாதிரி கழுத்தை உயர்த்தி குடிக்கவேண்டும்.

அப்போது” வாய் வைக்கும் இடத்தில் கொஞ்சம் வளைஞ்சுருந்தா ஈசியாகக் குடிக்கலாம்” என் சித்திப்பெண் சொன்னபோது நாங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தோம்.


பிற்காலத்தில் அவள் சொன்னபடியே “ட” சைசில் வந்து குடிப்பதற்கு லகுவாகி விட்டது.”மாத்தி யோசி”த்தால் சிரிக்கிறோம்.
_______________________________________________________________

L.R.ஈஸ்வரியின் குரல் யாரிடம் இல்லாத அபூர்வமான குரல். “குடியிருந்த கோவில்” படத்தில் வரும் “துள்ளுவதோ இளமை” பாட்டு வாழ்நாளில் மறக்க முடியாத பாட்டு.பாட்டின் இசையும் அருமை.அதுவும் இரண்டாவது சரணத்தில் “வாய் பேச தோன்றுமா.... வாய்.... பேச தோன்றுமா...”சூப்பர்.சின்ன வயசுல அப்படியே போய் மனசுல பதிஞ்சுடிச்சா எக்கா!
 
அவர் குரலுக்கு பெரிய ரசிகன் நான்.இந்த பாடலில் ஒரு கர்நாடக கிளாசிக் டச் இருக்கும்.அடுத்து "அம்மம்மா கேளடி சேதி”(கருப்புப் பணம்) பாட்டு உருக்கும் பாட்டு.இவரைக் கேட்டு வளர்ந்ததால் மற்ற பெண் குரல்களின் ஆழத்தை அனுமானிக்க முடிகிறது.


_______________________________________________________________

கிழ் வரும் ஆடியோவில் இரண்டு பாடல்களின்  கிடார் இசை வருகிறது.என்ன படம்.00.07 க்கு பிறகு இரண்டாவது பாடல்.முதல் இசையில் கிடாருக்கு முன் வரும் இசை நாதம stunning!



 படங்களின் பெயர் என்ன?
_______________________________________________________________
சமீபத்தில் நண்பர் ஒரு பிரஷர் குக்கர் வாங்கினார்.அதில் ஒரு பிரச்சனை.போன் செய்து பிரச்சனையை சொன்னார்.சர்வீஸ் மெக்கானிக் பேசினார்.அவருக்கு ஒன்றும் தெரியாதாம். சர்வீஸ் என்ஜீனியர் வந்தால் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

போனை வைத்துவிட்டு "ங்கொய்யாலா.என்ன கம்பெனிடா இது?” என்றார்.

பிரச்சனை?

குக்கர் சமைத்து முடித்த பிறகு திறந்தால் உள்ளே சாதம் கொட்டிக்கிடக்கிறது.அவரே 10 நிமிட கிச்சனில்(ரூம் போடாமல்) பொதுப்புத்தியில் யோசித்து விடைக் கண்டுபிடித்தார்

மீண்டும் அவனுக்கு போன் செய்தார். பிரச்சனையையும் அதன் தீர்வையும் அவனிடம் சொன்னார். அவன் ஏதோ சொன்னான்.  ”டேய் ங்கொய்யாலா. என்று  இம்முறையும் சொல்லிவிட்டு வைத்தார்.

ஏன் இந்த ரெண்டாவது ”டேய் ங்கொய்யாலா”?

”ரொம்ப தாங்க்ஸ் சார்! நீங்களே பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிச்சுட்டீங்ன்னு எங்க சர்வீஸ் என்ஜினியரட்ட சொல்லிடரேன்.அகெய்ன் தாங்கஸ் சார்”

Moral of the Story:

பொருள்களை  சர்வீஸ்/சேல்ஸ் செய்யும் எந்த ஒருவரும் தன் பொருளைத் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று.

Know your product always!

9 comments:

  1. நான் சீக்கிரம் வந்துட்டேனா?!!
    சூப்பர் கலக்கல்! :))

    ReplyDelete
  2. குக்கர் மூலம் கிடைத்த தத்துவம் நல்லாருக்கு...

    எல். ஆர். ஈஸ்வரி குரலின் ஏற்ற இறக்கம்.....superb!

    ReplyDelete
  3. துள்ளுவதோ இளமை பற்றி படிக்கும் சமயம் அம்மம்மா கேளடி தோழி எனும் பாடல் பற்றி பின்னூட்டம் இடலாம் என்று நிணைக்கும் சமயம் நீங்கள் தொடர்ந்து எழுதியிருப்பதை கண்டு ஆச்சர்யபட்டேன் மிக்க நன்றி எனக்கு அந்த பாடலை கேட்டால் மொத்த ஜீவனும் உருகிவிடும்... முக்கியமாக பிஞ்சாக.... என்று ஈஸ்வரி இழு இழுப்பார் பாருங்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி அப்படி பாடல் வரமுடியாது பாடவும் முடியாது ஒரு நிலா போல ஒரு எல்.ஆர் ஈஸ்ரிதான்.

    ReplyDelete
  4. middleclassmadhavi said...

    // நான் சீக்கிரம் வந்துட்டேனா?!!//

    ஓகே. ஆனா என்ன படம்னு சொல்லலியே?

    நன்றி.


    நன்றி பாச மலர்

    ReplyDelete
  5. //ஒரு நிலா போல ஒரு எல்.ஆர் ஈஸ்ரிதான். //

    ரொம்ப சரியான உவமை.

    நன்றி ராஜா

    ReplyDelete
  6. என்ன படம்ங்க அந்த ஆடியோவில் இருப்பது? ரொம்ம்பப் பழைய பாட்டுக்கள் மாதிரி தெரியுது... :(

    ReplyDelete
  7. Dear Ravi,
    Unga quiz ku answers.

    1. Yar andha nilavu

    2. Palinginal oru maaligai

    Greatest nos of MSV....

    one more LRE song from me is

    Mounam dhan pesiyadho mayakam dhan .. dono the film name.
    romba nalla padi irupanga.

    Cooker - service - comments ... Excellent
    Panjama bhadagathil ondru.........

    India maari vittadhu Ravi.. forenign pola..
    iduvum..

    Naam dhan katru kondu sari seidhu kolla vendum.
    alladhu

    thooki yerindhu vittu pudhiyadhai vangi kolla vendum.....
    cigas and starws. hmmmmmm.. nice write up.

    Endha vishayathaiyum.. interest aga ezhuthil solla therigiradhu. Great Ravi.

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  8. Usha,

    Correct answers. But "Palingunaal"-vallavan oruvan by S.Vedha not MSV.


    //Mounam dhan pesiyadho mayakam dhan// film Ethikalam. I think it is Gemini.

    Thanks for the comment.

    ReplyDelete
  9. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!