Monday, February 28, 2011

ஆட்”டை”யைப் போட்ட இங்கிலாந்து

மூன்னூற்று முப்பத்தி எட்டு ரன்கள்.கொடுத்தக் காசுக்கு ரசிகர்களை குஷிப்படுத்திய டெண்டூல்கரின் ஆட்டம்(120 ரன்கள்) மற்றும் யுவராஜ் சிங்கின்
58 ரன்கள்.அடுத்த ஆடிய இங்கிலாந்து 68ல் ஒரு விக்கெட்டும் 111 ல் இரண்டாவதும் விழ இது போதும் மேட்ச் நம்ம கைலாதான் என்று ஒரு மிதப்பில் இருந்தார்கள்.27-02-11.
ஆனால் ரசிகர்களின் எண்ணத்தில் ஆட்”டை”யைப் போட்டு விட்டது இங்கிலாந்து அணி முன்னாள் கிழக்கிந்திய கம்பேனி கடைசி பந்தில்.நீ பாதி நான் பாதி கண்ணே என்று பாயிண்ட் பிரிந்துவிட்டது. win-win நிலை.50:50.

இந்த ஆட்“டை”யை போடுவதற்கு முன் கேப்டன் A.Strauss(அருமையான ஆட்டம்) and Bellம் நோகடித்து பின் இருவரும் அவுட்டாகி குஷிபடுத்தி அடுத்த வந்தவர்கள் சிக்ஸ் அடித்து நோகடித்து  அவர்களும் அவுட்டாகி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் என்று  விளையாட்டிற்கு ஒரு  த்ரில்லர் கிளைமாக்ஸ்ஸில் நிறுத்திவிட்டுப்போனார்கள்.

(அடிச்சுப் பிடிச்சு நாங்களும் 338 நிறுத்திட்டம்ல!)

சின்னசாமி ஸ்டேடியம் ஒன்றும் புரியாமல் விழித்தது.

முனாஃப் படேல் க”டை”சி பந்தை போட ஓட ரசிகர்களின் இதயம் ஸ்லோ மோஷனில் துடிக்க, இந்திய கடவுள்களின்பால் பிரார்த்தனை மேல் பிராத்தனை  கண்கள் வரைக் குவிந்து அவர்களால் கடைசிப் பந்தை நோக்க முடியாமல் முழுகி,கடைசியில் தங்கள் முயற்சியில் முனாஃப் படேல் தன் வீச்சையும் Graeme Swann தன் மட்டை வீச்சையும் காட்டி “டை” யில் நிறுத்தி மேட்சை முடித்தார்கள்.


கடவுளார்கள் நிம்மதியாக  பெருமூச்சு விட்டார்கள்.



10 comments:

  1. நேத்து பார்க்குற நம்மள ரொம்பவும் டென்ஷன் ஆக்க்கிட்டாங்க பாஸ்...

    ReplyDelete
  2. இந்தியாவின் மோசமான பவுலிங் தான் காரணம்.. தவிர, பிட்ச், பேட்டிங்கிற்கு ரொம்ப சாதகமாகவே இருந்தது. பனி அதிகம் பெய்யவில்லை. (சரி சரி மனச தேத்திக்கிட்டேன்....)
    அடுத்த போட்டியில் நாம் கஷ்டப்பட்டாவது ஜெயித்துவிடுவோம்.. நம்புங்க................. ஏன்னா எதிர்த்தாடறது அயர்லாந்துதான்!!!

    ReplyDelete
  3. பல நாட்களாக உங்கள் பதிவில் பதிலிடமுடியாமல் திரும்பிக் கொண்டிருக்கிறேன். Post Comment கொடுத்தால் வேலையே செய்வதில்லை... மூன்று ப்ரவ்ஸர்களை மாற்றி இப்பொழுதுதான் அனானியாக பதிவிட முடிந்தது..

    அன்புடன்
    குழந்தை ஓவியம்
    ஆதவா

    ReplyDelete
  4. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

    ReplyDelete
  5. இந்த டைட்டில் நச் ரவி சார்...:)))

    ReplyDelete
  6. நன்றி மாணவன்

    நன்றி அனானி

    நன்றி ஆதவா.உங்கள் பிரச்சனை ஏன் என்று தெரியவில்லை.வருந்துகிறேன்.எந்தப் பதிவிற்கு பின்னூட்டம் இட முயற்சித்தீர்கள்?

    ReplyDelete
  7. நன்றி நிலவு

    நன்றி ஆனந்தி

    ReplyDelete
  8. கிரிக்கெட்லாம் விட்டாச்சு சார் :)

    ReplyDelete
  9. 12 பேரோட ஆடியும் நம்ம பயபுள்ளைங்க “டை” பண்ணிட்டாங்களே!

    ReplyDelete
  10. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி ரவிஷா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!