அருணா ராமச்சந்திரா ஷான்பாக்கின் தோழி, பின்கி, அருணாவைக் கருணைக் கொலை செய்வதற்க்கு மனுப்போட்டிருந்தார்.ஆனால் அதை சுப்ரீம்கோர்ட் நிராகரித்துவிட்டது.காரணம் தோழி என்ற முறையில் அவருக்கு உரிமை கிடையாது.இப்போது அருணா இருக்கும் மருத்துவமனைக்குதான் உரிமை உண்டு என்று சொல்லியது.
அதே தீர்ப்பில் எந்த ஒரு மனிதரும் நிரந்தரமாக பச்சைக்காயைப்(permanent vegetative state) போல் எந்தவித மூளை/உடல் சம்பந்தமான இயக்கங்கள் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருந்தால் அவரை மருத்துவ ஆலோசனை மற்றும் நீதிமன்ற உத்திரவின் பேரில் கருணைக் கொலை செய்யலாம்.அவரின் உடலில் இருந்து வாழ்வாதாரக் குழாய்களை எடுத்துவிட்டு என்றும் சொல்லி இருக்கிறது.இது மென்மையாகக் கொல்வது(passive killing).
இதைத் தவறாகப் பயன்படுத்த முன்னோடியாக இருக்கக்கூடாதும் என்று சொல்லி இருக்கிறது.
(அருணாவின் இளவயது தோற்றம்)
மும்பாயில் நர்சிங் மாணவியாக இருந்த அருணா (62) 27-11-1973 அன்று மருத்துவமனை காமுகன் வார்டு பையன் ஒருவனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பிறகு நாய் கட்டும் சங்கிலியால் கழுத்து நெறிக்கப்பட்டு உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு 37 வருடமாக படுத்தப் படுக்கையாகி விட்டார்.மிகச் சிறு உணர்வுகளுடன்தான் இருக்கிறார்.
(அருணா இன்று)
அருணா வேலைப் பார்த்த மருத்துவமனைதான் இன்றுவரை அவரை கவனித்துக்கொள்கிறது.அருணாவின் அம்மா அப்பா இறந்துவிட்டார்கள்.வயதான சகோதரனால் பார்த்துக்கொள்ள இயலவில்லை.இன்னொரு உறவுக்காரர் கொஞ்ச நாள் மட்டும் கவனித்துவிட்டு திருமணம் ஆனதும் கவனிக்கவில்லை.
(சுப்ரீம்கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடும் மும்பாய் KEM மருத்துவமனை நர்சுகள்)
இப்போது பதிவின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன்:
மருத்துவனை மொத்தமும் “அருணா எங்கள் உடன் பிறந்த சகோதரிபோல” அவர் வாழ்வதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்றபடி கொண்டாடுகிறார்கள்.இப்போது அருணா மருத்துவமனையின் மொத்தப்பொறுப்பில் இருக்கிறார்.அருணா அவர்களின் சக அலுவலராக இருந்தவர்.
இவர்களில் யாராவது ஒருவர் தன் சுயப் பொறுப்பில் 37
வருடம் வீட்டில் வைத்து அருணாவை கவனித்துக்கொண்டிருப்பாரா?
ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்றால்,சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பண்டில் பண்டிலாக துணிகளையும் மற்ற உதவிகளையும் செய்தோம்.காரணம் இதில் பொறுப்பு எதுவும் கிடையாது.
அனாதையாக்கப்பட்ட குழந்தைகளைத் தத்து எடுத்துகொள்ள யாரும்(99%) வராததற்குக் காரணம் நீண்ட காலப் பொறுப்பு.உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது.
அருணா என்னைச் சேர்ந்தவராக இருந்தால் நான் என்ன செய்வேன்?இப்போது இருக்கும் நிலமையில் கருணைக்கொலைக்கு ஆதரவு தருவேன்.காரணம் அவர் மேல் இருக்கும் அன்புதான்.இது மாதிரி ஒரு வாழ்வு தேவையா? வாழ்வதற்கு உரிமை இருந்தாலும் அதை சுயமரியாதையுடன் அல்லது கண்ணியத்துடன்(dignity of life) வாழ்கிறரா?
ஒருவரைக் கொன்றுத்தான்(killing)அவரின் வலியைப் போக்குவது என்பது மனதைப் பிறாண்டத்தான் செய்கிறது.
இது மாதிரி முக்கியமான விஷயங்களில் நம்முடைய அடிப்படை உணர்ச்சிகளை மனதைத் தளரவிடாமல் கைவிட்டு அடுத்தக்கட்டத்திற்கு நகர்வது நல்லது.
டெயில் பீஸ் -1
அவ்வளவுதான் இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக இருந்த
முதியவர்கள்/இளையவர்கள் மூச்சுகுழாய்கள் எடுக்கப்பட்டு சிம்பிளாக உயிர் பிரிந்ததை (கருணைக்கொலை)பார்த்திருக்கிறேன் மற்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை.
டெயில் பீஸ் -2
சோகன்லால் வால்மீகி,குற்றவாளி 7 வருடம் தண்டனை அடைந்து வெளியே வந்துவிட்டான்.இப்போது அவனுக்கும் வயது 60க்கு மேல்?

நான் உச்ச நீதிமன்றத்துக்கு தான் ஆதரவு.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ராஜ ராஜ ராஜன்.
ReplyDeleteகருணாநிதியிடம் கேட்டால் சொல்வார்-
ReplyDeleteநான் அன்றே சொன்னேன்(பராசக்தியில்)மகாத்மா காந்தி உலகமகா உத்தமர் ஜீவகாருண்ய சீலர் .அவரே நோயால் துடித்துக்கொண்டிருக்கும் கன்றுக்குட்டியை கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார் அது கஷ்டமுருவதைக் காணச் சகிக்காமல்.அதே முறையைத்தானே கையாளச் சொன்னார்
பிங்கி விரானி.
ஆனால் அருணா வாழ வேண்டும் என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு வணக்கம்.
சகாதேவன்
ஒருவரைக் கொன்றுத்தான்(killing)அவரின் வலியைப் போக்குவது என்பது மனதைப் பிறாண்டத்தான் செய்கிறது.
ReplyDelete.......அதனால் அதற்கு மேலாக என்னால் யோசிக்க இயலவில்லை
/அருணா என்னைச் சேர்ந்தவராக இருந்தால் நான் என்ன செய்வேன்?இப்போது இருக்கும் நிலமையில் கருணைக்கொலைக்கு ஆதரவு தருவேன்.காரணம் அவர் மேல் இருக்கும் அன்புதான்.இது மாதிரி ஒரு வாழ்வு தேவையா? வாழ்வதற்கு உரிமை இருந்தாலும் அதை சுயமரியாதையுடன் அல்லது கண்ணியத்துடன்(dignity of life) வாழ்கிறரா?
ReplyDeleteஒருவரைக் கொன்றுத்தான்(killing)அவரின் வலியைப் போக்குவது என்பது மனதைப் பிறாண்டத்தான் செய்கிறது.
இது மாதிரி முக்கியமான விஷயங்களில் நம்முடைய அடிப்படை உணர்ச்சிகளை மனதைத் தளரவிடாமல் கைவிட்டு அடுத்தக்கட்டத்திற்கு நகர்வது நல்லது.//
அண்ணா...உங்கள் கருத்துகளே எனக்கும்....
அந்த மனித மிருகம் பற்றி எந்த தகவலும் தெரிய வில்லையே...அவனை சட்டம் என்ன செய்தது???
நன்றி சித்ரா.
ReplyDeleteநன்றி ஆனந்தி.
//அந்த மனித மிருகம் பற்றி எந்த தகவலும் தெரிய வில்லையே...அவனை சட்டம் என்ன செய்தது??? //
கடைசி பாரா படிக்கவும்.
நன்றி சகாதேவன்.
ReplyDeleteஅந்த குற்றவாளி பேரு எனக்கு தெரியாது அண்ணா..முதலில் குறிப்பிடாததால் முழிச்சேன்..:))இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்...:)))
ReplyDeleteமனதைத் திடப்படுத்திக்கிட்டு கருணைக்கொலைக்குத்தான் ஆதரவளிக்க வேண்டி இருக்கு....:( (சொந்த அனுபவமும் உண்டு)
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteDear Ravi,
ReplyDeletenanum indha article padithen..
naan - karunai kolaiyai virumbavilai.
en porupil irundha irukum - vayadhavarai karunai kolaiku anumadhika maten..
anal - en paiyanu - 4 years munnadiyae solli iruken - " ennudiya vayadhana naalil - enaku disease vandhu - unkau baramaga naan irundhal - enani karunai kolai seidhu vidu..
kandipaga - en bed time il enaku saaga asai varadhu.. adhu manidha iyalbu..
anal - unaku baramaga iruka naan virumbavilai." endru......
ipoadhu - en paiyan - padhari ponan. aiyo amma yema ipadi solre nu.
ana future la - ipadi age anavanga neraiya per irundhal.. enna seiayradhu......
paarthu kollum - youngsters - kuraivaga irukum podhu..
adhu ipodhae arambithu vittadhu endru dhan thonugiradhu enaku.....
nam period il - nammudan pirandhavargal kandipga 2 peravadhu irundhargal.
ipodhu dhan veetuku 1 or 2 kids dhan irukanga.
future enna agum - indha husband and wife - 4 periyavangalai parthukanam (adhavadhu husband oda amma and appa, wife oda amma ana appa) age agi.......... epadi paarthu kolla mudiyum.............
think of tat...
With Love,
Usha Sankar.
நன்றி உஷா.
ReplyDelete//future enna agum - indha husband and wife - 4 periyavangalai parthukanam (adhavadhu husband oda amma and appa, wife oda amma ana appa) age agi.......... epadi paarthu kolla mudiyum............. //
கூட்டுக்குடும்பம்.
தமிழை ஆங்கிலத்தில் எழுதியதைப்
(transiliteration) படிப்பது ரொம்ப கடினமாக இருக்கிறது. அதற்கு நேரடி ஆங்கிலம் நன்று.
தமிழ் மென்பொருள் முயற்சியுங்களேன் உஷா.
மீண்டும் நன்றி.
அவர் கஷ்டப்படுவதை விட கருணைக்கொலையே நல்லது.
ReplyDeleteஎன்று எழுதிவிட்டு சிறிது நேரம் யோசித்தேன். கருணை கொலை செய்யும்போது நான் அங்கிருந்தால்.....
வேண்டாம், வேண்டாம் என்னால் அதை அனுமதிக்க முடியாது...
ஐந்து பேர் கமென்ட் போட்டிருந்தாலும் ஓட்டு போட்டா மாதிரி தெரியவில்லையே
ReplyDeleteநன்றி மைதீன்
ReplyDelete//ஐந்து பேர் கமென்ட் போட்டிருந்தாலும் ஓட்டு போட்டா மாதிரி தெரியவில்லையே//
அது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது.
குற்றவாளியின் பெயரைப் பாருங்கள்... பாவம் அருணா.. எந்தத் தப்பும் செய்யாமல் படுக்கையில் வாழ்க்கை. ஆனால் கருனைக்கொலைக்கு என் ஓட்டு இல்லை. அநியாயம்
ReplyDelete