Saturday, March 5, 2011

இளையராஜா- King of Musical Voices-1

இளையராஜாவின் இசையில்  மற்றொரு முக்கியமான   அங்கம் பாடல்களின் இடையே  (filler) இசைக்கப்படும்  குரல்கள்.

இவை  வித்தியாசமான இரட்டைக் கிளவி அல்லது அடுக்குத் தொடர், அர்த்தம் பொருந்திய/பொருந்தாத ஜதிகள் அல்லது சொற்கள் அல்லது/வார்த்தைகள்  என்று சொல்லலாம். இவை பற்றிப் பார்ப்போம் இப்பதிவில்.

இம்மாதிரியான குரலிசைகள் ஜாலி,குழந்தைகள் குஷி,கடல்/ஆறு,கிராமம்,நடனம்,ஆதிவாசி,கோரஸ் சம்பந்தப்பட்டுப் பெரும்பாலும் இசைக்கப்படுகிறது.
(சிக்குமங்கு சிக்குமங்கு செக்கபப்பா... நாங்களும் இது மாதிரி சவுண்ட் விட்டோம் அந்தக் காலத்துல)

இது ஹம்மிங்கிலிருந்து வேறுபடுகிறது.

நாம் நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகளைக் கொஞ்சும்போது செல்லமாக அர்த்தமில்லாத வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சுவோம்.குழந்தை சொற்களின்
/வார்த்தைகளின் ஓசையின் அங்கதத்தைக் கேட்டுச் சிரிக்கும்.


மேஸ்ட்ரோ இம்மாதிரி குரல்களைப் பாட்டின் இடையே தொடுத்து அழகுப்படுத்துகிறார்.இதையும் ஒரு கலையம்சத்தோடுச் செய்கிறார்.களிமண் அடைப்பதுபோல் அடைப்பதில்லை.அதற்கும் ஒரு பரிமாணம் கொடுக்கிறார்.

முக்கியமாக ஸ்டைல் இருக்கிறது. ஆத்மா இருக்கிறது.

பாடலின் சூழ்நிலையைப் பொருத்து குரல்கள் அமைக்கப்படுகிறது.

நான்கு பாடல்களில்  கடல் மற்றும் ஆறு சம்பந்தப்பட்ட  காட்சி வருகிறது.அதற்கு நான்கு விதமான  துடுப்புப் போடும் குரல்கள்.

1.காவிரியே கலைக்குயிலே 2.தாலாட்டுதே வானம்
3.கடலோரம் கடலோரம் 4.வெற்றி வெற்றி

வழக்கமான ”ஏலேலோ அய்லசா...ஏலேலோ அய்லசா”வை கொடுக்கவில்லை மேஸ்ட்ரோ.மாத்தி யோசி!

பருவ காலங்களின் கனவு-மூடுபனி-1980
”தகதகதாங்கு தகதக தாங்கு”(இரட்டைக் கிளவி?)ஜானகி சூப்பர். 0.10 கிடார் ஒரு அப்பு அப்பிவிட்டு ஷணத்தில்  மறைகிறது.
Voice Moodupani-Paruva.mp3

சோளம் வெதக்கையிலே - 16 வயதினிலே-1978
VoiceSolamvedhakkaiyile.mp3

காவிரியே கவிக்குயிலே - அடுத்தவாரிசு-1983
கப்பல் டூயட்.இதில் வரும் குரல்  வித்தியாசமானது. அட்டகாசம்.
VoiceAduthavaarisu-Kaveriye.mp3

ஜின்ஞ்னாக்டி ஜிங்கலங்கடி -வண்ண வண்ண பூக்கள்-1992
VoiceVannaVannaPangunikapuram.mp3

மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984
(நதியா-மோகன் நடித்த படம் அல்ல.இதே பெயரில் வேறு படம் (பிரபு-சுலக்‌ஷணா)பூஜைப்போடப்பட்டு நின்ற படம்)
VoiceUyireUnakkagaMaargazhiPaarvai.mp3

வானெங்கும் தங்க விண்மீன்கள்-மூன்றாம் பிறை-1982
இந்த “தத்துத்துத்துத்” படத்துல ஒரு திருப்புமுனை. இவர்தான் “தத்துத்துத்” சொல்ல ஆரம்பிச்சு  பின்னால் காரில் வரும் ஸ்ரீதேவி குஷியாகி திரும்பிப்பார்த்து லாரி மோதி......கடைசில கமல் பிளாட்பாரத்துல குட்டிக்கரணம் அடிச்சு...படம் முடிகிறது.

“தத்துத்துத்துத்”சொல்லாம இருந்திருந்தா?
VoiceMoonPiraiVaanengum.mp3

தூரி தூரி தும்மக்க - தென்றல் சுடும்-1989
குழந்தைகளின் மழலைச் சிரிப்பு கொள்ளை அழகு.
VoiceDhooriThendralSudum.mp3

இளம் மனதினில் - மஞ்சள் நிலா-1982

VoiceIlamanathinil-ManjalNila.mp3 

சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்-1978

VoiceSattam En Kaiyil-SorgamMathu.mp3

தாத்தா தாத்தா கை -அன்புள்ள ரஜனிகாந்த்-1984
VoiceAnbulla Rajinikanth.mp3

சுக ராகமே சுப போகமே - கன்னிராசி-1985

VoiceSuga Raagameykannirasi.mp3

வெற்றி வெற்றி - கட்டுமரக்காரன்-1995
வேகமாக வரும் தாளக்கட்டு 0.43ல் மாறி மெதுவாகி பாட்டு ஆரம்பித்து “முத்தம்மா”க்கு பிறகு வரும் heavenly ஹம்மிங் அட்டகாசம்!Only Maestro can do it! 0.(40-0.42 இல் ஒரு வித்தியாசமான நாதம் கேட்கிறது.Soulful music bit!)
VoiceVetriVetri-Kattumararakaran.mp3

தோப்பிலொரு நாடகம் நடக்குது -கல்லுக்குள் ஈரம் -1980
VoiceThoopiloru Nadagam.mp3

சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன்-1986
VoiceSingalathuchinna.mp3

டிங்கு டாங்கு - வள்ளி-1993
சூப்பர் ஸ்டார் இல்லக்கிழத்தி லதாரஜினிகாந்த் பாடறாங்க.
VoiceValli-DinguDaangu.mp3

தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்-1981
VoiceKadalMeengalThalaa.mp3

புதுச்சேரி கச்சேரி - சிங்காரவேலன்-1992
VoicePuthucheri.mp3

எங்கேயோ திக்குதெச - மகாநதி-1994
VoiceMahanadhi-(bengali)Engeyo.mp3

காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்-1990
VoiceIndranChandranKadhalRaga.mp3

இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்-1978
ஜென்சியின் எட்டுப்பட்டிக்கும்  கேட்கும் வீர்யமான இனிமையான குரல.
 
”லாலாலல லாலலால”வை குறுக்கிடும் துந்தனா அழகுப்படுத்துகிறது.பழைய நினைவு கதாநாயகிக்கு?
VoiceIdhayampoguthey.mp3

இது ஒரு நிலா காலம் - டிக் டிக் டிக்-1981
Voice Idhuoru Nila-Tik.mp3

எங்கும் நிறைந்த இயற்கை - இது எப்படி இருக்கு-1978
VoiceEngumNiraintha.mp3

இதழ் எனும் மடலிலே - காவலுக்குக் கெட்டிக்காரன்-1990
VoiceKaavalukkuKetti-Idhazhenum.mp3

தேவனின் கோவில் - அறுவடை நாள்-1986
Voice Devanin Koil-Aruvadai Naal.mp3

மீன் கொடி தேரில் - கரும்பு வில்-1980
VoiceMeenkodiTheril.mp3

கடலோரம் கடலோரம் - ஆனந்தராகம்-1982
VoiceAnantha RaagamKadaloram.mp3

தேவதைபோலொரு - கோபுரவாசலிலே-1991
VoiceGopura VasalileDevathai.mp3

மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு-1979
சுசிலா மேடம்தான் ரயில் விடறாங்க.ஜெயசந்திரன் சார்  ஏன் விடல?
VoiceManjalNilavukku.mp3

ராமன் ஆண்டாலும் - முள்ளும் மலரும் -1978

ராக்கம்மா கையத்தட்டு - தளபதி -1991
VoiceRakkammaKaiya.mp3

.

25 comments:

  1. ரொம்ப நேரம் ரீங்கரிக்கும் இனிமையான பதிவு!

    ReplyDelete
  2. சூப்பர்... சூப்பர்.... நல்ல வித்தியாசமான தொகுப்பு.
    புது ப்ளேயர் சூப்பரா இருக்குது. அது ஒரு பக்கம் பாட்டு ஓடிக்கிட்டு இருக்கும், இங்க நாம பாட்டப் பத்தி நீங்க எழுதினதைப் படிக்கலாம்...

    ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ‘பங்குனிக்கப்புறம்’ பாடலில் வரும் ‘ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சாலங்கடி ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சாலங்கடி ஜிலிமிலி ஜிலிமிலி ஹோய்’ எனக்கு மிகப் பிடிக்கும்,,,,

    ‘டோரி டோரி டுமக்க டொர்ரி’ என் பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது. நன்றி சார்....

    ReplyDelete
  3. நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    புதிதாக ஒன்று சேர்த்துள்ளேன் அது”ஜின்ஞ்னாக்டி ஜிங்கலங்கடி -வண்ண வண்ண பூக்கள்-1992”

    ReplyDelete
  4. ஆஹா... ரொம்ப நன்றி தமிழ்ப்பறவை. நீங்கள் சொன்னதைச் சேர்த்துவிட்டேன்.

    பாட்டின் மெட்டைக் கேளுங்கள். தேவா இதிலிருந்த மெட்டைச் சுட்டு “ ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா”(புருஷலட்சணம்) பாட்டுப் போட்டுவிட்டார்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  5. எவ்வளவு நுணுக்கமாக ராஜாவை ரசித்திருகிரீர்கள்.இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது. இதை கேட்ட பின்பு மதிப்பு கூடுகிறது ராஜாவின் மீது. உங்கள் பணிக்கு மிகுந்த நன்றி!!!!!

    ReplyDelete
  6. "மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984"
    என்று எழுதி இருக்கிறீர்கள் உயிரே உனக்காக படத்தில் இளையராஜா இல்லையே.

    ReplyDelete
  7. ITS REALY FANTASTIC

    ReplyDelete
  8. வாவ் கலக்கல் வழக்கம் போல ராஜாவின் இசையை அணுவணுவாக ரசித்திருக்கின்றீர்கள் வாசிக்கும் எம்மையும் ரசிக்கவைத்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  9. மைதீன்

    //இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது//
    ராஜா லேசுப்பட்ட ஆளில்லை.உச்சக்கட்ட மேதமை உடைய இசையமைப்பாளர்.

    //"மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984" //

    இது பிரபு-சுலோக்‌ஷணா நடிக்க இருந்து கைவிட்டப்படம் என்று செய்தி.இதே பெயரில் நதியா-மோகன்-1986ல் வெளி வந்தது.

    நன்றி.

    ReplyDelete
  10. நன்றி அனானி

    நன்றி வந்தியதேவன்

    ReplyDelete
  11. அருமை இசைஞானியின்
    இசையை அருமையாக கவனித்து
    உள்ளீர்கள்
    ஒரு திருத்தும்"உயிரே உனக்காக-1984"
    லச்க்மிகாந்த ப்யாரிலால்

    ReplyDelete
  12. //மைதீன்

    //இவ்வளவு விசயங்களை நான் கவனித்தது கிடையாது//
    ராஜா லேசுப்பட்ட ஆளில்லை.உச்சக்கட்ட மேதமை உடைய இசையமைப்பாளர்.

    //"மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984" //

    இது பிரபு-சுலோக்‌ஷணா நடிக்க இருந்து கைவிட்டப்படம் என்று செய்தி.இதே பெயரில் நதியா-மோகன்-1986ல் வெளி வந்தது.

    நன்றி.//

    சாரி இதை நான் கவனிக்க வில்லை

    ReplyDelete
  13. S Maharajan said...

    // ஒரு திருத்தும்"உயிரே உனக்காக-1984"
    லச்க்மிகாந்த ப்யாரிலால்//

    அந்தப்பாட்டின் கிழ் உள்ள குறிப்பைப் படிக்கவும்.(இப்போதுதான் குறிப்பு எழுதப்பட்டது. மற்றும் மைதீனுக்கு போட்ட பின்னூட்டமும் படிக்கவும்)

    நன்றி மகராஜன்.

    ReplyDelete
  14. நன்றி மாட்சா

    நன்றி கோபிநாத்

    ReplyDelete
  15. Dear Ravi,
    Ipo dhan player work achu. en side la prob. enna nu theiryalai. anyway work agi paatu ellam kaeten. BIG THANKS to U Ravi.
    Thanks a lllllllllot for the Beauatiful Description........ lovely.

    Great picks.
    Raja songs - list pottu than pesa mudiyum...
    Music God - avvalavu koduthu irukar.....


    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  16. மிக அருமையாக இருக்கின்றது உங்கள் அலசல்.

    ReplyDelete
  17. எனக்குமே ராஜாவின் இந்த இடைச்செருகல் மிக பிடிக்கும்.அவர் ஒரு musician மட்டுமல்ல magician அதனால் தான் அவருக்கு மட்டும் இது சாத்தியமாகின்றது.

    ReplyDelete
  18. வாங்க உமா கிருஷ்ணமூர்த்தி.முதல் வருகைக்கு நன்றி.

    ரசிப்புக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    உங்களை மாதிரி ராஜா ரசிகை/ரசிகர்களின் ஊக்குவிப்பால் நிறைய ஆராய்ச்சி செய்து பதிவு போடமுடிகிறது.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  19. அத்தனை பாடல்களையும் கவனிச்சு கோர்த்து இருக்கிங்களே...வெகுவாய் ஆச்சர்ய பட்டேன் ...ஆனால் இந்த முறை ஒவ்வெரு பாட்டும்ம் கேட்க ரொம்ப கஷ்டப்பட்டேன் அண்ணா...பிளேயர் வொர்க் ஆகவே இல்ல...ரொம்ப slow ஆ பிளே ஆச்சு :((( என் சைடு எதுவும் ப்ராப்ளம் ஆ னு தெரியலை அண்ணா...:(((

    ReplyDelete
  20. நன்றி ஆனந்தி.

    //பிளேயர் வொர்க் ஆகவே இல்ல...ரொம்ப slow ஆ பிளே ஆச்சு :((( என் சைடு எதுவும் ப்ராப்ளம் ஆ னு தெரியலை அண்ணா...:((( //

    சில சமயம் அப்படி ஆகிவிடுகிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.வேறு ஒருவர் தளத்திலும் இப்படி ஆகிவிட்டது.

    ReplyDelete
  21. Ravi, You missed "Ponoviyam" song from Kazhugu..
    Almost it was fully composed with Hummings.. You can see Humming over the Humming (meaning to say mutiple hummings at same time).. Ilayaraja's tender voice is a added flavor for this romantic song..

    ReplyDelete
  22. பிரசன்னா கண்ணன் கருத்துக்கு நன்றி.இது ஹம்மிங் பற்றியது அல்ல.வித்தியாசமான குரல் பற்றியது.நீங்கள் சொல்லும் ஹம்மிங் என்னுடைய ஹம்மிங் பதிவில் உள்ளது. மீண்டும் நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!